Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

ரிங்குவும்...சூரியகுமாரும் ரன்னை கட்டுபடுத்திவிட்டனர்...அகமது 11 பந்து வீசியிருக்குமா...நல்ல கப்டன்  சூரியகுமார்..சிங்களா நோனாக்கள்   அட்டகாசம் மச்சைவிட நல்லாயிருந்துது..

இப்ப‌த்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு அனுப‌வ‌ம் இல்லை

 

முத‌ல் த‌ப்பு அடிக்க‌டி க‌ப்ட‌னை மாற்றுவ‌து . 

 

முந்தி இல‌ங்கை அணியில் க‌ப்ட‌ன் என்றால் குறைந்த‌து இர‌ண்டு வ‌ருட‌ம் ஒருவ‌ரே அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துவார்

 

இந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் இல‌ங்கை அணியில் 4 க‌ப்ட‌ன் மார்..................ஒரு  கால‌த்தில் எப்ப‌டி இருந்த‌ அணி இப்ப‌டி போன‌துக்கு முழுக்க‌ முழுக்க‌ அர‌சிய‌லே

 

ம‌கிந்தா குடும்ப‌ம் அந்த‌ நாட்டில் இருக்கும் வ‌ரை இல‌ங்கை சிறு முன்னேற்ற‌த்தையும் அடையாது............................

Edited by வீரப் பையன்26

  • Replies 58
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இந்திய அணி இலங்கை அணியினை பயிற்சி ஆட்டத்தில் துவைத்து எடுத்ததாக கூறுகிரார்கள், நல்ல வேளை இலங்கை அணி பந்து வீச்சாளர் நுவான் திசாரா காயமடைந்து வெளியேறியமை, வங்க தேச அணிக்கெதிராக 5 வெக்கெட்டுக்களை எடுத்த

  • வங்கதேசத்திற்கெதிராக நுவான் துசாராவின் 5 விக்கெட்டுகள் டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சு.

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அப்படி என்னதான் உளவள ஆலோசனை? எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ? இந்த வழிகாட்டல்க

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்க‌டி க‌ப்ட‌னை மாற்றினா போல‌ அணி ப‌ல‌மான‌ அணியா மாறிட‌வா போகுது

 

இப்ப‌ க‌ப்ட‌ன் ப‌த‌வி ஏற்ற‌வ‌ர் சீக்கிர‌ம் இவ‌ரின் க‌ப்ட‌ன் ப‌த‌வியும் ப‌றிக்க‌ப் ப‌டும்...............தொட‌ர் தோல்விய‌ ச‌ந்திச்சால் அவ‌ரே க‌ப்ட‌ன் பொருப்பில் இருந்து வில‌குவார்..................இந்த‌ தொட‌ரில் இல‌ங்கை க‌ப்ட‌ன் அடிச்ச‌ ர‌ன்ஸ் 14 மூன்று மைச்சில் 14 ர‌ன்ஸ் ஹா ஹா என்ன‌ ஒரு சாதனை😁................................

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது தடவையாக இலங்கையின் மத்திய வரிசை சரிந்தது; சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்று தொடரை முழுமையாக சுவீகரித்தது

Published By: VISHNU   31 JUL, 2024 | 03:00 AM

image

(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றியீட்டியது.

Copy_of_Washington_Sundar_Celebrate_Wick

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3 - 0 என முழுமையாகக் சுவீகரித்தது.

இந்தியாவும் இலங்கையும் தலா 137 ஓட்டங்களைப் பெற்றதால் சுப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டது.

வொஷிங்டன் சுந்தர் வீசிய சுப்பர் ஓவரில் குசல் ஜனித் பெரேராவும் பெத்தும் நிஸ்ஸன்கவும் ஆட்டம் இழந்ததுடன் இலங்கையினால் 3 பந்துகளில் 2 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.  

மஹீஷ் தீக்ஷன வீசிய சுப்பர் ஓவரின் முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவ் பவுண்டறி அடித்து இந்தியாவுக்கு சுப்பர் ஓவர் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இதனை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது.

இலங்கை துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எவ்வாறாயினும் பெத்தும் நிஸ்ஸன்க தவறான அடி தெரிவினால் 26 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து குசல் மெண்டிஸும் குசல் பெரேராவும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைக் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் போன்றே மத்திய வரிசையில் விக்கெட்களை தாரை வார்த்ததால் இலங்கையின் வெற்றி வெகுதூரத்திற்கு சென்றுவிட்டது.

16ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இலங்கை அதன் பின்னர் 24 பந்துகளில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்களை இழந்தது. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

குசல் மெண்டிஸ் (43), வனிந்து ஹசரங்க (3), அணித் தலைவர் சரித் அசலன்க (0) குசல் பெரேரா (46), ரமேஷ் மெண்டிஸ் (1), கமிந்து மெண்டிஸ் (1), மஹீஷ் தீக்ஷன (0) ஆகிய எழுவர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை சூரியகுமார் யாதவ் வீச தீர்மானித்தார்.

70 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பந்துவீசாமல் இருந்த சூரியகுமார் யாதவ் மிகவும் நெருக்கடியான வேளையில் கடைசி ஓவரை துணிந்து வீசி 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க 2 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

super_over.jpg

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா பெரும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க முதலாவது ஒவரை மிகத் திறமையாக வீசி இந்தியாவின் அதிரடி துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தி 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார். அத்துடன் தனது 2ஆவது ஓவரில் முதலாவது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவர் தனது 4 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தன்னை அணிக்கு தெரிவு செய்தது மிகவும் சரி என்பதை நியாயப்படுத்தினார்.

முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்தியா இந்தப் போட்டியில் பவர் ப்ளேயில் 4 விக்கெட்களை இழந்து வெறும் 30 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது.

ஆரம்ப வீரர் ஷுப்மான் கில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரியான் பராக்குடன் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.

40bc9b9b-1505-43b6-8b71-6c4212b62718.JPG

ஷுப்மான் கில்லைவிட ரியான் பராக் 26 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ரமேஷ் மெண்டிஸ் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: வொஷிங்டன் சுந்தர்.

https://www.virakesari.lk/article/189850

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொட‌ரிலும் தோல்விய‌ அடைய‌ கூடும்.........................

  • கருத்துக்கள உறவுகள்

'கேப்டனாக இருக்க விரும்பவில்லை' - இலங்கையை வென்ற பிறகு சூர்யகுமார் இவ்வாறு கூறியது ஏன்?

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றியது.

இந்திய டி20 அணிக்கு முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் யாதவுக்கு முதல் தொடர் வெற்றி இதுவாகும். அது மட்டுமல்லாமல் புதிய தலைமைப் பயிற்சியாளராக வந்துள்ள கெளதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும்.

இந்திய அணி குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுத்திருந்த போதிலும் வெற்றிகரமாக அதை டிபெண்ட் செய்துள்ளது. இந்திய அணியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், கடந்த 2 போட்டிகளைப் போன்று இந்த ஆட்டத்திலும் இலங்கை அணி நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் திணறினர். ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் இருவரும் முன்னெப்போதும் இல்லாமல் முதல்முறையாக கடைசிக் கட்டத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினர். இதனால், ஆட்டம் டையில் முடிந்தது.

சூப்பர் ஓவரிலாவது இலங்கை சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 2 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கவே இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

தொடர் நாயகன் ஸ்கை

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வானார். 3 போட்டிகளிலும் 92 ரன்களும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் தொடர் நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுவரை எந்த சர்வதேச டி20 போட்டியிலும் பந்துவீசாத சூர்யகுமார் இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல ரிங்கு சிங் முதல்முறையாகப் பந்துவீசி ஒரு ஓவரில் 3 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

"நான் கேப்டனாக விரும்பவில்லை"

தோனி போன்றே புதுமையான முடிவுகளால் முதல் தொடரிலேயே முத்திரை பதித்த சூர்யகுமார் யாதவ் 'நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை' என்று கூறியுள்ளார். முதல் முறையாக கேப்டன் பதவி ஏற்று டி20 தொடரை வென்ற மகிழ்ச்சியில் சூர்யகுமார் கூறுகையில் “ இந்த ஆடுகளத்தில் 140 ரன்களே வெற்றிக்கான ஸ்கோர்தான். கடைசி வரிசைவரை பேட்டிங்கிலும் எங்கள் வீரர்கள் சிறப்பானவர்கள் என்பதை நிரூபித்தனர். இதுபோன்ற ஆட்டங்களை பார்த்திருக்கிறேன் என்றும், முழுமனது வைத்து கடைசி வரை போராடினால் ஆட்டத்தை திருப்ப முடியும் என்று சக வீரர்களிடம் தெரிவித்தேன்.

அதிகமான திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் அனைத்தையும் எளிதாக்கும். ஒவ்வொரு வீரரும் சக வீரரை கவனித்துக் கொண்டதும், உதவியதும் நம்ப முடியாததாக இருந்தது. நான் பேட் செய்ய வந்தபோது எனக்கு சற்று அழுத்தம் இருந்தாலும் என்னை மட்டுமே வெளிப்படுத்தினேன். என் பணியை சக வீரர்கள் எளிதாக்கினர். நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

 
சூர்யகுமார்

பட மூலாதாரம்,BCCI

இலங்கை மோசமான பேட்டிங்

இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதும் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங்கில் மோசமான சரிவை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் 37 ரன்களுக்கு 9 விக்கெட், 2வது ஆட்டத்தில் 31 ரன்களுக்கு 7 விக்கெட் , இந்த ஆட்டத்திலும் சூப்பர் ஓவரைச் சேர்த்து 29 ரன்களுக்கு 9 விக்கெட் என மோசமான சரிவை எதிர்கொண்டது.

இலங்கை அணியின் பேட்டிங்கைப் பார்க்கும் போது கடந்த 1980கள் மற்றும் 1990களில் இருந்த இந்திய அணி நினைவூட்டுகிறது. அதாவது தொடக்கத்தில் சிறப்பாக ஆடும் இந்திய அணி திடீரென சரிவைச் சந்தித்து மளமளவென விக்கெட்டுகளை இழக்கும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்தது. அதேபோன்ற நிலையில் இலங்கை அணி இருக்கிறது.

கடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியைவிட தொடக்க வரிசை பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இலங்கை சிறப்பாகவே செயல்பட்டாலும், கடைசி நேரத்தில் சந்திக்கும் மாபெரும் விக்கெட் சரிவு அந்த அணியை தோல்வியில் தள்ளியது.

இந்தியா

பட மூலாதாரம்,BCCI

வெற்றியை தவறவிட்ட இலங்கை

இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 2 ஓவர்களில் இலங்கை வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. இதற்கு முன் பந்துவீசிய அனுபவமே இல்லாத ரிங்கு சிங் ஓவரில் 3 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது.

கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன, கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதுவரை சர்வதேச போட்டிகளில் பந்துவீசியதில்லை என்றாலும் கூட துணிச்சலாக பந்துவீசினார். பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு தண்டனையாக 4 பீல்டர்கள் மட்டுமே 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலை இருந்தது.

அப்படி இருந்தும், சூர்ய குமார் ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததுடன், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் ஆட்டம் டையில் முடிந்தது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்று வெற்றியை இழந்திருக்கிறது இலங்கை.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூப்பர் ஓவரிலும் சொதப்பல்

சூப்பர் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். முதல் பந்தை வைடாக, அடுத்த பந்தில் மென்டிஸ் ஒரு ரன் எடுத்தார். பெரேரா அடித்த ஷாட்டை பவுண்டரி எல்லையில் பிஷ்னோய் கேட்ச் பிடித்தார். அடுத்த பந்தில் நிசாங்கா பெரிய ஷாட்டுக்கு முயல, அதை ரிங்கு சிங் கேட்ச் பிடிக்கவே இலங்கை அதிர்ச்சியில் உறைந்தது.

இதையடுத்து, 3 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தீக்சனா வீசிய முதல் பந்திலேயே சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி விளாச இந்திய அணி எளிதில் வென்றது.

தொடரும் பேட்டிங் சரிவு

இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் மோசமான பேட்டிங் சரிவைச் சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா, பெரேரா, மென்டிஸ் ஆகியோர் கடந்த 2 போட்டிகளைப் போன்ற வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 110 ரன்கள் வரை இலங்கை அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றியின் பக்கத்தில் இருந்தது.

ஆனால், நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்களின் பொறுப்பற்ற பேட்டிங்கே இந்த திடீர் சரிவுக்கு காரணம். இந்த ஆட்டத்திலும் கூட நிசாங்கா(43) மென்டிஸ்(26) இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எனும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குஷால் பெரேரா(46), நிசாங்கா(26) ஆகியோர் நல்ல ஸ்கோர் செய்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் அசலங்கா(0), ஹசரங்கா(3), ரமேஷ் மென்டிஸ்(3), கமிந்து மென்டிஸ்(1) தீக்சனா(0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 2 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி பதற்றத்தில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீண்டும் ஏமாற்றிய சாம்ஸன்

இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரிஷப் பந்த், அர்ஷ்தீப், அக்ஸர், ஹர்திக் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன், கலீல் முகமது, ஷிவம் துபே, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.

சுப்மான் கில், ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்கத்திலிருந்தே கவனமாக பேட் செய்தனர். ஆனால், ஜெய்ஸ்வால் சிறிது முன்னெடுப்பு செய்து, தீக்சனா ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், ஜெய்ஸ்வால் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று கால் காப்பில் வாங்கி 10 ரன்னில் தீக்சனாவிடம் விக்கெட்டை இழந்தார்.

அடுத்துவந்த சஞ்சு சாம்ஸன் 4 பந்துகளைச் சந்தித்தும் ரன் எடுக்காமல் விக்ரமசிங்கே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து 2வது முறையாக டக்அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

4வது வீரராக களமிறக்கப்பட்ட ரிங்கு சிங்கும் ஜொலிக்காமல் 2 பந்துகளைச் சந்தித்து தீக்சனா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் சூர்யகுமாரும் 8 ரன்னில் பெர்னான்டோ ஓவரில் ஆட்டமிழந்தார். பவர் ப்ளே ஓவரில் இந்திய அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

களத்தில் இருந்த சுப்மான் கில், ஷிவம் துபே இருவரும் சரிவிலிருந்து இந்திய அணி மீட்க முயன்றனர். ஆனால், துபே 13 ரன்கள் சேர்த்த நிலையில் ரமேஷ் மென்டிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில், ரியான் பராக் கூட்டணி நிலைத்து ஆடி இந்திய அணியின் ஸ்கோரை 9வது ஓவரில் 50 ரன்களை எட்ட வைத்தனர்.

6 ஓவர்களாக பவுண்டரி இல்லை

ஏறக்குறைய 6 ஓவர்களாக இந்திய பேட்டர்கள் பவுண்டரி அடிக்காத நிலையில் ரமேஷ் மென்டிஸ் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் பவுண்டரி அடித்து வறட்சியை போக்கினார். ஹசரங்கா வீசிய 12வது ஓவரில் 2 சிக்ஸர்களை ரியான் பராக் பறக்கவிட்டார்.

ஹசரங்கா வீசிய 16-வது ஓவரில் கில்(39) 2வது பந்திலும், 5வது பந்தில் ரியான் பராக்கும்(26) விக்கெட்டை இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்திருந்தது. 120 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

 
இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மானம் காத்த தமிழக வீரர்

ஆனால், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி என கேமியோ ஆடி 25 ரன்கள் சேர்த்து தீக்சனா ஓவரில் விக்கெட்டை இழந்தார். சுந்தரின் கேமியோதான் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைய காரணமாக அமைந்தது. இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்து 137 ரன்கள் எனும் கவுரமான ஸ்கோரை எட்டியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்களை வீசி 107 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கிரிக்கெட் அணி படைத்த மோசமான சாதனை

இலங்கையில்(srilanka) நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கெதிரான மூன்று ரி 20 தொடர்களிலும் சிறிலங்கா கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இவ்வாறு தொடர் தோல்வியை சந்தித்த சிறிலங்கா கிரிக்கெட் அணி சர்வதேச ரி 20 போட்டிகளில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதிக தோல்விகளை சந்தித்த அணி

அதாவது சர்வதேச ரி 20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை சிறிலங்கா அணி படைத்துள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட் அணி படைத்த மோசமான சாதனை | Most Defeats T20 Cricket Sri Lankan Team

இந்த பட்டியலில் இலங்கை (105 தோல்வி) முதல் இடத்திலும், பங்களாஷே் (104 தோல்வி) 2வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் (101 தோல்வி) 3வது இடத்திலும் உள்ளன.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் கண்ட முதல் ஐந்து அணிகள் (சூப்பர் ஓவர் உட்பட) வருமாறு, சிறிலங்கா -105 தோல்வி, பங்களாதேஷ் - 104 தோல்வி, மேற்கிந்திய தீவுகள்- 101 தோல்வி, சிம்பாப்வே - 99 தோல்வி, நியூசிலாந்து - 99 தோல்வி

https://ibctamil.com/article/most-defeats-t20-cricket-sri-lankan-team-1722412747

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரன, மதுஷங்க விலகல்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மத்தீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/307250

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

crick.jpg?resize=586,318

ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் இலங்கை-இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் பிரபல பந்து வீச்சாளர் மதீச பத்திரன மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் விலகியுள்ளனர்.

உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கு பதிலாக மொஹமட் ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

 

மேலும் குசல் ஜனித், பிரமோத் மதுஷான் மற்றும் ஜெஃப்ரி வென்டேசே ஆகியோரை இலங்கை ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (02) கொழும்பு ஆர் .பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394419

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
1st ODI (D/N), Colombo (RPS), August 02, 2024, India tour of Sri Lanka
 
Sri Lanka FlagSri Lanka   (18.6/50 ov) 62/3

Sri Lanka chose to bat.

Current RR: 3.26   • Last 5 ov (RR): 12/1 (2.40)
Live Forecast:SL 230
 

இலங்கை அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்களா?!

  • கருத்துக்கள உறவுகள்
Sri Lanka FlagSri Lanka   (27.6/50 ov) 102/5

Sri Lanka chose to bat.

Current RR: 3.64
 • Last 5 ov (RR): 13/2 (2.60)
Live Forecast:SL 206

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:
Sri Lanka FlagSri Lanka   (27.6/50 ov) 102/5

Sri Lanka chose to bat.

Current RR: 3.64
 • Last 5 ov (RR): 13/2 (2.60)
Live Forecast:SL 206

 

முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட்

உந்த‌ அவிசேக் பெனான்டோ உள்ளூர் போட்டிக‌ளில் ந‌ல்ல‌ விளையாடும் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளின் சீக்கிர‌ன் அவுட் ஆகிடும் 

 

இன்று 1ர‌ன்ஸ் அடிச்சு அவுட் ஆகி வெளிய‌ போய் விட்டார்................ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் இவ‌ரால் கொடுக்க‌ முடியாது

ப‌ல‌ ம‌ச்சில் பார்த்து இருக்கிறேன்......................

  • கருத்துக்கள உறவுகள்

துனித் வெல்லாலகே, பெத்தும் நிஸ்ஸன்க துடுப்பாட்டத்தில் அபாரம்,   இலங்கை  230 - 8 விக்.

Published By: VISHNU   02 AUG, 2024 | 06:32 PM

image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

0208_pathum_nissanka.png

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, மத்திய வரிசை   வீரர் துனித் வெல்லாலகே ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் இலங்கைக்கு  ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின.

0208_ind_vs_sl_odi_captains_with_trophy.

அத்துடன் துனித் வெல்லாலகேயும் அக்கில தனஞ்சயவும் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 46 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. இந்த இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

துனித்  வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 56 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 20 ஓட்டங்களையும் அக்கில தனஞ்சய 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 7 பந்துவீச்சாளர்களில் 6 பேர் விக்கெட்களை வீழ்த்தியமை விசேட அம்சமாகும்.

அவர்களில்    அக்ஸார் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

231 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா இன்னும் சற்றுநேரத்தில் பதிலுக்கு துடுப்பெத்தாடவுள்ளளது.

இலங்கை அணியில் மொஹமத் ஷிராஸ் அறிமுக வீரராக விளையாடுகின்றார்.

https://www.virakesari.lk/article/190123

  • கருத்துக்கள உறவுகள்

50 ஓவர் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிவ‌து நூற்றில் 1 ம‌ச்சா தான் இருக்க‌ கூடும்

 

இந்தியா வ‌டிவாய் வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு

 

ரோகித் ச‌ர்மா அடிச்ச‌ அடிக்கு இந்தியா வெல்லும் என்று நினைத்தேன்

 

அதே போல் சிறில‌ங்க‌ன் சுழ‌ல் ப‌ந்து மாஜிக்கும் ந‌ட‌ந்து விட்ட‌து............................

  • கருத்துக்கள உறவுகள்

சிஙுகு ஒரு கிறுக்கன்...16 பந்து மிகுதி இருக்க சிக்ஸ் அடிக்க வெளிக்கிட்டது சிங் முழுக் கிறுக்கன்..இப்படித்தான் முன்னர் ஒரு போட்டியிலும் ரன்ஸ் வாரி வழங்கினவர்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

9,840 நாள் வரலாறு நிலைக்குமா? இலங்கைக்கு எதிராக எளிதான வெற்றியை கோட்டை விட்ட இந்தியா

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை 230 ரன்கள் சேர்க்கவிட்டு, கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கான 5 ரன்களை அடிக்க முடியாமல் சமன் செய்து வெற்றியை கோட்டை விட்டது இந்திய அணி.

கொழும்பு நகரில் நேற்று பகலிரவாக நடந்த இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில்(டை) முடிந்தது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

தவறுகளை திருத்திய இலங்கை அணி

டி20 தொடரில் தொடக்கத்தை சிறப்பாக அளித்த இலங்கை அணி நடுப்பகுதி பேட்டிங் வரிசையிலும், பின் வரிசையிலும் சொதப்பி, மோசமான தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், ஒருநாள் ஆட்டத்தில் முதல் போட்டியிலேயே அந்தத் தவறை திருத்திக்கொண்டது.

ஒருகட்டத்தில் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில் நடுவரிசை பேட்டர் வெல்லாலகே அரைசதம் அடித்து கவுரவமான ஸ்கோருக்கு உயர்த்தினார். நிதானமாக ஆடி, ரன்களைச் சேர்த்து 230 ரன்கள் வரை இலங்கை அணியின் ஸ்கோர் உயர்வதற்கு வெல்லாலகே முக்கியக் காரணம்.

 
இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொறுப்பை உணர்ந்த பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று கட்டுக்கோப்பாகவே இருந்தது. பவர்ப்ளேயில் சிராஜ், அர்ஷ்தீப் சிறப்பாக செயல்பட்டு 45 டாட் பந்துகளை வீசியதால் இலங்கை அணியால் 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இலங்கை அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

குல்தீப், அக்ஸர் இருவருமே 10 ஓவர்களை நிறைவு செய்து ஓவருக்கு 3.3 ரன் வீதமே வழங்கியதுடன், தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சைப் பொருத்தவரை தங்களின் பொறுப்பை உணர்ந்து நேற்று பந்துவீசியதால்தான் இலங்கை அணியை 230 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இந்த ஆட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா தனது இருப்பை தனது அதிரடியால் வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது, நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார்.

ஆனால், டி20 தொடரிலும் பெரிதாக ஸ்கோர் செய்யாத வருங்கால கேப்டன் என வர்ணிக்கப்படும் சுப்மன் கில், முதல் ஒருநாள் போட்டியிலும் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய ஏமாற்றத்தை அளித்தார்.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா, விராட் கோலியின் பலவீனம் என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் கோலி பேட் செய்யத் தொடங்கியதும் ஹசரங்கா பந்துவீச அழைக்கப்பட்டார். தொடக்கத்திலிருந்தே திணறிய விராட் கோலி, அதை வெளிப்டுத்தாமல் பவுண்டரி அடித்தார். ஆனால், ஹசரங்காவின் லெக் ஸ்பின்னுக்கு கோலி 24 ரன்கள் சேர்த்த நிலையில் பலியாகினார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 189 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவாக இருந்தது. 12 ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்களே தேவைப்பட்டது, 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்த. 42வது ஓவர் வரை இந்திய அணி வெற்றி பெறவே 83 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி 41 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைக் கோட்டை விட்டது.

 
இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. ஷிவம் துபே களத்தில் இருந்தார். வெற்றியின் விளம்பில் இருந்த இந்திய அணி, 48-வது ஓவரில் அசலாங்கா பந்துவீச்சில் முதல் இரு பந்துகளை கோட்டைவிட்ட ஷிவம் துபே, 3வது பந்தில் பவுண்டரி அடித்து சமன் செய்தார். 4வது பந்தில் துபே கால்காப்பில் வாங்கி 25 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அர்ஷ்தீப்பும் கால் காப்பில் வாங்கி ஆட்டமிழந்து வெற்றியைக் கோட்டைவிட்டனர்.

ஐபிஎல் தொடரில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கக்கூடிய பேட்டர் என்று பெயர் பெற்ற ஷிவம் துபே சர்வதேச தளத்துக்கு வந்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் தனது சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தவில்லை.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சு பலம்

இலங்கை அணி அதிகமான சுழற்பந்துவீச்சாளர்களுடன் போட்டியை எதிர்கொண்டது. தீக்சனாவுக்குப் பதிலாக அசலங்கா, ரிஸ்ட் ஸ்பின்னர் ஹசரங்கா, மிஸ்ட்ரி ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் துனித் வெலாலகே ஆகியோர் இந்திய அணியை மிரட்டினர்.

இந்திய அணியின் தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டிங் வலுவாக இருப்பது தெரிந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் என்பதை இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திவிட்டது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, கில் கூட்டணி 75 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் வெலாலகே 13-வது ஓவரில் சுப்மான் கில்லையும், 15-வது ஓவரில் ரோஹித் சர்மாவையும் ஆட்டமிழக்கச் செய்தார். 4வது நிலையில் வழக்கமாக ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் களமிறங்குவர், இந்தஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். ஆனால், தனஞ்செயாவின் சுழற்பந்துவீச்சில் சுந்தர் 5 ரன்களில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.

விராட் கோலியின் பலவீனத்தை அறிந்து ஹசரங்காவை வைத்து அவரை இலங்கை கேப்டன் அசலங்கா வெளியேற்றினார். அது மட்டுமல்லாமல் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹசரங்கா முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார்.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான வெல்லாலகே அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

கடைசி நேரத்தில் கேப்டன் அசலங்கா தார்மீகப் பொறுப்பேற்று 48-வது ஓவரை வீசி அடுத்தடுத்த பந்துகளில் ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை டையில் முடிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். டி20 தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் கடைசி நேரத்தில் பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்திய அதே துணிச்சலை, அசலங்கா இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தினார்.

இலங்கை அணியில் வெலாலகே, தனஞ்செயா, அசலங்கா, ஹசரங்கா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த 4 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 37.5 ஓவர்கள் வீசி, 167 ரன்கள் அதாவது சராசரியாக ஓவருக்கு 4.3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரோஹித், கோலி வருகை ஏமாற்றமா?

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் நேற்று களமிறங்கினர். இதில் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஒய்வுபெற்ற நிலையில் இருவரும் விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அமைந்திருந்தது. 3 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என 33 பந்துகளில் அரைசதம் அடித்து ரோஹித் சர்மா தனது ஃபார்மை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோஹித் களத்தில் இருந்தவரை, இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. இந்திய அணி 71 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 54 ரன்கள் ரோஹித் சேர்த்ததுதான்.

கோலியின் பேட்டிங் எதிர்பார்ப்பைவிட சுமாராகவே அமைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு எளிதாக பலியாகிவிடும் கோலி, இந்த ஆட்டத்திலும் தப்பவில்லை. ஹசரங்காவின் 10 பந்துகளை எதிர்கொண்ட கோலி, அவரிடமே விக்கெட்டையும் இழந்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுவரிசை பேட்டர்கள் பொறுப்பு

கேப்டன் ரோஹித் சர்மா, கில் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்துவிட்டு சென்ற நிலையில் அதை காப்பாற்றி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நடுவரிசை பேட்டர்களுக்கு இருக்கிறது. ஆனால் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்தபின், சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 230 ரன்கள் இலக்கு என்பது எளிதாக அடைந்துவிடக்கூடியது.

ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர்(23), கேஎல் ராகுல்(31), அக்ஸர் படேல்(33) ஆகியோர் இன்னும் சிறிது நேரம் நிலைத்து ஆடியிருந்தால், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் சென்றிருக்கும். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபின், அக்ஸர், கே.எல்.ராகுல் கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.

ஆனால், கடைசி வரிசையில் களமிறங்கிய ஷிவம் துபே தன்னுடைய ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்த போதிலும், வெற்றிக்கான ஒரு ரன்னை சேர்க்காதது அனைத்து உழைப்பையும் வீணாக்கிவிட்டதாகவே உணர்த்துகிறது. அர்ஷ்தீப், குல்தீப், சிராஜ் ஆகியோர் டெய்லெண்டர் பேட்டர்கள் என்பதால் அவர்கள் மீது ரன் அழுத்தத்தை திணிக்க முடியாது. ஆல்ரவுண்டராக அணியில் இருக்கும் துபேதான் கடைசிவரை இருந்து ஆட்டத்தை முடித்திருந்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 பந்துகளில் ஒரு ரன் அடிக்க முடியவில்லை

ஆட்டம் சமனில் முடிந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இந்த ஸ்கோர் எளிதாக அடைந்துவிடக்கூடியதுதான். பேட்டர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்றாலும் நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. சிறப்பான தொடக்கத்தை அளித்தோம், ஆனால், சுழற்பந்துவீச்சு வந்தபின்புதான் உண்மையான ஆட்டம் தொடங்கும் என்பது எங்களுக்குத் தெரியும். தொடர்ச்சியாக சில விக்கெட்டுகளை கடைசியில் இழந்து தவறு செய்தோம். 14 பந்துகள் கைவசம் இருந்த நிலையில் ஒரு ரன்னை எடுக்க முடியாதது வேதனையாக இருக்கிறது.

இந்த போட்டித் தொடர் நாங்கள் உலகக் கோப்பைக்கோ அல்லது சாம்பியன்ஸ் டிராபிக்கு எங்களைத் தயார்படுத்தும் ஆட்டம் அல்ல. இது பயிற்சிக்கான மைதானமும் அல்ல. இது சர்வதேச ஆட்டம். நாம் எதை அடையப்போகிறோமோ அதை மனதில் வைத்து விளையாட வேண்டும். நல்ல கிரிக்கெட்டை விளையாட இங்கு வந்துள்ளோம். சிறந்த தொடராக மாற்றுவோம்” எனத் தெரிவித்தார்

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் ‘டை’ ஆட்டம்

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எந்த முடிவும் இன்றி 0-0 என்ற கணக்கில் இருக்கிறது. கொழும்பு பிரமதேசா மைதானத்தில் இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளதில் இதில் ஒரு ஆட்டம்கூட சமனில் முடிந்தது இல்லை. மைதானத்தின் வரலாற்றிலேயே முதல் போட்டியாக இந்த ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

9,840 நாட்கள் வரலாறு

அடுத்துவரும் 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றால்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்றைத் தக்கவைக்க முடியும். இல்லாவிட்டால், 9,840 நாட்களாக காப்பாற்றி வைத்திருந்த வரலாற்றை இந்திய அணி இழக்க நேரிடும்.

 
இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதாவது, கடைசியாக 1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை வென்று 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக எந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை.

இந்த முறை இலங்கையிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை ஒருவேளை இழந்தால், 27 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வரலாற்றை இழக்க நேரிடும்.

அது மட்டுமல்லாமல் இந்த முறை இலங்கை பயணத்தில் 2வது முறையாக ஆட்டம் டையில் முடிந்துள்ளது. டி20 தொடரில் 3வது ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் முறையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியே சமனில் முடிந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

452988977_1325809351709861_7182310687626

முஸ்லிம்  என்பது மதமே தவிர,  மொழி அல்ல.   
ஒரு  தமிழ்  பேசும் வீரன் இறங்கினார்  என்பதே...   
தமிழ்  பேசும்  ரசிகர்களுக்கு  பெருமை   கிரிக்கெட்  ரசிகன்டா.

Muthusamy Navaraja

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

452988977_1325809351709861_7182310687626

முஸ்லிம்  என்பது மதமே தவிர,  மொழி அல்ல.   
ஒரு  தமிழ்  பேசும் வீரன் இறங்கினார்  என்பதே...   
தமிழ்  பேசும்  ரசிகர்களுக்கு  பெருமை   கிரிக்கெட்  ரசிகன்டா.

Muthusamy Navaraja

 

ஆனால் இவ‌ர் குறைந்த‌ ஓவ‌ர் தான் ப‌ந்து போட்ட‌வ‌ர்..............அதிக‌ ர‌ன்ஸ்சும் விட்டு கொடுத்த‌வ‌ர்

 

இல‌ங்கை அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் பிடிக்க‌னும் என்றால் திற‌மைய‌ வெளிக்காட்ட‌னும்

 

மீண்டும் இல‌ங்கை அணியில் த‌மிழ் பேசும் வீர‌ர் விளையாடுவ‌து ம‌கிழ்ச்சி..............................

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd ODI (D/N), Colombo (RPS), August 04, 2024, India tour of Sri Lanka
 
Sri Lanka FlagSri Lanka    240/9
India FlagIndia      (24.6/50 ov, T:241) 152/6

India need 89 runs from 25 overs.

 

Current RR: 6.08    • Required RR: 3.56    • Last 5 ov (RR): 25/2 (5.00)
Win Probability:IND 15.97%  SL 84.03%
  • கருத்துக்கள உறவுகள்
Sri Lanka FlagSri Lanka   240/9
India FlagIndia   (42.2/50 ov, T:241) 208

Sri Lanka won by 32 runs.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

454312516_915352457271474_64194308926732

 

453627992_915338507272869_65553009963098

 

454201851_805874105051211_69039604179993

இந்திய அணியின்.. தோல்விக்கான காரணம் என்ன?
இலங்கை அணி, வென்றது தான்.  😂 🤣

Aravinth Subramanium

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

454312516_915352457271474_64194308926732

 

453627992_915338507272869_65553009963098

 

454201851_805874105051211_69039604179993

இந்திய அணியின்.. தோல்விக்கான காரணம் என்ன?
இலங்கை அணி, வென்றது தான்.  😂 🤣

Aravinth Subramanium

ராகுலையும் ,சிரேயாசையும் போட்டால் தோல்வி நிச்சயம் ..போதாக்குறைக்கு துபே நேசரிப் பொடியள் மதிரித்தான் விளையாடுது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

453972844_915367133936673_31370180392455

இது,  சஜித் பிரேமதாசாவுக்கு  தெரியுமா? 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியில் மீண்டும் அம்பலமான பலவீனம் - ரோகித் சர்மா கூறியது என்ன?

இந்தியா - இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 ஆகஸ்ட் 2024, 02:20 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

2021ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ளது.

கொழும்பு பிரமதேசா அரங்கில் நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. 241ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்து 32 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 11 போட்டிகளாக இலங்கைக்கு எதிராக தோல்வி அடையாமல் இருந்து வந்த இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.

வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தை இலங்கை சமன் செய்தது. சமன் என்பதே ஏறக்குறைய இலங்கை அணிக்கு கிடைத்த மறைமுக வெற்றிதான்.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களுடன் தடுமாறிய நிலையில் 240 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி வலுவாக இருந்தநிலையில், 208 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

தனி ஒருவனாக மிரட்டிய பந்துவீச்சாளர்

இந்திய அணி தடுமாறி விழுந்ததற்கு இலங்கை அணியின் ஒரே சுழற்பந்துவீச்சாளர் வான்டர்சே மட்டும்தான் காரணம். 2015-ஆம் ஆண்டு சர்வதேச தளத்தில் அறிமுகமாகிய வான்டர்சே இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில்தான் விளயைாடியுள்ளார்.

ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியநிலையில் அவருக்குப் பதிலாக வான்டர்சே நேற்று களமிறங்கினார். இந்திய பேட்டர்களை வாரிசுருட்டிய “லெக் ஸ்பின்னர்” ஜெஃப்ரி வான்டர்சே 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை 29 பந்துகள் வித்தியாசத்தில் வான்டர்சே வீழ்த்தி இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை வான்டர்சே பெற்றார். இதற்கு முன் முத்தையா முரளிதரன், அஜெந்தா மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், அகிலா தனஞ்சயா ஆகியோர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

 
இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் வீழ்ச்சி தொடங்கியது எப்படி?

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா (64) அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, துபே, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், சுப்மான் கில் என பெரிய படையே இருந்தபோதிலும் 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் தனி ஒரு பந்துவீச்சாளரிடம் இந்திய அணி கவிழ்ந்துவிட்டது.

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே தொடர்ந்து 2வது போட்டியிலும் அரைசதம் அடித்தார். ரோஹித் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காதவரை இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது, இந்திய அணியின் வெற்றி 85 சதவீதத்துக்கு மேல் இருந்தது.

ஆனால், வான்டர்சே பந்துவீச வந்தபின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டு அடுத்த 50 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அக்ஸர்படேல், வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து 38 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அக்ஸர், சுந்தர் விக்கெட்டுகளை அசலங்கா வீழ்த்தியபின் இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

தோல்வியால் புரிந்து கொண்டோம்

தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “போட்டிகளில் வெல்ல வேண்டுமென்றால், தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இதில் புரிந்து கொண்டோம், அதனால் இன்று தோல்வி அடைந்தோம். இதுபோன்ற தோல்விகள் வேதனையளிக்கிறது. பேட்டிங் வரிசையில் வலது, இடது பேட்டர்கள் வரிசையில் களமிறங்குவது ஸ்ட்ரைக்கை மாற்ற எளிதாக இருக்கும் என்றாலும், இதற்கு நாம் பழக வேண்டும். ஆனால், இந்த விஷயம் நடக்கவில்லை.''

''இலங்கை அணியினர் உண்மையில் சிறந்த கிரிக்கெட் விளையாடினர். நான் களத்தில் இருந்தவரை விக்கெட் பற்றி யோசிக்காமல் இருந்ததால்தான் 65ரன்கள் சேர்க்க முடிந்தது. நான் சதம் அடிக்கும் ஆட்டம், அரைசதம் அடிக்கும் ஆட்டம், அல்லது டக்அவுட் ஆகும் ஆட்டத்தில் அடுத்துவரும் வீரர்கள் நிலைத்து ஆட வேண்டும். ஆனால், நான் ஆட்டமிழந்தபின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விடுவது வேதனையாக இருக்கிறது.''

''இந்த விக்கெட்டின் தன்மையைப் புரிந்து கொண்டபின் அதற்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்ற வேண்டும். நடுப்பகுதி ஓவர்களில் ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருக்கும். ஆதலால் பவர்ப்ளேயில் ரன்களைக் குவிக்க வேண்டும். அதைதான் நான் செய்தேன். ஆனால், போதுமான அளவு பேட்டர்கள் ரன்களைக் குவிக்கவில்லை. கடந்த காலங்களில் சிறந்த கிரிக்கெட் ஆடியிருக்கிறோம், ஆதால் இதில் எவ்வாறு விளையாடினோம் என்பதை அதிகமாக ஆய்வு செய்ய விரும்பவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் எவ்வாறு மோசமாக பேட் செய்தோம் என்பது குறித்து நிச்சயமாக ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்தார்.

 
இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பலவீனம் அம்பலம்

சுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகிய வலிமையான பேட்டர்களை வைத்திருந்தும், தரமான சுழற்பந்துவீச்சுக்கு முன் இந்திய அணியின் பலவீனம் அம்பலப்பட்டுவிட்டது.

இந்திய அணியின் பலவீனத்தை அறிந்தவுடன் இலங்கை அணியும் வேகப்பந்துவீச்சாளர்களைக் குறைத்துவிட்டு சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்தது. அதன் பலனாக அசலங்கா 3 விக்கெட்டுகளையும், வான்டர்சே 6 விக்கெட்டுகளையும் என 9 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் இருவருமே கைப்பற்றினர். மற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மென்டிஸ், தனஞ்சயா, வெலாகலே ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் விக்கெட் கிடைக்கவில்லை.

மீளமுடியாத இந்திய அணி

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இதேபோன்று இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் திடீரென சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது அக்ஸர் படேல், ஷிவம் துபே ஆகியோர் சேர்ந்து ஆடி, ஆட்டத்தை சமனில் முடித்தனர். ஆனால், இந்த ஆட்டத்தில் அவ்வாறு எந்த பாட்னர்ஷிப்பும் அமையவில்லை. அக்ஸர், சுந்தர் பார்ட்னர்ஷிப் 38 ரன்கள் சேர்த்தாலும் வெற்றி நோக்கி அணியை நகர்த்த முடியவில்லை. கேப்டன் அசலங்கா தனது அடுத்தடுத்த ஓவர்களில் அக்ஸர், சுந்தரை வீழ்த்தினார்.

இலங்கை அணியை மீட்ட வீரர்கள்

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், வெலாலகே இருவரும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். வெலாலகே தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் சிறப்பான பேட்டிங்கை கடைசி வரிசையில் வெளிப்படுத்தி அணியை மீட்டார்.

கமிந்து மென்டிஸ் கடைசி நிலையில் களமிறங்கி 40 ரன்கள் சேர்த்தும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். இருவரின் பேட்டிங்கால்தான் இலங்கை அணி பெரிய சரிவிலிருந்து மீண்டது. இல்லாவிட்டால், இலங்கை அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

 
இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி சரிந்தது எப்படி

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மட்டும்தான் சிறப்பான தொடக்கத்தை கடந்த இரு போட்டிகளாக அளித்துள்ளார். வருங்காலக் கேப்டன் என்று வர்ணிக்கப்படும் சுப்மான் கில் டி20 போட்டியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

சுப்மான் கில் 44 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், இதில் 3 பவுண்டரிகள் அடங்கும் 79 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்தும் பணியில் ஒத்துழைப்பின்றி செயல்பட்டார். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

பவர்ப்ளே ஓவர்கள் முடியும் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் சேர்த்தது, அதில் ரோஹித் சர்மா அரைசதமும் அடித்திருந்தார். ஆனால், சுப்மான் கில் தொடர்ந்து மந்தமாகவே பேட் செய்தார். ஆனால் வான்டர்சே பந்துவீச வந்தபின் இந்திய அணியின் போக்கு மாறியது.

சிறப்பாக பேட் செய்த ரோஹித் சர்மா 64 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்விட்ச் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று வான்டர்சே பந்துவீச்சில் அசலங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது.

அதன்பின் இந்திய அணியின் ஆட்டத்தை வான்டர்சே தனது லெக்ஸ்பின்னில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்த நிலையில், வான்டர்சே பந்துவீச்சிலும் பந்து நன்கு டர்ன் ஆகியது. இதனால், வான்டர்சே வீசிய 18-வது ஓவரில் கில்(35), துபே ஆகியோர் விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.

அதன்பின் வான்டர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். வான்டர்சே வீசிய 20வது ஓவரில் விராட் கோலி கால்காப்பில் வாங்கி வெளியேறினார், 22வது ஓவரில் ஸ்ரேயாஸ் கால்காப்பிலும், 24வது ஓவரில் கே.எல்.ராகுல் க்ளீன் போல்டாகியும் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடந்த 2 போட்டிகளாக ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் இருவரும் பெரிதாக பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. அதிலும் இந்திய அணியின் சென்ட்ரல் கான்ட்ராக்டிலிருந்து நீக்கப்பட்டு வந்தபின் ஸ்ரேயாஸ் ஆட்டம் மந்தமாகவே இருக்கிறது.

14-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 97 ரன்களுடன் இருந்தது. ஆனால், அடுத்த 10 ஓவர்களில் 50 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷிவம் துபேவை டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணியில் வைத்துள்ளனர். ஆனால், இதுவரை மேட்ச்வின்னிங் ஆட்டத்தை ஒரு போட்டியில்கூட துபே வெளிப்படுத்தவில்லை.

ஐபிஎல் தொடரில் மஞ்சள் ஆடையில் இருந்தால் சுழற்பந்துவீச்சை வெளுக்கும் துபே, நீல ஆடைக்கு மாறியதும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.

இந்திய அணியின் வெற்றிக்கு 93 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அக்ஸர், வாஷிங்டன் இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பணியைத் தொடங்கினர். ஆனால் இருவரும் சேர்ந்து 38 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அசலங்கா பந்துவீச வந்தபின் அக்ஸர் (44), சுந்தர்(15) இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றி இலங்கை அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். சிராஜ் 4 ரன்களில் கால்காப்பில் வாங்கி அசலங்கா பந்துவீச்சில் வெளியேற, அர்ஷ்தீப் ரன் அவுட் ஆகவே இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

இந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய பேட்டர்கள் 5 பேர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். இதில் வான்டர்சே பந்துவீச்சில் மட்டும் கோலி, துபே, ஸ்ரேயாஸ் ஆகிய 3 முழுநேர பேட்டர்கள் ஆட்டமிழந்தது ஆய்வுக்குரியதாகும்.

தரமான சுழற்பந்துவீச்சுக்கு முன் காலை நகர்த்தி ஆடாமல் இருந்தது, பந்தை கணிக்காமல் ஆடியதன் பலனாக விக்கெட்டுகளை இழந்துள்ளனர். அதேபோல பின்வரிசையில் சிராஜ், சுந்தர் இருவரும் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் இந்திய பேட்டர்கள் பந்துவீச்சின் தன்மை, பந்தை சரிவர கணிக்காமல் ஆடியது விக்கெட் சரிவில் தெரியவந்துள்ளது.

இலங்கையை மீட்ட பேட்டர்கள்

இலங்கை அணி சிராஜ் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே நிசங்கா விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அடைந்தது. ஆனால் 2வது விக்கெட்டுக்கு குஷால் மென்டிஸ், பெர்னான்டோ இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டு 74 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அடுத்த 66 ரன்களுக்குள் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 150 ரன்களைக் கடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

7-வது விக்கெட்டுக்கு வெலாலகே, மென்டிஸ் இணைந்தபின்புதான் இலங்கை அணி மீண்டும் உயிர்மூச்சு பெற்றது. இருவரும் மெல்ல இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இலங்கை அணிக்கு முதல் இரு சிக்ஸர்களையுமே வெலாலகேதான் அடித்தார். சுந்தர், குல்தீப், அக்ஸர் பந்துவீச்சை நன்கு கணித்து ஆடிய இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.

குல்தீப் பந்துவீச்சில் 39 ரன்கள் சேர்த்தநிலையில் வெலாலகே விக்கெட்டை இழந்தார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. கடைசி நேரத்தில் மென்டிஸ்(40), தனஞ்செயா(15) கேமியோ ஆடி இலங்கை அணியை கவுரமான ஸ்கோருக்கு கொண்டு வந்தனர். அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் மென்டிஸ், தனஞ்செயா இருவருமே ரன்அவுட் ஆகினர்.

 
இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரைசதம் இல்லாவிட்டாலும் வெற்றி

இலங்கை அணியில் ஒரு பேட்டர் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஆனாலும், சரிவிலிருந்து மீண்டு 240 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா தொடர்ந்து 2-ஆவது அரைசதம் அடித்தபோதிலும், இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.

இந்திய அணிக்கு ஆறுதலான அம்சம், குல்தீப், வாஷிங்டன் இருவரின் பந்துவீச்சுதான். இருவரும் 20 ஓவர்கள் வீசி, 2மெய்டன்கள், 63 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 7-வது பந்துவீச்சாளராக ரோஹித் சர்மாவும் நேற்று 2 ஓவர்களை வீசினார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரேம‌தேசா மைதான‌த்தில் இர‌வு நேர‌த்தில் இல‌ங்கையின் சுழ‌ல் ப‌ந்து ந‌ல்லா சுழ‌லுது..................ரோகித் ச‌ர்மா இர‌ண்டு ம‌ச்சிலும் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வ‌ர் ஆனால் இல‌ங்கை வீர‌ர்க‌ள் சுழ‌ல் மாஜிக் மூல‌ம் இந்திய‌ வீர‌ர்க‌ளை சீக்கிர‌ம் ஆட்ட‌ம் இழ‌க்க‌ செய்கின‌ம்...............

 

இந்தியா தான் ப‌ல‌மான‌ அணி

இலங்கை அணியின் புது க‌ப்ட‌னுக்கு கிடைச்ச‌ முத‌ல் வெற்றி............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.