Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1572229620-dead-body-2.jpg?resize=650,37

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற்  போயுள்ளதாகக்  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச்  சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்  உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1394350

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர் உயிரிழந்த விவகாரம் - இலங்கையின் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கண்டனம்

01 AUG, 2024 | 04:09 PM
image
 

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவரை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயன்றவேளை படகு கவிழ்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் பிரியங்க விக்கிரமசிங்கவை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை கண்டனத்தை வெளியிட்டுள்ளது என இந்திய வெளிவிவகார  அமைச்சு தெரிவித்துள்ளது.

துரதிஸ்டவசமான இந்த உயிரிழப்பு குறித்து  எங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்துகின்றோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா இந்த விவகாரம் குறித்து நாளை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/190012

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாதம்... இந்திய மீனவர்களை கைது செய்யப் போன போது...  
ஒரு  ஸ்ரீலங்கா கடற்படை வீரர் மரணமானத்துக்கு பழிவாங்கல் நடவடிக்கையாக  இருக்குமோ.

ஸ்ராலின் மோடிக்கு இன்னுமொரு கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்துவிட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

ஸ்ராலின் மோடிக்கு இன்னுமொரு கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்துவிட்டது

தந்தை எவ்வழியோ… தனயனும் அவ்வழி. 😂

இனி…. சின்னவர் உதயனும் அவ்வழி. இது நம் தலைவிதி. 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

stalin-3.jpg?resize=750,375

உயிரிழந்த இந்திய மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அறிக்கையொன்றின் மூலம் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு தனது  இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு  தூதரங்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் மேலும் பல மீனவர்களை இழக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1394446

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

protest-newwwwwwww-scaled.webp?resize=75

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு தரவும் மேலும் உயிருடன் இருக்கும் இரண்டு மீனவர்களையும் எந்தவிதம்மான வழக்கும் இடாதபடி தாயகம் கொண்டு வர வலியுறுத்தி இன்று முதல் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 400ற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை படகு மீது மோதியதில் படகு மூழ்கியது. அதிலிருந்து நான்கு மீனவர்கள் உயிரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளனர் இதில் இரண்டு மீனவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதன் பின் மலைச்சாமி என்ற மீனவர் சடலமாக மீட்க்கப்பட்டார்.

 

இலங்கை கடற்படை செயலை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும் ,அதிகாரியோடு நடந்த பேச்சு வார்த்தையால் போராட்டம் கை விடப்பட்டது

இதனைத் தொடர்ந்து இன்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காலவரையற்ற போராடட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394505

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த மீனவரின் சடலம் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது!

Published By: DIGITAL DESK 3   03 AUG, 2024 | 10:40 AM

image

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற விசைப்படகு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களை கைதுசெய்ய இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட விபத்தையடுத்து மீன்பிடி படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (64) என்ற மீனவர் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளார். 

மேலும், முத்து முணியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (02) மதியம் முத்து முணியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் வழக்குப் பதிவு செய்யப்படாது எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.  

மேலும், இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகொப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் மற்றும் மலைச்சாமியின் உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைக்கப்பட்டது. 

அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட இந்திய கடற்படை வீரர்கள்  இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட  மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மலைச்சாமியின் உடல் ஆம்பியூலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

கடலில் காணாமல் போன மீனவர் ராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்து வந்த மீனவர் தெரிவித்துள்ளார்.

Screenshot_20240803_063217_Video_Player.

56.jpg

https://www.virakesari.lk/article/190151

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழப்பு : உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

Published By: DIGITAL DESK 3   03 AUG, 2024 | 09:57 AM

image
 

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில், இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் தண்ணீருக்குள் மூழ்கியதாலேயே இறப்புச் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோதே இந்த விபத்துச் சம்பவித்திருந்தது. 

இறந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (02) உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே அந்த மீனவர் தண்ணீரில் மூழ்கியதால் இறப்புச் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன் இந்த உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இதேவேளை, காணாமற்போன மீனவர் வெள்ளிக்கிழமை மாலை வரை மீட்கப்படவில்லை என்றும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/190150

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.