Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அச்சம் தவிர்
-------------------
முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின்  மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவை கிட்டத்தட்ட எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்த நாடு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கேயே உழைத்து, இங்கேயே செலவழிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போல. இதற்காக இங்கு சில பல்கலைகளில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அறிக்கைகள் கூட தயார் செய்திருப்பார்கள். இவர்களின் சில ஆராய்ச்சிகளைப் பார்த்தால், அவை 'மயிர் பிளக்கும்' ஆராய்ச்சிகள் போன்றே தோன்றும். ஆனாலும் அவற்றின் பின்னாலும் சில திட்டங்கள் இருக்கும் போல.
 
மிக நேர்மையானவனாக இருந்தான். அதுவரை நான் அப்படி நேர்மையான ஒரு மனிதனை எங்களின் வேலையில் பார்த்திருக்கவில்லை. மிகத் திறமையானவனும் கூட. அவன் பொய்யே சொல்வதில்லை என்றே தோன்றியது. ஒரு நாள் நேரடியாகவே அதைக் கேட்டேன். மெல்லிய சிரிப்பு ஒன்றே அவனின் பதிலாக இருந்தது. தினமும் ஒரு கத்தியுடனேயே வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றான் என்று சில நாட்களில் தெரிய வந்தது. கத்தியை அவனின் மேசையில் இருக்கும் ஒரு அலுமாரியில் வைத்துக் கொள்வான். பின்னர் வேலை முடிந்து வீடு போகும் போது அதை கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவர்களின் மார்க்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பிரிவுகளும் இல்லாமல் இன்னொரு பிரிவே அவனுடையது. முதன் முதலாக அந்த மார்க்கத்தில் இருக்கும் அப்பிரிவைப் பற்றி அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆண்கள் கத்தியுடன் வெளியே போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டளை அங்கிருந்தது. 
 
சீக்கியர்களுக்கும் இப்படியான ஒரு வழக்கம், கத்தி ஒன்றுடன் போய் வரும், இருந்தது. இன்றும் பஞ்சாப்பில் நகரம் அல்லாத பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கக்கூடும். 9/11 தாக்குதலின் பின், இங்கு சில இடங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், இஸ்லாமியர்கள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். இரு பக்கங்களும் ஒரே மாதிரியான தோற்றங்கள் மற்றும் ஆடைகள், ஒப்பனைகள், கத்திகளுடன் இருக்கின்றனர்.
 
ஒரு நாள் ஏதோ ஒரு விசா சம்பந்தமான அலுவல் ஒன்றுக்காக அவன் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் குடிவரவு அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. எங்களின் வேலை இடத்தில் இருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் நகரத்தின் மையப்பகுதி இருக்கின்றது. அங்கே வேறு பல மத்திய, மாநில அரச அலுவலகங்களும் சுற்றிவர இருக்கின்றன. காலையில் இருந்தே அந்தப் பகுதி கூட்டமாக இருக்கும். காரை தரிப்பிடங்களில் நிற்பாட்டுவதற்கே நேரம் எடுக்கும். ஆதலால் அதிகாலையிலேயே போய், அருகே இருக்கும் ஒரு இடத்தில் காரை நிற்பாட்டி விட்டு, அவன் போக வேண்டிய இடத்திற்கு போகச் சொல்லியிருந்தேன். கூகிளுக்கு முந்திய காலம் இது.
 
காரை நான் சொல்லியிருந்த இடத்தில் விட்டு விட்டு, அருகிலேயே இருக்கும் கட்டிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா, எந்தப் பக்கம் போவது என்ற சந்தேகம் வந்தது. அங்கே நின்ற ஒருவரைக் கேட்போம் என்று, கையில் ஒரு கடதாசியை நீட்டிக் கொண்டே, இந்த இடம் எங்கே இருக்கின்றது என்று அவன் கேட்கப் போனான். இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான்.
 
அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான். உன்னுடைய கத்தி எங்கே இருந்தது என்று கேட்டேன். இடுப்பைக் காட்டினான். இப்பவும் அந்தக் கத்தி அங்கேயே இருந்தது. இனிமேல் தான் அது மேசை அலுமாரிக்குள் போகும்.
 
சில மாதங்கள் அவன் இங்கிருந்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போய்விட்டான்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான்.

நல்லகாலம் திரும்பி வந்தது.

இல்லையென்றால் கத்தியுடன் குடிவரவு அலுவலகக்காரன் பிடித்திருந்தால் ஆளை உள்ளுக்கு போட்டு சிலவேளை திருப்பியும் அனுப்பியிருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் திரும்பி வந்தது.

இல்லையென்றால் கத்தியுடன் குடிவரவு அலுவலகக்காரன் பிடித்திருந்தால் ஆளை உள்ளுக்கு போட்டு சிலவேளை திருப்பியும் அனுப்பியிருப்பார்கள்.

😀....

அன்றைக்கே திரும்பி போயிருக்க வேண்டிய ஆள்.... போதுமடா, இந்த நாடு என்று சில மாதங்களில் ஒரேயடியாக திரும்பி போனவன் தான், பின்னர் இந்தப் பக்கம் வரவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட ......நான் நினைத்தேன் இவர் கடதாசி என்று நினைத்து கத்தியை நீட்டிக்கொண்டு போயிருப்பார் என்று அதுதான் அவர் தலை தெறிக்க ஓடியிருப்பார் . ....... சில அரபிக்காரர்களும் எப்பொழுதும் வாள் போன்ற கத்தியை இடுப்பில் கட்டியிருப்பார்கள் . ........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

அட ......நான் நினைத்தேன் இவர் கடதாசி என்று நினைத்து கத்தியை நீட்டிக்கொண்டு போயிருப்பார் என்று அதுதான் அவர் தலை தெறிக்க ஓடியிருப்பார் . ....... சில அரபிக்காரர்களும் எப்பொழுதும் வாள் போன்ற கத்தியை இடுப்பில் கட்டியிருப்பார்கள் . ........!  😂

🤣.........

இங்கு சில வருடங்களின் முன் வெறும் கையை துப்பாக்கி போல நீட்டிய ஒருவரை போலீஸ் சுட்டுக் கொன்று, அது பெரிய செய்தியாகியது. கொல்லப்பட்ட அந்த நபரின் கையில் தாங்கள் ஒரு துப்பாக்கியை கண்டோம் என்று தான் போலீஸ் ஆரம்பத்தில் சொன்னது..........

முந்தாநாள் இங்கு எனக்கு அருகில் இருக்கும் ஊர் ஒன்றில் தெருவில் போய்க் கொண்டிருந்த மூன்று ஆட்களுக்கிடையில் ஏதோ வாக்குவாதம். திடீரென ஒருவர் ஒரு துப்பாக்கியை எடுத்து இன்னொருவரைச் சுட்டுவிட்டார். மூன்றாமவர் சுட்டவரின் மேல் பாய்ந்து, படங்களில் வருவது போல, அவர்கள் இருவரும் கைகளால் சண்டை போட்டுக் கொண்டனர்.........போலீஸ் அங்கு வர முன் சுட்டவர் ஓடித் தப்பி விட்டார்..........

அமெரிக்கா ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் எல்லா பதக்கங்களையும் வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை............🤣.

 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான்

மடியில் கத்தி. மனதில் பயம்.

ஏன் எதற்கு என்று விளக்கம் சொல்லாமலே முன்னவர்கள் சில விடயங்களை எங்களுக்குள்ளும் புகுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியானதொன்றாகவே சீக்கியர் கத்தி, மீசை,தாடி, தலைப்பாகை எல்லாவற்றையும் பார்க்கிறேன்.

இப்பொழுது கத்திகளுடன் சீக்கியர்கள் வருவதில்லை என்பதில் ஆறுதல். ஆனாலும் சிரியனும்,ஆப்கானிஸ்தானும் எப்பொழுது கத்தியை எடுப்பார்கள் என்ற பயம் யேர்மனியில் இருக்கிறது.

முந்தநாள் வந்த யேர்மனியச் செய்தி இப்படி இருக்கிறது,

கத்திகளைப் பாவிக்கும்  வன்முறை ஜேர்மனியில் தற்போது அதிகரித்திருக்கிறது. வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆண்கள்  உடனடியாக எடுத்துக் கொள்ளும் ஆயுதம் கத்தியாகத்தான் இருக்கின்றது.

ஜேர்மனியில் கடந்த ஆண்டு 13,844 தாக்குதல்கள்கள் நடைபெற்றதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த மாதம் 10,11,12ம் திகதிகளில் அதாவது 72 மணித்தியாலங்களில் மட்டும், கத்திகளைப் பாவித்த 13 வன்முறைகள் பதியப்பட்டிருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kavi arunasalam said:

மடியில் கத்தி. மனதில் பயம்.

👍.....

வீரம், வீரம் என்பவர்கள் பலர் எப்போதும் உள்ளுக்குள் பயத்துடனும், நடுக்கத்துடனும், சந்தேகத்துடனும் தான் வாழ்நாள் முழுவதும் இருக்கின்றார்கள் போல.  

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியர்களின் திருமணத்தில் மணமகன் கையில் இப்படி வாளை கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

வட இந்தியர்களின் திருமணத்தில் மணமகன் கையில் இப்படி வாளை கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

இந்த நண்பனின் சொந்த மாநிலம் மத்தியப் பிரதேசம். அவனில் அராபியர்களின் சில அம்சங்களும் தெரியும். ஆனால் வீட்டில் பேசுவது ஹிந்தி அல்ல. குஜராத்தி மொழியையே இவர்கள் வீட்டில் பேசுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் பேசுவது போல. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.