Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன(china) கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை(sri lanka), வியட்நாம்(vietnam), இந்தோனேசியா(indonesia) ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கப்பலின் வருகை அமையவுள்ளது.

சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை குறித்த கப்பல் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதி

85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல் | Chinese Ship To Follow Us To Sri Lanka

கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று கப்பலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மூன்று நாசகாரி கப்பல்கள்

இந்த கப்பல் தனது பயணத்தின் போது ஹொங்கொங்கில் தொழில்நுட்ப வசதிகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல் | Chinese Ship To Follow Us To Sri Lanka

அண்மையில் அமெரிக்காவின் மூன்று நாசகாரி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/chinese-ship-to-follow-us-to-sri-lanka-1724493557

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து... இலங்கை விரையும்  இந்திய போர்க் கப்பல். 😂 🤣

இலங்கை வரும் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்

இலங்கை வரும் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்.

இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, மூன்று நாள் பயணமாக நாளை 26ஆம் திகதி இலங்கை  வந்தடையவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல், தமது இடைக்கால மேம்படுத்தலை முடித்து, 2023 டிசம்பர் 08 ஆம் திகதி, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில்,  ஐஎன்எஸ் மும்பை, முதல் தடவையாக, இலங்கையில் உள்ள துறைமுகம் ஒன்றுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த ஆண்டுக்குள் இந்திய கப்பல்களின் இலங்கைக்கான எட்டாவது துறைமுக அழைப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது.

இந்தியக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட, உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட கப்பல்களில் மூன்றாவது கப்பல் இது என்பதுடன், இந்தக் கப்பல், மும்பையில் உள்ள மசாகன் டாக் லிமிடெட்டில் கட்டப்பட்டது என்று இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐஎன்எஸ் மும்பை இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானத்திற்கான அத்தியாவசிய உதிரிப்பாகங்களை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இலங்கை வரும் ஐஎன்எஸ் மும்பை, ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பில்  இருந்து புறப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1397052

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவின் மூன்று நாசகாரி கப்பல்கள்

16 hours ago, ஏராளன் said:

சீன(china) கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை வரும் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்.

இலங்கைத்தீவுமீது ஏதும் போரபாயம் ஏற்பட்டுள்ளதா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nochchi said:

இலங்கைத்தீவுமீது ஏதும் போரபாயம் ஏற்பட்டுள்ளதா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இலங்கைக்கு ஒரு பேராபத்தும் இல்லை.
எல்லா  இடத்திலும் தண்டினால்... அவனும் உரித்துடன் வரத்தான் பார்ப்பான்.
இந்த போர்க்கப்பல்கள் கண்டபடி வருவதைப் பற்றி... புத்த பிக்குகளோ, 
கடும் சிங்கள போக்குடையவர்களோ... வாயே திறக்க மாட்டார்கள்.
தமிழர் பிரச்சினைகளை இவர்கள் சுமுகமாக அணுகி தீர்த்திருந்தால், 
இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? ஆனால் அதன் மூலகாரணத்தைக் கூட தெரிந்தும்...
தெரியாத மாதிரி நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்கள் கெட்ட கேட்டிற்கு... இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

உண்மை. ஆனால் இந்தத் தலைசிறந்த சிங்கள நரியான ரணில் போன்றவர்கள் இருக்கும்வரை சிறிலங்காவை அசைக்க முடியுமா?
   பார்வைக்குக் போர்க்கப்பல்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும் தென்னாசியப் பிராந்தியத்தில் தேவையற்ற பதற்றங்களுக்கான புறநிலைகளை ஊக்குவிக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. மத்திய கிழக்குப் போன்ற நிலைமைகளுக்கான ஏதுநிலையை இந்தப் படைக்கலங்களின் நகர்வுகள் ஏற்படுத்திவிடலாம். தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்காதிருப்பதற்காகப் பெரும் விலையைச் சிங்களம் இன்னுமின்னும் உலக ஆதிக்க சக்திகளுக்கு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டு மேலும் சீரழியப்போகிறது.(இலங்கை நேசர்கள் கடந்துபோகக் கடவ)  பிச்சையெடுத்து உண்பவனைவிட மோசமானதொரு நிலைக்கு இலங்கைத்தீவைச் சிங்களம் கொண்டுவந்துவிட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நினைக்கிண்றீர்களா ........இனியொரு பெரிய யுத்தம் ஏற்படுமென்றால்  ரஸ்யா உக்கிரேனிலோ அல்லது இஸ்ரேல் பலஸ்தீனத்திலோ ஒருபோதும் ஏற்படாது . .......பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டி இதுதான் கெட்டித்தனம் தந்திரம் என்று நினைக்கும் இலங்கையில் இருந்துதான் துவங்கும் என்று நினைக்கின்றேன் . .......! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

சுவி ஐயா, இலங்கை நேசர்கள் கண்டால் உங்கள் தலையை உருட்டப்போகிறார்கள். ஒருவேளை அப்படியொன்று நிகழுமானால் தமிழினத்திற்கான விடியலும் இணைந்துவரும் வகையில் எமது தலைமைகள் இராசதந்திரமாகக் காய் நகர்த்துவார்களாயின் நன்று. ஆனால்,சிறிலங்காவைப் பிணையெடுக்கும் மெத்தப்படித்த மேதாவிக் கூட்டம் கடந்து 15ஆண்டுகளாகக் கிடைத்த சூழலை மதிப்பீடுசெய்து ஒரு ஆணியையும் புடுங்கமுடியவில்லை.ஆணியைப் புடுங்குவதற்குப் பதிலாக ஐ.நா. வரைபோய் தமிழினத்தைச் சவப்பெட்டியுள் வைத்து ஆணி அடித்ததுதான் நாம் கண்டது. பாருங்கள் நாமொரு இனமாகத் திரளவேண்டிய சூழலிற்கூட தமிழ்த் தரப்பினரிடையேயே மூன்று பக்கமாக இழுக்கப்படும்  நிலையெனும்போது இவர்களது இராசதந்திரை என்னவென்று சொல்லமுடியும். 

ஒரு பயமும் உள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் அப்படிப்  போரொன்று வந்தால் அங்கும், இப்போது களத்திலே ரஸ்யா - உக்ரேன் என்று நிற்பதுபோல் நிற்பார்களாயின் நிலைமை யோசித்துப்பாருங்கள்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய போர்க்கப்பலை தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள 3 சீன போர்க் கப்பல்கள்!

Published By: DIGITAL DESK 3  26 AUG, 2024 | 04:37 PM

image
 
சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான 3 போர் கப்பல்கள்  இன்று திங்கட்கிழமை (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

"HE FEI", "WUZHISHAN" மற்றும் "QILIANSHAN" ஆகிய 3 போர் கப்பல்களை  கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

"HE FEI" 144.50 மீட்டர் நீளமுள்ள போர் கப்பலாகும். கேப்டன் சென் ஜுன்ஃபெங்கின் தலைமையில் 267 பணியாளர்களை கொண்டுள்ளது.

 "WUZHISHAN"  210 மீட்டர் நீளமுள்ள போர் கப்பலாகும். கேப்டன் ஃபீ ஜாங்கால் தலைமையில் 872 பணியாளர்களை கொண்டுள்ளது.

"QILIANSHAN" 210 மீட்டர் நீளமுள்ள போர் கப்பலாகும். கேப்டன் சியோங் பிங்ஹோன் தலைமையில் 334 பணியாளர்களை கொண்டுள்ளது.

சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான முப்படை போர்க்கப்பல்களின் கட்டளை தளபதிகள் இன்றையதினம் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்திக்க உள்ளனர்.

இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், கப்பல்களின் பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது நாட்டின் சில சுற்றுலா தலங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும், இலங்கை கடற்படையினருக்கு கப்பல்களின் செயல்பாட்டு செயல்பாடுகள் பற்றிய விளக்கக்காட்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது. 

கொழும்பு கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் பாசேஜ் பயிற்சிக்குப் பிறகு (பாசெக்ஸ்) மூன்று போர்கப்பல்களும் 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192044

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக வெளிப்படையாக தெரிகிறது! 3 சீன கப்பல்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு இந்தியக் கப்பல் தான் நட்போடு பயிற்சி கொடுக்க வந்துள்ளது!!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

மிக வெளிப்படையாக தெரிகிறது! 3 சீன கப்பல்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு இந்தியக் கப்பல் தான் நட்போடு பயிற்சி கொடுக்க வந்துள்ளது!!

இந்தியா எவ்வளவு... குத்தி முறிந்தாலும், ஸ்ரீலங்காவின் காதல் என்றுமே சீனாவின் பக்கம்தான்.
அது இந்திய கொள்கை வகுப்பாளருக்கு புரியவே புரியாது. 
ஏனென்றால்... அவர்கள் மண்டையில் களிமண். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யார் சிறிலங்காவில் காலூன்றுவது என்பதில் பலத்த போட்டி நிகழ்கிறது என்பதை மேற்படி சம்பவங்கள் காட்டி நிற்கின்றது. இதில் சிறிலங்கா பெருமைப்பட எதுவுமில்லை.ஏனைய நாடுகளிடம் கூனி குறுகி நிற்பதாகவே தென்படுகிறது. யாரும் வாய் திறக்காதது தான் ஆச்சரியம் அளிக்கிறது.
தேர்தலுக்கு பம்முவதாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

யார் சிறிலங்காவில் காலூன்றுவது என்பதில் பலத்த போட்டி நிகழ்கிறது என்பதை மேற்படி சம்பவங்கள் காட்டி நிற்கின்றது. இதில் சிறிலங்கா பெருமைப்பட எதுவுமில்லை.ஏனைய நாடுகளிடம் கூனி குறுகி நிற்பதாகவே தென்படுகிறது. யாரும் வாய் திறக்காதது தான் ஆச்சரியம் அளிக்கிறது.
தேர்தலுக்கு பம்முவதாக இருக்கலாம்.

images?q=tbn:ANd9GcQPHQNYO2h39-0OmLh5xYy sarath-weerasekara_3.jpg

கண்டதுக்கு எல்லாம் குலைத்துக் கொண்டு இருக்கின்ற, சரத் வீரசேகர கூட.... வாயை திறக்க காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQPHQNYO2h39-0OmLh5xYy sarath-weerasekara_3.jpg

கண்டதுக்கு எல்லாம் குலைத்துக் கொண்டு இருக்கின்ற, சரத் வீரசேகர கூட.... வாயை திறக்க காணோம்.

தேவைக்கு ஏற்றால் போல் நாக்கை பிரட்டும் பக்கா திருடர்கள்.🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது சிரிலங்காவை நோக்கி பங்களாதேஷ் கப்பல் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்டுமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQPHQNYO2h39-0OmLh5xYy sarath-weerasekara_3.jpg

கண்டதுக்கு எல்லாம் குலைத்துக் கொண்டு இருக்கின்ற, சரத் வீரசேகர கூட.... வாயை திறக்க காணோம்.

தேர்தல் வாறதால வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டிப்போட்டாங்களோ?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.