Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU   04 SEP, 2024 | 12:25 AM

image

போர் நிறைவுற்று நீண்டகாலம் ஆகியும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்டார் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனது ஆட்சியில் அவர்களுக்கு  25 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியமாக 57500 ரூபா  மாற்றப்படும்.

அரச ஊழியர்கள் இந்த நாட்டின் சொத்து. அரச சேவையின் தரம் விருத்தி செய்யப்படவேண்டும். 

உங்களுடைய ஒத்துழைப்பை எங்களுக்குத் தாருங்கள். எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து உங்களின் சகல பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம். 

அத்துடன் இந்த வவுனியா பிரதேசத்தில் வாழ்கின்ற கிராமபுறமக்களின் வாழ்வாதாரத்தினை எனது அரசு மேம்படுத்தும். பல்துறைகளிலும் அபிவிருத்தியடைந்த இடமாக இதனை மாற்றுவதற்கான நடவடிக்கையினை நிச்சயமாக எடுப்பேன். 

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் அரசியல் சதி செய்து என்னைத் தோற்கடித்தார்கள். என்னால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தும்  கோட்டா அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது. எனவே எனது ஆட்சியில்  நிறுத்தப்பட்ட அனைத்து வீட்டு வேலைத்திட்டங்களும் நிச்சயமாக முழுமையாக வழங்கப்படும்.  

அத்தோடு நாட்டின் வறுமை நிலையினை குறைக்கவேண்டும். சேமிப்பு, முதலீடு, நுகர்வு, உற்பத்தி ஏற்றுமதி இவற்றினை மையப்படுத்தி வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் சுயபொருளாதாரத்தினை வளர்ச்சியடை செய்யவேண்டும். இந்த நிலையான வேலைத்திட்டத்தினை  நடைமுறைப்படுத்துவேன். 

கல்வித்துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை ஆகியன எனது ஆட்சியில் மேம்படுத்தப்படும். மகாவலி எ வலயம் அபிவிருத்தி செய்யப்படும். விவசாயக்கடன்கள் அனைத்தும் நீக்கப்படும். புதிய உபகரணங்கள் விவசாயிகளிற்கு வழங்கப்பட்டு விவசாயத்தில் புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும்.

வவுனியாவில் இளைஞர்களின் தொழில் வாய்ப்பினை கருத்தில்கொண்டு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும். இந்த அரசாங்கத்தினால் ஒரு கடவுச்சீட்டைக் கூட சீராக வழங்க முடியாதிருக்கின்றது.

இந்த நிலைமையில் அவர்களால் எவ்வாறு தொழிற்சாலைகளை வழங்கமுடியும். தொழிற்சாலைகளை எரித்து அழித்தவர்கள் எவ்வாறு அதனை நிறுவித்தருவார்கள்.

எனவே நீங்கள் நன்றாகச் சிந்தியுங்கள்.

ஜக்கியமக்கள் கூட்டமைப்பு சிறப்பான அணியினை கொண்டது, நாட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடிய சிறந்த அணி எம்மிடம் உள்ளது. போர் நிறைவுற்ற பின்னர் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்தித்தார்களா? எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை எடுப்பேன். எனவே எதிர்வரும் காலத்தில் அபிவிருத்தி புரட்சியோடு நாம் உங்களைச் சந்திப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/192786

Posted

சரியாக  தேர்தல் நேரம் ஒத்துளைப்பு மாநாடு நடாத்த தீர்மானித்துள்ளார். என்ன ஒரு கரிசனை???

  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

சரியாக  தேர்தல் நேரம் ஒத்துளைப்பு மாநாடு நடாத்த தீர்மானித்துள்ளார். என்ன ஒரு கரிசனை???

தான் பதவிக்கு வந்தால் செய்வேன் என்கிறார்! பெரும்பாலும் தேர்தல் கால வாக்குறுதி தான், மற்றவர்கள் கரிசனை கொள்ளாத செய்யவேண்டிய பணியை செய்வேன் என்கிறார்! பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

சரியாக  தேர்தல் நேரம் ஒத்துளைப்பு மாநாடு நடாத்த தீர்மானித்துள்ளார். என்ன ஒரு கரிசனை???

இதைக் காட்டி வாங்கி அங்கால சரிந்ததை ஈடு செய்து விட்டு பார்த்தாயா தமிழர்களின் தலையில் எவ்வாறு மா அரைச்சேன் என்று அடுத்த முறையும் வெல்லத் தான். 

Posted

மலையைக் கொண்டு வருவன், ஆற்றைக் கொண்டு வரவேன் என்று பம்மாத்து விட்டுக் கொண்டு இருக்காமல், 13 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரத்தினை வடக்கு கிழக்கு உட்பட எல்லா மாகாணசபைகளுக்கும் வழங்கி அவற்றை நடைமுறைப்படுத்துவேன் எனச் சொல்வது நடைமுறைச் சாத்தியமாகவாவது இருக்கும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

மலையைக் கொண்டு வருவன், ஆற்றைக் கொண்டு வரவேன் என்று பம்மாத்து விட்டுக் கொண்டு இருக்காமல், 13 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரத்தினை வடக்கு கிழக்கு உட்பட எல்லா மாகாணசபைகளுக்கும் வழங்கி அவற்றை நடைமுறைப்படுத்துவேன் எனச் சொல்வது நடைமுறைச் சாத்தியமாகவாவது இருக்கும்.

ஏற்கனவே சட்டமாக உள்ளதை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கேட்கிறார்.

தான் வந்தால் இப்போது உள்ளதை நடைமுறைப்படுத்துவேன்.அத்தோடு அதற்கு மேலாகவும் ஏதாவது செய்யலாமா என்று ஆராய்வேன் என்கிறார்.

வழமையில் தமிழர் பிரச்சனை என்று வரும்போது எதிர்ப்பவர்கள் கிழித்தெறிபவர்கள் பாதயாத்திரை போகிறவர்கள்

இந்தமுறை பொதுவேட்பாளரை இறக்கியபடியால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் என எண்ணுகிறேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் - சஜித் பிரேமதாச

15 SEP, 2024 | 05:32 PM
image

வட கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம். தாம் அதிகாரத்துக்கு வந்த பிறகு வடகிழக்கு மக்களை மையப்படுத்தியதாக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை பாரிய அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்வோம். இதன் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த தற்போதைய பதில் ஜனாதிபதி வடகிழக்கு மக்களை சந்திக்க சென்றார். அவரால் வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்ட முடியுமாக இருந்தாலும், அதற்கான இயலுமை அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாட்டை கூட்டவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த இயலுமை இருக்கின்றது. எனவே அதிகாரத்திற்கு வந்த உடனே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (15) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் கூறுகையில், 

சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அனைத்து பாடசாலைகளையும் மாற்றி தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், மற்றும் ஆங்கில மொழிக் கல்வி என்பனவற்றை பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, புதிய கல்வி முறை ஒன்றின் ஊடாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக அனைத்து வைத்தியசாலைகளையும் மாற்றி உயர்தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குக்கு மீண்டும் 15 வீத வட்டி

அத்தோடு ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்த்து சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டியை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் வீடமைப்பு திட்டத்தை நிறுத்தினாலும் தாம் அதிகாரத்திற்கு வந்த உடனே உதா கம்மான திட்டத்தை நிறைவு செய்து அதனை மக்களிடம் கையளிப்போம்.

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பல சலுகைகள்

விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் தொடர்ந்து இந்த நிவாரணங்களை வழங்குவோம். செல்வந்தர்களுக்கு இந்த நிவாரணங்கள் தேவைப்படுவதில்லை. மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குமே இந்த நிவாரணம் பெறுமதியாக அமைகின்றது.

இளைஞர்களுக்கான புதிய வேலைத்திட்டங்கள்

இளைஞர் சமூகத்துக்காக இளைஞர் தொழில்நுட்ப மத்திய நிலையங்களை உருவாக்கி, அதன் ஊடாக தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம் ஆங்கில மொழி கல்வி, தொழில் உருவாக்கம் போன்றவற்றை சர்வதேச தரத்தில் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். தொழில் வாய்ப்பில்லாத இளம் தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

வறுமை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டங்கள் 

வறுமையை ஒழிக்கின்ற நோக்கில் 24 மாதங்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து திட்டங்களின் கீழ் மாதமொன்றுக்கு 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/193774



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.