Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர;  தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்

anura-kumara-dissanayake-ariyanethran.jp

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், யார் அடுத்த ஜனாதிபதி என்ற கேள்வி தொடர்ந்தும் நிலவிவரும் அதேவேளை,மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவாவும் இலங்கை மக்களிடம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக கடந்த 75 வருடங்களாக ஒரே பாசறையில் உருவான தலைவர்களே இந்த நாட்டில் ஆட்சியதிகாரத்தை அலங்கரித்து வந்த அதேவேளை,நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக உருவெடுப்பதற்கும் இன-மத முறுகல் மற்றும் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது அச்சம் கொண்டு பகைமையை வளர்த்ததற்கும் இந்த 75 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசுகளும் தலைவர்களுமே காரணம் என்பதை இன்றைய தலைமுறை சிந்திக்க ஆரம்பித்திருக்கும் ஒரு சூழலில் நாட்டில் ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்கு அணி திரள்வதையும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அந்த அடிப்படையில் தமிழர் தேசமும் போருக்கு பின்னரான கடந்த 15 வருடங்களுக்கு பின்னர் ஒரு தெளிவான எண்ணவோட்டத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த அடிப்படையில் தமிழர் தேசமான வடக்கு-கிழக்கில் இம்முறை பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கும் அதேவேளை,அவருடைய வெற்றிக்காக ஒரு சில காட்சிகளை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் அதேபோல்,சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாற்றத்துக்காக ஏங்கும் மக்கள் உழைக்க ஆரம்பித்திருக்கும் அதேவேளை,ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்ற நோக்கத்தில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்த அடிப்படையில் தமிழ் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளின் போது குறிப்பாக தமிழர்கள் அதுவும் இளம் சமூகம் முன்னெடுக்கும் பிரசாரங்களின்போது முதல் தெரிவு பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இரண்டாவது புள்ளடி அனுர குமாரவுக்கும் வழங்குவது தொடர்பில் சிலாகிக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது.

இம்முறை தேர்தலில் தமிழர் தாயகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்றும் ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் வரவேண்டுமென இந்த இளம் சமூகம் எதிர்பார்க்கிறது.அந்த அடிப்படையில் முதல் புள்ளடி அரியத்துக்கும் இரண்டாவது விருப்பு புள்ளடி அனுரவுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை இந்த இளம் சமூகம் முன்வைத்துவருவதுடன்,பலரது விருப்பும் இதுவாகத்தான் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆகவே பழமைவாத அரசியல் பாசறையில் வளர்ந்தவர்களை விலக்கிவைத்துவிட்டு புதிய ஒரு தெரிவுக்கு இளம் சமூகம் முன் வந்திருப்பது நாட்டுக்கு எவ்வாறான எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது என்பதையும் அந்த தெரிவு வெற்றியளிக்குமா? என்பதையும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் பார்க்கமுடியும்.

 

https://akkinikkunchu.com/?p=291372

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிந்தனை சரி. ஆனால் புள்ளடி தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

X என்று புள்ளடி போட்டால் அவர்தான் முதலாவது தெரிவு!

 

  • குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும்.

 

  • அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும்.

 

  • இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும்.

 

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர;  தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்

தமிழ் வேட்பாளர் முதல்தெரிவு. அனுர இரண்டாவது தெரிவு என்பதன் ஊடாக சிங்களத்தலைமையை ஏற்கின்ற வேளையில் முதல் தெரிவான பொதுவேட்பாளர் என்ற சிந்தனை வீழ்த்தப்படவே வாய்ப்புள்ளது. தமிழருக்கு எந்த உரிமையையும் தரமாட்டேன், கோத்தா கேட்டதுபோல் சிங்கள வாக்குகளில் வெல்வேன் என்று கூறி வென்றதுபோல் நாமல் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ள அதேவேளை ஏனைய ரணில், அனுர, சஜித் போன்றோர் எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்காது கடந்து செல்கின்றனர். தமிழரது உரிமைகள் தொடர்பாக உறுதியளிக்கப்போய் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதென்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.  அனுர, சஜித், ரணில் மற்றும் நாமல் ஆகியோரில் எவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள் இல்லையென்பதே தெளிவாகத் தெரிகிறது. 
அனுர வட- கிழக்கைப் பிரித்த ம.வி.முன்னணியின் பாசறையில் வளர்ந்தவர்.
சஜித்தின் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகத்திலே மேற்கொள்ளப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலைகள் உட்பட்ட படுகொலைகள் குறித்து  மன்னிப்புக் கோரக்கூடியவரா? 
ரணில் தமிழரை தந்திரமாக ஏமாற்றிப் புன்னகைத்தவாறு அழித்துவரும் யே.ஆரால் வளர்க்கப்பட்ட பழுத்த இனவாதி
நாமல் கூறிவிட்டார் தனது நிலையை...
தமிழர் தேசமானது காலத்துக்கேற்ப மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தபோதும் சிங்களத் தலைமைகளிடம்  மாற்றம் நிகழ்ந்துள்ளதா? எனவே  மாறாத சிங்களத் தலைமைகளை வாக்களிப்பின் ஊடாகவும் அல்லது வாக்களிக்காமலும் நிராகரித்துவிடுவதன் ஊடாகத் தமிழர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதே அவதானிப்பிற்குரியதாகும். 2ஆம், 3ஆம் வாக்கை யாராவது சிங்களத் தலைமைக்கு என்ற கருத்தானது மீண்டும் தம்தலையில் தாமே மண்ணள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.
 கடந்த பல ஆண்டுகளாக 13 அமுல்படுத்துங்கள்... ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழருக்குச் சுயாட்சியைத் தாருங்கள்... என்று கோரியபோதும் எதையுமே சிங்களம் வழங்கத் தயாரில்லை. நாமல் போன்றோரின் அறிக்கையானது சிங்கள இளம் தலைவர்களையும் நம்பத் தேவையில்லை என்பதை பறைசாற்றி நிற்கிறது. சனநாயகம் என்ற போர்வையுள் தமிழருக்கு எதிரான சட்டங்களை இயற்றி நிறைவேற்றிவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அதிபரும் தமிழருக்குத் தீர்வைத் தரமாட்டார்கள் என்பது நிதர்சமானபோது தமிழர் வாக்களித்துத்தான் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டுமா? வாக்களிக்காமலும் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம் என்ற சிந்தனை சரியாகவே தோன்றுகிறது.  
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது

இப்படி வாக்கு அளிக்கும் போது,.....  கள்ள வாக்களிக்க வாய்ப்புகள் உண்டு” 

அதாவது இரண்டாவது   மூன்றாவது தெரிவு 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

இப்படி வாக்கு அளிக்கும் போது,.....  கள்ள வாக்களிக்க வாய்ப்புகள் உண்டு” 

அதாவது இரண்டாவது   மூன்றாவது தெரிவு 🙏

ஒரே ஒருவருக்கு எனில் புள்ளடியும் விருப்பு வாக்கு எனில் 1  2  3 என விருப்பமானவர்களுக்கு போடலாம். 1 போட்டு 2  3 போடாதுவிடின் எண்ணுமிடத்தில் அரசியல் கட்சி சார்ந்தோர் குழுவாகப் பணி செய்தால் 2ஆவது 3ஆவது வாக்கை தமது விருப்புக்கு போடலாம்!

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

1 போட்டு 2  3 போடாதுவிடின் எண்ணுமிடத்தில்

இருக்கவே இருக்கிறது பாதுகாப்புப் படைகள். அவர்கள் பாதுகாப்பில் எதுவும் செய்யலாம். ஏற்கெனவே எங்கள் தமிழரசுக் கட்சிக்குள் புகுந்த சனி பகவான் செய்தும் காட்டியுள்ளார். பழையபடி வேதாளங்கள் எல்லாம் அரசு(ச)மரத்தில் ஏறி அமரும்.🤔

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.