Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
13 Sep, 2024 | 05:47 PM
image
 

தமிழ் மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் எமக்கு என்ன தேவை என கூறியுள்ளோம். ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்த சுபீட்சமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் தமிழர் தாயகத்தில் என்ன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது? அரசாங்கத்துடன் சேர்த்து இயங்கியவர்களுக்கு கூட அபிவிருத்தி சார்பான அமைச்சை கூட கொடுக்கவில்லை.

பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்துக்கு கூட தடைகளை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச விமான நிலையத்தை கூட அவர்கள் அபிவிருத்தி செய்யவில்லை. காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை கூட அபிவிருத்தி செய்யவில்லை. 

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் வடக்கு, கிழக்கில் செய்த அபிவிருத்தி என்ன? ஒரு சர்வதேச மைதானங்களை கூட அமைக்கவில்லை. சர்வதேச மைதானங்களை அமைத்தால், அந்த இடம் தானாக அபிவிருத்தி அடையும். நட்சத்திர ஹோட்டல்கள் வரும் தமிழர் தாயக பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்துவிடும் என்ற நோக்கிலேயே சர்வதேச மைதானங்களை அமைக்கவில்லை.  

தமிழர் தாயகத்தில் பொருளாதார மையங்கள் கூட இல்லை. 

நாம் எம்மை பொருளாதார ரீதியாக முன்னேற்ற எங்களுடைய கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். அதன் ஊடாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் கொண்டுவர முடியும்.

தமிழர்கள் விரும்பிய எதனையும் செய்யாத தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்காது, தமிழர்களுக்கு என்ன தேவை என தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

2009ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு பிளவுபட்டுள்ள எங்களுடைய தமிழ் இனத்தை ஒன்றிணைக்க வேண்டும். 

அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளில் 7 தமிழ் அரசியல் கட்சிகள், கடற்தொழிலாளர்கள், அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் உள்ளடங்கிய 80 சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம். தமிழரசு கட்சியில் கூட பெரும்பாலானவர்கள்  தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றார்கள்.

எனவே, தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை காட்ட தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - மணிவண்ணன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் அடுத்தவர்.. ஒற்றுமையை பற்றி தமிழ்தேசிய முண்ணனியை உடைத்துக்கொண்டு வெளியேறிய மணிவண்ணன் சேர் பேசுறார்..

இன்னொரு பக்கம்

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைச்சு வெளியேறிவைதான் பொதுவேட்பாளரை நிறுத்தி இருக்கும் விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்..

தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்..

இவர்களும் ஒற்றுமை பற்றி கதைக்கின்றனர்..

சாத்தான்கள் கூடி வேதம் ஓதுகின்றன..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பிழம்பு said:
 

தமிழர் தாயகத்தில் பொருளாதார மையங்கள் கூட இல்லை. 

நாம் எம்மை பொருளாதார ரீதியாக முன்னேற்ற எங்களுடைய கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். அதன் ஊடாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் கொண்டுவர முடியும்.

 

மணிவண்ணன் பொருளாதாரம், அதிகாரம் என்று இரண்டு புதிய விடயங்களை புகுத்தியுள்ளார். 

பொது வேட்பாளரின் 'ஒரே குரலில் ஒற்றுமையாக சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்ல வாருங்கள் ....' என்னும் கோஷம் கூட பிரயோசனமற்றது என்றாலும், சாத்தியமானது என்ற வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

ஆனால்  நாங்கள் இன்றிருக்கும் நிலையில் நாங்களே எங்களுக்கு வாக்குப் போட்டு பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும் பெறுவோம் என்பது இந்த பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டையே தேவையில்லை என்றாக்கிவிடுகின்றது. எட்டு வீத வாக்குகள் அப்படியே கிடைத்தாலும், என்ன அதிகாரம் எங்களுக்கு கிடைத்துவிடும்............  



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.