Jump to content

தமிழ்ப் பொது வேட்பாளர்: ரணிலின் வெற்றிக்காகவும் சுமந்திரனை தோற்கடிக்கவும் எடுக்கப்பட்ட ஆயுதமே!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ariyam%20suma%20ranil%20shri.jpg

“...தாயகத்தில் இனியும் சம்பந்தன் காலத்து அரசியலை அனுமதிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் தாயக அரசியல் – சமூக செயற்பாடுகளில் புலம்பெயர் தரப்புக்கள் ஆளுமை செலுத்த விரும்பின; அதாவது, முடிவுகளை எடுக்கும் தரப்புக்களாக இருக்க நினைத்தன. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் அதற்கு பெரும் தடையாக இருந்தனர். அவர்களின் நிலைப்பாடுகளை தாண்டி தாயகத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர், தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளை இலகுவாக கையாள முடிகின்றது. அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள். இப்போது, தாயக அரசியலை சுமந்திரன் ‘ஆதரவு – எதிர்’ அரசியலாக மாற்றுவதன் மூலம், இலகுவாக பிரித்தாளும் நிலை இருக்கின்றது. அதனால்தான், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் பெரும் அணியொன்றை கட்ட முடிந்தது. புலம்பெயர் தேசத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் தரப்பினரும் கூட, பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்றாகவே நிற்கின்றனர். அதன்மூலம், சுமந்திரனுக்கு எதிரான அரசியலை பலப்படுத்தி, தங்களின் ஆளுமையை தாயகத்தில் செலுத்தலாம் என்று நம்புகின்றன...” என்று கனடாவில் வதியும் (தமிழ்த் தேசியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடும்) மூத்தவர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் குறிப்பிட்டார். 

 

ஓர் அரசியல் செயற்பாட்டினை முன்னெடுக்க நினைக்கும் தரப்பினர், தங்களின் தீர்க்கமான இலக்குகள் தொடர்பில் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். அதுதான், அந்த அரசியல் செயற்பாடு – அதன் செல்நெறி தொடர்பில் மக்களை வழிப்படுத்தும். ஆனால், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரும், அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித தெளிவூட்டல்களையும் செய்கிறார்கள் இல்லை. மாறாக, தனிநபர் ஒருவருக்கு எதிரான அரசியலை கட்டிக் கூட்டி முன்னெடுக்கும் வேலைகளையே முன்னெடுத்து வருகின்றனர். பிரச்சாரக் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் வழங்கப்படும் பேட்டிகளிலும் கூட பொதுக் கட்டமைப்பின் கட்சியினரும், பேச்சாளர்களும், பத்தியாளர்களும் அதனையே பிரதிபலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சுமந்திரனுக்கு எதிராக திரளும் தரப்பினரின் கருவியாக மாறிவிட்டது. தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் அவசியம் என்று பேசுவதைக் காட்டிலும், சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, பொதுக் கட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர், தன்னுடைய பத்தியொன்றில் ‘எம்.ஜி.ஆர் – நம்பியார்’ திரை பிம்பத்தினை பிரதிபலிக்கும் ‘நாயக – வில்லன்’  கட்டத்தினை ‘பொது வேட்பாளர் எதிர் சுமந்திரன்’ நிலையோடு நண்பர் ஒருவர்  ஒப்பிட்டு கூறியதாக எழுதியிருந்தார்.  

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற விடயத்தை முதலில் அரங்கிற்கு தூக்கி வந்தவர்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர். தமிழரசுக் கட்சியினர், ரெலோவையும் புளொட்டையும் வீட்டுச் சின்னத்தில் இனியும் அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்த தருணத்தில், புதிய அரசியல் கூட்டொன்றை  அவர்கள் கட்டினார்கள். அதில், ஏற்கனவே தமிழரசுக் கட்சியினால் கூட்டமைப்புக்குள் இருந்து வெளித்தள்ளப்பட்ட ஈபிஆர்எல்எப்பும் இணைந்து கொண்டது. அத்தோடு ஜனநாயகப் போராளிகள், ஏற்கனவே ரெலோவில் இருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா – சிவாஜிலிங்கம் அணியும் இணைந்தது. இந்தப் புதிய கூட்டின் மீது முன்னாள் ஆயுதக் குழுவினர் என்ற அடையாளம் இருந்தது. அந்தப் புதிய கூட்டின் தலைமையை எதிர்பார்த்த விக்னேஸ்வரன், அது கிடைக்காது என்ற நிலை வந்த போது, முன்னாள் ஆயுதக் குழுவினரோடு இணைந்து இயங்க முடியாது என்று கூறிவிட்டு விலகினார். முன்னாள் ஆயுதக் குழுவினர் என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் கோலோச்சுவது அவ்வளவுக்கு சாத்தியமில்லை என்பது, அவர்களுக்கு நன்கு தெரியும். அதன் போக்கில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன்மூலம் தமிழரசுக் கட்சிக்கு எதிரான அனைத்துத் தரப்புக்களையும் ஓரணியில் திரட்ட முடியும் என்று நம்பினார்கள். அது, காலப்போக்கில் நடந்தும் விட்டது.

பொதுக் கட்டமைப்பின் திரட்சியை உறுதி செய்ததில் பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அதில், முதலாவது ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக் கனவு. ராஜபக்ஷக்களுக்கு எதிராக ‘அரகலய’ வெற்றிபெற்றதும், ரணில் ஜனாதிபதியானார். அவர் ஜனாதிபதியானதும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அக்கறையோடு செயற்படத் தொடங்கினார். அதற்காக அவர் கட்சிகளைப் பிரித்தும் சேர்த்தும், அணிகளை புதிதாக கட்டத் தொடங்கினார். அதற்காக கொடுக்கல் – வாங்கல்களை தாராளமாகக் செய்தார். இன்றளவும் அதனை தயங்காமல் செய்கிறார். அதில், தமிழ்த் தேசியக் கட்சிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அதன் ஒருகட்டமாகவே, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்வைக்க வேண்டும் என்று ரணில் தங்களுக்கு அழுத்தம் வழங்கியதாக பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களில் மூத்தவர் ‘ஒருவர்’ தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.  தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களின் தலைவர்களில் அவர்தான் மூத்தவர். பொது வேட்பாளர் எண்ணக்கருவின் சூத்திரதாரி ரணில் என்பது அவரின் வாக்குமூலம்.

தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த தலைமைத்துவப் போட்டியும் அதன் பின்னரான உட்பிளவும், பொதுக் கட்டமைப்பினரை பலப்படுத்துவதில் இரண்டாவதாக தாக்கம் செலுத்தியது. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தேர்வில் சிறீதரன் வெற்றிபெற்றாலும், அவரினால் செயலாளர் உள்ளிட்ட மத்திய குழுத் தெரிவில் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிவில்லை. அதனால், அவர் பொதுக் குழுவின் தீர்மானத்துக்கு எதிராக கொல்லைப்புற தீர்மானங்களின் வழியாக தெரிவுகளை மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அதனை நீதிமன்றங்களினூடாக தடுத்து நிறுத்திவிட்டார்கள். அத்தோடு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வே, கட்சியின் யாப்புக்கு எதிரானது, அதனால் புதிய தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், தமிழரசுக் கட்சியின் பிளவு அதிகரித்தது. இப்போதுள்ள கட்சியின் மத்திய குழுவை சுமந்திரன் ஆளுமை செலுத்துகின்றார் என்பது வெளிப்படையானது. அப்படியான கட்டத்தில், கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான கருவியாக அல்லது எதிர்காலத்தில் புதிய பயணத்துக்கான ஏற்பாடுகளின் போக்கில் பொது வேட்பாளர் விடயத்தினை சிறீதரன் கையாள்கிறார். அதுதான், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கும், அதற்கான ஒத்துழைப்பை வழங்க ஒரு தரப்பினரையும் கட்சிக்குள் இருந்தே திரட்டவும் முடிந்திருக்கின்றது. பொதுக்கட்டமைப்பினரையோ, பொது வேட்பாளரையோ தமிழரசுக் கட்சி ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்தது. அது, சுமந்திரனின் நிலைப்பாடுகளை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அப்படியான கட்டத்தில் சுமந்திரனுக்கு எதிரான அணியைப் பலப்படுத்தும் கட்டத்தில் இணைய விரும்பிய தமிழரசுக்குள் இருக்கும் குழுவினர், பொதுக்கட்டமைப்பினை பலப்படுத்தினர்.

மூன்றாவது, ஏற்கனவே தேர்தல்களில் தோற்றவர்களும் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்ற சிந்தனையோடு இருந்த தரப்பினருக்கும் பொது வேட்பாளர் விடயத்தினை இறுகப்பற்றினர். அதனால், பொதுக் கட்டமைப்பை அவர்களும் வரிந்து கொண்டார்கள். குறிப்பாக, முன்னாள் ஆயுத இயக்கங்களை, அவர்களின் இரத்தக்கறையை தன்னோடு பூசிக்கொள்ள முடியாது என்று கடந்த காலங்களில் வாதிட்ட விக்னேஸ்வரன் போன்றோர், பொதுக் கட்டமைப்புக்குள் அவர்களோடு கூடிக்குலாவும் நிலைக்கு வரவும் அது வித்திட்டது.

நான்காவது, தமிழ்த் தேசிய அரசியலில் ஆளுமை செலுத்த விரும்பிய மூத்த பத்தியாளர்கள் குழாத்தினர். தமிழ்த் தேசிய அரசியல் தங்களைக் கேட்டுத்தான்  செயற்பட வேண்டும். அதற்கு இணங்காத தரப்பினர், தமிழ்த் தேசிய அரசியலில் நீடித்திருப்பதற்கு இலாயக்கற்றவர்கள் என்பது, இந்த பத்தியாளர்களில் சிலரின் நிலைப்பாடு. அவர்களின் அரசியல் கொள்கை- கோட்பாடு – செல்நெறியில் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சிலர் 13வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்க வேண்டும் என்று வாதிடுபவர்கள். இன்னும் சிலரோ, பொது வாக்கெடுப்பினூடாக சுயாதீன தேசம் அமைக்கப்பட வேண்டும் என்று எழுதுபவர்கள். (அதற்கான செல்நெறி – ஒழுங்கு பற்றி அவர்கள் ஒருபோதும் தெளிவுபடுத்தவில்லை). இன்னும் சிலரோ, எந்த அரசியல் நிலைப்பாட்டினை முன்னெடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொள்பவர்கள். ஆனால், இவர்கள் எல்வோரும் சம்பந்தன்– சுமந்திரன் எதிர்ப்புப் புள்ளியில் ஒருங்கிணைவார்கள்.

ஐந்தாவது, தாயக அரசியலில் ஆளுமை செலுத்தி முடிவுகளை எடுக்க நினைக்கும் புலம்பெயர் அமைப்புக்களும், தனி நபர்களும், சில வர்த்தகர்களும். இவர்களுக்குள்ளும் பல உள்முரண்பாடுகள் உண்டு. தாயக அரசியலில் ஆளுமை செலுத்துவதை சில தரப்பினர் ஒரு வரட்டு வாதத்துக்காக முன்னெடுக்கிறார்கள். அங்கும், சம்பந்தன் – சுமந்திரன் தங்களின் எதிர்பார்ப்பை ஒருபோதும் கண்டுகொண்டதில்லை என்ற எரிச்சல் பிரதானமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கஜேந்திரகுமார் தலைமையிலான ‘முன்னணி’யை மாற்றுச் சக்தியாக கட்டமைக்க நினைத்தார்கள். அது தோற்றுப்போன தருணத்தில் தமிழ் மக்கள் பேரவை ஊடாக விக்னேஸ்வரனை மாற்றுத் தலைவராக முன்னிறுத்தினார்கள். ஜனவசியத் தலைவர் என்று சித்தரித்து கட்டுரைகள் எல்லாம் எழுதப்பட்டன. ஆனால், அதுவும் தோற்றுப்போனது. இப்போது பொதுக்கட்டமைப்பின் பின்னால் திரண்டிருக்கிறார்கள். புலம்பெயர் வர்த்தகர்கள் சிலர் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை தங்களின் கைப்பாவையாக ஆட்டி வைக்க நினைக்கிறார்கள். அதற்கு இணங்காத சம்பந்தன் – சுமந்திரனை கடந்த பொதுத் தேர்தலிலேயே எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள். கோடிகளில் பணத்தினை இறக்கி வேலையும் செய்தார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை. அப்படியான நிலையில், வேண்டா வெறுப்பாகவேனும் பொதுக் கட்டமைப்பின் பின்னால் அவர்களும் இப்போது நிற்கிறார்கள்.

மேற்கண்ட ஐந்து காரணிகளில் வெளிப்படுவது ரணிலை வெற்றிபெற வைக்கும் உத்திகளும், சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ‘அவர்கள்’ நம்பும் தமிழ்த் தேசிய அரசியலை தங்களின் கட்டுக்குள் கொண்டுவருவதுமாகும்.

தமிழ்த் தேசிய அரசியலை தங்களின் சுய இலாப நோக்கங்கள், பதவிப் போட்டிகள், வர்த்தக நலன்கள், தன்முனைப்பு (ஈகோ) மனநிலை உள்ளிட்ட காரணிகளுக்காக கையாள முயல்வது என்பது அறமற்ற அரசியல். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு முன்னால் இப்போது திரண்டிருப்பவர்களும், அவர்களின் நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதனையே பிரதிபலிக்கின்றன. இவ்வாறான நிலை, மக்கள் மீட்சியை ஒருபோதும் சாத்தியப்படுத்தாது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர், தங்களின் அரசியல் இலக்கு என்ன என்பது தொடர்பில் எந்தவித தெளிவுபடுத்தல்களையும் இதுவரை செய்தது இல்லை. அவர்கள் ஆரம்பத்தில், ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பாக தமிழ்த் தேசிய அரசியல் களம் கையாள முடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள். ஆனால், அது அபத்தமானது என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டதும், அதனை கைவிட்டார்கள். சர்வதேசத்துக்கு செய்தி சொல்வோம் என்றும் கூறினார்கள். ஆனால், தமிழ் மக்களின் செய்தி என்ன என்பது, கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குரலில் சொல்லப்பட்டுவிட்டது என்பதும், புதிதாக என்ன செய்தியை சொல்வது என்று கேள்வி எழுப்பியதும், அதனையும் கைவிட்டார்கள். இப்போது, இறுதியாக அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பது தமிழ்த் தேசிய வாக்குளை ஓரணியில் திரட்டுவது என்ற வாதம்.

தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையிழந்துள்ள மக்களை, மீண்டும் நம்பிக்கை அரசியலின் பக்கத்திற்கு நகர்த்துவது என்பது எப்போதும் முக்கியமானது. ஆனால், அந்த நம்பிக்கை அரசியலை எதன் மேல் கட்டமைக்கிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும். மேம்போக்கான எந்த அரசியல் அணுகுமுறையும் எதனையும் பெற்றுத் தராது. தமிழ்த் தேசிய வாக்குகளை ஓரணியில் திரட்டுவதற்காக தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியதாக சொல்லிக் கொள்ளும் பொதுக் கட்டமைப்பினர், தமிழரசுக் கட்சி என்ற பிரதான கட்சிக்குள் இருந்து நபர்களை உடைத்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அது என்ன வகையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

பொது வேட்பாளரை முன்னிறுத்துதல் என்பது அடிப்படையில் ரணிலின் வடக்கு கிழக்கு முகவர்களின் தேர்வாகவும், சுமந்திரனுக்கு எதிரான அரசியலை ஓரணியில் கட்டமைக்கும் நோக்கத்தையுமே இறுதிப்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், அந்த அணியினரின் நடவடிக்கைகளே அதனை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன. கொள்கையும் இலக்குமற்ற ஒருங்கிணைவு என்பது, எந்தவித நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தாது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பேரவை, எந்தவித இலக்குமற்று திரட்டப்பட்டு கைவிடப்பட்டு காணாமற்போனது. அது மாதிரியே, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், பொதுக் கட்டமைப்பினரும் காணாமற்போவார்கள். அப்படியான ஒரு தரப்பினரை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு அபத்தக்கனவு, அதனை நோக்கி திரள்வது 'தேசமாக திரள்வதாக' ஒருபோதும் கொள்ள முடியாது. ஏனெனில், அப்படியான காட்சிகளை பொதுக் கட்டமைப்பினரோ, அதற்குள் இருக்கும் கட்சியினரோ ஒருபோதும் பிரதிபலிக்கவில்லை.

காலைமுரசு பத்திரிகையில் செப்டம்பர் 15, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/09/blog-post_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வாக்குப்போடவும் முடியாது, இவர்  நாட்டிலுமில்லை, பிறகு ஏன் இவர் அரற்றுகிறார். நல்லாட்சி அரசாங்கம் அமைக்க வாக்குபோடும்படி மக்களை  கேட்டவர் யார்? எதைபெற்றார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்? சுமந்திரனுக்கு அன்று ரணில் வேண்டும், இன்று சஜித் வேண்டும் என்றால், மக்கள் என்ன அவரின் அடிமைகளா? அப்படி சுமந்திரன் என்ன பெரிய ராஜதந்திரி, செயல் வீரனா அவருக்கு எதிராக மற்றைய கட்சிகள் ஒன்று திரள? ஒன்றாக இருந்த கட்சிகளை வெளியேற்றினார், அதற்கான காரணங்களை முதலில் அவர்களுக்கு  தெரியப்படுத்தினரா சுமந்திரன்? கட்சிக்குள் இருந்தவர்களை முரண்டு பிடித்து வெளியேற்றியது யார்? இன்று கட்சி நீதிமன்ற படியேறி இருப்பது யாரால்? தங்கள் மேல் பிழையை வைத்துக்கொண்டு, முந்திக்கொண்டு மற்றவர்மேல் குற்றம் சுமத்துவது. இவருக்கு தமிழ் மக்கள் மேல் பாசம் இருந்தால் அவர்களோடு இருந்திருக்க வேண்டும். சுமந்திரன் மக்களோடு இல்லை, அவர்களுக்கு சேவை செய்யவில்லை, இப்போ சிங்களத்தோடு வந்து அவர்களுக்காக வாக்கு கேட்கிறார். மக்கள் ஏன் அவருக்கு செவி மடுக்க வேண்டும்? மக்களுக்கு பணி செய்யாதவர்கள் அவர்களை வாக்கு போடும்படி கேட்க உரிமையில்லை. வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, பகுத்தறிவுமில்லை. உன் நண்பனைப்பற்றி சொல், நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது எவ்வளவு உண்மை. சுமந்திரன், சஜித்துக்கு வாக்கு கேட்கிறார், கனடாக்காரர் ஏதோ சுமந்திரன் தேர்தலில் நிற்பது  போலவும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரளுகின்றனர் என்பது போலவும் கதையளக்கிறார். சுமந்திரன் இது வரையில் எதை செய்து சாதித்து விட்டார்? ஏதோ சிங்களத்துக்கு நாம் வாக்குபோடுவதுபோல் ஆளாளுக்கு துள்ளிக்குதிக்கிறார்கள், சிங்களவனே பேசாமல் இருக்கிறான்.  

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புருசோத்தமன் தங்க மயிலு நல்லா சுமத்திரனுக்கு காவடி எடுத்து ஆடுது .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலேயே சுமந்திரனை பேச விட முடியவில்லை இவரால், சும்மா தனிப்பட்ட விசுவாசத்தை காட்டுகிறார் அவர்.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏   இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்    2009 பிற்பாடு. அவர்கள் தேவையில்லை   ஒற்றை ஆட்சியை நடைமுறையில்  ஏற்றுக்கொண்டார்கள்   ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும்.  குறிப்பு,.....கருணாநிதி உண்ணாவிரதத்தின் போது நடந்து கொண்ட முறை சரி தான்   ஏனெனில் அது அவரது வாழ்க்கை 🙏🙏🙏
    • இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எல்லோருடைய (பொதுவேட்பாளர் அரியநேத்திரனை தவிர்த்து ஏனென்றால் அவர் தான் ஜனாதிபதியாக வர முடியாது, வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்) பேட்டிகளையும், காணொளிகளையும் பார்த்ததில் இருந்து தெரிவது என்னவென்றால்............. இவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பிதுருதலாகலை மலையிலிருந்து தேனும் பாலும் ஓடி நாட்டை நிரப்பப் போகின்றது என்பதே......🤣. சனம் பாலிலும் தேனிலும் முக்குளிக்கப் போகுது..........😀.    
    • வடக்கு கிழக்கில் எங்களின் சுயாட்சி இல்லை, அதனால் எங்கள்:  கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன என்று அடுத்தடுத்து வரிசையாகச் சொல்லப் போகிறீர்களோ என்று பயமாக இருக்கின்றது.........🤣. கந்தையா அண்ணை, எங்களின் கரையோர மக்கள் பாவம், என்ன பாவம் செய்தார்களோ என்றுமே தீராத நெருக்கடி அவர்களின் வாழ்க்கைகள்...........    
    • காணொளிக்கு நன்றி, அந்த சிங்கள ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன எழுதிய யாழ்ப்பாணம் எரியூடல் -1981 எனற புத்தகத்தில் யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரிகளை ஆவணப்படுத்தியுள்ளார், அதனை மனோரஞ்சன் தமிழாக்கம் செய்துள்ளார். குறிப்பாக ரணில் எப்படி முன்னின்று செய்யப்பட்டார் என்று விலாவரியாக கண்கண்ட சாட்சிகளுடன் தந்துள்ளார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.