Jump to content

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எனவே அவருடன் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இருப்பினும் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறாமல் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ வெற்றியீட்டினால் என்ன நிலைமை என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகின்றது. அது நியாயமான கேள்வி. எங்களுடைய நோக்கம் இவரோ அல்லது அவரோ வெல்லவேண்டும் என்பது அல்ல. மாறாக எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெறப்படவேண்டும் என்பதே நோக்கமாகும்.

 இவ்வாறானதொரு பின்னணியில் இந்த பிரதான மூன்று வேட்பாளர்களில் ஒருவர் தான் வெற்றி பெறமுடியும். ஆனால் மற்றைய இருவரும் கூட அவர்கள் வெளிப்படையாக நாட்டுமக்களுக்குக் கூறியிருக்கும் நிலைப்பாட்டின்படி, வெற்றி பெறும் வேட்பாளர் எடுக்கும் முயற்சிக்கு எதிராக செயற்படமுடியாது. எனவே மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். இது 'எமது மக்களின் வாக்குகளை உங்களுக்குத் தருகிறோம்.

அதேபோன்று நீங்கள் எமது மக்களுக்குரிய தீர்வைத் தாருங்கள்' என்ற பேரம் பேசுதலின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும். 

அதேவேளை மேற்குறிப்பிட்ட பேரம் பேசுதலின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் உச்சபட்ச வாக்குறுதி அளித்த சஜித் பிரேமதாஸவுக்கு எமது மக்களின் வாக்குகளை அளிப்பதாகக் கூறியிருக்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்.

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துண்டு போட்டாச்சு!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பிழம்பு said:

எமது மக்களின் வாக்குகளை உங்களுக்குத் தருகிறோம்.

அதேபோன்று நீங்கள் எமது மக்களுக்குரிய தீர்வைத் தாருங்கள்'

நீங்க இப்படி சொல்ல தமிழ் மக்களின் வாக்கு வங்கி உங்க கையிலயா இருக்கு அல்லது சிங்கள தலைமைகள் கொடுத்த  வாக்குறுதிகள் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் மீறப்பட்ட சரித்திரம் தெரியாதா. ரொம்பதான் எஜமானர்களை நம்பிட்டீங்க. ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் அதில் யார் வென்றாலும் உங்களுக்கு கைநிறைய வேலையிருக்கும் எண்டு தானே சொல்லவரீங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, vanangaamudi said:

நீங்க இப்படி சொல்ல தமிழ் மக்களின் வாக்கு வங்கி உங்க கையிலயா இருக்கு அல்லது சிங்கள தலைமைகள் கொடுத்த  வாக்குறுதிகள் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் மீறப்பட்ட சரித்திரம் தெரியாதா. ரொம்பதான் எஜமானர்களை நம்பிட்டீங்க. ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் அதில் யார் வென்றாலும் உங்களுக்கு கைநிறைய வேலையிருக்கும் எண்டு தானே சொல்லவரீங்க. 

ஏறச் சொன்னால் எருதிற்குக் கோபம். இறங்கச் சொன்னால் முடவனிற்குக் கோபம். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன,  திடீரென்று  சுருதி மாறுது. நாங்கள் எப்பவெல்லாம் இவர்களுக்கு வாக்கு போடுங்கள் என்று சொன்னோமோ, அவர்களுக்கே மக்கள் வாக்களித்தனர், இந்த முறையும் சஜித்துக்கு வாக்களிக்கச் சொல்கிறோம், மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார் இவர். மக்களை செம்மறியாட்டுக்கூட்டங்களாக கருதி கருத்து தெரிவிக்கிறார். மக்கள் தெளிந்து விட்டார்கள். நீங்கள் சொன்னதை நம்பி ஏமாந்த மக்கள், இனியும் ஏமாற தயாரில்லை. தமிழரசுக்கட்சி தலைவர் பொது வேட்பாளருக்கு  வாக்களிக்கும்படி தோன்றுகிறார். இவரோ, தான் தமிழரசுக்கட்சி என்கிறார். இவர் மட்டும் ஒரு கட்சியா? ஒருவரின் வயலில் அவரின் விளைச்சலை  தான்  அறுவடை செய்ய வேண்டுமென துடிக்கிறார்.  எனக்கென்னவோ,   ரணிலும் சஜித்தும் சேர்ந்தே இந்த கரட்டி ஓணானை இயக்குகிறார்களோ  என்கிற சந்தேகமாயிருக்கிறது. ஒப்புக்கு சும்மா எல்லோருடனும் பேசினேன், இவர்தான் நமக்கு சாதகமான பதிலளித்தார் என்று புலுடா விடுகிறார்.

Posted
8 hours ago, பிழம்பு said:

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எனவே அவருடன் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இது சம்பந்தரின் தீபாவளி வெடிக்கு மேலால் சீறும்போல .

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.