Jump to content

புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!

புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!

எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

https://athavannews.com/2024/1399981

@Kapithan , @ரசோதரன் 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா.

அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது.

கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.

அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜெர்மனியில் தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும். புதிய வகை கொரோனா திரிபின் தன்மையை, செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.

மறுபடியுமா..?!

ராஜ ராஜன் இளவரசர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொன்னதெல்லாம் எனக்கு இப்ப மூண்டு நாளா இருக்கு.. வாசனைதிறன் என்னெண்டு தெரியேல்ல.. வெயிட் மணந்துபாப்பம்..

மணம் இருக்கு.. அப்ப நோமல் காச்சல் போல..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

கடந்த சில நாதளாக என் நண்பன்  ஒருவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு படுத்தி எடுக்கின்றது.  வந்தது புது வகையான கொரோனா எனத் தெரியவில்லை.

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பில ஒவ்வொரு எலும்பா நோகுது இப்ப எல்லாம் காய்ச்சல் வந்தா.. கொரோனாக்கு முன்னம் இப்படி உடம்பு நொந்ததில்லை காய்ச்சல் வந்தால்.. எத்தனையோ நாள் காய்ச்சல்ல படுத்திருக்கிறன் ஆனா கொரோனா யுகத்துக்கு பின் வரும் காய்ச்சல்களில் உடம்பு நோவதுபோல் நொந்ததில்லை..

இது ஏற்கனவே கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.. அதன் பின் உடம்பில் ஏற்பட்ட விளைவா அல்லது கொரோனா தடுப்பூசியின் பின் ஏற்பட்ட விளைவா எண்டு தெரியேல்ல..

ஆனா ஒண்டு மட்டும் நிச்சயம்.. மேல சொன்ன ரெண்டில் ஒண்டால் எமது உடல் குறிப்பாக எலும்புகள் பலகீனப்பட்டு இருக்கிறது என்பது தெரிகிறது..  

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

https://athavannews.com/2024/1399981

@Kapithan , @ரசோதரன் 😂

இது என்ன உப்பு சப்பில்லாத செய்தி ஆதவனில்........ கோவிட் வைரஸ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உருமாறத்தான் போகின்றது. வீரியம் குறைந்து போய் விட்டது என்று தெரிந்தால், சைனா அல்லது அமெரிக்காவிடம் சொன்னால், புதிதாக ஒன்றைத் தயார் செய்து தருவார்கள்............

ஆதவனில் இன்று வந்திருக்க வேண்டிய செய்தி: நேற்றைய சந்திரகிரகணத்தில் பூமி இன்னும் ஒரு பாகை சரிந்தது. பூமி அழியப் போகின்றதா என்று நார்வேயிலுள்ள நாசா விஞ்ஞானிகள் கலக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

ஆதவனில் இன்று வந்திருக்க வேண்டிய செய்தி: நேற்றைய சந்திரகிரகணத்தில் பூமி இன்னும் ஒரு பாகை சரிந்தது. பூமி அழியப் போகின்றதா என்று நார்வேயிலுள்ள நாசா விஞ்ஞானிகள் கலக்கம்.

ஆதவன் உங்களை அழைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

https://athavannews.com/2024/1399981

@Kapithan , @ரசோதரன் 😂

14 minutes ago, ரசோதரன் said:

இது என்ன உப்பு சப்பில்லாத செய்தி ஆதவனில்........ கோவிட் வைரஸ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உருமாறத்தான் போகின்றது. வீரியம் குறைந்து போய் விட்டது என்று தெரிந்தால், சைனா அல்லது அமெரிக்காவிடம் சொன்னால், புதிதாக ஒன்றைத் தயார் செய்து தருவார்கள்............

ஆதவனில் இன்று வந்திருக்க வேண்டிய செய்தி: நேற்றைய சந்திரகிரகணத்தில் பூமி இன்னும் ஒரு பாகை சரிந்தது. பூமி அழியப் போகின்றதா என்று நார்வேயிலுள்ள நாசா விஞ்ஞானிகள் கலக்கம்.

ஆதவன்.... இங்கிலாந்தை, "யுனைடெட் கிங்டத்தில்" என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை நீங்கள் இன்னும் கவனிக்கவில்லைப் போலுள்ளது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆதவன் உங்களை அழைக்கிறது.

🤣..........

போய் விடுவம் அண்ணை. ஒரு 'சைட் கிக்' இருப்பதும் நல்லது தானே..........

5 minutes ago, தமிழ் சிறி said:

ஆதவன்.... இங்கிலாந்தை, "யுனைடெட் கிங்டத்தில்" என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை நீங்கள் இன்னும் கவனிக்கவில்லைப் போலுள்ளது😂

இது வேறயா, சிறி அண்ணை............ ஆதவனில் வேலை செய்பவர்கள் என்னுடைய வகுப்பில் படித்திருந்தால், கந்தசாமி வாத்தியார் ஒரு சில கொலைக் குற்றத்தில் உள்ளே போயிருப்பார்.............

** 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.