Jump to content

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார்.

இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

பதவிப் பிரமாணம்

இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல் | President Election 2024 Anura Won The Race

கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் தோல்வி

காலிமுகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல் | President Election 2024 Anura Won The Race

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சஜித் பிரேமதாஸவும் தோல்வி அடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/president-election-2024-anura-won-the-race-1726975591#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என கணிக்கப்படும் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப் பிரமாண நிகழ்வு குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake), தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில்

பதவியேற்பு விழாவை ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு | Bimal Rathnayake Speaks Akd S Swearing In Plans

நிகழ்விற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சிக்கு இல்லை என தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல்களின் இறுதி முடிவுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்பது தேசிய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இறுதி முடிவுகளை அறிவித்த பிறகே முடிவு செய்யப்படும். 

பதவியேற்பு நேரம் தேசத்திற்கு மங்களகரமான நேரமாக இருக்கும்,'' என்றார்.

இறுதி முடிவு வெளிவந்த பின்னரே முடிவு

வாக்கு எண்ணிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு | Bimal Rathnayake Speaks Akd S Swearing In Plans

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகத் தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுவது, இது வழக்கமான நடைமுறை என்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

https://ibctamil.com/article/bimal-rathnayake-speaks-akd-s-swearing-in-plans-1726991747

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதியின் செய்தி..


பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் மில்லியன் கணக்கான உங்களின் கூட்டு முயற்சி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

// நான் இல்லை என்றாலும் இந்தத் தேசத்தில் அரசியல் என்றாலே கசப்பாக இருக்கும் ஒரு தருணத்தில், எனது ஜே.வி.பி. சகோதரர் ஒருவர் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவார். 

அவர் பிறப்பில் செல்வந்தராகவோ, பணக்காரராகவோ இருக்க மாட்டார். //

- ரோஹன விஜேவீர.-

எப்படிப் பட்ட ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நிஜமாகி உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இது எம்மனைவரதும் வெற்றியாகும்“

Oruvan

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. 

அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும்.

நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். 

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. 

கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். 

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம்!

 

https://oruvan.com/sri-lanka/2024/09/22/its-a-win-for-all-of-us

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்.. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுரவின்  நம்பிக்கை தரும் அருமையான நன்றி உரை. அதற்கான காலம் கனிந்துள்ளது. எவ்வளவு  தூரம் கைகூடும் என இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அனுரவின்  நம்பிக்கை தரும் அருமையான நன்றி உரை. அதற்கான காலம் கனிந்துள்ளது. எவ்வளவு  தூரம் கைகூடும் என இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

நீங்கள் கூறுவதுபோல் நன்றியுரை புல்லரிப்பதுபோல் உள்ளது. ஆனால் அரசியல் சட்டமாக்கப்பட்டுள்ள பௌத்திற்கான முன்னுரிமை, பிராந்திய அரசியல், அனைத்துலக அரசியல், பொருளாதார நெருக்கடி, மதவாத பௌத்த பீடங்கள் என்பவற்றைக் கடந்து இனவாதத்தைக் களைந்து சமாதானத்தை உருவாக்கி ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவாரா? கட்டியெழுப்புவார் என்று நம்புகின்றீர்களா? தேர்தல் ஆணையாளர் முடிவுகளை அறித்து வெற்றிக்கான ஆவணத்தைக் கையளிக்குமுன் கட்சியரசியலுக்கப்பாலான அனைத்து இலங்கையருக்குமான சனாதிபதியாக இருக்கு வாழ்த்துகின்றேன் என்று கூறிவிட்டே கையளித்தார். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     

 

21 minutes ago, கிருபன் said:

நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். 

மேற்குறித்த வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துகள் அவதானிப்பிற்குரியனவாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நாளை நடைபெறவுள்ளது.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம் | Anurakumara As President Tomorrow Morning 

நிதியமைச்சர் நியமனம்

இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன.

சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

அதனையடுத்து இரண்டொரு நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அமைச்சுகளின் நிர்வாகம் அமைச்சு செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

https://tamilwin.com/article/anurakumara-as-president-tomorrow-morning-1727013782

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாட்டுக்காக கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - புதிய ஜனாதிபதி அநுர வேண்டுகோள்! Published By: VISHNU   22 SEP, 2024 | 09:20 PM ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக் கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான  பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். எனக்கு ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைத்து பிரஜைகளையும் இலங்கையர் என்ற அடிப்படையில் பேதமற்ற வகையில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194556
    • Left-leaning leader wins Sri Lanka election in political paradigm shifthttps://www.bbc.co.uk/news/articles/clyznjz3d78o
    • கோபம் இருக்கிற இடத்தில் தான் குணமிருக்கும் அண்ணை! நம்பிக்கை தானே வாழ்க்கை.
    • 22 SEP, 2024 | 09:18 PM   நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும் என்பது போன்ற விடயங்களை அவர் வெளியிடவில்லை. https://www.virakesari.lk/article/194555
    • நீங்கள் இரண்டு பேர்களும் கன்னத்தில் விழுந்த அந்தப் பகுதியை வசதியாக பார்க்காத மாதிரி இருக்கிறீர்கள்..........🤣. அடி வாங்கியதில் ஒருவன் இன்னமும் இலங்கையில் தான் இருக்கின்றான். அவன் யாருக்கு வாக்குப் போட்டான் என்று ஒரு சலனமும் இல்லை. இவர்களில் சிலரை இன்னமும் நல்லாவே ஞாபகம் இருக்கின்றது. இவர்களின் பேச்சுத்திறமை தனித்துவமானது, அத்துடன் இவர்கள் இலங்கையின் சில பகுதிகளில் இருந்தே வந்திருந்தனர். சிலர் படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் எந்த சித்தாந்தத்திலும் பயிற்சியோ அல்லது தெளிவோ இருந்தது போன்று அன்று தெரியவில்லை. ஒரு ஆவேசமே தெரிந்தது. நாங்களும் தான், ஒவ்வொருவரும், அன்றிலிருந்து இன்று வரை எவ்வளவு மாறியிருக்கின்றோம். சிலர் முற்றாக தலைகீழாகவும் மாறியுள்ளனர். இவர்களிலும் மாற்றங்கள் வந்திருக்கும், எல்லோரையும் அரவணைத்துப் போவார்கள் என்று நம்புவோம்..........
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.