Jump to content

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில்  சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார்.

அவரது தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல்நாடுகளான சீனா இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும் என  குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயலாது  என தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் மோதலில் நாங்கள் ஒரு பகுதியாக மாறமாட்டோம்,எந்த தரப்புடனும் இணைந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் துண்டாடப்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லைஎன குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளும் பெறுமதி மிக்க நணபர்கள்,எங்கள் அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அவர்கள் நெருங்கிய சகாக்களாக மாறுவதை விரும்புகின்றோம்,என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய  மத்திய கிழக்கு ஆபிரிக்காவுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்றோம்  என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பிராந்திய பதற்றங்களிற்கு இடையில் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்த நடுநிலை வெளிவிவகார கொள்கை அவசியம் என தெரிவிததுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி பரஸ்பரம் சாதகமான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு முயற்சி செய்வார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருவருக்கும் நல்ல ஆப்பு! ஏறச்சொன்னால்; எருதுக்கு கோபம். இறங்கச்சொன்னால்; முடவனுக்கு கோபம். இப்போ யாருக்கும் எதுவும் சொல்லத்தேவையில்லை, யாருக்கும் கோவம் வராது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பிழம்பு said:

இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில்  சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதுசரி உங்களுக்கு விருப்பமில்லை .....ஆனால் அவையளுக்கு விருப்பம் கண்டியளோ ...அதை எப்படி கையாளப்போறீயல்...உதுல நீங்கள் அமெரிக்காவின்ட விருப்பத்தை சொல்ல வில்லை ...ஏன் அமெரிக்கா கோவித்து கொள்ளுமோ...

Posted
4 hours ago, putthan said:

அதுசரி உங்களுக்கு விருப்பமில்லை .....ஆனால் அவையளுக்கு விருப்பம் கண்டியளோ ...அதை எப்படி கையாளப்போறீயல்...உதுல நீங்கள் அமெரிக்காவின்ட விருப்பத்தை சொல்ல வில்லை ...ஏன் அமெரிக்கா கோவித்து கொள்ளுமோ...

அனுர பங்களாதேசில் நடந்ததை நினைவில் வைத்துள்ளார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, nunavilan said:

அனுர பங்களாதேசில் நடந்ததை நினைவில் வைத்துள்ளார்.

அவருடைய நாட்டில் நடந்ததும் நினைவிருக்கும்....அமெரிக்கா பக்கம் நிற்பார் போல தெரிகிறது ...இந்தியாவின் மோடியையே ஆட்டம் காண வைப்பான் நம்ம அமெரிக்கன் ...இந்தியாவை ஆட்டம் காண வைக்க அனுராவை பய்ன் படுத்த முயற்சிப்பார்கள் அமேரிக்கா  

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.