Jump to content

இலங்கையின் பொருளாதரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியமாகும் - வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   27 SEP, 2024 | 01:25 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுக்கும்போது சீனா எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுபடுத்துவதுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீன நிதி நிறுவனங்களினால்  தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் சீனா உருவாக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (25) மாலை கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதற்காக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒர் ஒழுங்கு ஒரு பாதை வேலைத்திட்டத்தின் கீழ்  இந்த நாடு பல நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருப்பது தொடர்பாகவும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு சம்பந்தமாக தற்போது செயற்படுத்தி வரும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீன நிதி நிறுவனங்களினால்  தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறது.

அதேநேரம் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் சவால்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் முகம்கொடுக்கும்போது சீனாவின் சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியாக பங்காளியாக இருப்பதை இலங்கை எதிர்பார்க்கிறது.

சீனாவின் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சீன சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளனர். இலங்கையினால் அண்மையில் அறிமுகப்படுத்திய இலவச விசா அனுமதி பத்திரம் வேலைத்திட்டத்தில் சீனாவும் உள்ளடங்கி இருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்துவரும் நட்பு ரீதியான இராஜதந்திர தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் சீனா உருவாக்கத்தின் 75ஆவது வருட நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/194879

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ....தொடரட்டும் சீனாவுடனான் தேனிலவு

Edited by putthan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்து இருந்து, குழி பறிக்கும்  சகுனி  இந்தியாவை விட... 
சீனா பத்தாயிரம் மடங்கு திறம். 👍
நீங்கள், தொடருங்கள் அனுர. 🙂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள் 28 SEP, 2024 | 11:54 AM   இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194977
    • வணக்கம் வாத்தியார் . .........! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ   பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை.......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---
    • அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர். அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும்.  டீசலின் விலை எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மின்சார விலை திருத்தம் இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/remove-taxes-on-fuel-as-promised-kanchana-urges-1727501122?itm_source=parsely-detail
    • 28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்)   புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.   நேற்று வெள்ளிக்கிழமை (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  மேலும் அவர் தெரிவிக்கையில்  நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள்.   வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.   நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.   ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து  வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194975
    • மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா - சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள தூது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய கூட்டணி புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரை இழுத்துச் செல்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றி, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து தலைமைத்துவ சபையாக செயற்படும் வகையில் புதிய கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரிக்காவின் வருகை அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் நடவடிக்கையில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வளர்ச்சியை அடுத்து, சந்திரிக்கா அம்மையார் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-political-situation-chandrika-unp-join-1727494261#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.