Jump to content

மாற்றம் ஒன்றே மாறாதது

Recommended Posts

மாற்றம் ஒன்றே மாறாதது
 
நான் யார் என்ற கேள்வியும் அதற்கான தேடலும் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. அது அப்பன், அப்பப்பன், முப்பாட்டன் எண்ட பரம்பரையின் ஆணி வேராகவோ இல்லை பரம்பி் வாழும் எங்கள் இனத்தின் தேடலாகவோ இல்லை என்னுள் நானே என்னைத் தேடும் ஆத்மீகத் தேடலாகவோ இருக்கும்.
இங்கே ஒவ்வொருவனும் சமூகத்தில் தன் அடையாளம் என்னவென்றே தேடிக்கொண்டிருக்கிறான். அதைத் தக்க வைக்கவும் தகமைப்படுத்தவுமே பாடுபடுகிறான். பலர் அதைத் தொலைத்துவிட்டு தங்களை மட்டுமில்லை தங்கள் சமூகத்தையே நிர்க்கதியாக்கி விட்டார்கள்.
பிறக்கும் போது இன்னாரின் மகனாகி , வளர்ப்பின் போது இன்னாரின் பரம்பரையாகி, படிக்கும் போது இந்தப் பாடசாலையின் மாணவனாகி, பல்கலைக்கழகத்தில் பலதில் ஒருவனாகி, சமூகத்தில் தன்னை நிலைநிறுத்த ஒரு தொழிலாழியாகும் ஒவ்வொருத்தனுக்கும் தன் அடையாளங்கள் மாறிக்கொண்டே இருக்கும் .
இது தான் மாற்றமா ? மாறாதது ஒன்றும் அல்லையா? அப்படியானால் மற்றவர்கள் மாறும் போது நானும் மாறுவது பச்சோந்தித் தனம் இல்லையா? வயதும் முதிர்ச்சியும் மாற்றமா இல்லை வாழ்க்கையின் படிநிலைகளா?
அப்படியானால் இளையராஜாவை விட்டுவிட்டு இமானைக் கேட்டபது தான் மாற்றமா
இடியபத்துக்குப் பதிலாக இன்னோரு உணவைத் தேடுவது தான் மாற்றமா
காற்றை விட்டுவிட்டு பையில் அடைத்த பிராணவாயுவை சுவாசித்தல் மாற்றமா?
அப்படியானால் நான், என்னுடையது, என் சமூகம், என் உணர்வு, என் உரிமை , என் மண், என் சுவாசம் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இன்னொரு உடலுள் கூடுவிட்டு கூடுபாய்ந்து இருப்பது தான் மாற்றமா?
இல்லை எனில்…..
ஆம் நீ என்பதே நீ மட்டுமல்ல நீ சார்ந்த சமூகம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படும் போது எவ்வாறு நீ உன் முடிவுகளை உனக்கான வசதிக்கும் வாய்ப்புக்குமாய் உன்நலன் மட்டும் கருதி எடுப்பாய். நீ வாழும் சமூகத்தை உதறிவிட்டு , உன் இனம், உன் மண்ணின் மணம், உன் சந்ததி, உன் கலை, உன் உடை , உன் கலாச்சார விழுமியங்கள் எல்லாவற்றையும் தொலைத்து நிற்பது தான் மாற்றமா?
என்னில் நம்பிக்கையிழந்து தேவதூதன் வந்து என்னைக்காப்பாற்றுவான் என்று ஏன் காத்திருக்க வேண்டும். தூதர்கள் வரட்டும், வருவோர் மாற்றங்களை ஏற்படுத்தட்டும் அது நிலைக்கட்டும் நாடு சுபிட்சம் பெறட்டும் அதற்காக மாற்றம் என்ற பேரில், பேரலையில், சுழல்காற்றில் சிக்கிச் காற்றின் போக்கெல்லாம் சருகாயப் பறக்காமல்;
“ நான் விருட்சமாகி, என் இனமாய் ஆழ வேரூன்றி, என் சனமாய் அகலக் காலூன்றி, மண்ணுக்காய் வித்தாகிய விதைகளின் உணர்வை உயிராக்கி, என் அடையாளத்தை தொலைக்காமல் நான் நானாய் , நமக்காக நாமாய் , தமிழனாய், தாயகத்து மைந்தனாய், இனத்தின் குரலாய், தன்மானத்தோடு தலைநிமர்ந்து தனி வழி பயணிக்க வேண்டும்”
நீ உன் அடையாளத்தைத் தொலைக்காமல் இருக்கும், உன்னை இழக்காமல் இருக்கும் மாறாத மாற்றம் ஒன்றே மாறாதது.
“ தலை நிமிர்ந்து நில்லடா “
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் சுமந்திரன் அவர்களே ஒருவேளை இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்.........

நாம் யாரென்ற தேடலில் எப்போதும் குழப்பம் எமக்கு இருந்ததில்லை, நாம் இருக்கும்வரைக்கும்  இறக்கும் வரைக்கும் இறந்த பிறகும் நாம் பிரபாகரனின் பிள்ளைகள்,

மானத்திற்காக ஏங்கியிருந்து உயிர்விட்ட  ஏங்கிய ,ஏங்கிகொண்டிருக்கும் எம் பாட்டன் முப்பாட்டன் தகப்பன் நான் உட்பட  அனைவருக்கும் தந்தையும் அவர்தான்,

அந்த மானசீக தந்தையின் குடை நிழலில் ஒதுங்கி நின்று எச்சி துப்பி போகும் நீங்கள் எம் இனத்தின் பெயரையே உச்சரிக்க தகுதியற்றவர்கள்>

சமூகத்தில் எம் அடையாளம் என்னவென்று நாம் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளோம்,  எம் மண்ணை சிங்களவன் ஆக்கிரமித்துவிட்டாலும் என் மனசை ஒருபோதும் ஆட்சி செய்யமுடியாது என்பதில் உறுதியாகவே உள்ளோம்.

அதனால்தான் தமிழர்கள் பேரில் கட்சி வைப்பதால் உங்கள் சார்ந்தவர்களை ஒப்புக்காச்சும் தேர்வு செய்து நாளுமன்றம் அனுப்பினார்கள் தமிழர்கள், அதன் அர்த்தம் உங்களைத்தான் தமிழர்பிரதிநிதி என்று ஒட்டுமொத்தமாய் தேர்வு செய்தோம் என்று அர்த்தமல்ல, ஒட்டுமொத்தமாய் எமக்காய் போரிட்டவர்கள் அழிந்துபோனபோது உங்களையாச்சும் தேர்ந்தெடுக்கலாமே என்ற வேறு வழியற்ற தீர்மானம்தான் அது.

  தமிழரிடம் வாக்குவாங்கி பாராளுமன்றம் சென்று சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியாக வலம் வந்த நீங்கள்தான் எந்த இனத்தின் அடையாளம் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் எமக்கு சொல்லுங்கள்.

விடுதலைபுலிகள் போர்குற்றமிழைத்தார்கள் சர்வதேசத்துக்கு தகவல் கொடுப்பவர்போல் பேசிய நீங்கள் மண்ணுக்காக விதையாகிய வித்துக்கள் பற்றி எப்படி கூச்சம் கொஞ்சம்கூட இன்றி பேச முடிகிறது?

ஒவ்வொரு ஜனாதிபதி மாற்றத்தின்போதும் அவர்களுடன் ஒட்டியுறவாடி, ஜனாதிபதி தேர்தலின் இறுதி நிமிடம்வரை ரணிலுடன் கூடி திரிந்து காணி பொலிஸ் அதிகாரம் எல்லாம் வாங்கி தருவேன் என்று புளுகி சிங்கள  எஜமான விசுவாசம் காட்டிவிட்டு, இன்று அநுர ஆட்சியில் நீங்கள் உங்களை சார்ந்தவர்களை தமிழர்கள் தூக்கியெறியலாம் என்ற அச்சத்தில், சாராய அனுமதி யார் பெற்றார்கள் என்று அறியவேண்டுமென்று ஒரு சாட்டு சொல்லி அநுரவுடம் ஓடிபோய் நின்று சந்திப்பு நடத்துகிறீர்கள் , அப்படியாவது அவருடன் ஒட்டுண்ணியாகி உங்கள் அரசியல் பித்தலாட்டத்தை தக்க வைக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள்.

உங்கள் சொகுசு வாழ்வை தக்கவைக்க எப்படி வேண்டுமென்றாலும் முயற்சிக்கலாம் அதில் தப்பில்லை ஆனால் இனத்தின் பெயரை அதற்குள் இழுத்து வராதீர்கள்,

உங்களுக்கெல்லாம் காலணியை தூக்கி இறந்த எம்மவர்களின் உறவுகள் காண்பிக்கலாம், ஆனால் அது மிக தவறு எமக்காகவே வாழ்ந்து எம்மோடு எப்போதும் கூட பயணித்து எமக்குமுன்னமே வாழ்வை தொலைக்கும் காலணிகள் உங்களைவிட உயர்வானவை,  அதனை உங்களுக்கு காண்பித்து காலணிகளின் புனிதத்தை எவரும் களங்க படுத்தகூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

அத்தனையும்… வரிக்கு, வரி  மிக அருமையான கருத்து. நன்றி வளவன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

சும் அனுரவைச்சந்திச்சதே தன்ரை பேர் விளிவராமல் தடுக்கத்தான் என்று பேசிக்கொள்கிறார்கள் (இப்பிடி எழுதாட்டில் சும்மின்ரை ஆக்கள் ஓடி வந்திடுவினம்நிரூபிக்கச்சொல்லி)

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.