Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச

adminOctober 6, 2024
mahintha-rajapaksa.jpg

 

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என  அவா்  தீர்மானித்துள்ள நிலையில்  தற்போது  அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த  ராஜபக்ச ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மைதொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன்   இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த அரசாங்கமே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2024/207190/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தான் பதவியில் இருக்கும்பொழுதே நாமலை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்து, இலங்கையை தமது குடும்ப சொத்தாக்க வேண்டும் என கனவு கண்டு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் வீணாகி, குடும்பத்தையே  திருடர் பட்டதோடு அரசியலில் இருந்து துரத்தும் காலம் வருமென கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். "நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று காலம் நிரூபித்து சென்றுள்ளது. துக்கத்துடனும், அவமானத்துடனும் அரசியலில் இருந்து விடைபெறுங்கள். நீங்கள் இன்னும் நிலைத்திருந்திருப்பீர்கள், எந்த அரசியலை ஒழிக்கிறோம் எனக்கூச்சல் போட்டு பதவியேறினீர்களோ அதே அரசியலை நீங்கள் கையிலெடுத்ததே உங்கள் அரசியல் அஸ்தமனத்திற்கு காரணம். மக்களே, எங்களிடம் பதவியை தந்தார்கள், நாங்கள் வேண்டாம் என்றால், அவர்களே நம்மை துரத்துவார்கள் என்று அன்றொருநாள் உங்களையுமறியாமல் இப்படியாகுமென்றும் தெரியாமல் சொன்னீர்கள். உங்கள் வாய்வார்த்தை பலித்துவிட்டது. யாருக்கும் குறிப்பிட்ட காலமே வழங்கப்படும், அதை சரியாக, நிஞாயமாக பயன்படுத்தாவிட்டால் அது உங்களை விட்டு தூர விலகி விடும். இதை தெரிந்தவன் அதை பயன்படுத்திக்கொள்வான்.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போன முறையே விலகி இருந்தால் முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதையாவது மிஞ்சி இருக்கும்.

Posted

10 வருடத்துக்கு உங்களை  அசைக்க முடியாது என்றவர்களுக்கு முகத்தில் கரியை பூசி விட்டீர்கள்.

நாட்டுக்கு செய்த அநியாத்துக்கு  உங்களை மக்கள் ஒரு போதும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உங்கள் சொத்துக்களை பறித்து  கம்பி எண்ண வைக்க அநுர ஆவன செய்ய வேண்டும்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தன்னை ஜனாதிபதியாகி அழகு பார்க்க  செய்து பேருதவி புரிந்தவர்களையும் தனது வாழ் நாள்முழுவதும் மகிந்த மறக்கக்கூடாது. 😂

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மஹிந்த ஓய்வு?

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த அரசாங்கமே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310325

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, கிருபன் said:

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

large.IMG_7170.jpeg.f50f3873ad5eaa5b2717

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"அரசியல்வாதிகள் ஓய்வுபெறுவதில்லை" - மகிந்த

image

அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தற்காலிக நிறுத்தம், அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன இலகுவான வெற்றியை பெறும் என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து ராஜபக்சாக்களும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவில்லை, சசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196404

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட, இவர்  என்ன இப்பிடி பிரட்டிப்போடுறார்? இவர்களுடைய மூளை கணத்துக்கு கணம் மாறும்போல.

On 6/10/2024 at 18:26, கிருபன் said:

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என  அவா்  தீர்மானித்துள்ள நிலையில்  தற்போது  அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது

 

2 hours ago, ஏராளன் said:

இது தற்காலிக நிறுத்தம், அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.