Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-20241005-WA0000.jpg?resize=750,375&s

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானமாகவும் தமிழ் ஊடகத்துறையில் மற்றுமொரு புதிய வருகையாக ஒருவன் பத்திரிகையின் முதல் பிரதி இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அச்சு ஊடகத்துறையில் வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒருவன் பத்திரிகை தனது முதலாவது பிரதியுடன் இன்று வெளிவந்துள்ளது.

பத்திரிகையின் முதற்பிரதி நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் விநியோகப்பணிகளும் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

அச்சு ஊடகத்துறையில் பல தசாப்த ஊடக அநுபவத்தினை கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் ஒருவன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்படுகின்றமை விசேட அம்சமாகும்

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செய்திகளின் மர்மங்களை ஆராயுந்து சரியான தகவல்களை தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒருவன் பத்திரிகை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் பிரதி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வாசிப்பு பழக்கத்திற்கு ஆர்வம் காட்டுகின்ற தமிழ் மக்களுக்கு ஒருவன் பத்திரிகையின் வரவு மிகவும் மகிழ்ச்சியை தரும் என்பதில் எந்த ஜயமும் இல்லை என்பதை மிகவும் திடமாக கூறமுடியும்.

குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு செயற்படுகின்ற சில ஊடக நிறுவனங்களுக்கு மத்தியில் மிகவும் உண்மைத்தன்மையுடன் கூடிய தகவல்களுடன் ஒருவன் பத்திரிகை வாரந்தோறும் உங்கள் கைகளில் கிடைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் திறம்பட முன்னெடுத்துள்ளது.

அத்துடன் அதிகாலையில் அனைத்து மாவட்டங்கிளிலும் தடையின்றி கிடைப்பதற்கும் ஒருவன் ஊடக வலை அமைப்பு பல திட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

https://athavannews.com/2024/1402684

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நித்தியாதரனுக்குப் பின்னணியில் யார்? 🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, Kapithan said:

நித்தியாதரனுக்குப் பின்னணியில் யார்? 🤨

IMG-20241005-WA0000.jpg?resize=750,375&s

சுமந்திரனாக  இருக்குமோ. 
ஏனென்றால்... அண்மைய கால நட்புகளாக சுமந்திரனும், வித்தியாதரனும் தான் நெருக்கமாக இருக்கின்றார்கள்.
அத்துடன்... பத்திரிகையின் முதலாவது வெளியீட்டு தலைப்பு செய்தியே, பின் நின்று இயக்கும் ஆளை காட்டிக் கொடுத்து விட்டது  என்பது எனது கணிப்பு. 
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். மற்றவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டு இருக்க மாட்டேன். உங்களிடம் இருந்து உவத்தல், காய்த்தல் இன்றி  நேர்மையான பதில் வரும் என்று கருதியதாலேயே கேட்டேன். 
பதில் சொல்ல தயக்கமாக இருந்தால்.. விட்டு விடுங்கள்.     🙂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நித்தியாதரனுக்குப் பின்னணியில் யார்? 🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, Kapithan said:

நித்தியாதரனுக்குப் பின்னணியில் யார்? 🤨

462119798_9126009400793159_2812910739688

சிலவேளை  இந்தியா....?
இந்தியாவின் கண்ணசைவு இல்லாமல் இதுகள் நடக்க சாத்தியம் குறைவு.
அத்துடன் பத்திரிகையின் வர்ணம் இந்தியக் கொடியை நினைவூட்டுகின்றது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானமாகவும் தமிழ் ஊடகத்துறையில் மற்றுமொரு புதிய வருகையாக ஒருவன் பத்திரிகையின் முதல் பிரதி இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சுமந்திரன் ஒரு பத்திரிகை தொடங்கினாரே என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரன் ஒரு பத்திரிகை தொடங்கினாரே என்னாச்சு?

அது... சஜித் பிரேமதாச  மட்டும் வாசிக்க, 
"சுமந்திரய" என்ற பெயரில்  சிங்களத்தில் வருகுது போலை கிடக்கு. 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, தமிழ் சிறி said:

IMG-20241005-WA0000.jpg?resize=750,375&s

சுமந்திரனாக  இருக்குமோ. 
ஏனென்றால்... அண்மைய கால நட்புகளாக சுமந்திரனும், வித்தியாதரனும் தான் நெருங்கி இருக்கின்றார்கள்.
அத்துடன்... பத்திரிகையின் முதலாவது வெளியீட்டு தலைப்பு செய்தியே, ஆளை காட்டிக் கொடுத்து விட்டது என என்பது எனது கணிப்பு. 
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். மற்றவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டு இருக்க மாட்டேன். உங்களிடம் இருந்து உவத்தல், காய்த்தல் இன்றி  நேர்மையான பதில் வரும் என்று கருதியதாலேயே கேட்டேன். 
பதில் சொல்ல தயக்கமாக இருந்தால்.. விட்டு விடுங்கள்.     🙂

இந்தப் பத்திரிகையைப் பார்த்தவுடன் எனக்கு வந்த முதலாவது கேள்வி இதில் சுமந்திரனுடைய படம் மட்டும்  messing. ஏன்? 

அடுத்து, சிறீதரனுடைய படத்தைப் பெரிதாக ப் போட்டிருக்கிறார்கள் ஏன் என்கிற கேள்வி எழுந்தது. 

ஆனால் எனக்கு  இதன் பின்னணி பற்றிய அறிவு பூச்சியம்.  விரைவில் ஏதும் அறிய வரலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

இந்தப் பத்திரிகையைப் பார்த்தவுடன் எனக்கு வந்த முதலாவது கேள்வி இதில் சுமந்திரனுடைய படம் மட்டும்  messing. ஏன்? 

அடுத்து, சிறீதரனுடைய படத்தைப் பெரிதாக ப் போட்டிருக்கிறார்கள் ஏன் என்கிற கேள்வி எழுந்தது. 

ஆனால் எனக்கு  இதன் பின்னணி பற்றிய அறிவு பூச்சியம்.  விரைவில் ஏதும் அறிய வரலாம். 

நீங்கள் நினைத்தபடி படம்  சரியாக இருக்கலாம்.
ஆனால்... அதில் உள்ள செய்தி அவர்களுக்கு பாதகமாக அல்லவா உள்ளது.
யாராவது தனது பத்திரிகையில்... தன்னைப் பற்றி எதிர்மறையாக எழுத மாட்டார்கள் தானே.
எதற்கும் சில நாள் பொறுத்திருக்க... சாயம் வெளுத்து, சுயம் வெளிப்படும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.