Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of temple and text

 

•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? 
தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர். 

 

போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்? 
ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும். 
இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம், 

 

salary -54,485 Rs 
fuel -30,000 Rs 
transport-10,000 Rs 
Entertainment- 10,000 Rs 
mobile phone -2000 Rs 
meeting each -500Rs 
Current bill - free 
Land line phone - free 
train ticket first class free 
Air tickets 40 free For Him and for his wife or PA (two persons) 
மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக 
மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. 


ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா 
இந்தளவு சம்பளம் பெறும் உறுப்பினர் பாராளுமன்றில் செய்வது, 
குறட்டை விட்டு தூங்குவது 
கெட்ட வாhத்தைகளால் திட்டுவது 
சண்டை பிடிப்பது, 
பேப்பர் ராக்கட் விடுவது 
மிளகாய் தூள் வீசுவது 
அப்புறம் மதியம் பாராளுமன்ற கண்டீனில் மலிவு விலையில் சாப்பாடு. 
கொழும்பில் சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு 
சொகுசு வாகன பெர்மிட்டை விற்று 5 கோடி ரூபா சுளையாக எடுக்கலாம். 


உதவியாளர், சாரதி, அலுவலக வாடகை எல்லாம் தம் உறவினர்களுக்கு கொடுத்து அதில் இருந்தும் காசு பார்க்கலாம். 
5 வருடம் பதவி காலம் முடிய பென்சன் பெறலாம். 


இதைவிட செம்புகளிடமிருந்து “போராளி” “வாழும் வீரர்” போன்ற பட்டங்கள் பெறலாம். 
இத்தனைக்குமாகவே இவர்கள் முன்வருகின்றனர்.

இவை இல்லை என்றால் இதில் ஒருவர்கூட முன்வர மாட்டார்கள்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் இனிவருங்காலத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறியே? மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் சொகுசு வாழ்க்கை, ஏமாற்று வேலை. இவையெல்லாம் நிறுத்தப்பட வேண்டும்.  மக்களுக்கு சேவை செய்ய வருவோருக்கு இத்தனைசலுகைகள் ஏன்? இவர்கள் மக்களின் பணத்தில் சும்மா இருந்து சலுகைகளை அனுபவிக்கிரறார்கள், மக்கள் அனுபவிப்பது துயரம். இவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை நிறுத்தி மக்களுக்கு பகிர்ந்தளித்தால்; இப்படி வகை தொகையின்றி போட்டியிடுவோர் குறைந்து, உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்வோர் தோன்றுவர். அல்லது காணாமற் போவர். செய்வாரா அனுரா?   

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால சம்பளம் இதிலும் அதிகம் என்பது நான் அறிந்த தகவல்.
மொத்தத்தில் கிம்பளம் அதிலும் பலமடங்கு அதிகம்.

கூடவே மது, மாது அனைத்தும் அடக்கம்.

சில பெண் முதலாளிகளும் பார் லைசென்ஸ்  கேட்டு வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2024 at 22:15, தமிழ் சிறி said:

தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? 

அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் கஸ்ரப்படாமல்  கூடிய சம்பளம், பகட்டான ஆடம்பர  வாழ்க்கை, வசதி  வாய்ப்பு,  புகழ்,  சொத்து, மரியாதை. இதற்கு வேண்டிய தகுதி; மக்களை உசுப்பேற்றவும் ஏமாற்றவும் தெரிந்திருக்க வேண்டும். வேறு தகுதிகள் தேவையில்லை.வேலையில்லாப் பிரச்சனை. முன்னைய அரசியல்வாதிகளின் வாழ்க்கையால் ஈர்ப்பு. பின்னாளில் இவர்களுக்கு வரப்போகும் சிக்கல் தெரியாமை. இன்னும் பல.....

  • கருத்துக்கள உறவுகள்

இது உலகம் முழுவதிலும் உள்ளது தான். ஆனால் பணத்தை குறிக்கோளாகக் கொண்டு அரசியலுக்கு எவரும் வருவதாக நான் நம்பவில்லை. காரணம் வேறு துறைகளில் இதைவிட அதிகளவில் சம்பாதிக்க முடியுமே.

ஆனால் உள்ளே வந்ததும் இவை அவர்களை ஆக்கிரமித்து விடுகின்றன. எல்லோரையும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் உத்தியோக பூர்வ  சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் பற்றிய விபரங்களை இந்த இணயத்தளம் சொல்கிறது.

https://www.parliament.lk/en/members-of-parliament/allowances-and-benefits

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.