Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
09 OCT, 2024 | 11:12 AM
image

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும்  சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.   

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) வடக்கு மாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.  

கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,  வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து  மாவட்ட செயலர்கள், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ, கடற்படை,விமானப்படை பொறுப்பதிகாரிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் தொடர்பான இரகசிய நடவடிக்கைகள் விரிவுபடுத்தல். போதைப் பொருளுக்கு எதிராக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.  

இதன் போது , சிவில் சமூக பிரதிநிதிகளால் வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில பிரதேசரீதியாகவும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூகப் பிணக்குகள் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மண் அகழ்வில் போலியான அனுமதி பத்திரங்கள் தயாரித்து இடம்பெறும் மோசடி தொடர்பாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.  

மண் அகழ்வினால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாகவும் கவனம் எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்கள் தொடர்பான விடயங்களும் கவனத்தில் எடுக்கப்பட்டது. 

வீதியில் பயணிப்பவர்களின் அவதானம் இன்மையால் பல விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. நகர்ப்பகுதி வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் உரிய சமிஞ்சைகள் இன்றி வீதிகளில் விரைவாக திரும்புதல் மற்றும் அதிக வேகம் போன்றவற்றிற்கு  பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதன் போது வீதி விபத்துக்கள் தொடர்பாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

011__2_.jpg

https://www.virakesari.lk/article/195819

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலையாரிகளே திருடர்களாக .......🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

தலையாரிகளே திருடர்களாக .......🤣

திருப்பதிக்கே லட்டு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.