Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம்

Vhg அக்டோபர் 10, 2024
1000351434.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேடம் கலைந்து விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09-10-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவ்வளவு காலமும் போலி வேடங்களை போட்டு தேசியம் தேசியம் என பேசி மறுபக்கம் அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர்.

காத்திரமான தலைமைத்துவம்

எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம்.

கடந்த காலத்தில் அந்த சந்தர்பங்களை அவர்களுக்கு வழங்கியிருந்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் என நான் அந்த காலத்தில் இடையூறு விளைவித்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

 

https://www.battinatham.com/2024/10/blog-post_83.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுகளெல்லாம் விமர்சிக்குமளவுக்கு இருக்கிறது தமிழ் கட்சிகள். அன்று தலைவருக்கு வாய்த்த விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் போல தமிழரசுக்கட்சிக்கு வந்து வாய்த்த ஒன்றால் அந்த துரோகி இவர்களை பார்த்து சிரிக்கிறது. தங்களது வாழ்வாதாரத்திற்கு தமிழ் போராட்டத்தையும், தமிழ் உணர்வையும் வைத்து பிழைக்கும் கூட்டம். இந்த விநாயக மூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கு அரசியல் செய்ய என்ன லாயக்கு? போராட்டத்தை விற்று அரசியல் செய்யுது. அதற்குள் விமர்சனம் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, satan said:

இதுகளெல்லாம் விமர்சிக்குமளவுக்கு இருக்கிறது தமிழ் கட்சிகள். அன்று தலைவருக்கு வாய்த்த விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் போல தமிழரசுக்கட்சிக்கு வந்து வாய்த்த ஒன்றால் அந்த துரோகி இவர்களை பார்த்து சிரிக்கிறது. தங்களது வாழ்வாதாரத்திற்கு தமிழ் போராட்டத்தையும், தமிழ் உணர்வையும் வைத்து பிழைக்கும் கூட்டம். இந்த விநாயக மூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கு அரசியல் செய்ய என்ன லாயக்கு? போராட்டத்தை விற்று அரசியல் செய்யுது. அதற்குள் விமர்சனம் வேறு.

ந்விநாயக மூர்த்தி முரளிதரன் போன்றவர்கள் அரசியல் செய்ய வேண்டுமா இல்லையா என்பதை தென் தமிழீழத்தவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். 

மண்டையன் குழுவினர் அரசியல் செய்யலாம், நாம் அதை ஏற்கலாமென்றால் முரளீதரனுக்கும் சந்திரகாந்தனுக்கும்  என்ன குறைச்சல்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது - தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் !

By kugen
 
WhatsApp%20Image%202024-10-10%20at%2015.jpg

 

தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளது பண ஆசையில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து தமிழர்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து விட்டனர்- தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு .
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளது பண ஆசையில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர் அவர்களது பணியை நாம் முன்னெடுப்பதற்காகவே இன்று தனித்துவமாக நாம் போட்டியிடுகின்றோம் இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இன்று தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியான நிலையிலும் கேலிக்கூத்தான நிலையிலும் காணப்படுகிறது

தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த இடைவெளியை நிரப்ப வேண்டிய தார்மீக கடமை என் மீது சுமத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன் வடக்கு கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது.

அந்த காலங்களில் இவர்களுக்கு நாம் விட்டுக் கொடுப்புகளை முன்னெடுத்து வந்தோம் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ஆனால் அவர்கள் தமிழர்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து விட்டனர், கடந்த காலங்களில் தேசிய கட்சிகளின் இணைந்து செயல்பட்டதால் நமது இடங்கள் பறிபோகி உள்ள காரணத்தினால் நாங்கள் தற்போது சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளோம் எனவே அன்பான மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
 

https://www.battinews.com/2024/10/blog-post_682.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி 

ஒரு சராசரி அரசியல்வாதியாக உங்கள் தற்போதைய சொத்து மதிப்பை தாருங்களேன். மக்கள் முடிவு செய்யட்டும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.