Jump to content

ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/310543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!

சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க அவகாசம் கோரிய நிலையில், தற்கோது அவர் தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்

இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனலிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு! | Johnston Fernando Absconding

இந்நிலையில், மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் தங்கும் இடங்களில் நடத்திய சோதனையில் அவர் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

அண்மையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் சர்ச்சைக்குறிய கார் தொடர்பான வாக்குமூலத்தைப் பெற குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருமாறு தெரிவித்திருந்த போதிலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்து வந்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றையும் கடந்த 10.10.2024 அன்று பிறப்பித்திருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு! | Johnston Fernando Absconding

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொகுசு வாகனம் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது, யார் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

https://tamilwin.com/article/johnston-fernando-absconding-1729160364#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு?

adminOctober 18, 2024

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக செயல்பட்டு வந்தாலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியிருந்த வீடு மற்றும் அவர் தங்கியிருக்கும் ஏனைய இடங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காவற்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாகன உதிரி பாகங்களை இரகசியமாக இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தி பி. எம்.டபிள்யூ. கார் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கார் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வாகன தரிப்பிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவற்துறையினர் மூலம் கைப்பற்றப்பட்டது.

‘டாக்சி அபே’ எனப்படும் காமினி அபேரத்ன ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களும் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/207625/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.