Jump to content

தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள்

— கருணாகரன் —

பாராளுமன்றத் தேர்தல் தமிழ்பேசும் சமூகங்களைத் தடுமாற வைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதையும் விட தேசிய மக்கள் சக்திக்கான (NPP அல்லது AKD) ஆதரவு அலை அதிகமாகக் காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் தேசிய மக்கள் சக்தி (NPP அல்லது AKD) யைப் பற்றியே பேசுகிறார்கள். “மாற்றத்துக்கு ஒரு வாய்ப்பளித்தால் என்ன?“ என்று கேட்கிறார்கள். 

இது தமிழ்த்தேசியவாதச் சக்திகள் சற்றும் எதிர்பார்த்திருக்காத நிலையாகும். இப்படியொரு பேரலை வந்து தம்மைத் தாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த அதிர்ச்சி இரண்டு வகைப்பட்டது. ஒன்று, தேசிய மக்கள் சக்தி என்பது இடதுசாரித்தனமுடையது என்பதால், அதை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம். ஏனென்றால் தமிழ்ப் பெருந்திரளுக்கு இடதுசாரிகள், மாக்ஸிஸ்டுகள் என்றால் எப்போதுமே சற்றுக் கசப்பும் இளக்காரமுமுண்டு. அதனால் இடதுசாரிகளைத் தள்ளித் தூரத்தில் வைத்துக்கொள்வார்கள். அதை மீறித் தேசிய மக்கள் சக்தியின் பக்கமாக மக்கள் திரும்புவதை எப்படி ஏற்றுக் கொள்வது, அனுமதிப்பது என்ற சிக்கல். 

இரண்டாவது, தேசமாகத் திரள்வோம், தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவோம், தமிழ்த் தேசியக் கூட்டுணர்வை திரட்டுவோம் என்பதற்கு மாறாக – அதை விட்டு விலகி, தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரள்வது. 

இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் – எதிர்ப் பரப்புரையைச் செய்ய முடியாமல் தடுமாறுகின்றன தமிழ்த்தேசியத் தரப்புகள். 

இப்போதுள்ள நிலையில் வடக்குக்கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கும் தமிழ்த்தரப்புகளுக்குமிடையில்தான் போட்டி. அதிலும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில்தான் தேசிய மக்கள் சக்தி – ஐக்கிய மக்கள் சக்தி – தமிழ்த்தேசியத் தரப்புகள் ஆகியவற்றுக்கிடையிலான முத்தரப்புப் போட்டியுண்டு. இந்தப் போட்டிக் களத்தைச் சமாளித்து வெற்றியடைவதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகளிடத்தில் எந்தக் கைப்பொருளுமில்லை. மெய்ப்பொருளும் கிடையாது.  

இதேவேளை தேசிய மக்கள் சக்தியும் எதிர்பார்த்திராத ஒரு ஆதரவு நிலையை வடக்குக் கிழக்கில் பெற்றுள்ளது. அது வடக்குக் கிழக்கில் தன்னுடைய செல்வாக்குப் பரப்பைச் சரியாக விரிக்காமலே, தன்னுடைய வேலைத்திட்டங்களையும் ஆட்களையும் உருவாக்காமலே பெறுகின்ற ஆதரவாகவும் வெற்றியாகவும் இருக்கப்போகிறது. 

இதற்குக் காரணம், கேள்விக்கிடமில்லாத வகையில் தமிழ்த்தேசியவாதச் சக்திகள் நடத்திய பொய் (மாயை) அரசியலின் விளைவேயாகும். தமிழ்த்தேசியவாத சக்திகளின் பலவீனம் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்பை அளித்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், அதை தமிழ்த்தேசியவாத சக்திகள் வேறுவிதமாக உணர்ந்திருந்தன. 

தேசிய மக்கள் சக்தியை விட அரச ஆதரவுத் தரப்புகளான ஐ.தே.க அல்லது பொதுஜன பெரமுன அல்லது சு.க போன்றவைதான் தமக்குச் சவாலாக இருக்கும் என. அல்லது, அவற்றின் ஏஜென்டுகளாகத் தொழிற்படும் தமிழ்ச் சக்திகளே  தமிழ்த்தேசிவாத சக்திகளுக்குப் போட்டியாக இருக்கும் என. என்பதால்தான் அவை முன்னேற்பாடாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த முற்பட்டதாகும். 

இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறாகி விட்டது. அது யாராலும் கட்டுப்படுத்த முடியாத, கையாளவே முடியாத கட்டத்துக்குச் சென்று விட்டது. இனி நடப்பதைக் காண வேண்டியதுதான் என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது.  

இந்த நிலைக்குக் காரணம், 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சி) அதிலிருந்து பிரிந்து சென்ற பிற தரப்பினரும் மக்களுக்கான அரசியலைச் செய்யவே இல்லை. இவை செய்ததெல்லாம் அரச எதிர்ப்பை மையப்படுத்திய வெறும் வாய்ச்சவாடல் அரசியல்தான். அடுத்தது, தமக்கிடையிலான உள்மோதல். 

வாய்ச்சவாடல் அரசியலை தேர்தற் பரப்புரை தொடக்கம் பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றம் வலையில் தொடர்ந்தனர். போதாக்குறைக்கு ஊடக அறிக்கைகளிலும் ஊடகச் சந்திப்புகளிலும் அவற்றை நிகழ்த்தினர். அதற்கு அப்பால் மக்களுடைய பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் இவற்றின் பங்கேற்பு குறைவு. அல்லது இல்லை எனலாம். தொடக்கத்தில் சில போராட்டங்களில் தலையைக் காட்டினார்கள். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டம், மீள்குடியேறும் மக்களுடைய போராட்டம் (வலி வடக்கு – கேப்பாப்பிலவு) நில அளவீட்டுக்கு எதிரான போராட்டம், அரசியற் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், நில அபகரிப்பு – பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றில்.

இது கூட சம்பிரதாயமான எதிர்ப்பாக – பங்குபற்றுதலாக –  இருந்ததே தவிர, இவற்றைத் தீவிரப்படுத்தி, மக்கள் போராட்டமாக எந்தச் சக்தியும் முன்னெடுக்கவில்லை. அதற்கான உழைப்போ, அர்ப்பணிப்போ எந்தத் தரப்பிடமும் இருக்கவில்லை. எந்த அரசியல்வாதியும் போராட்டங்களின் அடையாளமாக முகிழ்க்கவில்லை.

இதனால் இவர்கள் தேர்தற் காலங்களில் முன்மொழிந்த எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக்காண முடியாமற்போய் விட்டது. பதிலாகப் புதிய பிரச்சினைகள் உற்பத்தியாகின. 

ஆக எதிர்ப்பு அரசியல் என்பது சனங்களுக்கு நெருக்கடியைத் தரும் ஒன்றாக மாறியதே தவிர, அரசுக்கு அது எந்த நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் வழங்கவில்லை. 

மட்டுமல்ல, இந்தத் தரப்புகள் சொன்னதைப்போல பிராந்திய சக்தியாகிய இந்தியாவையோ சர்வதேச சக்திகளான சீனா மற்றும் மேற்குலகத்தையோ வென்றெடுக்கவும் இல்லை. சீனாவுடன் தமிழ்த்தேசியத் தரப்புகள் நேரடியாகவே மோதிக்கொண்டன. 

எனவே எதிர்ப்பு அரசியலில் மக்கள் ஏமாற்றமே அடைந்தனர். அதாவது தமிழ்த்தேசிய அரசியலில் சலித்தனர். யாரை நம்புவது? யாரை ஏற்றுக் கொள்வது? என்று பகிரங்கமாகவே பலரும் சொல்வதைக் கேட்கலாம். மாற்றுத் தெரிவுகள் இல்லை என்ற நிலையில்தான் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் தெரிவு செய்தனர் – ஏற்றனர். 

இனியும் அதைச் செய்ய முடியாது என்பதே மக்களின் இன்றைய நிலைப்பாடாகும். 

ஆனால், இதைக் கவனத்திற் கொள்ளத் தயாரற்ற தமிழ்த்தேசியவாதச் சக்திகள், இன்னொரு நிலையில் இதை – இந்தப் பலவீனத்தை  – மறைத்துக் கொள்வதற்கும் தமக்கிடையில் அதிகாரத்தை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் தமக்குள் மோதிக் கொண்டன. இதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஒரு கட்டத்தில் இது வளர்ச்சியடைந்து இரண்டு அணிகளாகத் தோற்றம் கொண்டது. ஒரு அணி அரச சார்பு அல்லது மென்னிலை அரச எதிர்ப்பு அணியாகவும் மறு அணி அரச எதிர்ப்பு – தீவிர அணியாகவும் மாறியது. அதற்குள்ளும் உப அணிகள் உண்டு. ஆனாலும் இரண்டு வகையான போக்குகளே பெரிதாக அடையாளமாகின. 

சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரச ஆதரவாளர்களாக – துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். மறு தரப்பினர் தம்மைத் தியாகிகளாகக் காட்ட முற்பட்டனர். ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தக் காட்சிப்படுத்தல்தான் நடந்தது. ஏன் இப்போதும் அப்படியான ஒரு தோற்றப்பாட்டை முன்வைத்தே தமிழ்த்தேசியவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. 

ஆக எப்போதும் கதாநாயகன் – வில்லன் என்ற வகையிலான அரசியலையே தமிழ்த்தரப்பு முன்னெடுத்தது.

1.    தமிழ்த்தேசியவாதத் தரப்பு எதிர் அரசு மற்றும் சிங்களத் தேசியவாதம். 

2.    அரச ஆதரவுத் தமிழ்த்தேசியம் அல்லது மென்னிலைத் தமிழ்த்தேசியம் எதிர் தீவிர நிலைத் தமிழ்த்தேசியம். 

இதைச் சூடேற்றும் அரசியல் எனலாம். அதாவது எப்போதும் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் தம்மை – தமது குரலைப் பேசுபொருளாக (விவாதப் பொருளாக) வைத்துக் கொள்வதே இதனுடைய உத்தியாகும்.

இதனால் என்ன பயன் விளைகிறது என்பதையிட்டு இவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. எத்தகைய அக்கறைகளும் இருந்தது கிடையாது. 

இதனால்  இதற்கு அரசியற் பெறுமானங்கள் எதுவும் இல்லை. என்பதால்தான் மக்கள் இவற்றை – இவர்களை நிராகரிக்க முற்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் கண்முன்னே பிரமுகர்களாகி வளர்ச்சியடைந்தனர். சொத்துகளைச் சேர்த்தனர். உலகச் சுற்றுப்பயணங்களைச் செய்தனர். இறுதியில் சாராயக்கடைகளை அரசிடம் சலுகையாகப் பெற்று அதை விற்பனை செய்வது வரையில் சென்றனர். 

பதிலாக இனவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளும் மக்களும் வரவரப் பலவீனப்பட்டனர். ஒருசாரார் இது சரிப்படாது என உணர்ந்து நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தனர் – புலம்பெயர்ந்து  கொண்டுள்ளனர். 

இவையெல்லாம் மக்களுக்குக் கடுமையான ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தின. இதனால் இந்தச் சக்திகளின் மீது சனங்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த வெறுப்பை தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது. இன்னொரு நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த ஆதரவைப் பெறும் நிலை உண்டு. 

ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அது மட்டும்தான் தமிழ் பேசும் சமூகங்களை வெளிப்படையாக ஆதரித்தும் அரவணைத்தும் செல்லும் தரப்பாக தற்போதுள்ளது. அதனால், அதற்கும் ஒரு ஆதரவுத் தளம் காணப்படுகிறது. சற்றுச் சிந்திக்கக் கூடியவர்கள், தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஆதரவை அளிப்பது அதனைக் கேள்விக்கிடமில்லாத வகையில் பலப்படுத்தி, அதிகாரத்தின் உச்சத்துக்குக் கொண்டு போய் விடும். அதற்குப் பிறகு, அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய பலமோ வல்லமையோ நாட்டு மக்களுக்கு இல்லாமற் போய் விடும். ஆகவே அதைச் சமனிலைப்படுத்தக் கூடிய அளவுக்கு ஒரு பலமான எதிர்க்கட்சி (கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை) வேண்டும் என்று கருதுகிறார்கள். 

இது ஏற்றுக் கொள்ளக் கூடியதேயாகும். ஏனெனில், வரலாற்றில் எப்போதும் கேள்விக்கிடமில்லாத அதிகாரம் விளைக்கின்ற அநீதி எளிதாக இருப்பதில்லை. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னே முற்போக்கு – ஜனநாயக சக்திகளாகத் தம்மைக் காட்டிக் கொண்ட தரப்புகள், அதிகாரக் கட்டிலில் ஏறிய பின்னர் நடந்து கொண்ட கசப்பான வரலாற்று அனுபவங்கள் ஏராளமுண்டு. 

என்பதால் சமனிலைப்படுத்தக் கூடிய ஒரு தேர்வை மக்கள் செய்ய வேண்டும். அதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகள் மட்டுமல்ல, முஸ்லிம் தேசியவாதக்கட்சிகளிடத்திலும் பலவீனமான நிலையே உண்டு. ஆகவே இதையெல்லாம் கடந்து ஒரு வலுச் சமநிலையைக் காணக்கூடிய அரசியற் தெரிவை மக்கள் செய்வதற்கு யார் வழிகாட்டுவது? 

அது நாட்டுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும். அதுவே தமிழ் மக்களுடைய – அவர்களுடைய தேசிய இருப்புக்கும் உதவும். 
 

https://arangamnews.com/?p=11339

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "I don't think that Trump would agree to peace only on Russia's terms, as this would look like a defeat for the US, and his advisers understand this," Mr Fesenko told Reuters news agency. உக்கிரேனிய அரசியல் ஆய்வாளரின் (பெசண்கோ) கருத்தின்படி அமெரிக்கா உக்கிரேனின் விடயத்தில் ட்ரம்ப் நினைப்பது போல செய்ய முடியாது என்பதாக, அவ்வாறு நிகழ்ந்தால் அது அமெரிக்காவின் தோல்வியாகிவிடும் என. உக்கிரேனியர்கள் கூட இந்த போர் தொடரலாம் என நினைக்கிறார்கள் என கருதுகிறேன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நன்றி! பிரித்தானியாவின் முன்னால் பிரதமர், போரிஸ் ஜோன்ஸனை சனல் 4 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ்ச்சியில் பாதியிலேயே அவருடைய புத்தகத்தினை விளம்பரப்படுத்தியமைக்காக வெளியேற்றி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த புத்தகத்தில் உலக அரசியல் பற்றிய பல எதிர்வுகூறல்கள் உள்ளதாம்? வாசித்து வீட்டீர்களா? கார்டியன் இணையச்செய்தி கூகிள் மொழிமாற்றம் மூலம். தனது புத்தகத்தை விளம்பரப்படுத்தியதற்காக போரிஸ் ஜான்சனை அமெரிக்க தேர்தல் நிகழ்ச்சியில் இருந்து சேனல் 4 'நீக்கம் செய்தது' என்று இணை தொகுப்பாளர் கூறுகிறார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி 'அதைத் தள்ளிவிடுங்கள்' என்று எச்சரிக்கப்பட்ட போதிலும் தனது நினைவுக் குறிப்பைக் கொண்டு வந்தார், பின்னர் டிவி பேனலில் மாற்றப்பட்டார் அமெரிக்க தேர்தல் 2024 - சமீபத்திய புதுப்பிப்புகள் அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2024: நேரடி வரைபடம் மற்றும் டிராக்கர்   பிஏ மீடியா புதன் 6 நவம்பர் 2024 12.15 AEDT பகிரவும்       நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளரான கிருஷ்ணன் குரு-மூர்த்தியின் கூற்றுப்படி, போரிஸ் ஜான்சன் அமெரிக்கத் தேர்தல் தொடர்பான சேனல் 4 இன் கவரேஜில் விருந்தினராக தோன்றியபோது "தனது புத்தகத்தைப் பற்றி முட்டி மோதியதற்காக" நீக்கப்பட்டார். நிகழ்ச்சியிலிருந்து ஜான்சன் வெளியேறுவது திட்டமிடப்பட்டதா அல்லது அவர் முன்கூட்டியே புறப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.   கிருஷ்ணன் குரு-மூர்த்தி: "இப்போது, இங்கே ஸ்டுடியோவில் எங்களிடம் ஒரு புதிய பேனல் உள்ளது - போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி அதிகம் பேசியதற்காக நீக்கப்பட்டார்" #C4AmericaDecides pic.twitter.com/k64MosGctX — டேவிட் (@Zero_4) நவம்பர் 5, 2024 "}}"> நிகழ்ச்சியின் போது, முன்னாள் இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா முடிவு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியில் சில நிமிடங்களில் தனது நினைவுக் குறிப்பைப் பிடித்துக் கொண்டு அதைச் செருகியதற்காகக் கூறப்பட்டார் . சேனல் 4 செய்தி வாசிப்பாளரான குரு-மூர்த்தி ஜான்சனிடம் "அதைத் தள்ளிவிடுங்கள்" மற்றும் "நிறுத்துங்கள் போதும்" என்று கூறினார், அவர் தனது புதிய புத்தகத்தை இரண்டு முறை குறிப்பிட்டு அதை பார்வையாளர்களுக்கு பிடிக்க முயன்றார். முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் "மிகவும் மலிவானவை" என்று குரு-மூர்த்தி விவரித்தார். ஜான்சன் பதிலளித்தார்: "என்னைத் தடுக்க உங்களால் எதுவும் செய்ய முடியாது ... எனது புத்தகத்தை இணைக்க எனக்கு அனுமதி உண்டு." 🚨 புதியது: போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தை இன்றிரவு சேனல் 4 அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பில் சில தருணங்களில் செருகியுள்ளார் pic.twitter.com/fZnpwRfIhi — அரசியல் UK (@PolitlcsUK) நவம்பர் 5, 2024 "}}"> பின்னர் குழு விவாதத்தின் போது, ஜான்சன் ஜூலை மாதம் படுகொலை செய்ய முயற்சித்த பின்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை சந்தித்ததாகக் கூறினார். "இதை நான் குறிப்பிடத் தவறினால், எனது புத்தகம் அன்லீஷ்டுக்கு விளம்பரம் செய்கிறேன், உக்ரைனைப் பற்றி அவருடன் பேசினேன்," என்று அவர் கூறினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அரசியல் ரீதியாக மீண்டும் ட்ரம்ப் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது பற்றி அவரிடம் கேட்டபோது, ஜான்சன் கூறினார்: "அன்லீஷ்டில் இந்த விஷயத்தைப் பற்றிய முழு விவாதத்தையும் நீங்கள் காண்பீர்கள், அதற்கான பதில் வெளிப்படையாக உள்ளது." இணை தொகுப்பாளர் எமிலி மைட்லிஸ் அவரிடம் கூறினார்: "நாங்கள் அனைவரும் உங்கள் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லை, எனவே எங்களிடம் கூறுங்கள், நீங்கள் அரசியல் ரீதியாக மீண்டும் வர விரும்புகிறீர்களா … உங்களால் ஒரு கேள்விக்கு உண்மையில் பதிலளிக்க முடியாது." ஜான்சன் பதிலளித்தார்: “எமிலி உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இரவு முழுவதும் பதிலளித்தேன். தற்போது நான் எனது புத்தகத்தை விளம்பரப்படுத்துவதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளேன், இது அனைத்து நல்ல புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது. பின்னர் நிகழ்ச்சியில், ஜான்சனுக்கு பதிலாக சேனல் 4 குழுவில் மைக்கேல் கோஹன் நியமிக்கப்பட்டார், அவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் வழக்கறிஞராக பணியாற்றினார். குரு-மூர்த்தி பார்வையாளர்களிடம் கூறினார்: "போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி களமிறங்கியதற்காக நீக்கப்பட்டுள்ளார்." சனல் 4 இன் பிரதிநிதி ஒருவர் கருத்துக்காக PA ஊடகத்தால் தொடர்பு கொள்ளப்பட்டார்.  
    • சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.