Jump to content

ரணில் விக்கிரமசிங்க பல சலுகைகளை கோரினார்; அவற்றை நிராகரித்துவிட்டேன் - அனுர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்கள் உட்பட பல சலுகைகளை கோரினார். அவற்றை நிராகரித்துவிட்டேன் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்கள், 16 சமையல்காரர்கள் உட்பட  பல சலுகைகளை கோரினார் என அனுர குமார திசாநாயக்க தங்காலையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வாகனங்களே வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசநிதியை முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்,என தெரிவித்துள்ள அனுர குமார திசநாயக்க ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச வீடுகளில் இரண்டு அம்புலன்ஸ்கள் எந்நேரமும் தயாரான நிலையில் உள்ளன இவற்றை தனிப்பட்ட சொத்தாக பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196672

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

163 பாதுகாப்பு உத்தியோகத்தர், 20 வாகனம், 16 சமையல் காரர், தோட்டக்காரர், எந்த நேரமும் அம்புலன்ஸ் என்று மகாராஜாக்கள் போன்ற வாழ்க்கையை பதவி இழந்த பின் வாழ நினைக்கும் இவர்களின் செயல் வெட்கப் பட வேண்டியது.

ஏழை மக்கள் வாழும் நாட்டிற்கு இது அளவுக்கு மீறிய செயல் என்று உணராத ஜென்மங்கள். 

இதற்கான செலவுகள் எல்லாம்… ஏழை மக்களின் வயிற்றை அடித்துத் தானே கொடுக்க வேண்டி உள்ளது.

தங்களின் சுக போக வாழ்க்கைக்கு அரசியலை பயன் படுத்தும் கிரிமினல்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் . ........!  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறிலங்கா சோசலிஸ்ட் தல .. முதலாலித்துவ,ஏகாதிபத்திய,அமெரிக்காவின் கொடிக்குள்ள மாட்டுப்பட்டு போய் நிற்கிறார் போல
😅

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.