Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-7333.jpg
கவிஞர் நாவண்ணனுடன்
எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச்  சந்திக்க வந்துவிடுவார்.

2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது  நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது.

யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதியஅக்கினிக் கரங்கள்என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விடலாம் என்ற எண்ணத்தில், புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டு ஒரு பழைய புத்தகம் என்ற வடிவிலேயே  அக்கினிக் கரங்கள்புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார்.

இன்று நாவண்ணன் இல்லை. அவரது நினைவுகள், அவருடன் எடுத்த புகைப்படங்கள்…. என்னுடன் இருக்கின்றன.

1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதியஅக்கினிக் கரங்கள்புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள்.  என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல.

 

 

அக்கினிக் கரங்கள்

 

நாவண்ணன்

 

 

இது ஒரு தமிழ்த்தாய் வெளியீடு

 

 

நான் சிறியவளாய் இருக்கும்போது, என்னென்ன படம் பார்த்தேன், எத்தனை படம் பார்த்தேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த, 'சர்வாதிகாரி,' 'மந்திரி குமாரி * இவையெல்லாம் நல்லாய் நினைவிருக்கு.

ஆபத்துவேளையில் எல்லாம் எம். ஜி. ஆர் வாளோடு திடீர் என்று தோன்றுவதும், சிலம்பமாடி எல்லோரையும் துரத்துவதையும் பார்த்து படமாளிகையில் இருந்தவர்கள்  விசில் அடித்து கைதட்டுவதைக் கேட்டு நானும் கைதட்டியிருக்கின்றேன்.

ஐம்பத்தெட்டில இனக்கலவரம் நடந்தபோது. பெரியவர்கள் சும்மா கேலிக்காக பேசிக்கொண்ட விஷயமும் ஒன்று."எம்.ஜி. ஆர் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வாளுடன் கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்து விட்டாராம்!" என்பது. அந்த விஷயத்தை உண்மையென்று அன்று என் மனம் நம்பியது. அப்படி ஒரு அபிமானம் எனக்கு எம்.ஜி.ஆர் மீது.

அந்நாளில் பிரபல்யமாக பேசப்பட்ட இன்னுமொருவருடைய பெயர் அறிஞர் அண்ணாவுடையது. இலங்கை யில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழகத்தில் எங்கேயோ நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், " ஏய் மத்திய அரசே! இலங்கையில் எமது தமிழ்ச் சகோதரர்கள் படு கொலை செய்யப்படுவதை நீ சும்மா பார்த்துக் கொண்டிருக்காதே! நீ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினால் தமிழகத்தில் உள்ள நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். ஒரு கையில் மண் வெட்டியும் மறுகையில் கூடையும் எடுப்போம். சேது அணையை நிரவி நிரவி அங்கு போய்ச் சேருகின்ற முதல் தமிழன் விடுகின்ற மூச்சே எம் சகோதரர்களின் துன்பங்களைப் பொசுக்கும்." - இப் படிப் பேசியுள்ளதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அன்றைய இனக்கலவரம் பற்றிய செய்திகளை, பெரியவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அவைகள் என் செவிகளில் விழுந்திருக்கின்றன. தென் பகுதியில் உள்ள தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொன்றது, உயிருடன் தீ மூட்டியது, பிள்ளைகளைக் கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் போட்டது எல்லாம் கேட்க எனக்குப் பயங்கரமாகவே இருக்கும்.

என்னுடைய மாமா முறையான ஒருவர், அந்த இனக் கலவரத்தில் உயிர்தப்பி வந்தவர். தன் கண் முன்னாலேயே அவருடைய மனைவி, சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப் பட்ட கதையைச் சொல்லி அழுததையும் நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அப்போ கற்பழிக்கப்படுதல் ' என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த மாமாவையும் அவர்கள் வெட்டிக் குற்றுயிராய் விட்டுப் போனபிறகு, பக்கத்து வீட்டில் இருந்த இன்னுமொரு சிங்களக் குடும்பம் தான் அவரையும் காப்பாற்றியிருக்கு. அந்த மாமி. சிலநாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்து, பிறகு தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டாளாம்.

அந்த மாமாவே இவ்வளவு பெரிய வெட்டுக் காயத் தோட உயிர் பிழைச்சிட்டார். ஆனால், அந்த மாமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்...... அதுவும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திட்டு. இந்தக் கேள்விக் கெல்லாம் அந்த நாளில எனக்கு விடை கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரியவர்களிடம் யாரிடமாவது கேட்டால், ' சும்மா போ அங்கால' என்று சினப்புத்தான் கிடைத்தது. ஏதோ நாம் அறியக் கூடாத விடயமாக்கும் என்று நான் பேசாது இருந்து விடுவேன்.

ஆனால், இனக்கலவர காலத்தில் எம். ஜி. ஆர் வந்த கதை, அண்ணாவின் பேச்சு எல்லாம் என்னுடைய சின்ன வயசிலேயே நெஞ்சில ஒரு கிளுகிளுப்பையும் தமிழ் நாட் டில் உள்ளவர்கள் மேல் ஒரு பக்தியையும் எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தன.

காலம் போகப் போக இந்திய சுதந்திரப் போரும் அதில் இந்தியத் தலைவர்களும் மக்களும் காட்டிய உறுதியுடன் கூடிய சகிப்புத் தன்மையெல்லாம் இந்தியாவின் மேல் இனிமேல் இல்லையென்று கூறும் அளவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தி விட்டன.

நான் படிப்பை முடித்த பின்னர், அரச வைத்தியசாலை யில் தாதியாக (நேர்ஸ்) வேலை பார்க்கத் தொடங்கினேன். பாடசாலை நாட்களிலேயே, நான் ஒரு புத்தகப் பூச்சிதான். இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் இன்னும் புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அதிகமாயிற்று. அதிலும், இரவு வேலை நாட்களில் ஓய்வாக இருக்கும்போது புத்தகங்களே எனக்கு உறுதுணையாகின.

மகாத்மா காந்தியின், சத்திய சோதனை என்னை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று. காந்தியைப் போன்று தெய்வீக அம்சம் கொண்ட மகானை தேச பிதாவாகக் கொண்ட அந்த நாடு. சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் காப்பரணாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்பினேன்.

இன்னும் பென் கிங்ஸ்சிலியின், 'காந்தி படம் வேறு எனது சிந்தையிலேயே இந்த எண்ணங்களுக்கு நெய் வார்த்து விட்டது. அதிலும் பிரிட்டிஷ் படையினர். ஜாலியன் வாலா பார்க்'கில் சூழ நின்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற அந்தக் காட்சியைப் பார்த்த போது என் இரத்தம் கொதித்தது. ரோமம் எல்லாம் சிலிர்த்து நின்றது. அந்தப் படம் அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் கட்டத்தைப் பார்த்த ஒருவர், "நல்ல காலம்! பிரித்தானியனாகப் பிறக்காததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறிய தாகப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை நினைத்துக் கொண்டேன்.

உண்மைதான்! அந்த ஒரு நிகழ்வுக்காகவே பிரித்தானியன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டுமென்று தான் நினைப்பதுண்டு. ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு பொழிந்து அப்பாவி மக்களைப் பலிகொண்ட அமெரிக்கனுக்கும் இந்தப் பிரித்தானியனுக்கும் என்ன வித்தியாசம் உண்டு என்பதே எனது கேள்வி

இன்றைக்குத் தமிழகத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள் என்பது உண்மைதான் ! ஆனால், தான் படிக்கும் காலத்திலேயே என்னுள் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தியது டொக்ரர் மு. . வின் எழுத்துக்கள்தான். பெரும்பாலும் அவருடைய நாவல்களை நான் படித்திருக்கின்றேன். ஒருமுறையல்ல, வசதி கிடைக்கும் பொழுதேல்லாம் ஒரே நூலினை மீளவும் படித்திருக்கின்றேன்.

அவருடைய 'அந்த நாள் நூலைப் படித்ததன் பின்னர் தான் இந்திய மக்கள், கடந்த காலங்களில் என்னவிதமான துன்பத்தை எல்லாம் சந்தித்திருக்கின்றார்கள் என்று வேதனைப் பட்டதுண்டு.

பர்மாவின் தலைநகர் ரங்கூனில் இருந்து ஜப்பானியரின் குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே நசுங்கி மடிந்தவர்கள் அங்கிருந்து இந்தியாவை நோக்கிக் கால் நடையாகவே புறப்பட்ட அகதிகள் பட்ட இன்னல்கள்...... மலேரியா, வாந்திபேதி வருத்தங்களால் மாண்டவர்கள்... அப்படி இறந்தவர்களை அநாதைப் பிணங்களாகவே விட்டு உறவினர்கள் செல்ல, காட்டு மிருகங்களால் உண்ணப்பட்டதும் பிணங்களைப் புதைப்பதற்கு வகை தெரியாமல், ஆற்றிலே தூக்கி எறியப்பட்ட அவலங்கள் அதிலும் தப்பி வந்தவர்களை, காட்டு வழியில் மறித்து பர்மாக்காரர்கள் கொள்ளையடித்த கொடுமைகள் எல்லாம் படிக்கப் படிக்க அந்த இந்தியர்கள் மீது எனக்கு இரக்கத்தையே உண்டு பண்ணின.

இலங்கையை இலங்க வைக்க வந்த இந்தியர்கள் இதே கொடுமைகளைத் தானே அனுபவித்தனர்.

இந்த கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து கரை கண்டு வந்த பாரத மக்கள் துன்புறும் அயல்நாட்டு மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவதில் வியப்பொன்றும் இருக்க முடியாது தான்! அதனால்தான், பாகிஸ்தானின் பிடியில் இருந்து பங்களாதேஷுக்கு, இந்தியா விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது.

அதனால்தான், இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் கோரி அங்கு சென்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது.

ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் போது ஒரு ஆண் அவள் வேதனையை உணர்வதை விட, பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண் நிச்சயமாய் அதிகமாக உணர்வாள்! ஏனென்றால், ஒரு நாளில் அவளும் இதே உபாதையை அனுபவித்தவளாயிற்றே!

அதுபோல அடிமைப் படுத்தப்படும் மக்களின் உணர்வுகளை, ஒரு காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்குள் அடிமைப்பட்டிருந்த இந்தியா உணர்ந்து கொள்வதிலும், அடிமை பட்டுக் கிடக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை.

சுதந்திரம் பெற்றநாள் முதல், இலங்கையில் தமிழினம் இன்னல்கள் அனுபவித்து வருவதை அனுதாபத்தோடு இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று நான் வியப்படைந்ததுண்டு. பங்களாதேஷ் அகதிகள் இந்தியா விற்குள் நுழைந்த போது அதைக் காரணமாக வைத்து, பாகிஸ்தானுடன் போராடி பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுகொடுத்த இந்தியாவால், இலங்கைத் தமிழர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து தஞ்சம் கோரிச் சென்ற பின்னரும் எப்படி மௌனமாக இருக்க முடிகின்றது...... என்று எண்ணி நான் வியந்ததுண்டு.

நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும் பொழுதெல்லாம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) யில் எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கிக் கூவி அழைக்க வேண்டும் போல் இருக்கும். அதிலும், எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான டொக்ரர் விஸ்வரஞ்சன் ஒரு நாள் கடமை முடிந்து யாழ்ப்பாணத்தில் இருந்து, கே.கே எஸ். வந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரை விசாரித்து, அடையாள அட்டையைப் பார்த்து அவர் ஒரு டொக்ரர் தான் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவரை முன்னே போகவிட்டு பின்புறமாக நின்று சுட்டுக் கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் டொக்ரர் என்பதையும் நினைக்காமல் நடு வீதியிலே, அவரைச் சுட்டுக்கொன்ற

அந்த கொடுமைக்குப் பின்னர், "இந்தியாவே! நீ எப் பொழுது எங்கள் மண்ணில் காலெடுத்து வைக்கப் போகின்றாய் .....?" என்று நான் அழுதேன்.

கே.கே.எஸ் சந்தியில், காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த இளம் குடும்பத் தலைவன் 'திபோ' இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில் இன்று யாழ்ப்பாண வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றானே....... அதை எண்ணும்போது......!

இவைமட்டும் தானா.....? இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் எறிகணைகளுக்கும் இலக்காகி தினம் தினம் நோயாளிகளை கையிழந்து. காலிழந்து சில வேளைகளில் உயிரிழந்து வெறும் சடலங்களாய் கொண்டு வரும் போது என் இரத்த மெல்லாம் கொதிக்கும். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான் இந்தத் தொழி லையே விட்டுவிட்டு, துப்பாக்கி ஏந்தட்டுமா......? என்று கூட நினைப்பேன்.

அந்த வேளையில் எல்லாம் எங்கள் வைத்தியசாலை வாசலில், நித்திய புன்னகையுடன் நிற்கும் காந்தி அண்ணலின் சிலை எனக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும். அந்த மகானின் புன்னகையில் அத்துணை காந்த சக்தி!

பாவம் அந்தக் காய்கறி வியாபாரி திபோ! அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவனது இளம் மனைவியோ, கணவனே கதியென்று அவன் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல் அங்கேயே பழிகிடக்கின்றாள். சில வேளைகளில் அவனது பிள்ளைகள் உறவினருடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு!

திபோ மீண்டும் எழுந்து நடமாடுவானா......? அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொடுத்து மீண்டும் தன் குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வானா? என்னுடைய இந்த இருபத்திரண்டு வருட வைத்தியசேவை அனுபவத்தில் அது நடை பெறாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தெய்வம் என்று ஒன்றிருக்கின்றதே...... ! அது இரங்கினால் நடக்க முடியும்!

 

  • Like 10
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கே.கே. எஸ் இல் இனி இருக்கமுடியாது என்ற நிலைமை ஆகியிட்டது. துறைமுகத்தில் இருந்து தங்களது அரண்களை இராணுவம் விஸ்தரித்துக் கொண்டே வந்தது. அல்லாமலும் பலாலியில் இருந்து கே. கே. எஸ் வரையும் இராணுவம் ரோந்து போகும் வேளையிலே வீதிக்கரையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் புறப்பட்டு வெகு தூரம் ஓடுவதும் அவர்கள் போன பின்னர் மீண்டும் வந்து வீடுகளில் இருப்பதுவும் நாளாந்த நிகழ்வாகி விட்டது.

அவர்கள் வரும் வீதிகளில் போராளிகளின் கண்ணி வெடித் தாக்குதல் ஒன்றிரண்டு இடம்பெற்றால் இராணு வம் தனது ரோந்து அணியை மூன்றாகப் பிரித்து ஒரு பிரிவு வீதியால் வரவும், மற்றைய இரண்டு பிரிவுகளும் வீதிக்கரையின் இரண்டு பக்கங்களில் உள்ள வளவுகளின் ஊடாக வேலியை வெட்டியும், மதில்களை உடைத்தும் வரத்தொடங்குவர். சில வேளைகளில் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி வளைத்துக் காவல் நிற்கவும் தொடங்குவர்.

சில சமயம், இராணுவம் வருகிறது என்று நாம் அறிந்து வீடுகளைப் விட்டுப் புறப்படும் முன்னரே அவர்கள் அண்மித்து விடுவதால், வெளியேறப் பயந்து கதவுகளை அடித்துப் பூட்டிவிட்டுச் சாவித்துவாரங்களூடாகவும் - சன்னல் இடைவெளிகளூடாகவும் இதயம் படபடக்கப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு.

அப்படியான ஒருநாளில் எங்கள் வீட்டைச் சுற்றிக் கொண்டு இராணுவம் நிற்கின்ற பொழுது எனது பாட் டிக்கு அடக்க முடியாத தும்மல் தொடங்கவே நாங்கள் பட்டபாடு இருக்கிறதே...! பாட்டியின் முகத்தைத் தலையணைக்குள்ளே அழுத்தி தும்மச் செய்து ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டோம்.

இன்னுமொருமுறை இராணுவம் அண்மித்து வந்து விட்டது என்பதை அறிந்ததும் எப்படியோ ஓடிவிட்டோம். அவர்கள் சென்றதன் பின்னர், மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதையும் றேடியோ', 'ரீ.வி' முதலான பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டிருப்பதையும் கண்டோம்.

இந்த நிலையில் பிள்ளைகளையும் பாட்டியையும் வீட்டிலே விட்டு, நான் யாழ்ப்பாணம் வேலைக்கு வருவதும்... தங்குவதும் அந்த நாட்களில் அமைதியிழந்து ..... என் கட மையில் ஈடுபட முடியாமல் அந்தரிப்பதும் வழக்கமாகி விட்டது. "இந்தப் பிரச்சினைகள் எதற்கு......? ஓரளவு அமைதி ஏற்படும் வரையாவது என்னோடு கொழும்புக்கு வந்து இரு, பிள்ளைகளின் படிப்பும் கெடாது!" என்று எனது கணவர் எழுதும் கடிதங்களில் எல்லாம் வற்புறுத்தி கொண்டே வருகின்றார். அனைத்து விடயங்களிலும் என் கணவரோடு ஒத்துப்போகும் என்னால் இந்த விடயத்தில் மட்டும் ஒத்துப்போக முடியவில்லை.

இருபத்திரண்டு வருட சேவைக் காலத்தில் பதினைந்து வருடங்கள் யாழ்ப்பாணம் தவிர்ந்த மலையகம், சிங்கள மாவட்டங்களிலும் வேலை செய்த அனுபவம் எனக்கிருந்ததால் அங்கு போய் வாழ்வதில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.ஆனால், இப்பொழுது இந்த மண்ணி நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கால கட்டமிருக்கிறதே...! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த மண்ணைவிட்டு வெளியேறுவது என்பது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.

யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலைதான், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் செயன்முறைப் பயிற்சி பெறும் போதனா வைத்திய சாலை. நான் இங்கு கடமை செய்யத் தொடங்கி இந்த ஏழு வருடங்களுக்குள்ளும் எத்தனை வைத்திய மாணவர்கள் டொக்ரராகப் பட்டம் பெற்று வெளியேறிவிட்டார்கள்! அப்படி வெளியேறியவர்கள் எல்லாம் இன்று எங்கே..? இரத்த ஆறு பெருகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எம் மக்களையும் போராளிகளையும் காப்பாற்ற வேண்டியவர்கள் எங்கே ..?

பட்டம் பெற்று முடித்ததும்.. இங்கு பணிபுரியப் பயந்து. இங்கு பெற்ற பட்டத்தைக் கொண்டு வெளிநாடு களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சிலர் வெளிநாடுகளுக்கே தப்பிப் பறந்து போய்விட்ட சம்பவங்களை கேள்விப்படும்போது வெட்கமாக இருக்கின்றது ! வேறு சிவர் இங்கு எம்.பி.பி. எஸ். பட்டம் பெற்றுவிட்டு வெளிநாடுகளில் சென்று தமது கல்விக்கும் தகைமைக்கும் பொருத்தாத கூலிகளாக வேலை செய்வதாகக் கேள்விப்படும் போது எத்துணை வேதனையாக இருக்கின்றது!

"இந்த மண்ணிலே வாழ்வோம். இந்த மண்ணின்  மக்களுக்கே பணிபுரிவோம்." என்ற வைராக்கியத்துடன் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் வைத்தியர்களுடன் பணிபுரிவதில் கிடைக்கும் நிறைவு இருக்கிறதே......! அதற்கு ஈடாக எதையுமே கூறிவிட முடியாது. எனது சேவை வாழ்வின் ஆரம்ப காலங்களின் பெரும்பகுதியைப் பிற இடங்களில் கழித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தக் காலத்தில் இங்கு பணியாற்றக் கிடைத்த பேறு சாதாரணமானதா.....? இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள், இந்த ஆபத்தான வேளைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியர்கள்- தாதியர்-சிற்றூழியர்களைத் தெய்வத்திற்கு அடுத்தபடியாக நன்றியுடன் நோக்கும் பார்வை இருக்கின்றதே...... ! அது ஒன்றே போதும் ....! நாம் வாழ்நாள் முழுதும் செய்த பாவங்களைக் கழுவிக் கொள்வதற்கு.

இத்தகைய ஒரு சூழலில், இக்கட்டான நிலையில் ஏனையவர்களைப் போல உயிருக்கு அஞ்சி ஓடுவதை என் மனம் ஒப்பவில்லை. இது எனக்கு எப்படி ஏற்பட்டது......? நிச்சயமாக நான் படித்த புத்தகங்கள் கற்பித்த பாடங்கள் இது என்று தான் நினைக்கின்றேன். "நிற்க அதற்குத் தக!'' என்ற வள்ளுவம் எனக்கு வழிகாட்டி வற்புறுத்திக் கொண்டிருக்கின்றது, எனவே தான்,எனது கணவரது கோரிக்கையை என்னால் நிறைவு செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால், அவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொழும்பிலிருந்து வந்து போய் கொண்டிருக்கின்றார்.

ஆனால், ஒரு விடயத்திற்கு நான் பயந்தே ஆகவேண்டியிருக்கிறது. என்னுடைய பிள்ளைகள் இருவரும் வளர்ந்து விட்டார்கள்! திருமணம் ஆகாமலே என்னுடன் வீட்டில் தங்கியிருக்கும் இருபத்தியெட்டு வயதான தம்பி. இவர்களையும் வைத்துக்கொண்டு கே.கே.எஸ்.இல் தொடர்ந்து எப்படி இருப்பது ...... ? என்றைக்காவது ஒரு நாள் அவர்களது சுற்றிவளைப்புக்குள் இவர்கள் அகப்பட்டுக்கொண்டால் நிலைமை என்ன ஆவது......?

….. இப்படியெல்லாம் நான் பயந்து கொண்டிருந்த போது தான் ஒருநாள், அந்தப் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. அன்று நாம் எதிர்பாராத வேளையில், இராணுவம் ரோந்து வந்தது. ' அமெரிக்கன் மிஷன்' பாடசாலைக்கு அண்மையில் கண்ணிவெடி ஒன்றின் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகளின் பிளிறல்கள்.....!

நாம் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினோம். இதற்கிடையில் பலாலி இராணுவ முகாமுக்குச் செய்தி கிடைத்து, ஹெலிக்கொப்ரர் ஒன்று வேட்டுகளைக் கக்கிய வண்ணம் எமக்கு மேலே பறக்கத் தொடங்கியது.

எங்களோடு இன்னுமொரு இளம் கர்ப்பிணிப் பெண் ஒரு கையிலே இரண்டு வயது குழந்தை வேறு மறு கையிலே ஒரு சிறிய துணிப்பை. வயிற்றுச் சுமையோடு கைச்சுமையையும் சுமந்து, ஓடி வர முடியாமல் அவள் ஒரு இடத்தில் இடறி விழுந்து விட்டாள். எங்களோடு ஓடி வர முடியாமல் பாட்டி வீட்டிலேயே தங்கி விட்டார். வயதான அவரை, இராணுவம் ஒன்றும் செய்யாது என்ற அசட்டுத் துணிவில் விட்டு வந்துவிட்டோம்.

கீழே விழுந்த அவளையும் பிள்ளையையும் தூக்கி அழைத்துச் செல்வதற்குள் பெரும் பாடாகி மேலே சுட்டபடி பறந்து கொண்டிருக்கும் ஹெலி…. கீழே நாங்கள். என்னையும் அவளையும் விட்டு ஓடமுடியாத பிள்ளைகள். என் தம்பி கூட அன்றைய தினம் எங்களோடு இல்லை. எங்கேயோ போயிருந்தான். சுமார் ஒரு மணி நேரம் நாம் பட்டபாடும் பெற்ற அனுபவமும் போதும் என்றாகிவிட்டது. எனவேதான், இனியும் அங்கு தொடர்ந்து இருப்பது மடமை. அங்கிருந்து புறப்படுவது என்று முடிவெடுத்தோம்!

நல்ல காலமாக உடுவிலில். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். அங்கே எல்லாம் இராணுவம் வரும் என்ற அச்சம் எதுவுமில்லை. மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் மகளுக்கும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மகனுக்கும் படிக்க இடங்கள் கிடைத்து விட்டன. கே. கே. எஸ். இல் இருந்து யாழ்ப்பாணம் வேலைக்குப் போவதிலும் இப்பொழுது உடுவிலில் இருந்து வேலைக்குப் போவது.... எட்டு மைல்கள் குறைவாக இருந்தது. இன்னும் இலகுவாயிருந்தது !

நீண்ட காலமாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிசயம் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நிகழ்ந்தது. "யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்குகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகத்தை நாங்கள் நேரடியாகவே செய்யப் போகின்றோம்" என்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தியா, இலங்கைக் கடல் எல்லை வரை வந்து திரும்பிய சம்பவம் நடைபெற்றது. இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. கடல்வழியை இலங்கைக் கடற்படை மறித்து, "இந்தியாவில் உள்ளவர்களுக்கே கொண்டு சென்று விநியோகியுங்கள்!" என்று திருப்பி அனுப்பிய செயலும், பொறுமையோடு இந்தியப் படகுகள் திரும்பிச் சென்றதும் எனக்கு வியப்பைக் கொடுத்தன.

இந்தியா எத்துணை பெரிய நாடு! பெரும் வல்லரசான சீனாவையே விரட்டி அடித்த வலிமையுள்ள நாடு. கேவலம்! சிறீலங்கா சுண்டெலி அளவில் இருந்து கொண்டு அவர்களோடு வீராப்புப் பேசியிருக்கிறதே...! இந்தச் சுண்டெலிக்கு அஞ்சியது போல் இந்தியாவும் பேசாது, திரும்பிப் போயிருக்கிறதே! இதில் சிறீலங்கா தன் பலமறியாது நடந்து கொண்ட அறியாமையை நினைத்துச் சிரிப்பதா......? அல்லது மௌனமாகச் சென்ற இந்தியாவின் பெருந்தன்மையை எண்ணி வியப்பதா? என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், ‘பெருக்கத்தில் வேண்டும் பணிவுஎன்பதற்கு உதாரணமாக இந்தியா நடந்து கொண்டிருக்கிறது. "இந்தியா, இது விடயத்தில் இனியும் மௌனமாக இராது. பதில் நடவடிக்கை எடுத்தே தீரும்!" என்று நிச்சயமாக நான் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை!

அன்று பகல் ஓய்வு நாள் என்பதால் வேலைக்கும் போகவில்லை. சமையல் எல்லாம் முடிந்த பின்னர், சற்றுத் தொலைவில் மருதனாமடம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இடம் பெயர்ந்து வந்திருக்கும் கே. கே. எஸ் ஐச் சேர்ந்த குடும்பம் ஒன்றைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்த மிஸிஸ் சிவபாதம், ஒரு கிறீஸ்தவப் பெண், படித்த பெண். அவளுக்கு இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும். பெண் உடுவில் மகளிர் கல்லூரியில் ஜீ. சீ. . படித்துக் கொண்டிருந்தாள். மூத்த பையனும், கடைசிப் பையனும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். கணவன் மட்டக்களப்பில் உள்ளூராட்சித் திணைக்களத்தில் வேலை. வீட்டுக்கார அன்ரியின் தாயாரும் அவர்களுடனேயே இருந்தார். படித்த பண்பான குடும்பம். பழகுவதற்கு இனியவர்கள். கே. கே. எஸ் நண்பர்களை சந்திக்கப்போன நாங்கள் அந்தக் குடும்பத்தினருடனும் நட்பை வளர்த்துக் கொண்டோம்.

அன்றும் கூட அந்த அன்ரியுடன்தான், சிறீலங்கா கடற்படை இந்தியாவுடன் வாலாட்டியதைச் சொல்லி வியந்து கொண்டிருந்தேன் என்னை விட மிஸிஸ் சிவபாதம் இந்தியாவின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தபடியால் இதைப்பற்றிப் பேசுவதே சுவையாக இருந்தது.

திடீரென்று என் தம்பி அங்கு விரைந்து வருவதைக் கண்டேன். வந்தவன் உற்சாகத்துடன் கூறினான். " அக்கா இப்ப லேற்ரஸ்ற் நியூஸ் என்ன தெரியுமா? இந்தியா - யுத்த விமானங்களின் காவலுடன் உணவுச் சாமான் ஏற்றிய விமானங்களையும் யாழ்ப்பாணத்துக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைச்சிருக்காம்.

தம்பி அந்தச் செய்தியைச் சொல்லி வாயை மூட வில்லை. எங்கள் ஆச்சரியத்தை நாம் வெளிப்படுத்தக் கூடவில்லை. அதற்குள் வானமே இடிந்து விழுவது போன்ற பேரொலி. சத்தம் வந்த திசையைத் திரும்பி பார்த்தோம். அங்கே ..!

அந்தக் காட்சியை எப்படி வர்ணிப்பேன் வானத்தில் நான்கு விமானங்கள் சேர்க்கஸ் விளையாட்டுக் காட்டிக் கொண்டு இந்தியாவின் யுத்த விமானங்கள் தாம் அவை என்பதைப் பின்னர் அறிந்தோம். செங்குத்தாக மேலே எழுவதும் அதே பாணியில் கீழே குத்தென வருவதும் பக்கமாகப் புரள்வதுமாக அவை வான வேடிக்கை நிகழ்த்தி நகர்ந்து கொண்டிருக்க அமைதியாக மூன்று விமானங்கள், சீரான வேகத்தில் எங்கள் தலைகள் மீது மிதந்து சென்றன!

எம்மைத் தாண்டிச் சற்றுத் தொலைவில் சென்றதும். வான தூதர் செட்டைகள் விரித்து இறங்குவதுபோல் அந்தக் கப்பல்களிலிருந்து பரசூட்களில் பொதிகள் பூமியை நோக்கி மிதந்தபடி வந்தன.

பைபிளிலே 'கானான் நாட்டில் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவன் 'மன்னா" எனும் அப்பத்தை வானில் நின்று பொழிந்ததாகச் சொல்லப்படுகின்றதே! அந்தக் காட்சி கூட இப்படித் தான் நிகழ்திருக்குமோ…?

எங்களுக்கு இருந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. "இந்தா..இந்தியா வந்திற்றான். இனிக்கவலை இல்லை என்று மிஸிஸ் சிவபாதம் சந்தோஷத்தால் கத்தினார். எனக்கு வார்த்தைகளே பிறக்கவில்லை கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடித்தன. மிஸிஸ் சிவபாதத்தின் பிள்ளைகள் ஆர்ப்பரித்துக் கைதட்டித் துள்ளிக் குதித்தனர்.

"இந்தச் சத்தமொன்றே போதும், பலாலி முகாமில் இருக்கிற ஆமிக்காரனுக்கு வயிற்றைக் கலக்கி காற்சட்டையோடு போயிருக்கும்.'' என்றான் அவரது மூத்த பையன். அதைக் கேட்டு நாமெல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம்

அவை இந்திய விமானங்கள் என்பதை அறியாத பலர், சிறீலங்காவின் குண்டு வீச்சு விமானங்கள் என்று அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் ஓடியவர்களும், நிலத்திலே குப்புற விழுந்து படுத்துக் கொண்டவர்களுமாக அல்லோல கல்லோலப் பட்டனர். அனைவருக்கும் உண்மை தெரிந்ததன் பின்னர் ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கின்றதே ... அப்பப்பா ! அதை விபரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ..!

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்று இரவு எவருக்குமே தூக்கம் வரவில்லை. இந்தியப் பிரதமரும், சிதிலங்கா ஜனாதிபதியும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்..... வீம்பு காட்டிய சிறிலங்கா இந்தியாவுக்கு பணிந்தது. அரசியலில் கிழட்டு நரி என்று பெயர் பெற்ற ஜே. ஆரின் தந்திரம் எதுவும் இந்தியாவிடம் பலிக்கவில்லை. கடைசியில்தமிழருக்கு பாதுகாப்பளிக்கஇந்திய இராணுவம் இலங்கை மண்ணில் காலடி வைத்துவிட்டது

கொழும்புக்கும், பலாலிக்குமாக இரவிரவாக விமானங்கள் பறந்து கொண்டே இருந்தன. என் சிந்தனையில், "எம். ஜி.ஆர் வாளோடு கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்த கதை, சேது அணை நிரவும் அண்ணாவின் பேச்சு எல்லாம் வந்தன, அவையெல்லாம் நனவாகிவிட்டது போன்ற ஒரு நம்பிக்கை பங்களாதேஷுக்கு விடு தலை பெற்றுத்தந்தது போன்ற பாணியில் ஈழத் தமிழருக்கு இந்தியா விடுதலை பெற்றுத் தரப் போகிறது என்ற மகிழ்ச்சி. நல்ல காலம்! என் கணவரின் ஆலோசனையை ஏற்று நான் கொழும்புக்குச் சென்றிருந்தால் ..! இந்தக் காட்சிகளை எல்லாம் கண்டிருக்க முடியுமா..... ?

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெள்ளையரின் இராணுவங்களையும் அவர்களோடு வந்த காப்பிலிகளை (நீக்ரோ)யும் பற்றி எனது பாட்டி இப்பொழுதும் கதை கதையாய் சொல்லும் போது, அவர்கள் எல்லாம் அந்த யுத்த காலத்தின் சாட்சிகள் என்று ஆர்வத்தோடு பார்ப்போம். எங்களது பேர மக்களின் காலத்தில் இந்த வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் பெருமையோடு சொல்வதற்குரிய கண்கண்ட சாட்சிகள் நாங்கள் தானே ...!

இந்திய இராணுவம் இங்கு வந்ததும் இலங்கை இராணு வத்தின் கொட்டம் அடங்கி விட்டது இதில் இன்னுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால் 'புலிக் கொடி 'யை தங்களின் வாகனங்களில் கட்டிக்கொண்டு இந்திய இராணுவம் திரிந்தமைதான். இந்தக் காட்சிகள்யாவும் சிறீலங்கா படையினருக்கு புண்ணிலே புளியைப் பிழிந்து விட்டது போன்று மன எரிவைக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

எங்கும் 'இந்திய அமைதிப்படையின் மயமாக இருந்தது. நாங்கள் போய் வந்திராத மூலைமுடுக்குகள் - சந்து பொந்துகளில் எல்லாம் அமைதிப்படை வீரர்கள் நுழைந்து வந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போது உறவினர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு.. அவர்களோடு பேசும் போது உறவினருடன் பேசுவது போன்ற ஒரு கனிவு!

கவச வாகனங்களிலும் ஜீப் வண்டிகளிலும் அவர்கள் வீதிகளில் செல்லும் போது பெரியவர்களும் சிறியவர்களும் ஏன் சிறுமிகள் கூட நட்போடு கையசைத்துச் சிரிப்பார்கள். அவர்கள் கூட அப்படியே.

ஒரு நாள் சுதுமலைக்கு ஜீப் வண்டிகள் - கவச வாகனங்கள் சங்கிலிச் சக்கரங்கள் கொண்ட டாங்கிகள் அணி வகுத்துச் சென்று, திரும்பும் வரையில் வழிநெடுக மக்கள் நின்று கையசைத்து ஆர்ப்பரித்தார்கள். அவர்களும் அப்படியே! அன்று மிஸிஸ் சிவபாதமும் பிள்ளைகளும் அவர்கள் வெளிவாசலுக்கே வந்து நின்று, கையசைத்து மகிழ்ந்த காட்சி..... இன்னும் என் கண்களுக்குள் நிற்கின்றது.

அமைதிப்படையின் வரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் கலகலப்பாகி விட்டது. நாங்கள்கூட, மீண்டும் கே.கே.எஸ். இற்கு திரும்புவதென்று தீர்மானித்துவிட்டோம். மீண்டும் அதே வீட்டில் சென்று குடியமர்ந்தோம்.

அந்தப் பரந்த காணியும் - காணி நிறைந்த மாஞ்சோலையும்- நன்னீர்க் கிணறும் எம்மை வரவேற்று புது வாழ்வு கொடுத்தன. சிறீலங்கா இராணுவம் வருகிறது என்ற செய்தியை கேட்ட மாத்திரத்திலேயே காத தூரம் ஓடி ஒளியும் நானும் பிள்ளைகளும் அமைதிப்படை வீரர்களோடு நட்புரிமையோடு பழகினோம். அவர்களது புரியாத மொழியை புரிந்துகொள்ள - புரியவைக்க மேற்கொள்ளும் அபிநயங்களும் அவர்களுக்கு எப்படிக் கூறியும் அவர்கள் புரிந்து கொள்ளாத நிலையில், அலுப்புற்றுத் தமிழில் அவர்களை நாங்கள் திட்ட, அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்கும் சம்பவங்களும் எம்மிடையே நிகழும் நகைச்சுவை நாடகங்களாகும்.

யாழ்ப்பாணத்தில் என்ன, சுன்னாகத்தில் என்ன, கே.கே.எஸ் இல் என்ன கடை வீதிகளில் எல்லாம் அமைதிப் படையினர் ... ! இவர்கள் கடைகளில் நுழைந்தால் கடைக்காரர்களும், இவர்களும் ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளில் பேரம் பேசுவதிலேயே மணித்தியாலங்கள் கழியும். எம்மைப் போன்றவர்களை வரவேற்று, வியாபாரம் செய்வதற்கு எமது கடைக்காரர்களால் முடியாதிருக்கும்.

வீதி ரோந்து வரும்போது இருவர் இருவராக வருவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் பீடி பற்ற வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது அந்தச் செய்கை கூட விசித்திரமாகத்தான் தோன்றியது.

எங்கள் வீட்டைத்தாண்டி வீதியால் போகும் எல்லா அமைதிப்படை வீரர்களுக்கும் எங்கள் மா மரங்களின் மேல் ஒரு கண். சிலவேளை எங்கள் அனுமதியுடனும் பல வேளைகளில் அனுமதி இல்லாமல் உரிமையுடனும் மாங்காய்களைப் பறித்து உண்பதுண்டு. அவர்களது அந்தச் செய்கை எமக்கு ஆத்திரம் ஊட்டுவதற்குப் பதிலாக அவர்கள் மீது ஒருவித இரக்க உணர்வையே தோற்றுவிக்கும்.

எங்களுக்காக தங்கள் தாய் நாட்டையும், மனைவி, மக்கள், உறவுகளையும் துறந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து இங்கு வந்திருக்கும் அவர்களுக்குக் கொடுப்பதில் நாம் என்ன குறைந்தா விடுவோம் என்று நினைப்பதுண்டு. இன்னும் ஒருபடி மேலாக அவர்கள் எங்கள் வீடுகளில் இப்படி நடந்துகொள்வது பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வது கூட உண்டு.

அவர்களில் ஒருவன் அடிக்கடி அவ் வீதியால் வருபவன். அவன் அடிக்கடி வருவதால் அவன் முகம் பரிச்சயமாகி விட்டது. ஏன்......? எங்களுக்குள் ஒருவித நட்புக் கூட உதயமாகி விட்டது. அவன் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவனாம். ஏதோ ஒரு சர்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனுக்கு குஜராத்தி தாய் மொழியாய் இருந்தும் கூட, நன்கு தமிழில் பேசினான்.

ஆனால். தூய தமிழ் நாட்டு உச்சரிப்பல்ல.மலையாளம் கலந்த தமிழ். அவன் வரும் போதெல்லாம் என்னுடன் - பிள்ளைகளுடன் - பாட்டியுடன் சிறிது நேரம் ஏதாவது பேசிவிட்டு, கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டோ அல்லது, மாங்காய்கள் பறித்துக்கொண்டோ தான் செல்வான்.

ஒருமுறை அவனோடு வந்த இன்னொருவன் கிணற்றிலே தண்ணீர் அள்ளிச் சரித்துக் குடித்து விட்டு மீதித் தண்ணீரை, வாளியோடு சரித்து மீண்டும் கிணற்றினுள்ளேயே ஊற்றிய போது, அவன் செய்கை விசித்திரமாகவும் ஒரு வகையில் அருவருப்பாகவும் இருந்தது. அவனது அந்தச் செய்கையைச் சர்மாவிடம் சுட்டிக் காட்டினேன். அவன் ஏதோவொரு மொழியில் அவனுடன் பேசினான். அவன் ஏதோ ஒரு பதில் சொன்னான். இவனும் சிரித்துக் கொண்டே மீண்டும் ஏதோ சொன்னான் ....! அவனும் சிரித்தான்.... பிறகு சர்மா அவனது செய்கைக்கான விளக்கம் சொன்னான்.

"இந்தக் கிணற்றுத் தண்ணீர் கற்கண்டு போல அருமையாக இருக்கிறதாம். இவனுடைய ஊரில் தண்ணீரே கிடைக்காதாம். தண்ணீருக்கே பல கிலோமீற்றர் போக வேண்டுமாம். அதனால்இந்த நல்ல தண்ணீரை வெளியே கொட்ட மனமில்லாமல் மீண்டும் கிணற்றுக்குள்ளேயே கொட்டியிருக்கிறான். அதுதான் நான் சொன்னேன் .... நம்ம ஊர்போல இல்லை யாழ்ப்பாணம். நீ இனி இப் படிச்செய்யாதே! தண்ணீர் எவ்வளவு எடுக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு நல்லது. புதுத் தண்ணீர் ஊறும். நீ வெளியே எடுத்த தண்ணீரை மீண்டும் கிணற்றுக்குள் கொட்டுகிறது, இங்கு அசிங்கமான செயல் என்று விளக்கம் சொன்னேன்" என்று சிரித்தபடியே கூறினான்.

இன்னுமொரு விடயத்தையும் கூறினான். உண்மையிலேயே, யாழ்ப்பாணத்து மக்களையும் அவர்கள் வசிக்கின்ற வீடு வாசல்களையும் பார்க்கும் போது தங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதாம்......! சாதாரண ஏழை கூட வசதியான வீடுகளில், பரந்த காணிகளில் வாழுகின்றதைப் பார்க்கும் போது இது ஒரு செல்வந்த நாடாகவே தனக்குப் படுகின்றது. இப்படிப்பட்ட - பெரிய வசதியான வீடுகளை இந்தியாவில் ஒரு கிராமத்தில் கூட ஒன்று சேர்ந்தாற்போல காண முடியாது அங்கே எல்லாம் பெரிய மாளிகை - பக்கத்தில் சேரிக் குடிசைகள். ஒன்றுக்கொன்று முரணாகவே இருக்கும் என்று தன் மனதிலே பட்டதைக் கூறினான் .....!

நாளடைவில் அவன் மட்டில் எமக்கிருந்த பயம் அறவே நீங்கிவிட்டது. எதையும் துணிந்து கேட்கலாம் என்ற அளவிற்கு நட்பு வளர்ந்து விட்டது

இந்திய அமைதிப்படை வந்த நாள் முதல், எங்கள் வைத்தியசாலையில் உள்ள விசயம் தெரிந்தவர்கள் சிலர் பேசிக்கொண்டவை என் காதுகளில் விழுந்தன அது பற்றி 'என்றாவது ஒரு நாள் அவனிடம் நேரடியாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும்' என நான் நினைத்தேன்

"இந்தியா, அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது, தமிழர்கள் மீதுள்ள அன்பினாலோ, தமிழர் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற கரிசனையினாலோ அல்ல. தமிழர் போராட்டங்களை அடக்கு வதற்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, சிறீலங்கா அரசின் அனுமதியுடன் - இந்தியாவின் எதிரி நாடுகளில் ஏதாவது ஒன்று இலங்கைக்குள் காலடியெடுத்து வைத்துவிட்டால் அது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடும் என்பதற்காகத் தான். உதாரணமாக, பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது அமெரிக்காவோ இஸ்ரேலோ ஏதாவது ஒன்று இங்கு தளம் அமைத்து விட்டால் அது இந்தியாவிற்கு ஆபத்தாகி விடும் என்பதனால் அந்த நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான், தமிழர்களுக்கு உதவி செய்வதாக வலிந்து வந்து உள் நுழைந்துள்ளார்கள் ..... ! " என்ற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு என்பதை அவன் வாயினால் அறிய விரும்பினேன். அதைக் கேட்டும் விட்டேன்.

நான் சொன்னதைக் கேட்டு, அவன் இதழ்களில் ஒரு வித சிரிப்பு மலர்ந்தது.  யாழ்ப்பாணத்து ஆளுங்கள் ரொம்ப படிச்சவங்க. இப்படியெல்லாம் சிந்திக்கிறதிலை தப்பில்லை. ஆனால், இந்தியாவில இருந்து நாம புறப்பட முந்தி நம்ம ஆளுங்களுக்கெல்லாம் சொல்லப்பட்டது இது தான்... சிறீலங்காவில தமிழர்களை சிங்களவங்க கொலை பண்றாங்க - தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறாங்க. அவங்களை காப்பாற்றுகிறத்துக்காக தான் நம்ம அமைதிப்படை போகுது, அப்பிடின்னு சொல்லி அனுப்பி இருக்காங்க....!" என்றான்.

நான் அந்த நாளில் கேள்விப்பட்ட எம். ஜி. ஆர், அண் ணாத்துரை ஆகியோரின் விடயங்கள் மீண்டும் நனவாகி விட்ட உணர்வு எனக்குள் ! அந்த அமைதிப்படைச் சிப்பாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நான் சத்திய வசனங்களாகக் கொண்டேன். அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அவனுடைய சொந்த மாநிலம் குஜராத். அது சத்தியத்தின் படி, சத்தியத்துக்காக வாழ்ந்து காட்டி, 'சத்திய சோதனை ' தந்த மகாத்மா பிறந்த மாநிலம். ஆகையால், அந்த மண்ணில் இருந்து வந்த இந்த சர்மாவின் வசனங்கள் கூட சத்தியமாகவே இருக்கும் என்று நம்பினேன்.

இன்னுமொரு நாள் அவனிடம் கேட்டேன். "ஏனப்பா எங்கடை கடைகளில் எல்லாம் உங்கடை ஆட்கள் தானே மொய்த்துக் கொண்டிருக்கிறாங்க ... ! எங்கடை ஆட்கள் இந்தியாச் சாமான்கள், சாறிகள் வாங்க உங்கடை நாட்டுக்குப் போகினம். நீங்கள் என்னடா எண்டால் எங்கட நாட்டில சாமான் சாமானாக வாங்கிக் குவிக்கிறீங்க ..."

அதற்குக் கூட அவன் சிரித்துக் கொண்டு தான் பதில் சொன்னான்." நெசம் தாங்க. நம்ம நாட்டில ஓண் புறொ டெக்ஷன்ஸ்' எல்லாம் இந்தியத் தயாரிப்புகள் தான். ஆனா உங்கட நாட்டில எல்லாமே ஃபாறின் புறொடெக்ஷன்ஸ். நம்ம நாட்டில ஃபாறின் சாமானுக எல்லாம் வாங்க முடியாது • Buy Indian Be Indian' என்கிறதுதான் நம்ம பாலிசி. ஆமா, கண்ணில படக்கூடிய இடம் பூரா, ஏன் வண்டிகளில் கூட 'Buy Indian Be Indian' அதாவது, 'இந்திய உற்பத்திகளை வாங்கி இந்தியனாகவே வாழு' அப்படின்னு எழுதி வைச்சிருக்கிறாங்க....... என்று கூறி, அவன் மேலும் ஒரு வசனத்தையும் சேர்த்துக் கூறினான். "நம்ம பாலிசி Buy Indian Be Indian என்கிற மாதிரி. உங்க பாலிசி 'Belive Indian', அமாங்க இந்தியாவை -இன்டியன்சை இன்டியா உங்களுக்காக எடுக்கிற நல்ல முயற்சிகளை இலங்கைத் தமிழ் ஆளுங்க நம் பணும்.'Belive Indian' 'என்றான்.

" அந்த நம்பிக்கையைத் தானேயப்பா இது வரையில் நாங்க உங்க மேலே வைச்சுக் கொண்டிருக்கிறம்." என்று கூறியதற்கு அவனது பதில், 'அச்சா" என்று ஒலித்தது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரிதாபகரமான நிலையில் உள்ள எத்தனையோ நோயாளிகளைத் தினமும் காண்கின்றோம். ஆனால், நம் ஊர்க்காரர் - நமக்கு அறிந்தவர்கள் என்று யாரும் வரும் போது ஏற்படுகின்ற அனுதாப உணர்வும், அக்கறையும் சற்று அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட உணர்வு தான் திபோவின் மீது எனக்கு. திபோவுக்கு இந்தப் பரிதாபம் நிகழும் முன்னர், டொக்ரர் விஸ்வரஞ்சன் சிறீலங்கா படையினரால் கொல்லப்படுமுன்னர் இந்தியப் படை வந்திருக்கக் கூடாதா..? என்று எண்ணிக் கொள்வேன். இப்பொழுது எடுத்த நிலைப்பாட்டை இந்தியா எப்பொழுதோ எடுத்திருக்கலாமே எனக் கவலைப் பட்டேன்.

Belive Indian' என்ற சர்மாவின் வாசகங்கள் என் மனதில் தெம்பை ஊட்டி இருந்தன. இது பற்றி திபோவிடமும் அவன் மனைவியிடமும் சொல்லிக் கவலைப் பட்டிருக்கின்றேன். என்னுடன் வேலை செய்பவர்களுடனும் பேசியிருக்கின்றேன். என்னுடன் வேலை செய்பவர்களில் சிலர் என்னவோ எனது நம்பிக்கையை சரியென்று ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.

அமைதிப்படை. இலங்கைக்கு வந்தது எதற்கு ....? சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் உண்மையான அமைதியை ஏற்படுத்தி, தமிழர்களை நிம்மதியாக - கௌரவமாக வாழ வைக்கவா? அல்லது தமிழ்ப் போராளிகளை அடக்கி நிராயுதபாணிகளாக்கி சிங்கள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் அமைதியை நிலை நாட்டலாம் என்பதாலா...? இந்தச் சந்தேகம் நாளடைவில் கூடிக் கொண்டே வந்தது.

"தன் எஜமானின் வீட்டிற்குள் திருட வருகிறவனை ஆவேசமாக குரைத்துக் கடித்துத் துரத்தப் போராடிக் கொண்டிருக்கும் விசுவாசமான நாயை, பக்கத்து வீட்டுக் காரன் தடவிக் கொடுத்து அதன் கழுத்தில் சங்கிலியை மாட்டி, வாய்க்கு ஒரு கடிவாளத்தையும் போட்டு திருட வருகிறவர் கையில் ஒப்படைக்கும் செயலைப் போன்றது அமைதிப் படையின் நடவடிக்கை." என்று உடனூழியர் ஒருவர் சொன்னது உண்மையாக இருக்குமோ ......? என்று கூட எண்ணத் தோன்றியது.

தமிழ் மக்களைப் பட்டினிச் சாவில் நின்று மீட்கக் கப்பலில் வந்தும், ' ஒப்பரேசன் பூமாலை' என்று விமானம் மூலம் வந்து உணவுப் பொட்டலங்கள் போட்டும் உள் நுழைந்த இந்தியா இப்பொழுது 'அரசியல் நரியின் வலையில் சிக்கி தமிழர்களுக்கு எதிராக அதன் துப்பாக்கி முனைகளை நீட்டுவது போல இருந்தது. எது எப்படியோ * இலங்கையில் தனது காலைப் பதிப்பது ' என்ற நோக்கம் நிறைவேறிய பின் அது, நிரந்தரமாக ஊன்றப் படுவதற்கு சிறுபான்மை மக்களோடு நிற்பதை விட பெரும்பான்மையினரின் பக்கம் சேர்ந்து நிற்பதே நன்மை பயக்கும் என்று எண்ணியது போலும்!

இந்தியா தமிழர் பக்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதை உணர்த்தவும், தமிழர் பாதுகாப்புக்கு வேண்டிய உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஐந்து அம்சக் கோரிக்கையை முன் வைத்து 'திலீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினான்.

சிறீலங்காவைப் பொறுத்த வரையில் அகிம்சை மதமாகிய பௌத்தத்தை தேசிய மதம் என்று கூறிக்கொண்டிருந்தாலும் கடந்த நாற்பது ஆண்டுகளாக இரத்தப் பலி கொள்வதையே அரசு தர்மமாகக் கொண்டிருக்கின்ற படியால் அவர்களுக்கு ஆயுதத்தால் பதில் சொன்னால் தான் விளங்கும். ஆனால், இந்தியா அப்படியல்லவே! இந்திய சுதந்திரப் போராட்டமே அகிம்சை வடிவம்தானே ! அப் போராட்டத்தின் மூல வேரான காந்தி அகிம்சையைத் தவிர வேறு எதுவுமே அறியாதவராயிற்றே! தனது ஆச்சிரமத்தில் தவறு செய்தவர்களைத் திருத்துவது முதல் நவகாளிக் கலவரம் வரை அவர் கையாண்ட ஆயுதம் அகிம்சை, உண்ணாவிரதம் தானே! 'ஜாலியன் வாலா பார்க்'கில் கொலை வெறியாடிய அந்தப் பிரிட்டிஷ்காரனையே புறங்காட்டி ஓடவைத்தது இந்தியா கையாண்ட அகிம்சைப் போர் தானே ! அப்படியிருந்தும் இங்கு நடந்த தென்ன. பன்னிரண்டு நாட்கள் தண்ணீர் கூட அருந்தாது உதிரம் வற்றி, உடல் வற்றி, உணர்வுகள் வற்றி அந்த இளைஞன் குடல் சுருங்கி மாண்டானே ! இந்தியா அவனைச் சாகவிட்டதே! அவனது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அவனைச் சாகடித்தார்களே! அவர்கள் சாகடித்தது அவனையல்ல, இந்தியாவின் ஆத்மாவை  தர்மத்தை…. என்று தான் நான் எண்ணத் தொடங்கினேன்

சுமார் மூன்று மாதங்கள் நிலவிய அமைதி நிலையில் ஒரு தளம்பல் - பதற்றம் தொடங்குவதைக் காணக் கூடிய தாக இருந்தது.

அடுத்த சில தினங்கனில் கடலிலே கைது செய்யப்பட்டனர் பதின்மூன்று போராளிகள். இந்திய அமைதிப்படையால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. சிறீலங்காப் படையின் பிடிவாதத்துக்கு விட்டுக் கொடுத்து அந்தப் போராளிகளைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க முடியாது தவித்தது. இந்த நிலையில் அவர்கள் பதின்மூன்று பேரும் தமது உயிரினும் மேலான இலட்சியத்தைக் காத்துக்கொள்ள சயனைற் குப்பியைக் கடிக்கின்றார்கள். அவர்களது உயிர் பிரியுமுன்னரே, சிறீலங்கா இராணுவம் அத்துமீறி கண்ணாடிகளை உடைத் துக் கொண்டு உள்ளே சென்று துப்பாக்கி முனையின் கத்திகளால் குத்தியும் அடித்தும் கொலை செய்கின்றது. இந்திய அமைதிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் நடைபெற்ற அந்தக் கொடூரத்தைத் தடுக்க அவர்களால் முடியவில்லை. கொலையுண்ட போராளிகளில் ஒருவரான குமரப்பாவின் திருமணம் இந்தியப்படை வந்த பின்னர் தான் நடந்தது.சில இந்திய அதிகாரிகள் கூட அதில் கலந்து கொண்டார்கள். அந்த மணமகன் அவர்களது கட்டுப்பாட்டின் உள்ளேயே சிறீலங்கா சிப்பாய்களால் கொலை செய்யப்படுகின்றான்.

அந்தப் பதின்மூன்று தியாகிகளதும் பூதவுடல்கள் ஒன்றாக தீருவிலில் தீயுடன் சங்கமமாகின்றது மூன்று மாதங்களாக ஓய்வு பெற்றுக் கொண்டிருந்த உணர்வுகள் உறுதியுடன் நிமிர்கின்றன. உதிரம் புது வேகத்துடன் நரம்புகளில் ஓடத் தொடங்குகின்றது. அமைதிப்படை கொண்டு வந்த அமைதி அஸ்தமித்து விட்டது.....

எங்கும் குழப்பம் அணைக்க வந்த கரங்கள் ..... நேசத்துடன் நீட்டி வந்த கரங்கள் நெருப்பு உமிழத் தொடங்குகின்றன.

யாழ்ப்பாணம் மீண்டும் எரியத் தொடங்கி விட்டது !

இரத்தம் தோய்ந்த நிலையில் 'காயப்பட்டவர்களால் வைத்தியசாலை நிறையத்' தொடங்கி விட்டது. ஓய்ந்த துப்பாக்கிகளின் முழக்கங்கள் எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. சிறீலங்காப் படையினரின் நடவடிக்கைகளின் போது இருந்ததைவிட நிலைமை மிகக் கொடூரமாக இருந்தது.

தமது முகாம்களில் இருந்தபடியே சிறீலங்கா படையினர் எறிகணை வீசி எம்மவர்களைப் பலி கொண்டார்கள். ஆனால், அமைதிப்படையோ எமக்குள்ளே இருந்து கொண்டே எமது வீதிகளில், எமது இல்லங்களில் நட மாடிக் கொண்டே கொன்று குவித்துக் கொண்டிருந்தது.

எமது வைத்தியசாலையின் தாதிகள் பயிற்சிக் கல்லூரிப் போதனாசிரியரான கதிர்காமதாசின் உடலைக் குண்டு சிதைத்த நிலையை, முதன் முதலில் கண்ட போது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை என்னால் தாங்க முடியாதிருந்தது கதிர்காமதாசுடன் அவர் சகோதரியும் கணவனும் கூடக் கொல்லப்பட்டு விட்டார்களாம்......!

அடுத்தடுத்து..... கை கால் இழந்தவர்களாலும் உயிரற்ற உடல்களாலும் வைத்தியசாலை நிறையத் தொடங்கியது. வைத்திய சாலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் எந்த நேரமும் மக்கள் நிறையத் தொடங்கினர். காயமுற்றவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு அவர்களின் நிலைமையை அறிய மக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதா, அவர்களைப் பார்க்க வருபவர்களைக் கட்டுப்படுத்துவதா- வைத்தியசாலை ஊழியர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக இருந்தது.

இந்த நிலையில் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள் வீட்டுக்குச் செல்ல முடியாதிருந்தது. நான் கூட வீட்டுக்குப் போக முடியவில்லை. கடமை முடிய எங்கள் விடுதியிலேயே தங்கத் தொடங்கினேன்.கே. கே.எஸ் பக்கம் இராணுவ நடவடிக்கைகள் எதுவுமில்லை! சுன்னாகத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலேயே அசம்பாவிதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வீட்டுக்குப் போய் வருவதுகூட எனக்கு ஆபத்தாக அமையலாம். எனவே. நான் பாதுகாப்பாக இருப்பதுடன் இந்த வேளையில்தான் எனது சேவை வைத்தியசாலைக்குத் தேவை என்று உணர்ந்ததாலும் நான் வைத்தியசாலையில் தங்கி விட முடிவு செய்து கொண்டேன். பிரயாண வண்டிகள் கூட சீராகச் செயற்படவில்லை. சில ஊழியர்கள் தமது குடும்பங்களையே பாதுகாப்புக் கருதி வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். மக்களால் வைத்தியசாலை நிறைந்து வழிந்தது!

ஊரடங்குச் சட்டம் வேறு பிரகடனப் படுத்தப்பட்டு விட்டது! மக்கள் அனைவரும் நல்லூரை நோக்கிச் செல்லும்படி அமைதிப்படை ஆணை பிறப்பித்திருந்தது! இதுவரையில் வைத்தியசாலையில் மரணித்தவர்களின் உடல்களை உடனுக்குடன் எடுத்துச் செல்ல வந்து கொண்டிருந்த உறவினர்கள் வருவது கூட இந்நிலையில் நின்று விட்டது.

வைத்தியசாலையில் மரணித்தவர்களின் உடல்களால் அங்குள்ள சவச்சாலை நிறையத் தொடங்கியது. மின்சாரம் இல்லை. சவச்சாலையில் உடல்களை பாதுகாக்கக் கூடிய குளிர்சாதன அறைகள் இயங்கவில்லை. பிணங்கள் போட்டவை போட்டபடியே கிடந்து ஊதி - அழுகி - நாறத் தொடங்கின..!

சவச்சாலை அருகே உள்ள கட்டிடத்தின் மறு பகுதியிலேயே இரத்த வங்கியும் இருந்தது தேவையான இரத்தம் எடுப்பதற்குக் கூடப் போக முடியாத நிலை, வயிற்றைக் குமட்டும் பிணவாடை.

சவச்சாலையில் உள்ள பிணங்கள் அழுகி புழுக்கள் உற்பத்தியாகிவிட்டன. அவை அவ்வறையிலிருந்து கதவின் கீழ் இடை வெளிகளால் புறப்பட்டு, இரத்த வங்கியின் நடைபாதை வரை ஊர்ந்து வரத் தொடங்கி விட்டன. அவற்றை அகற்றுவதும், கிருமிநாசினி கொண்டு அவ்விடங்களை அடிக்கடி கழுவுவதுமாக இயங்க வேண்டியிருந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு நிமிட மும் காலம் தள்ளிக் கொண்டு நாங்கள் உயிர்த் தொண்டு செய்து கொண்டிருந்தோம்......

நான் சந்தித்த கொடூரமான - பயங்கரமான நாள் ஒக்ரோபர் 21.... ! அன்றைய தினம் ...

சூறாவளியின் வேகம் படிப்படியாக அதிகரித்து ஒரு சந்தர்ப்பத்தில் உச்ச நிலையை அடையுமல்லவா? அத்தகைய உச்ச நிலையின் நாள்தான் அன்றைய தினம். அமைதிப்படை புரிந்த பயங்கர வாதத்தின் உச்சக் கட்டமான நாள்….

‘அன்று காலையே மிகவும் பதற்றமாக இருந்தது. கோட்டைப் பக்கமாகவிருந்து வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. நேரம் செல்லச் செல்ல வைத்திய சாலையின் சுவர்களிலும் யன்னல் கண்ணாடிகளிலும் குண்டுகள் வீழ்ந்து சிதறின ! இது வரையில் நடந்திராத விபரீதம் எதுவோ நடைபெறப்போகிறது என்ற அச்ச உணர்வு எம்மையெல்லாம் பற்றிக் கொண்டது. அந்தச் சன்ன மழைக் கூடாகவும் காயப்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டேயிருந்தனர். நேரம் செல்லச் செல்ல இன்று அமைதிப்படை வைத்தியசாலைக்குள் நுழையலாம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

நோயாளர்களின் பெயர் விபரங்களைக் கூட கேட்டுப் பதிவுசெய்து கொள்ள முடியாத அளவுக்கு அவசரக் 'கேஸ்கள்.' ஒவ்வொருவருக்கும் வெறும் இலக்கங்களை மட்டும் கொடுத்து சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும், மருந்து கட்டும் பிரிவுக்குமாக அனுப்பிக் கொண்டிருந்தோம். ஸ்ரெச்சர்களும், சக்கர நாற்காலிகளும் வைத்தியசாலை வாசலுக்கும், சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும் நோயாளர் விடுதிக்குமாக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டேயிருந்தன.

நோயாளர் விடுதிகளெல்லாம் நிறைந்து வழிந்தன. படுக்கைகளில் இடமின்மையால் கட்டில்களின் கீழும், நடைபாதைகளிலும் நோயாளர்கள் படுக்கவிடப்பட்டனர். எந்தவொரு வைத்தியரோ, தாதியோ, ஊழியனோ ஓய்ந்திருக்கவில்லை. விடுதிகள் தோறும் இரத்தவாடை. வைத்தியசாலையின் பின்புறம் உள்ள சவச்சாலையிலோ பிண வாடை.

இருபத்தைந்தாம் இலக்க விடுதிக்குள் ஒரு பையன்- அவன் கூட காலில் குண்டு தாக்கிக் காயமுற்று அனுமதிக்கப்பட்டிருந்தான். இன்னும் அவன் எழுந்து நடமாடத் தொடங்கவில்லை. அவன் தோற்றத்தில் எனது மகனைப் போல இருந்ததாலோ என்னவோ அவன்மீது எனக்கு இனம் தெரியாத ஒரு பற்று. பூட்டப்படாத அவன் சேட்டின் இடைவெளியில் கறுப்பாக 'நாடா' தெரிந்தது. கறுப்பு ....! எனது மனம் என்னவோ சொல்லிற்று. நான் போராளிகளைக் கண்டிருக்கிறேன். கறுப்பு நாடாவில் தான் சயனைற் குப்பிகளைக் கட்டியிருப்பார்கள். ஒரு வேளை இந்தச் சிறுவனும் போராளியாக இருப்பானோ....? என்று சந்தேகம் எழவே, அவனருகில் சென்று உரிமையோடு சழுத்திலிருந்த நாடாவை வெளியே இழுத்தேன்.அந்த நாடா - அதில் கோர்க்கப்பட்டிருந்த சிலுவையோடு வெளியே வந்தது. அப்பாடா... ! என்று எனக்குள் ஒரு நிம்மதி. என்றாலும் முன்னெச்சரிக்கையாக நடக்க வேண்டுமென்ற முடிவுடன். "தம்பி ! நீ இந்த நாடாவைக் கழுத்தில் மாட்டியிருக்க வேண்டாம். வேண்டுமென்றால் சிலுவையை மட்டும் உன் சேட்டில் குத்திக் கொள்ளு." என்றேன்.

"ஏனக்கா......?" என்று அவன் வெகுளித்தனமாகக் கேட்டான். "இன்றைக்கு நிலைமை சரியில்லை, மோசமாய் இருக்கு. தற்செயலாக இந்தியன் ஆமி ஆஸ்பத்திரிக் குள்ளேயே வரக்கூடும். வாறவனுக்கு இது என்னவென்று நீ விளக்கம் கொடுக்கிறதுக்கு முன்னமே உன்னைப் போராளியென்று நினைத்துச் சுடக்கூடும். எதுக்கும் நீ முன்னேற்பாடாக, அந்தக் கறுத்த நாடாவைக் கழற்று" என்று கூறி நானே. அந்த நாடாவைப் பெற்றுக்கொண்டு வெளியே எறிந்து விட்டேன்.

அந்த வேளையில் திபோவின் மனைவி என்னிடம் வந்தாள். "மிஸி இந்தியன் ஆமி ஆஸ்பத்திரிக்குள்ளேயும் வரும் என்று கதைக்கிறாங்கள். எனக்கு என்ன செய்யிறது என்று தெரியவில்லை."

அவளுக்கு என்ன ஆறுதலைச் சொல்லுவது என்று எனக்கும் புரியவில்லை. மீண்டும் அவளே கேட்டாள் ......! "ஷெல் அடிச்சால் என்ன மிஸி செய்யிறது? இந்த ஏலாத மனிசனையும் கொண்டு நான் எங்கே போறது….?

"இஞ்சபார் தங்கச்சி, ஒருவர்க்கு ஒருவர் பாதுகாப்பு கொடுக்கக் கூடிய நிலையில் இப்ப யாரும் இல்லை! ஏதோ நாம் நம்மால முடிஞ்சதைச் செய்ய வேண்டியது தான். ஷெல் அடிச்சாலோ, பொம்மர் சுத்தினாலோ அநேகமாக எல்லோரும் 'எக்ஸ்றே' புளக்குக்குள்ள தான் போறது வழக்கம்." என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எக்ஸ்றே பிரிவு ஒன்று தான் பாதுகாப்பானது என்று நாம் எல்லோரும் நம்பியிருக்கும் இடம். ஏனென்றால் மேல் மாடிக்கு கீழே அமைந்திருக்கும் அப்பிரிவு, கட்டிடத்தின் மையத்தில் இருப்பதால் சுற்றிவரச் சுவர்கள். அச்சுவர்கள் கதிரியக்கத் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக உறுதியான முறையில் கட்டப்பட்டிருந்தன. எனவே துப்பாக்கிச் சூடோ, ஷெல்லோ நேரடியாக வந்து அதனுள்ளே நிற்பவரைத் தாக்கிவிடாது.  மிகவும் உறுதியான கட்டிடமும் கூட.

நண்பகலைத் தாண்டிய நேரம்...... ! 23 ஆம் இலக்க நோயாளர் விடுதிக்குள் எறிகணையொன்று விழுந்து வெடித்தது! அதனுள்ளே மரண ஓலங்கள் பயங்கரமாக எழுந்தன. இனி வைத்தியசாலைக்குள்ளும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது சில ஊழியர்கள் நிலைமை மோசமாவதைக் கண்டு பின் வழியாலேயே வெளியேறத் தொடங்கிவிட்டனர். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு யாருக்குத் தான் விருப்பம் இருக்காது...? ஏனையோர் எங்கள் பதவிகளுக்கான சீருடைகளை அணிந்து கொண்டோம்.

ஷெல் விழுந்த அந்தப் பிரிவில் இருந்து இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் வேறு பிரிவுக்கு மாற்றினோம். அந்த வேளையில் எங்கள் வைத்தியசாலைக் குடும்பம் இயங்கிய வேகம் எனக்கே மலைப்பைத் தந்தது!

எங்கள் பிரிவுத் தலைமைத் தாதி (மேற்றன்) மிஸிஸ் வடிவேலு அங்குமிங்கும் ஓடி ஓடிச் சுழன்றபடி எங்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். மின்சாரம் இல்லாதபடியால், சில அறைகளில் மெழுகுதிரி பற்றவைத்தே சில அலுவல்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது கையில் எப்பொழுதும் மெழுகுவர்த்தி இருந்து கொண்டேயிருக்கும். அன்றும் கூட அவர் அப்படித்தான். மெழுகுவர்த்தியோடு 'கந்தசஷ்டிக் கவசத்தையும்' வைத்திருந்தார். மறுகையில் தாதிகள் பதிவேடு.

ஓயாத வேலைக் களைப்புடன் பசி வேறு குடைந்து கொண்டிருந்தது. நேரம் பிற்பகல் மூன்றைத் தாண்டி விட்டது.  வடிவேலு மிஸி என்னைத் தன்னுடன் வரும்படி அழைத்தார். அவரது அலுவலக அறைக்குள் சென்றோம். “எனக்குச் சரியாய்ப் பசிக்குது. இந்தா! இதிலை நீயும் சாப்பிடு." என்று தான் கொண்டு வந்திருந்த சோற்றில் எனக்குப் பங்கு தந்தார். எனக்கும் கடும பசி. சாப்பிட வேண்டும் போல் இருந்தது. நான் மறுக்காமல் ஏற்றுக்கொண் டேன்.

அந்த வேளையில் தான் அவர் சொன்னார். "எனக்கென்னவோ பயமாய் இருக்கு மிஸ். இவர்கள் பங்களா தேஷிலை கைப்பற்றின இடங்களில் எல்லாம் நல்ல மாதிரி நடக்க இல்லையாம். இவர்கள் இப்ப நடந்து கொண்டிருக்கின்ற மாதிரிக்கு .... நாளைக்கு எங்களையும் என்ன செய்வாங்களோ தெரியாது !'"

இதைக் கூறும்போது அவருடைய கண்களில் பீதி தெரிந்தது. தனது ஒரே காப்பாக தெய்வத்தைத்தான் நம்பினார். அதனாற்தான் அந்தக் 'கந்தசஷ்டிக் கவசம்" நூலை இறுகப் பற்றிக் கொண்டிருந்தார்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் கடமைக்காக எழுந்தோம். அப்பொழுது மணி பிற்பகல் நான்கிருக்கும். துப்பாக்கி வேட்டொலிகள் மிக அண்மையில் கேட்டன. சன்னங்கள் நாம் இருந்த கட்டிடத்தின் சுவர்களில் மோதுவதை உணர்ந்தோம். யன்னல் கண்ணாடிகள் நொருங்கிக் கலீர் கலீர் என விழுந்தன.

அவர்கள் வைத்தியசாலையின் சுற்று மதில்களுக்கு வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டோம், இனி நாம் மற்றவர்களையல்ல - எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டம்.

நானும் வடிவேலு மிஸியும் எப்பொழுது பிரிந்தோம் எப்படிப் பிரிந்தோம் என்றே எனக்குத் தெரியாது. நான் எக்ஸ்றே பிரிவை நோக்கி ஓடினேன். ஏதாவது ஒரு அறையில் நுழைந்துவிட வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. எக்ஸ்றே பிரிவின் முன்கூடம்அதற்குள் ஏற்கனவே நோயாளர்கள் ஊழியர்கள் என்று முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்களில் சக்கர நாற்காலிகள் ஸ்ரெச்சர் நோயாளிகள் எனப் பல தரப்பட்டவர்களும் நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது துப்பாக்கி வேட்டொலிகள் வைத்திய சாலைக்கு உள்ளேயும் கேட்டன. அத்தோடு ஓடிவரும் பூட்ஸ் கால் ஓசைகளும், என்னால் புரிந்து கொள்ள முடியாத மொழியில், "காச்சா பூச்சா" வென்று ஏதோ உளறிக் கொண்டு வெறி கொண்டவர்கள் போல் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எமது சீருடையிலேயே இருந்தோம்.

எக்ஸ்றே பிரிவினுள் குழுமியிருந்த சனக்கூட்டத் தைக் கண்டதும் அவர்கள் வெறி அதிகமாகிவிட்டது போலும். எங்களை நோக்கிச் சுட்டார்கள். சுற்றிவர சீமெந்து சுவர்களால் அடைக்கப்பட்ட அந்தக் கூடத்தினுள் துப்பாக்கிச் சத்தமும் பயங்கரமான ஓலங்களும் சேர்ந்து கோரமாக ஒலித்தன !

சூடுபட்டவர்களோடு படாதவர்களும் நிலத்தில் வீழ்ந்து படுத்தோம். எல்லாரும் நீட்டி நிமிர்ந்து படுக்க முடியாத அளவுக்கு குறுகிய மண்டபம் அது. அதனால் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்தோம். நான் மாடிப் பக்கமாக சுவரோடு ஒட்டினாற் போல விழுந்தேன். என்மீது யார் யாரோ விழுந்தார்கள் ...... எவர் என்று தெரியவில்லை. என்னால் மூச்சு விடக் கூட முடியவில்லை. கீழே விழுந்து படுத்து விட்டவர்களைக் கூட, அவர்கள் உயிரோடு விட்டு விடும் நோக்கமில்லை. மாடிப்படிகளில் ஏறி நின்று கொண்டு விழுந்து கிடந்த மக்கள் கும்பல் மீது கைக்குண்டுகளை ( கிரனைட் ) எறிந்தார்கள். அந்தக் குண்டு வெடிப்புக்கள் பயங்கரமாக இருந்தன. கட்டிடமே ...... நொருங்கி விழுவது போன்று இருந்தது. எங்கெல்லாம் முனகல், அழுகைச் சத்தம் கேட்டதோ அங்கெல்லாம் சுட்டார்கள்.

ஓ ..! அந்தக் கால தேவனின் கோரத் தாண்டவக் கோலக் காட்சிகளை எப்படி நான் கூற முடியும்...... ? எங்கும் மரண ஓலம் தான். சுற்றிவர இருந்த சுவர்களிலும், எமது தலைக்கு மேலே இருந்த மேன்மாடித் தளத்தினிலும் இரத்தச் சிதறல்களும், சதைத் துண்டுகளும் தெறித்து ஒட்டிக் கொண்டு இருந்தன.

இந்தக் கூடம் எங்கணும் வெடி மருந்தின் நாற்றம். புகை ... எனக்கு மூச்சு முட்டியது ! எனக்கு மேலே யார் விழுந்து கிடக்கின்றார்கள். அது ஆணா, பெண்ணா என்று கூட என்னால் உணர முடியவில்லை. ஆனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சுவாசிக்கக் கஷ்டப்படுகின்றார். ஆமாம்... உயிரோடு போராடிக் கொண்டிருக்கின்றார் என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது.

என் உடம்பில் ஒருவித நோவும் இல்லாதபடியால் அதுவரையில் எதுவித காயமும் எனக்கு இல்லையென் பதை உறுதி செய்து கொண்டேன். எனக்கு மேலே வீழ்ந்து கிடப்பவர் பலத்த காயத்திற்கு ஆளாகி இருக்கிறார். அவரது வயிற்றிலோ, நெஞ்சிலோ பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. அவரது உடம்பிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இரத்தம் என்மீதும் ஊறிப் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. என்மீது அவரது உடல் கிடப்பதால் எனது உடல் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது ......!வெடிச்சத்தங்கள் அடங்க வெகு நேரமாகி விட்டது. பகலிலேயே இருட்டாக இருக்கும் அந்தக் கூடம், இப் பொழுது கடுமிருட்டாக இருந்தது. நேரம் என்னவென்று கூட உணர்ந்து கொள்ள முடியவில்லை. மரண ஓலங்களும், முனகல் ஒலிகளும் படிப்படியாகக் குறைந்து அடங்கி விட்டன. ஆனால், அந்தக் கூடத்தின் ஒரு மூலையில் குழந்தையொன்று விடாது தொடர்ந்து அழுது கொண்டேயிருந்தது. அந்தக் குழந்தை யார் ? ஏன் அழுகிறது...? எங்கிருந்து அழுகிறது. என்பதை என்னால் உணர முடியவில்லை. ஆனால் அந்தக் குழந்தைக்குரியவளும் இந்தக் கும்பலுக்குள் விழுந்து கிடக்கிறாள் என்பது மட்டும் உண்மை. ஒன்றில் அவள் பிணமாகி விட்டாள் அல்லது அழுகின்ற அக் குழந்தைக்கு ஆறுதலளிக்க, அரவணைக்க அசைந்தால், தான் உயிர் தப்ப முடியாது என்ற அச்சத்தில் பிணங்களோடு பிணமாக நடித்துக் கொண்டு கிடக்கிறாள் போலும்!

அந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்டு எனது பெற்ற மனம் துடித்தது. அது ஏன் அழுகின்றது......? பசியால் அழுகின்றதா... ! ? எங்கும் இருட்டாக இருக்கின்றதே...... அம்மாவைக் காணவில்லையே என்று பயத்தால் அழுகின் றதா......? அல்லது அதற்கும் ஏதாவது காயம் ஏற்பட்டு வேதனையால் அழுகின்றதா...... ? எப்படியிருந்தாலும் அதற்கு ஆறுதல் அளிக்க அந்த நிமிடத்தில் யாருமில்லை! சிப்பாய் ஒருவன். மேல் மாடியில் இருந்து வந்து அந்தப் பக்கம் மின்பொறி விளக்கின் ஒளியைப் பாய்ச்சி நோட்ட மிட்டுத் திரும்பவும் மேலே ஏறிச் சென்றான். அக் குழந் தையை அவன் கொல்லாமல் விட்டதே பெருங் காரியம்.....!

நேரம் செல்லச் செல்ல அக் குழந்தையின் குரல் படிப் படியாக அடங்கி விட்டது. அழுத களைப்பால் தூங்கி விட்டதா? அல்லது அதற்கு ஏற்பட்ட காயத்தால் இரத்தம் வெளியேறிப் படிப்படியாக மயங்கி இறந்து விட்டதா...? என்று தெரியவில்லை. அதன் பிறகோ, மறுநாளோ அக் குழந்தையைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அடிக்கடி மின்பொறி விளக்குடன், அங்கு கிடக்கும் பிணங்களை தமது பூட்ஸுகளால் ஏறி மிதித்துக் கொண்டு திரியும் சிப்பாய்களின் காலடிச் சத்தத்தையும்...... இடையிடையே அவர்கள் ஏதோ பேசிக் கொள்ளும் குரலையும் தவிர வேறு எதுவித சப்தமுமே இல்லை!

எனக்கு மேலே கிடந்தவர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் கிடப்பவர் இறந்துவிட்டாரா, அல்லது அவரும் என்னைப் போன்று பிணமாக நடிக்கின்றாரா என்று கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கூடத்தில் சிறு சத்தம் போட்டாலும் எதிரொலிக்குமே...... ! அப்படியிருந்தும் ஒருவராவது மூச்சு விடும் சத்தம் கூடக் கேட்கவில்லை. அப்படியென்றால் நான் மட்டும்தான் உயிரோடு இருக்கின்றேனா......? எனக்குப் பக்கங்களில் பிணங்கள்...... எனக்கு மேலே அவர்களோடு நானும் ஒரு பிணம்! என் உடம்பு நடுங்கியது. எனது இருபத்திரண்டு வருட சேவைக் காலத்தில் எனக்கு இப்படி ஒரு அனுபவமா....?

நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுது எவரது நடமாட்டமும் இல்லை. கூடம் முழுவதுமாக 'கும்' இருட்டு. யாரும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட பின்னர் அழுத்திக் கொண்டிருந்த பிணச்சுமை என்னைத் தொடர்ந்தும் அமுக்காதவாறு சற்று நகர்த்தி விட்டுக் கொண்டேன். ஆனால், முற்றாக விலத்தி விட வில்லை. ஏனென்றால் என் உடலுக்கும். உயிருக்கும் அந்தப் பிணம் தான் இதுவரையில் கவசமாக இருந்திருக்கின்றது. இனியும் அதுதான் எனக்குக் கவசம்...... !

அந்தச் கோரத் தினத்தை வென்று காலடியில் மிதித்தபடி மறுநாள், வெற்றிமுரசம் கொட்டிக் கொண்டு வருவது போன்று எங்கோ ஒரு சுவர் மணிக்கூடு பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது !

அதனுள் அசைவின்றிக் கிடைப்பதைவிட என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. இந்தியாவை எங்கள் காவலனாக எண்ணி நான் இறுமாந்த அந்த நினைவுகள் என்னுள் வந்து மோதின ... எம். ஜி. ஆர், அண்ணா எல்லாம் வந்து போயினர்.

கூடவே நான் பார்த்த, 'காந்தி' படம் . அதில் இடம் பெற்ற ஜாலியன் வாலா பார்க் படுகொலைக் காட்சிகள் - அன்று ஜாலியன் வாலா பார்க்கில் பிரிட்டிஷ் படை நடந்து கொண்டது வெறித்தனமானது என்றால்......! அமைதிப்படை இங்கு நடந்து கொண்டதை என்னவென்பது ?

அன்று அவர்கள் இப்படி வைத்தியசாலைக்குள் நுழைந்து அப்பாவிகளையும் நோயாளிகளையும் வைத்தியர்களையும் கொலை செய்யவில்லையே......! அகில உலகத்துக்குமே நாகரிகத்தைக் கற்றுக் கொடுக்கத் தகுதி வாய்ந்த இந்தியாவின் படை இங்கே எந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்கின்றது? குழந்தைகள், பெண்கள், நோயாளர்கள், முதியவர்கள், பசுக்களை எல்லாம் அப்புறப்படுத்திய பின்னரே படையெடுப்புச் செய்யும் பாரதத்தின் யுத்த மரபு எங்கே போயிற்று ......? எனக்கு அழுகையாக வந்தது.

நேரம் செல்லச் செல்ல. சுற்றிவர வீசும் இரத்த வாடையோடு காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்க வயிற் றைக் குமட்டிக் கொண்டு வந்தது. தொண்டை வரண்டு தாகம் எடுத்தது. சிந்தித்தேன், பயந்தேன், களைத்தேன், சோர்ந்தேன். நான் தூங்கி விட்டேனா......! அல்லது மயக்கமடைந்து விட்டேனா என்று கூற முடியவில்லை. ஆனால், நான் கண் விழித்த போது மெல்லிய வெளிச்சம் அக் கூடத்தினுள் பரவியிருந்தது. எவரது நடமாட்டமும் இல்லை. ஒன்றிரண்டு முறை, மேல் மாடியிலிருந்து கீழுக்கும். கீழிருந்து மேல் மாடிக்கும் அவர்கள் இறங்கி ஏறிச் சென்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொழுது விடிந்து கொண்டிருந்தாலும் விடிய, விடிய எனக்குள் பயம் பிடித்துக் கொண்டது. இதுவரையில் நான் மட்டும் உயிருடன் இருப்பதை இவர்கள் காணாவிட்டாலும், இன்று பிணங்களை அப்புறப்படுத்தும் போதாவது என்னைக் கண்டுபிடித்து விடத்தான் போகிறார்கள்! அப்பொழுது அவர்கள் என்னை உயிருடன் விட்டு வைப்பார்களா......? எப்படியோ எனக்கு மரணம் நிச்சயமாகி விட்டது. இதை விட நேற்று மாலையே நான் இறந்திருக்கலாமே ! வெற்றுடல்களாய் கிடக்கும் இவர்கள் எல்லாம் ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் மரண பயத்தை நேற்றே கடந்து விட்டார்கள். நானோ மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு, அந்தப் பீதியில் அணுவணுவாகக் கணத்துக்குக் கணம் செத்துக் கொண்டிருக்கின்றேன். விடிந்து விட்டது! ஆனால் என் வாழ்வு இருளப் போகின்றது, எனது உயிர் விளக்கு அணையப் போகின்றது. எனது உடல் மலேரியா நோயாளியின் உடல் போல் வெடவெட வென்று நடுங்கியது.

வைத்தியசாலையைச் சுற்றிக் காகங்கள் கரையும் சத்தமும் கேட்கின்றது. அவைக்கு இன்று நல்ல பிண விருந்து போலும் ! வைத்தியசாலையைச் சுற்றிவர ஆங்காங்கே எத்தனை பிணங்கள் கிடக்கின்றனவோ......?

அப்பொழுது காலை எட்டு மணியைத் தாண்டியிருக்கும். யாரோ சிலர் நடந்து வந்து கொண்டிருக்கும் காலடிச் சத்தம் கேட்கின்றது. நிச்சயமாக அவை பூட்ஸ் சத்தங்கள் அல்ல......சத்தம் வர வர மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருக்கிறது. காலடி ஓசைகள் தடைப்பட்டு நிற்கின்றன. இதயம் வெடித்து அழும் அந்த அழுகைக் குரல் திடீரென அந்தக் கூடத்தினுள் எதிரொலிக்கிறது.

'முருகா ...முருகா ..... ! எல்லோரும் போயிற்றாங்களே!'' கூடவே பெண்கள் சிலர் எழுப்பும் விம்மல் ஒலி ..... அந்தக் குரல் எனக்கு மிகவும் பரிச்சயமான குரல். அழுகையோடு சேர்ந்து எழுந்த படியால் என்னால் உடனே இனம் காண முடியவில்லை. அது.. அது .ஆம்! இப்பொழுது புரிகிறது. டொக்ரர் சிவபாதசுந்தரத்தின் குரல்தான் அது. தனது அன்புக்குரிய ஊழியரை, நண்பர்களை எல்லாம் பிணமாகக் கண்டதால் எழுந்த பிரலாபம்

அவரது அழுகைக் குரலைத் தொடர்ந்து மேல்மாடி யிலிருந்து படிகளால் விரைவாக யாரோ இறங்கி வரும் காலடிச் சத்தம்...... மீண்டும் திரும்பி மேலே ஓடி ஏறும் சத்தம்…!

"I am a doctor .... !'' என்று சிவபாதசுந்தரம் இரண்டு மூன்று தடவைகள் சத்தமிடுகின்றார். மீண்டும் தட தட வென்று படிகளால் இறங்கி ஓடி வரும் . ஓசை ... சிவபாத சுந்தரத்தின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

I am a doctor. don't shoot me" ஆனால் துப்பாக்கிச் சன்னங்கள் அவருக்கு பதில் சொல்கின்றன. தொடர்ந்து பெண்கள் கீச்சிடும் - அலறும் சத்தம். "ஐயோ! சுடவேண்டாம். ! முருகா, முருகா தண்ணீர்.. தண் ணீர்......! தண் .. .... " பிறகு டொக்ரரின் சத்தம் கேட்கவில்லை. அந்தச் சீக்கிய சிப்பாயின் துப்பாக்கித் துளைகளின் ஊடாக ..... அவர் உயிர் விடைபெற்றுக் கொண்டது போலும். கூட வந்த பெண்கள் யார்? அவர்களும் இறந்து விட்டனர் போலும்!

மேலே இருந்த சிப்பாய்களும் ஓடி வந்தார்கள். பார்த்தார்கள்.பின்னர் யாரோ வந்தார்கள். நின்றார்கள் ..... ! என்னால் புரிந்து கொள்ள முடியாத மொழிகளில் பேசிக் கொண்டார்கள். போனார்கள். எனக்கு என் உயிர் மீது இருந்த கொஞ்ச நம்பிக்கையும், டொக்ரர் சிவபாதசுந்தரத் தின் கொலையோடு விடுபட்டுப்போயிற்று.

மரணத்தை வரவேற்றபடி ஒவ்வொரு மணித் துளியாகக் கழித்துக் கொண்டிருக்கின்றேன். இப்படிக் கிடந்து, மரணவேதனை அனுபவித்துக் கொணடிருப்பதை விட நேரே எழுந்து நின்று, அவன் துப்பாக்கிச் சன்னங்களை நெஞ்சில் தாங்கிக் கொண்டு செத்து விடலாம் போலவும் தோன்றியது.

நேரம் காலை பத்து மணியிருக்கும். அங்குமிங்கும் நட மாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் நின்ற சிப்பாய்களிடம் திடீரென்று ஒரு அமைதி நிலவியது. தொடர்ந்து யாரோ சிலர் நடந்துவரும் காலடிச் சத்தம்! அவற்றுள் பூட்ஸ் ஒலிகளும் கேட்கின்றன. சரி ...... ! என் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் நிற்கின்றேன் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன்.

"டொக்ரர் சிவபாதசுந்தரம்.. குரல் விம்மி வெடிக்க அழுகின்றது ''! என்று ஒரு பெண் பின்னர் .... அதே குரல், "யாரும் உயிரோட தப்பியிருந்தால் எழும்பி வாங்கோ!'' என அழைத்தது.

நிசப்தமான நிலையில், அந்தக் குரல் கூடத்தின் சுவர்களில் மோதிச் சிதறியது. டொக்ரர் சிவபாதசுந்தரத்தின் தமிழ்க் குரலுக்குப் பின்னர் நான் மீண்டும் மீண்டும் கேட்கும் தமிழ்க் குரல் அது. பரிச்சயமான யாழ்ப்பாணத்துத் தமிழ்க் குரல் ...

''யாரும் உயிரோடு இருந்தால் எழும்பி வாங்கோ!" எவ்வித பதிலும் இல்லாதபடியால் மீண்டும் ......மீண்டும் அக்குரல் ஒலித்தது.

அவர்கள் நின்ற திசையிலேயே யாரோ பெண்கள் வேதனையில் முனகும் ஒலி கேட்டது. தொடர்ந்து ஆங்காங்கு இன்னும் சிலர் உயிரோடு இருப்பதற்கான முனகல் ஒலிகள் ...... இனியும் என்னால் தாங்க முடியாது என்ற நிலையில், எது நடந்தாலும் பறவாயில்லை என்ற முடிவு டன் நான் எழத் துணிந்தேன் ..! இதற்குள் ... சிலர் உட்புறமிருந்து நடந்து வரும் சத்தங்களும் கதவுகள் திறக்கப்படும் சத்தமும் கேட்டன. 'ஆமாம் ! ஆங்காங்கு தப்பி உயிரோடு இருப்பவர்கள் சரணடைகின்றார்கள்" என்பதைப் புரிந்து கொண்ட நான், எனக்கு மேல் சாய்ந்து கிடந்த பிணத்தை ஒருவாறு உன்னி விழுத்திக் கொண்டு எழுந்தேன். கைகள் இரண்டையும் மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு, என்னைச் சுற்றிவர நோட்டம் விட்டேன். அங்கு நான் கண்ட காட்சி...... காலடியில் எங்கும் ஒரே பிணமயம் ..!

வயிறு பிளந்து, நெஞ்சு பிளந்து, தலை சிதறி, கண்கள் வெளியே துருத்திக் கொண்டிருந்தபடி, வாய் பிளந்து, நாக்கு வெளியே நீண்டபடி ...... குடல் சரிந்து, வெளியே கொடி போல் மற்றப் பிணங்களின் மேல் படர்ந்தபடி ... அப்பப்பா......! என்ன கொடூரம். கண்களை மூடிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவர்கள் என் சக தாதிகள்- ஊழியர்கள். டொக்ரர்களும் இருந்தார்கள் ........

எக்ஸ்றே அறை, கழிவறைகள், மற்றும் அலுவலக அறைகளில் இருந்து, தயங்கித் தயங்கி, கைகளைத் தூக்கிப் பிடித்த வண்ணம் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அங்கு வருபவர்களைக் காணக்காண எனக்கு ஒரே ஆச்சரியம்! இத்தனைபேர், அத்தனை கொடூரங்களுக்குள்ளும் உயிர் தப்பி இருக்கின்றோமே இதே கேள்வி அங்கு உயிர் தப்பி வந்து நிற்கும் ஒவ்வொருவர் கண்களிலும் தொங்கி நிற்கின்றது.

எங்களை விட, வியப்புக்குள்ளானவர்கள் அங்கு கொலை வெறியாடிச் சோர்ந்து போயிருக்கும் சிப்பாய்கள். 'எமதுவீர சாகசங்களையும் மீறி இத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்களே ... !" என்று வெட்கப்படுவது போன்று இருந்தது அவர்கள் பார்வை......

டொக்ரர் சிவபாதசுந்தரத்தின் பிணத்துக்கு அருகே டொக்ரர் செல்வி. சசி சபாரத்தினமும் சில இராணுவ அதிகாரிகளும் நின்று கொண்டிருந்தனர். எங்களைக் குரல் கொடுத்து அழைத்தவர் சசிதான் என்பது அப்பொழுது புரிந்தது. அவருக்குப் பக்கத்தில் நின்ற ஆஜானுபாகுவான அந்த இராணுவ அதிகாரி யார் என்று எனக்கு அப்பொழுது தெரியாது.

டொக்ரர் சிவபாதசுந்தரம் அன்று காலை தான் வீட்டிலிருந்து கடமைக்கு வந்திருக்கின்றார்.  குழந்தை வைத்திய நிபுணரான அவர் தன்னுடைய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றினைப் பார்வையிட வேண்டும் என்ற கடமையுணர்வில் அந்த அசாதாரணமான சூழலிலும் அங்கு வந்திருந்தார்.

இருபத்தைந்தாம் இலக்க விடுதியில் டொக்ரர்களும், தாதிமாரும் குழுமி நின்றிருக்கின்றார்கள். நேற்று இங்கு நடந்த சம்பவங்கள் எதுவுமே அவருக்குத் தெரியாது. ஏனையவர்கள் நேற்று நடந்தவற்றைக் கூறி இதுவரையில் அந்தப் பக்கம் இருந்து எந்த டொக்ரரோ, தாதியோ, ஊழியரோ வரவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். எனவே தான், அவர்களுக்கு என்ன நடந்தது என அறியும் நோக்கத்து டன் அவர், எக்ஸ்றே பிரிவை நோக்கிப் புறப்பட்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள் தடுத்திருக்கின்றார்கள். "நான் ஒரு டொக்ரர், அதோடு வயதானவன். டொக்ரருக்குரிய உடுப்போட நிற்கிறேன். ' ஸ்தெதஸ்கோப்'பும் இருக்கிறது. அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். எனக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். பிறகு எதற்காக நான் பயப்பட வேண்டும்? பெண்கள் யாரும் என்னுடன் வருவதானால் வரலாம்." என்று கூறிக் கொண்டு கொலைகள் நடந்த இடத்திற்கு கிளம்பியிருக்கிறார். டொக்ரரைத் தனித்து அனுப்ப விரும்பாமல் மூன்று தாதிகளும் அவருக்குத் துணையாக வந்த இடத்தில் தான் அந்தச் சிப்பாய் அவர்களைச் சுட்டிருக்கிறான். டொக்ரரைத் தவிர, கூட வந்த மூன்று பெண்களும் காயத்துடன் பிழைத்துக் கொண்டார்கள். டொக்ரர் சசி அழைத்த குரலுக்கு முதலில் முனகிக் குரல் கொடுத்தவர்கள் அவர்கள்தான்.....! பிணம் போல, அசையாது காயத்தோடு கிடந்து அவர்கள் பிழைத்துக் கொண்டார்கள்.

டொக்ரர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்ட சம்பவத் தின் பின்னர், சிறு இராணுவக் குழு இருபத்தைந்தாம் இலக்க விடுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்திருக்கிறது. .. நீங்கள் எல்லாரும் எல். ரீ. ரீ. ஆதரவாளர்கள். இங்கே சிகிச்சை பெறுபவர்கள் எல்லாரும் எல். ரீ.ரீ. உங்களை எல்லாம் சுடப் போகின்றோம்" என்று மிரட்டியிருக்கிறார்கள்.

" நாங்கள் டொக்ரர்கள் ...... ! அரச ஊழியர்கள் இங்கே இருக்கிறவர்களில் யாரும் எல்.ரீ.ரீ. இல்லை. எல்லோரும் கடந்த ஒரு வாரமாக நடக்கின்ற பிரச்சினைகளில் ஷெல் பட்டும் துப்பாக்கிச் சூடுபட்டும் காயமுற்று வந்திருக்கிறவர்கள். இதுதான் உண்மை. வேண்டுமென்றால் நீங்கள் எங்களைச் சுடலாம்." என்று அவர்கள் வாதாடியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் அந்த விடுதியில் இருந்த வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் எல்லாரும் தங்களது வாழ்வும் நிச்சயமில்லாத நிலையில், தவிப்படைந்து கொண்டு நின்றிருக்கிறார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தில் தான் ஆஜானுபாகுவான அந் தக் குறிக்கப்பட்ட அதிகாரி அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் தான் அவர்கள் கொட்டம் அடங்கி நின்றிருக்கின்றார்கள்.

"மன்னிக்க வேண்டும். அடையாளம் தெரியாமல் இன்று காலையில் உங்களுடைய டொக்ரர் ஒருவரையும் மூன்று சிஸ்ரர்மாரையும் எமது சிப்பாய்கள் சுட்டு விட்டார்கள்" என்ற தகவலையும் தெரிவித்து அவர்களை அடையாளம் காணவும் யாரும் உயிர் தப்பி இருக்கிறார்களா என்பதைப் பார்வையிடவும் டொக்ரர் சசி சபாரத்தினத்தையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்திலே, அந்தக் குறிப்பிட்ட அதிகாரி மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. ' இந்தியப்படை இத்தனை அட்டூழியங்களையும் செய்து முடித்த போது இவர் இங்கு இல்லைப் போலும், இருந்திருந்தால், இந்தக் கொடுமைகள் நடைபெற இடமளித்திருக்க மாட்டார்' என்று என் பேதை மனது அப்பொழுது எண்ணியது. ஆனால், அந்த அதிகாரிதான் கேணல் ப்றார் என்று பின்னர் பிறர் சொல்லக் கேள்விப்பட்ட போது. அந்த முகத்தில் காறி உமிழ்ந்திருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு வெறி என்னுள்ளே பின்னர் ஏற்பட்டது.

ஆயுதத்தால் மட்டுமே, பேசத்தெரிந்த மனித இயந்திரங்களான சிப்பாய்களை விரும்பிய படி வெறித்தன மாட ஏவிவிட்ட சூத்திரதாரியே இந்த மனிதன் தான்......!

வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும் இத்தனை பெறுமதி மிக்க மனித உயிர்களைப் பலிகொண்டு விட்ட தன்னை ஒரு கண்ணியமானவன் என்று காண் பித்துக் கொண்டு நிற்க இந்த மனிதனால் எப்படி முடிகின்றது.....?

உலகிலேயே மிகச் சிறந்த தத்துவ ஞானிகளையும் அகிம்சா நெறிகளையும், பண்பாடுகளையும், தன்னகத்தே கொண்டுள்ளது என்று பேசிக் கொண்டு பஞ்சமா பாதகங்களின் பாசறையாய் திகழும் பாரதத்தின் சுய வடிவம் அந்த மனிதனின் உருவிலே எனக்குத் தோன்றியது. அந்த மனிதனைப் பற்றி அறிந்து கொள்ளுமுன்னர், சில மணி நேரம் என் அறியாமையால், அம் மனிதன் மீது மதிப்பு வைத்துவிட்டேனே என்று என்னை நானே பின்னர் நொந்து கொண்டேன்.

கைகளை உயர்த்திப் பிடித்தபடி நின்றோம். எமது கரங்களைக் கீழே விடும்படி சொன்னார்கள். அவர்களி டம் நேற்று இருந்த கொலை வெறி இப்பொழுது இல்லை.

இதுவரை...நெஞ்சத்தில் அடக்கி வைத்திருந்த துயர மெல்லாம் வெடித்து அழுகையாக வெளி வந்தது. உயிர் தப்பி நின்ற டொக்ரர்களும். தாதியரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து வாய்விட்டு, ......! என்று கதறி அழுதார்கள். நாம் எம் படிப்பு, தகைமை அனைத்தையும் மறந்து அந்தக் கணத்தில் அனைவரும் குழந்தைகளாகி விட்டோம். நேற்றுவரை, ‘மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று ஓடியோடி ஓயாது உழைத்த எமது வைத்தியசாலையின் குடும்ப ஊழியர்களை, உயிரற்ற சடலங்களாய் - சிதைந்து கருகிய அரைகுறை உடல்களாய் அங்கு காணும் பொழுது பொங்கி உடைப்பெடுத்து வந்த அழுகையை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. யாரை யார் தேற்றுவது....?

அப்பொழுது தான் அந்தக் கடமையின் குரல் அங்கு உறுதியுடன் ஒலித்தது. "அழுதது போதும், இனி யாரும் அழவேண்டாம். அழுது பயன் இல்லை. இனி நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று பார்க்க வேண்டும். இன்னும் இங்கே குற்றுயிராய்க் கிடக்கிறவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதை உடனடியாய்ச் செய்வோம்." இது டொக்ரர் பொன்னம்பலத்தின் குரல்...... ! அந்த மந்திரச் சொல்லுக்கு - அந்த மகுடிக் குரலுக்கு அனைவரும் கட்டுப் பட்டோம்

அது வரை எமக்கிருந்த கவலைகள், துயரங்கள் எங்கே போயின? அந்தச் சோர்வு எங்கே போயிற்று? அந்தப் புதுத் தெம்பு எமக்கு எப்படி வந்தது? அந்தக் கணமே இயங்கத் தொடங்கினோம். அங்கிருந்த வைத்தியரும். ஊழியரும் ஒரு வித ஆவேசம் வந்தவர்களாகச் செற்படத் தொடங்கினோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கு இறந்து கிடந்தவர்கள் தவிரக் குற்றுயிராய்க் கிடந்தவர்களை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும். மருந்து கட்டும் இடங்களுக்கும் தூக்கிச் சென்றோம். நேற்றைய வேகம் மீண்டும் வந்து விட்டது. வசதியாக நடைபாதை யிலே ஆங்காங்கு கிடந்த பிணங்களை, போகவர ஒதுக்கி விட்டு ஓடி ஓடி இயங்கினோம்.

நேற்றுப் பிற்பகல் முதல் அதுவரையில் தண்ணீர் கூட வாயில் விடாமல் தவித்துக் கொண்டிருந்த எம்மில் யாராவது ஒரு சொட்டு தண்ணீர்தானும் அருந்தினார்கள் என்பது எனக்கு நினைவில்லை.

என்னுடைய சட்டையெல்லாம் இரத்தம் தோய்ந்து, காய்ந்து மடமடவென்று முரட்டுத் தன்மையுடன் இருந்தது. விடுதிக்குச் சென்று உடையை மாற்றி என் உடம்பில் இருந்த கறையை எல்லாம் கழுவிக் கொண்டேன். உடம்பை நான் கழுவும் போது எனக்கே அருவருப்பாக இருந்தது. அந்த இரத்த வாடை அப்பப்பா..! உடலில் தண்ணீர் படும்போது சுகமாக இருந்தது.

அன்று மாலைக்குள் அனைவருக்கும் செய்ய வேண்டிய சிகிச்சைகளைச் செய்து முடித்து விட்டோம்! இனி இறந்தவர்கள் யார் யார் என்று அடையாளம் காண வேண்டும். மறுநாள் காலையில் அதைச் செய்யலாம் என்று இராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், எமக்கு இருந்த வேகத்தில் "இல்லை, நேரம் தாமதித்தாலும் பரவாயில்லை. எம்மில் யார் யாரை இழந்துவிட் டோம் என்று இன்றே அறிய வேண்டும். '' என்று கூறி அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சென்றோம்......

ஒவ்வொரு பிணங்களாக அடையாளம் கண்டோம்... சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கோரமாகச் சிதைந்தும் கருகியும் இருந்தன......! அந்தக் கூடத்துக்குள் கால் வைக்கவே தயக்கமாக இருந்தது. பிணவாடை வேறு...

அந்த இடத்தைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அறையை யும் திறந்தபார்வையிட்டோம்.....  கண்ணாடி யன்னல்கள் ஊடாக சிலர் சூடுபட்டு இறந்திருக்கின்றார்கள். உயிராபத்தான காயங்களாய் இல்லாவிட்டாலும் அங்கு நிகழ்ந்த மரணங்கள் பெரும்பாலும் இரத்தப் பெருக்கினால் ஏற்பட்டவையே. கண் வைத்தியப் பிரிவில் இருந்த ஒரு பெரியவர் கூட, படுக்கையில் இருந்தபடியே சுடப்பட்டு இறந்து கிடந்தார்.

ஒவ்வொரு அறையாகத் திறந்து கொண்டு சென்ற நாம், நிர்வாக அலுவலரின் அறையைத் திறந்த போது அங்கே...... மேற்றன் வடிவேலு குப்புறக் கிடந்தார்! அவரது நெஞ்சைக் குண்டு துளைத்திருந்தது. நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு கவிழ்ந்து கிடந்த அவரது கைகளில், மெழுகுவர்த்தியும் கந்தசஷ்டிக் கவசமும் இறுகப் பிடித்தபடியே இருந்தன. தாதிகள் பதிவேடு பக்கத்தில் கிடந்தது.

அவரது உடலைக் கண்டதும், அதுவரை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. வாய்விட்டு அழுது விட்டேன் . நேற்று நான் தான் அவரோடு இறுதியாகக் கதைத்தவள்..... அவருடைய உணவை இறுதியாகப் பகிர்ந்து கொண்டவள். எமக்கெல்லாம் தாய் போல விளங்கிய அந்த உத்தமியை - கடைசி வரை கடமை உணர்வுடனே உயிர் விட்ட எங்கள் வழிகாட்டியை உயிரற்றவளாகக் கண்ட போது என்னால் தாங்க முடியாமல் இருந்தது .

அன்று காலை, வைத்தியசாலையின் முன் பகுதியில் கொலை செய்யப்பட்ட டொக்ரர் பரிமேலழகரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டது. காயமுற்றவர்கள் போக மொத்தம் டொக்ரர். எம். சி. கணேசரட்ணம் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் இருபத்தியொரு பேர்.  முதல் நாளும், அன்றுமாக வைத்தியசாலைக்குள்ளே மட்டும் நோயாளர் உட்பட அறுபத்தெட்டுப் பேர் சுடப்பட்டுக் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

மறுநாள் காலை எமது வைத்திய சாலையின் முன் வீதியில், பின் வீதியில் அநாதரவாகக் கிடந்த உடல்கள் எல்லாம்..... நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

குழந்தை வைத்திய நிபுணரான டொக்ரர் சிவபாதசுந்தரத்தின் உடலையாவது அவர் மனைவி மக்களிடம் ஒப்படைக்க - அவர்களை அழைத்து வந்து காண்பிக்க முயற்சி செய்யப்பட்டது. இராணுவம் அதை அனுமதிக்க வில்லை!

புதிய வைத்தியப் பிரிவு கட்டுவதற்காக, அடுக்கப்பட்டிருந்த மரங்கள் எல்லாம் இந்தச் சடலங்களின் சிதைகளுக்கு விறகுகளாயின. அனைத்தையும் எமது வைத்திய சாலையின் ஊழியர்களே செய்து முடித்தார்கள். எமது இருபத்திரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் யார், எவர் என்று அடையாளம் காணப்படவில்லை... ! இவர்களில் சம்பவ தினத்தன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை அளிக்க முடியாமற் போனதால் இறந் தவர்களின் உடல்களும் அடங்கும். அடையாளம் காண முடியாமற் போன சடலங்களில் நான் அறிந்த அந்த இரண்டு சடலங்கள் திபோவுடையினதும் அவன் மனைவி யுடையதும். பாவம் ! அந்த இளம் தம்பதிகள், தங்கள் மரணத்திலும் ஒன்றாகி விட்டார்கள் . திபோ சிறீலங்கா இராணுவத்தாற் சுடப்பட்ட பொழுதே இறந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அவன் மனைவியாவது அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கும் துணையாக வாழக் கிடைத்திருக்கும் ...! இந்தக் கொடுமை இவர்களுக்கு மட்டும் தானா? இன்னும் எத்தனையோ...!

அதோ......! அந்த நூற்றுக்கும் அதிகமான சிதைகளும் கொழுந்து விட்டு எரிகின்றன... எங்கள் எல்லாரது நெஞ்சங்களிலும் வெடித்து எழும் துயரச் சுவாலைகளும் அந்தத் தீயுடன் கலந்து எரிகின்றது.

வாரம் ஒன்று கழிந்து விட்டது. வைத்தியசாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. எம்முடன் சேர்ந்து இந்திய இராணுவத்தின், வைத்தியப் பிரிவும் இயங்கிக் கொண்டி ருக்கின்றது. அவர்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் சேவையைக் கூட, கட்டாயத்தின் பேரில் பெற்றுக் கொண்டிருந்தோமே ஒழிய மன விருப்புடன் அல்ல அவர்கள் செய்து விட்ட கொடுமைக்கு இவைகள் மூலம் பிராயச்சித்தம் தேடிக் கொள்ள முடியுமா.....?

பரந்து இருந்த நோயாளர் விடுதிகள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன. நோயாளிகளும் மிகக் குறைவு. ஓரளவு சுகமடைந்தவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு விட்டதால் உடனுக்குடன் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

பிணங்களை எல்லாம் தகனம் செய்த மறுதினம் தான் நான், கழுத்து நாடாவை அறுத்து எடுத்த அந்தப் பையனைக் கண்டேன். அவன் என்னைக் கண்டதும் என் கையை வாஞ்சையோடு பற்றிக் கொண்டான்." 'அக்கா! நீங்கள் எல்லாரும் தப்பிற்றீங்களா ...? " என்று கேட்கும்போது அவன் விம்மத் தொடங்கி விட்டான். அவன் இப்படி அன்போடு என்னை விசாரித்து அழுவதற்கு நான் அவனுக்கு என்ன செய்து விட்டேன் ..... ! வைத்தியருக்குரிய முழு உடையுடன் - கையில் ஸ்தெதஸ்கோப்புடன் நின்ற பெரியவரான டொக்ரர் சிவபாதசுந்தரத்தையே அடை யாளம் கண்டு கொள்ள முடியாமல் சுட்டுக் கொன்றவர்கள் இவன் மீது சந்தேகப் பட்டிருந்தால்......! ஆராய்ந்து பார்த்திருப்பார்களா ......? நான் அன்று நடந்து கொண்டது முன்னெச்சரிக்கையான விடயம் தான். ஏன் அப்படிச் செய்தேன்? எந்தச் சக்தி என்னை அப்படிச் செய்யத் தூண்டியது என்று நான் இன்றும் வியக்கின்றேன்.

'' அக்கா! அன்றைக்கு இந்த வாட்டுக்குள்ள வந்து துவக்கை நீட்டிக் கொண்டு எங்களை யெல்லாம் மிரட்டின போது நான் உங்களைத் தான் நினைச்சுக் கொண்டேன். நீங்க செய்த புண்ணியத்தைத் தான் நினைச்சுக் கொண்டேன். உங்களுக்கு ஒன்றும் நடக்கக் கூடாது என்றுதான் மன்றாடிக் கொண்டிருந்தேன்.'' என்று அவன் தன் ஷேர்ட்டிலே தொங்கிக் கொண்டிருந்த சிலுவையைத் தொட்டுக் கொண்டு சொன்னான்.

பெண்கள் பிரிவில், சம்பவம் நடந்த அன்று அனுமதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் அவளது முழங்காற் சில்லு - பெயர்ந்திருந்தது. அடிக்கடி அவள் அழுவதை என்னால் காண முடிந்தது. அவளிடம் ஏனோ ஒரு பாச உணர்வு ....! அவளுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று முயற்சி செய்தேன். அப்பொழுது அவளிடமிருந்து கிடைத்த விட யங்கள் ...... அவள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான வஸ்தியாம்பிள்ளை புத்தகசாலை உரிமையாளரின் மகள்! பெயர் சியாமளா - அவள் கூறினாள்.......

நாங்கள் பாதுகாப்புக்காக, பற்றிக்ஸ் கல்லூரியில் போய்க் குடும்பமாய் அங்கே ஒரு வகுப்பறையில் தான் இருந்தோம். அம்மா. எங்கள் எல்லோருக்கும் சோறு குழைச்சுத்தரச் சாப்பிட்டோம். திடீரென்று நாங்கள் இருந்த இடத்தில ஷெல் விழுந்திச்சு ! எனக்கும் என் தங்கச்சி விஜயந்திக்கும் காலில காயம். எங்களை உடனே காரில் ஏற்றி இங்க அனுப்பி வைச்சிட்டாங்க...... தங்கச்சிக்கு இஞ்ச மருந்து கட்ட ஏலாமல் போச்சுது. ரத்தம் போயே எனக்குப் பக்கத்திலேயே அவ செத்துப் போயிற்றா......"

" எங்களை அனுப்பி வைச்ச பிறகு அம்மாவும், அபப்பாவும் ஆஸ்பத்திரிக்கு எங்களைப் பார்க்க வந்திருக்கிறாங்க. மற்றவங்கள் தடுக்கத் தடுக்க வந்தாங்களாம்... ஆஸ்பத்திரிக்குப் பின்பக்கமாகத் தான் வந்தாங்களாம். பிறகு அவங்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியேல்ல...."

என்ன நடந்திருக்கும் என்பதை அவளா சொல்ல வேண்டும்..? வைத்தியசாலையின் பின் வீதியில் எத்தனையோ பொது மக்கள் வயது வேற்றுமை இல்லாமல் சுடப்பட்டு இறந்து கிடந்தார்களே ......! நிச்சயமாக அந்த அடையாளம் காணப்படாத நிலையில் வைத்தியசாலையின் பின் பக்கம் கொண்டு வந்து எரிக்கப்பட்ட பிணங் களுடன் அவையும் சேர்ந்திருக்கும்.

அவர்கள் மட்டும் தானா? காயப்பட்டவர்களை ஒன்றாக ஆண், பெண், சிறுவர்கள் என்று ஏற்றிக்கொண்டு வந்த மோட்டார் கார்களை வைத்தியசாலைக்கு முன்னால் மறித்து கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், எவரையும் வெளியேற விடாமல் அப்படியே பெற்றோல்' . ஊற்றி உயிருடன் கொளுத்தியிருக்கிறார்களே ...... ! அதுவும், இந்தியாவின் தேசபிதா, அகிம்சாமூர்த்தி காந்தி மகானின் சிலைக்கு அண்மையில் அப்படிப்பட்டவர்கள் இந்த வயோதிபத் தம்பதிகளைக் கொல்லாமலா விட்டிருப்பார்கள் ....?

நாட்கள் செல்லச் செல்ல, எனக்கு வீட்டு நினைவு அதிகரித்துக் கொண்டிருந்தது. மூன்று வாரங்களுக்கு மேலாக நான் வீட்டில் உள்ளவர்கள் எவரையும் சந்திக்க வில்லை. இங்கு நடந்த அவலங்களுக்குள் எனக்கு அவர்களை நினைப்பதற்கு சந்தர்ப்பம் குறைந்திருந்தது. இப்பொழுது அவர்கள் நினைவு என்னை வாட்டிக் கொண்டிருந்தது. அங்கு நிலைமை எப்படியோ...... ! என் பிள்ளைகளின் நிலை, பாட்டியின் நிலை, தம்பி ..... இப்படியாகப் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், கே. கே. எஸ். பக்கம் பிரச்சினைகள் எதுவும் நடந்ததாகத் தகவல்கள் இல்லாத படியால்.... என்னைத் தேற்றிக் கொண்டேன். வைத்தியசாலையில் தாதிகள் பற்றாக் குறையால் லீவும் பெற முடியாது! அப்படி லீவு கிடைத்தாலும் ஊரடங்குச் சட்டம். போவதற்கு வாகன வசதி எதுவுமே இல்லை. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட இரண்டாம் நாள் பகல்..... கடமையில் இருந்த போது, 'என் தம்பி வந்து வைத்தியசாலையின் பின் கேற்றில் எனக்காகக் காத்து நிற்பதாக " என்னிடம் யாரோ கூறினார்கள். நான் சக தாதியிடம் சொல்லி விட்டு அங்கு விரைந்தேன்!

தம்பியைக் கண்டதும் நான் அழுது விட்டேன். அவனும் அழுதான். " நீ என்னை உயிரோடு பார்க்கிறது தெய்வச் செயலடா!" என்றேன். ஓமக்கா. அங்க வீட்டில செத்தவீடு தான். பாட்டியும் பிள்ளைகளும் நீ செத்திட்டதாகவே தீர்மானிச்சு, சாப்பிடாமல் அழுது கொண்டே கிடக்குதுகள்....!"

எப்பிடித் தம்பி அங்கால பிரச்சினைகள் ஒன்றும் இல்லையே?" என்று கேட்டேன்.

அந்தப் பக்கம் ஒருவித பிரச்சினையும் இல்லை இஞ்ச என்ன நடந்தது என்று அங்க ஒருவருக்கும் தெரியாது. அங்கால ஊரடங்குச் சட்டம் கூடஇல்லை. அந்த ஆமிக்காரன் சர்மா தான் சொன்னான்,

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்க பயங்கரப் பிரச்சினை என்று. எல்.ரீ.ரீ. ஆஸ்பத் திரிக்குள்ள நின்று இந்தியன் ஆமியைத் தாக்கினதால, ஆமி உள்ள புகுந்து அவங்களைத் தாக்கினதிலை டொக்ரர்களும் நேர்ஸ்மாரும் கொல்லப் பட்டிட்டாங்களாம்." என்று அவன் சொன்னான்.

" மண்ணாங்கட்டி, இருபத்திநாலு மணித்தியாலமும் நானும் ஆஸ்பத்திரிக்குள்ள தான் இருந்தன். அப்படி ஒரு வரும் ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து தாக்கேல்ல ..... ஆனால், அவங்களுக்கு நாங்கள் போராளிகளை, இங்கே வைத்து வைத்தியம் செய்யிறோம் என்று சந்தேகம் .....! அது தான் இப்படிச் செய்திருக்கிறாங்கள். வாற வழியில உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே. இந்தியன் ஆமியைச் சந்திக்க வில்லையே?"

பக்கத்தில் நின்ற இன்னுமொருவரைச் சுட்டிக் காட்டிய படி 'நானும் இவரும்தான் கே.கே.எஸ்.இல் இருந்து வந்தனாங்கள். இவரும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தங்கட சொந்தக்காரரின்பாடு என்னவோ என்று பார்க்க வந்தவர். நாங்கள் றோட்டால வர இல்லை ஆமிக்காரன் வந்த மாதிரி ஒழுங்கைக்குள்ளாலையும், வளவுகள், தோட்டங்களுக்குள்ளாலையும் தான் வந்தனாங்கள். எல்லா இடமும் ஒரே பிண நாத்தம். நல்ல காலம் நாங்கள் ஒரு இடத்தில தப்பினதே அருந்தப்பு......!"

..ஏன் ஆமி சுண்டிட்டானா..?"

“இல்லை. ஒரு வீட்டுக் கோடிக்குள்ள ஒரு வயசு போன கிழவரின் பிணத்தைச் சுத்தி நாலைஞ்சு நாய்கள் திண்டு கொண்டு நிண்டுதுகள் .... அந்தப் பக்கம் ஆட்கள் யாருமே இல்லை! அதுகளுக்கெல்லாம் நல்ல பசி போல... நாய்கள் எங்களைக் கண்டிட்டு அந்த மனிசன்ர பிணத் தைத் தின்ற ருசியில எங்களுக்கு மேல பாயத் தொடங்கிற்றுதுகள். நல்ல காலம்! வேலிக் கம்பை முறிச்சு அந்த நாய்களை அடிச்சி விரட்ட நாங்கள் பட்ட பாடு?…”என்று சொல்லிக் கொண்டு போனவன் தன் பேச்சை நிறுத்தி, “அக்கா! உனக்கு விஷயம் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்தினான்.

" என்னடா .....?"

“அக்கா! அந்த உடுவில் அன்ரி மிஸிஸ் சிவபாதம் அவங்கள் எல்லாரும் குடும்பத்தோட சரி ..."

“ஏனடா?"

"காரணம் ஒண்டும் தெரியாது முத்தத்தில இருந்து அரிசி கழுவிக் கொண்டிருந்த அவவை, றோட்டில நின்ற ஆமிக்காரன் வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். மனுசி போகவே, பின்னால பிள்ளைகள் மூன்று பேரும் போயிருக்குதுகள். அதுகளுக்குப் பின்னால அன்ரியிட தாய்க் கிழவியும் போயிருக்கிறா. அவ நல்ல படிச்சவ தானே......! இங்கிலிஷ் எல்லாம் நல்லாய் பேசுவாதானே. அப்படியிருந்தும் ஒன்றும் விசாரிக்க இல்லையாம்... மதிற் சுவரோட ஐந்து பேரையும் வரிசையா நிற்க வைச்சு அப்படியே ஓட்டோவில விட்டு மெஷின் கண்ணால சுட்டிருக்கிறாங்க. கிழவியும் மூத்த பெடியனும் அந்த இடத்திலேயே சரி ...... அவங்களுக்கு உதவி செய்ய யாருமே போக இல்லை. ஆமிக்காரன் போன பிறகு தான்.... மற்ற மூண்டுபேரும் தவண்டு தவண்டு ஒழுங்கைக்குள்ள போயிருக்குதுகள் ...

இளைய மகனும் பிள்ளைகளும் பின்னால் தவழ்ந்து வருகுதுகள் தானே .......! என்ற நினைப்பில் அந்த அன்ரி முன்னுக்கே போயிற்றா. ஆனால், அந்தப் பிள்ளைகள் அவளைத் தொடர்ந்து போக முடியாமல் நடுவழியிலேயே இரத்தம் வெளியில் போய் செத்துட்டுதுகளாம். இவவுக்கும் ஒழுங்கைக்குள்ள வந்த உடனேயே அறிவு மயங்கிற்றுதாம் ...... அதனால். பிள்ளைகள் பற்றின தகவலை இவவைக் காப்பற்றின சனங்களுக்கு சொல்ல முடியாமல்ப் போயிற்றுது. அவ, சீரியசா இருந்து இப்ப ஆபத்து இல்லை என்று சொல்லினம். சங்கானை ஆஸ்பத்திரியில இருக்கிறாவாம்......"

அந்த அன்ரியையும் பிள்ளைகளையும் நினைத்துக் கொண்டேன். இந்தியாவின் மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தையும், 'உணவுப் பொட்டலம்' போட்ட அன்று அவவும் அந்தப் பிள்ளைகளும் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்த காட்சியையும், இந்தியப் படையினர் அவர்கள் வீட்டைத் தாண்டிப் போகும் போதெல்லாம், அவர்கள் கைகாட்டி மகிழ்ந்து செய்த ஆரவாரங்களையும் நினைத்தேன். எல்லாம் போயிற்று. அண்டைக்குத் தீபாவளி நாளில் எங்கள நரகாசுரன்களாகவும் தங்கள கண்ண பிரான்களாகவும் நினைத்து இப்படிச் சங்காரஞ் செய்தாங்களே....... ! பெருமூச்சு ஒன்று தான் விட முடிந்தது.

"தம்பி நீ கெதியில கவனமாய் வீட்டை போய் சேரு. அங்க பாட்டியும் பிள்ளைகளும் அழுது கொண்டிருப்பினம். இன்னும் ஒரு கிழமையால வா..! அதுக்குள்ள நான் லீவு கேட்டு ஆயத்தமாய் இருக்கிறன். நீ வந்த பிறகு உடனே லீவு போட்டிட்டு வாறன் அதுகளை கவலைப் படாமல் இருக்கச் சொல்லு. இப்ப எல்லாம் நோமலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கு. இனிப் பிரச்சினையில்ல. நீ போறது தான் கவனம். வந்தபோது நாய்களிட்ட மாட்டுப் பட்ட மாதிரி ஏதும் ஆபத்தில மாட்டப் போறாய்."

"அது தான் அக்கா யோசனையாய் இருக்கு. வந்த வழியால போகவும் பயமாய் இருக்கு. வேற எந்த வழியால போறது ? என்று தீர்மானிக்கவும், முடியாமல் இருக்கு. ஏனென்றால் கம்பெஸ் பக்கமெல்லாம் சரியான பிரச்சினையாம். அங்க பிரம்படி ஒழுங்கையில் பொதுமக்களைச் சுட்டிட்டு, டாங்கிகளை ஆக்களுக்கு மேலால எல்லாம் ஏத்திக் கொண்டு போயிருக்கிறாங்கள். அந்தச் சில்லுகளுக்குக் கீழ நசுங்கி அப்பிடியே சனங்கள் சப்பளிஞ்சு போயிற்றாங்களாம்."

எனக்கு கேட்கக் கேட்கத் தலையை என்னவோ செய்தது ! " சரிசரி...... நீ கவனமாய் போயிற்று வா!!" என்று சொல்லி அனுப்பி விட்டு கடமைக்காகத் திரும்புகின்றேன். என் கண்களுக்குச் சடலங்களை எரித்த சாம்பர்த் தடங்கள் வரிசையாகத் தெரிகின்றன. இந்தக் கொடுமைகள் எல்லாம் ஏன் .....? கேணல் ப்றார், டொக்ரர் சிவபாதசுந்தரத்தைச் சுட்டதற்கான காரணத்தைச் சொன்னாரே !" " ஒரு டொக்ரர். வயதாளி. டொக்ரருக்கான சீருடையுடன் - கையில் 'ஸ்தெதஸ்கோப்புடன்' நின்றவரை அடையாளம் தெரியாமலா உங்கள் சிப்பாய் சுட்டான்? " என்று எங்கள் டொக்ரர்கள் கேட்டதற்கு ... கேணல் ப்றார் சொன்ன பதில்! “யுத்தத்தில் எதுவும் நடக்கலாம்."

யுத்தமா......? இவர்கள் யாருக்கு எதிராக யுத்தம் செய்ய வந்தவர்கள்...... ! தமிழரைப் பாதுகாக்கத்தான் வந்தவர்கள் என்றார்களே! அப்படிச் சொல்லித்தான் உணவுப் பொட்டலமும் போட்டார்களே? திலீபனைக் காப்பாற்றினார்களா......? அவர்களது பொறுப்பில் இருந்த பதின்மூன்று போராளிகளைக் காப்பாற்றினார்களா ......? எங்களைக் காப்பாற்ற வந்தவர்கள், எங்கள் எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எம் மக்களை அல்லவா கொன்று குவித்து விட்டார்கள். அன்று முதல் நாம் இந்தியாவில் வைத்திருந்த விசுவாசத்தையும் கொன்றுவிட்டார்கள் ! அந்தச் சர்மா சொன்னானே 'Belive Indian' என்ற அந்த நம்பிக்கைக்கு இவர்கள் செய்த கைமாறு இதுதானா?

இவர்கள் செய்யும் யுத்தம். தமிழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டிருக்கும் போராளிகளை தமிழ் மக்க ளிடமிருந்து அந்நியப்படுத்துவதற்காக இடம் பெறும் யுத்தம்......!

மக்கள் அஞ்சி நடக்க வேண்டும்; போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பதனாற்தானே நாம் இத்தனை கொடுமைகளுக்கும் உள்ளாகிறோம் என்று உணர்ந்து விட்டு ஒதுங்க வேண்டும்! அவர்களை தமது துன்பங்களுக்குக் காரணமான போராளிகளைப் பொதுமக்கள் தாமாகவே காட்டிக் கொடுக்க முன்வரவேண்டும். அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்காக இராணுவம் இத்தகைய ஈவிரக்கமற்ற கொலை வெறியாட்டத்தைச் செய்வது தான் இராணுவத் தர்மமாம்!

இராணுவம் கொலை செய்யலாம் கொள்ளையடிக்கலாம் கற்பழிக்கலாம் எதுவும் செய்யலாம். இதனையெல்லாம் இராணுவ தர்மம் அனுமதிக்குமாம். தர்மத்திற்குப் பேர் போன இந்தியா. ஜே. ஆரின் தார்மீக அரசின் ஆதரவோடு அந்தத் தார்மீகச் செயல்களையே செய்து கொண்டிருந்தது. இவர்களின் இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் இவர்களது எதிர்பார்ப்புக்கு முழுமையும் எதிராகவே திரும்பி உள்ளன என்பதை இவர்கள் அறியும் காலம் விரைவில் வரும்!

ஒரு காலத்தில், " இந்தியாவே! நீ எப்பொழுது வரப் போகிறாய்?" என்று காங்கேசன்துறைக் கடற்கரையில் நின்று கூவி அழைக்க நினைத்த என் வாயால் இந்தியனே! நீ எங்கள் நாட்டைப் பிடித்த பீடை. எப்பொழுது எம்மை விட்டுத் தொலையப் போகிறாய்......? என்று உரத்துக்கூவ வேண்டும் போல் இருந்தது. 'வெள்ளையனே வேளியேறு! " என்று கோஷமிட்டுச் சுதந்திரப் போர் நடத்திய இந்தியனை இந்தியனே வெளியேறு!" என்று ஈழத் தமிழர் கோஷமிட்டுக் கலைக்க வேண்டிய காலமிது என்பதை என் மனம் உறுதியாக நம்பியது.

சிறுவயதில் நான் கற்பனை செய்த எம் ஜி. ஆர். அண்ணாத்துரை, காந்தீயம்; இந்திய சுதந்திரப் போராட்டம்..... மிராஜ் விமானம். உணவுப் பொட்டலம் சர்மா...... எல்லாரும் என் மனதில் வந்து போகின்றார்கள்.

நாட்டில் நல்லவை நடக்க வேண்டுமென்பதற்காக பலி கொடுத்து வேள்விகள் செய்வார்கள். இவர்கள் எமது தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு அமைதியை பெற்றுத் தரவந்தவர்கள். அதற்காகத் தான் இவர்கள் எங்களையே பலிப் பொருளாக்கி அமைதி வேள்வி செய்து முடித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கரங்களை, அணைக்கும் கரங்களாக நினைத்திருந்தேன்......! ஆனால், அக்கினிக் கரங்களாக அவை எம்மைச் சுட்டுக் கருக்கிவிட்டன !

நான் நடந்து கொண்டிருக்கின்றேன் .. எனது ஒவ்வொரு அடியும் வெறுப்போடு தரையில் பதிகின்றது...! எனது நம்பிக்கைகள் அவற்றுள் மிதிபட்டு நசிகின்றன.

 

 

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

 

1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதியஅக்கினிக் கரங்கள்புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள்.  என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன்.

 

🙏............

மிக்க நன்றி உங்களின் நேரத்திற்கும், முயற்சிக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதிவுகள் அனைத்துமே  அரிய தகவல்கள் நன்றிகள் பல  🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kavi arunasalam said:

1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதியஅக்கினிக் கரங்கள்புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள்.  என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல.

உங்கள் பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

கட்டுரைகள் நீண்டுள்ளதால் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க நாளெடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

கட்டுரைகள் நீண்டுள்ளதால் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க நாளெடுக்கலாம்.

புத்தகம் 60 பக்கங்கள். மொத்தமாகப் போட்டால் நல்லது என்று தோன்றியது. அதையும் பிரித்துப் பிரித்துப்    போடுவதால் வாசிக்க இலகுவாக இருக்குமென்று நம்பினேன். 

ஈழப்பிரியன் நேரம் இருக்கும் போது  அவ்வப்போது வாசியுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன்.

 

21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை!

 

 

பதிப்புரை

ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது!

1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது.

உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்!

போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம்.

தமிழ்த்தாய் வெளியீட்டகம்

அணிந்துரை

இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும்.

எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும்.

எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும்.

இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன்.

இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன்.

வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994

 

 

ஏன் எழுதினேன்?

'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும்.

1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது.

சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை.

ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின்  அதிர்வலைகளை மீட்டும் யாழ்கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்…..

"ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!"

மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன்.

அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன்

1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்...

"நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது.

அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு.

யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள்.

வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன்.

இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள்.

போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன.

எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன்.

நன்றி.

நாவண்ணன்

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் .......... உங்களின் பதிவுக்கும் அதற்காக எடுத்துக்கொண்ட மினக்கெடலுக்கும் நன்றிகள் பல ........! 

அமைதி படையாக நாட்டுக்குள் வந்தவர்கள் அக்கிரமப் படையாக ,  அடடூழியப் பாதகர்களாக மாறிய பதிவுகளும் இதில் வருகுதோ  தெரியவில்லை . .......!

ஆசிரியர் இயல்பாக எழுதிச் செல்லும் எளிய நடை சிறப்பாக இருக்கின்றது . ........!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kavi arunasalam said:

ஏன் எழுதினேன்?

பகிர்விற்கு நன்றி கவி ஐயா.

பாதிக்கப்பட்டவரோடு அங்கேயே இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவனாயிருந்தேன், ஆனாலும் பல சம்பவங்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது. அதனை இந்நாவல் கிளறி விட்டுள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கிரமப் படைகள் பனையளவு செய்ததில் தினையளவு தந்திருக்கிறார் . .......!

அதற்காகப் பாராட்டுக்கள் . ..........!



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.