Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார்.

 

வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் போக்கு தொடர்பில் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கஜந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், இவ்வரசாரங்கம் தேசிய மக்கள் சக்தியாக அடையாளப்படுத்தப்படினும், அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சகல அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை மேற்கோள்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அரசாங்கத்திடமிருந்து முன்னேற்றகரமான நகர்வுகளை எதிர்பார்க்கமுடியும் எனத் தாம் கருதவில்லை எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று எதிர்வரும் பொதுத்தேர்தல் பற்றிய அமெரிக்கத்தூதுவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், 'ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் தெற்கில் பதிவான மாற்றம், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களிலும் பதிவாகும். இருப்பினும் அம்மாற்றம் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமானதாக இருக்காது. மாறாக எமக்குச் சாதகமான, எம்மை நோக்கிய மாற்றமாகவே இருக்கும்' என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு 'கடந்த காலங்களைப்போலன்றி, நாம் பாராளுமன்றத்துக்குத் தெரிவானதில் இருந்து சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் 'தேசியம்' என்ற கொள்கையையும், முழுமையான சமஷ்டி தீர்வையும் முன்னிறுத்தி செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே பொதுத்தேர்தலின் பின்னர் ஒற்றையாட்சி மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் என்பவற்றைப் புறக்கணித்து, முழுமையான சமஷ்டி தீர்வை சகலரும் வலியுறுத்தும் சாத்தியம் உருவாகும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலை தோற்றம்பெறும் பட்சத்தில், அந்தக் கொள்கை மாற்றத்தை அமெரிக்கா அதன் கொள்கையில் உள்வாங்கவேண்டும் எனவும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் அமெரிக்கத் தூதுவரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், எதிர்வரும் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் எனவும் உறுதியளித்தார்.

 

gajan-julie-251024-seithy%20(2).jpg

https://seithy.com/breifNews.php?newsID=324572&category=TamilNews&language=tamil

 
   
 
  
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலை தோற்றம்பெறும் பட்சத்தில், அந்தக் கொள்கை மாற்றத்தை அமெரிக்கா அதன் கொள்கையில் உள்வாங்கவேண்டும் எனவும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் அமெரிக்கத் தூதுவரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், எதிர்வரும் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் எனவும் உறுதியளித்தார்.

புரியவில்லை..... எமது அரசியல் தீர்வுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.