Jump to content

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து எந்த விவகாரமும் இல்லை, ஆனால் அது சிவில் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை  ஏனையவர்களை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதே பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மோர்னிங் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

சிவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றமையே பிரச்சினைக்குரிய விடயம் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நம்பகதன்மை மிக்க தகவல்களை அடிப்படையாக வைத்தே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம், அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார  தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படாது எனஅவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்புத்தகங்களில் வேறு பல சட்டங்கள் உள்ளன, ஆனால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படிஅவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. எங்கள் நாட்டின் சட்டத்தில் மரணதண்டனையும் உள்ளது ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்தாமல் விடுவதற்கும் ஜனாதிபதிக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதி பொதுமன்னிப்பிற்கும் எங்கள் சட்டத்தில் இடமுள்ளது, ஆனால் பாரதூரமான தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டமும் ஒரு சட்டமே அது தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197366

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நீக்கமாட்டோம்" என்று எங்குமே சொல்லப்படவில்லையே,....🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

பயங்கரவாத தடைச்சட்டமும் ஒரு சட்டமே அது தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நீக்க மாட்டோம் என்பதும் இதுவும் ஒன்றல்ல....ஏக்க ராஜ்ய வுக்கும் யுனிற்றரி ஸ்டேட்க்கும் வித்தியாசம் தெரியாத பத்திரிகையாளர்..😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஏன் தொடர்ந்தும் தக்கவைக்க விரும்புகின்றது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி?

image

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க மறக்க முடியாது என  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரச்சினையில்லை, மாறாக அது தவறாக பயன்படுத்தப்படுவதே  பிரச்சினை என தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது - பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான காரணமாக தேசிய மக்கள் சக்தி இதனை தெரிவிக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதே பிரச்சினைக்குரிய விடயம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என  குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க நீங்கள் மறக்க முடியாது.

இலங்கை இந்த சர்வதேச சட்டங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் காரணமாக அதனை கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிறைச்சாலை ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவர்கள் பத்திரிகையாளர்களே அல்லது சிவில் சமூகத்தினரோ இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே இது பழிவாங்குவது குறித்தது இல்லை மாறாக ஆனால்  ஆழமாக வேரூன்றிய இனமதரீதியான பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டது.

பயங்கரவாததடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்போம் என அரசாங்கம் தெரிவிக்கின்ற அதேவேளை பொலிஸார் உரிய நடைமுறைகளை புறக்கணித்தே அதிகளவில் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்கள்  துஸ்பிரயோகங்களையும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலையும் அதிகரிக்கின்றன தீவிரப்படுத்துகின்றன.

மனித உரிமை மீறல்களை அதிகரிக்க கூடிய ஏனையபல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்றன.

அடிப்படை உரிய செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால்  சட்டமே ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது,

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா?

https://www.virakesari.lk/article/197478

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை vs அதிகாரம்.

இந்த இரண்டும் நாட்டில் நல்லாட்சி நடைபெற அவசியம். 

மனித உரிமைகள் என்ற பெயரில் அதிகாரம் அற்ற அரசும் அல்லது கொஞ்சமும் மனிதாபிமானம் அற்ற அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் அரசும் இரண்டும் பலன் தரும் ஜனநாயக அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்னதுதான்,  சிங்களப் பேரினவாதத்தின் முகங்கள் மாறலாம் அதன் இதயம் ஒருபோதும் மாறப்போவதில்லை. அதற்கு வலதுசாரி, இடதுசாரி, பௌத்தம், கிறீஸ்தவம், அரசுசார்பு, அரசுசார்பற்ற என்ற பேதமில்லை எல்லாம் ஒன்றுதான். சிங்களம் ராஜபக்‌ஷ குடும்பத்தை ஒருபோதும் மறந்துவிடாது! அடுத்த சனாதிபதித் தேர்தலில் நாமல் 70% வாக்குகளை பெற்றாற்கூட வியக்க ஏதுமில்லை.

அநுர ஆட்சியில் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்காலிகமாகத்தன்னும் ஏதும் நன்மைகள் கிடைத்தால் சரி. மற்றும்படி ஒற்றையாட்சியை கடந்து எதுவும் வரப்போவதில்லை. 

சிங்களம் திணிக்கும் எதனையும் தமிழர் தரப்பு ஏற்று நிரந்தரமான ஒரு தீர்வு வந்தாலொழிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒருபோதும் நீக்கப்படப்போவதில்லை. அதுவே தமிழருக்கெதிரான சிங்களத்தின் பிரதான ஆயுதம். அதனால் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டது வேறு வரலாறு!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய நாடாளுமன்றம் கூடியதன் பின்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து அரசு முடிவு செய்யும்

புதிய அரசாங்கம் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லது கடந்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் அடுத்த பாராளுமன்றத்திற்குப் பின்னரே பரிசீலிக்கும் என்று உயர்மட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கையாள்வதில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்தமைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், வாராந்த அமைச்சரவை மாநாட்டில் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், இது இந்த நேரத்தில் ரத்து செய்யப்படவோ அல்லது திருத்தப்படவோ மாட்டாது என தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான பணிகளை கடந்த அரசாங்கம் ஆரம்பித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகு, அப்போதைய அரசு அசல் வரைவில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால், அது சட்டமாக்கப்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை அல்லது கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முழுமையான அமைச்சரவை இல்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றம் கூடியதும், அரசாங்கம் இந்த சட்டங்களைப் பார்த்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/311393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2024 at 04:17, வாலி said:

 

சிங்களம் திணிக்கும் எதனையும் தமிழர் தரப்பு ஏற்று நிரந்தரமான ஒரு தீர்வு வந்தாலொழிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒருபோதும் நீக்கப்படப்போவதில்லை. அதுவே தமிழருக்கெதிரான சிங்களத்தின் பிரதான ஆயுதம். அதனால் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டது வேறு வரலாறு!

 

சிங்களம் எதையும் திணிக்க தேவையில்லை ..இருக்கின்ற சட்டத்தை நடைமுறை படுத்தி தொடர்ந்து செயல் பட உதவினாலே  பெரிய விடயம் ..ஆனால் சிங்கள அதிகார வர்க்கம் அதை செய்யாது ....இநத தடவை  ஊழல் பற்றி பேசி ஆட்சியை பிடித்துவிட்டார்கள் அடுத்த தேர்தலில் ஊழல் பற்றி பேச முடியாது ...காரணம் இவர்கள் ஐந்து வருட ஆட்சியில் இருந்திருப்பார்கள் ....ஊழல் ஒழிந்து சுத்தமான ஆட்சி நடை பெற்றால் எதை வைத்து வாக்கு கேடபது...அடுத்த ஐந்து வருடத்திற்கு? ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள் - 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் - ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை திரும்பிப்பாருங்கள் - அனுரகுமாரவிற்கு மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடிதம்

image

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து மீண்டும் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம்  அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

CPA-prg_new.jpg

2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான காலப்பகுதியிலும் நவம்பரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற  தேர்தலிற்கு முன்னதாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த கடிதத்தை எழுதுகின்றது.

இலங்கை தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள, மிக மோசமான பொருளாதார வன்முறைகள்; மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டு மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற  சூழமைவில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் கவனத்தை  ஈர்க்க விரும்புகின்றோம்.

2022 அரகலய இயக்கம் ஆட்சிமுறை மாற்றம், ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், வெளிப்படைதன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தியது.

இவை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ள விடயங்கள்.

இலங்கையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் ,அரசியலமயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மற்றும் தண்டனையின்மை கலாச்சாரம், போன்றவற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கிய தேவையாக உள்ளதை  மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உட்பட ஏனைய அமைப்புகள் தொடர்ந்து  சுட்டிக்காட்டிவந்துள்ளன.

அர்த்தபூர்வமான ஆட்சிமுறை சீர்திருத்தம்,நாட்டில் ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியதன் அவசியம், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட பொறுப்புக்கூறலை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நாங்கள் அறிந்துள்ளோம் அங்கீகரிக்கின்றோம்.

மேலும் சமீபத்தைய நிகழ்வுகள் இலங்கையின் வன்முறை மற்றும் பலவீனமான சமாதானங்கள் குறித்த அனுபவங்களை மீள நினைவுபடுத்துகின்றன.

மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தீர்வைகாண தவறியமை ஏற்கனவே காணப்படும் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த நேரத்தில் 2024 ஒக்டோபரில் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள்  வெளியிட்ட முக்கியமான வாக்குறுதி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

சவால்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை திரும்பிபார்க்கவேண்டும், எனவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வெளிப்படையான அனைவரையும் உள்வாங்கி முன்னெடுக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த மாற்றங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும், புதிய நாடாளுமன்றத்திலேயே இதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

எனினும் அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகள் குறித்த உறுதிப்பாட்டை மீள உறுதி செய்யவேண்டும். மேலும் புதிய நாடாளுமன்றம் இந்த சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான ஆயத்தவேலைகளை செய்யவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற சம்பவங்கள்- 

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற நன்கு அறியப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வது, பொதுமக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயம்.

இதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துதல் அடங்கும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்-

நிறைவேற்றதிகார முறையை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விடயத்தில் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

13 வது திருத்தத்தை முழுமையாக  நடைமுறைப்படுத்தவேண்டும்-

13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய இனப்பிரச்சினை மற்றும் இலங்கையின் சிறுபான்மையினர் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் துயரங்களை தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை காண்பிப்பதற்கான முதல்படியாகும்.

தற்போதுள்ள அரசியலமைப்பு  ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இனமத சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம்.

சட்ட சீர்திருத்தம்

முன்மொழியப்பட்ட சட்டங்கள் மனித உரிமைதராதரங்களிற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்யவும், சிறுபான்மையினத்தவர்களை பாதிக்கும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும், சீர்திருத்தங்களை நாங்கள் கோருகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் இணையவழிபாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளுதல் 

இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நீதியை தேடி மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதற்கான நேர்மையான முயற்சிகள் அவசியம்.

பொறுப்புக்கூறல் தொடர்பான சுயாதீனமான நடவடிக்ககளை ஆரம்பித்தல், ஆழமாக வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்திற்கு முடிவை காண்பதற்காக உண்மையை தெரிவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/197629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது  உறுதிமொழியை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிறைவேற்றவேண்டும்.

அரசாங்கத்தின் சார்பில் அதன் அதிகாரி வெளியிட்ட அறிக்கை குறித்து எந்தவித தயக்கமின்றி  தெளிவுபடுத்தவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
    • விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது   அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார்.  .....சம்மதமா  ??? 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.