Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்!

591225976.jpg

இந்திய  - இலங்கை  கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடற்றொழில் தொடர்பான இந்தியா - இலங்கை கூட்டு செயற்குழுவின் 6ஆவது கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய அரசின் இந்திய மீன்வளத் துறையின் செயலர் அபிலக்சி லிகி தலைமையிலான இந்தியக் குழுவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கடற்படை, கடலோர பொலிஸார், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் .

இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும்  இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழில் துறை தொடர்பான அனைத்து  பிரச்சினைகள் குறித்தும், விரிவான மீளாய்வை மேற்கொண்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கைக் காவலில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.[ஒ] 

 

https://newuthayan.com/article/இலங்கை_–_இந்தியா_மீனவர்_பிரச்சினைக்கு_எட்டப்பட்ட_முடிவுகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.[ஒ] 

 

இவையிளின்ட வலியுறுத்தலுக்கு 🤔இலங்கை அரசு பயந்து நடுங்கி இன்றிரவு பிசினஸ் கிளாஸில் எல்லோரையும் அனுப்பி விடுவாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

மேலும் இலங்கைக் காவலில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.[

எல்லை தாண்டி மீன் பிடிக்க வருவதுபற்றி ஒன்றுமே பேசவில்லையோ?

Posted
3 hours ago, கிருபன் said:

மேலும் இலங்கைக் காவலில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது

இந்தியருக்கான பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிவுகள் என்ன? 

தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பே இல்லை. 

🤨



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.