Jump to content

கனடாவில் நகைகடை கொள்ளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள்.

இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின்  பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, valavan said:

நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.

இருக்க கூடும். நீராடியாக போய் செய்யாவிட்டாலும் உள்ளக புலனாய்வு தகவல்கள் கொடுத்தவர்களாக இருப்பார்கள். இப்பவும் தமிழர் வீடுகளை இனம் காட்டி அவர்கள் வீடுகளில் நகை களவெடுப்பதட்கு உடந்தையாக மற்ற இனத்தவர்களுடன் சேர்ந்து செயல்படுவது நம்மவர் தான். அந்த நாட்டின் சுதந்திரங்களையும் வளங்களையும் பாவித்து உருப்பட சந்தர்ப்பம் இருந்தாலும் செய்ய மாட்டாங்கள் இந்த பாவிகள். 😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, valavan said:

பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள்.

இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின்  பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.

 

Ontario மாகாணத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தெற்காசியர்களின் நகைக் கடைகளின் மீதான தொடர் கொள்ளையின் நேற்றைய நிகழ்வுதான் இது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் கடந்த இரு வருடங்களுக்குள் 4 KM சுற்றாடலுக்குள் நடைபெற்ற அந்தாவது அல்லது ஆறாவது கொள்ளை இதுவாகும். இதில் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்களே. 

எங்கள் மோட்டுக் குஞ்சுகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.  😏 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அக்கா ( லண்டன் ) இல் வங்கியில் பெட்டகத்தில் வைத்திருந்த நகையை எடுத்து திருமண நிகழ்வு ஒன்றுக்கு போட வீட்டுக்கு எடுத்து சென்று, திருமணத்துக்கும் அணிந்து பின்னர் வேலை காரணமாக ஒரு நாள் பிந்தி மீண்டும் வங்கி பெட்டகத்தில் வைப்பம் என்று யோசித்து இருக்க, இவாவும் அத்தானும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாத நேரம் வீட்டை கோடாலி கொண்டு உடைத்து 35,000 pounds பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் நடந்து 2 வருஷம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 கிலோமீட்டருக்குள் இவ்வளவு நடந்திருக்கிறதென்றால் கடைக்காரர்களையும் கொஞ்சம் சந்தேகப்பட தான் வேண்டி இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களின் நஷ்டஈட்டு தொகை, மற்றும் கொள்ளையடித்த நகைகளில் பாதி அல்லது முழுவதும் என்று இரட்டிப்பு லாபம் பார்க்கலாம். 
இப்படி தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. இப்படியும் நடந்திருக்கலாம் 😉  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'எல்லோர் கையிலும் துப்பாக்கிகள்............' என்னும் அமெரிக்காவின் உள்ளூர் திட்டத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்............ இங்கு வீடு புகுந்து களவு எடுப்பதெல்லாம் மிகக் குறைவு ஏனென்றால் வீட்டிற்கு களவெடுக்க வருகிறவரும் கிளிண்ட் ஈஸ்ட்வுட், வீட்டில் இருக்கிறவரும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தான்.........🤣. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்.......

அப்படியே களவு போனாலும், போலீஸ் வந்து 'பொருள் தானே போனது........... உயிர் இன்னமும் இருக்குது தானே........' என்பது போல இலேசாக எடுத்துக் கொள்வார்கள்........🤨.

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நகைகடை சம்பவத்தை தொடர்ந்து அடுத்த நிகழ்வாக தியேட்டருக்குள் தீ மூட்டுகிறார்கள் - வீரப்பரம்பரை சார்,

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.