Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னாருக்கு விஜயம் செய்தார். 

பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்  கலந்துகொண்டார்.

இதில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

DSC_0229.JPG

DSC_0233.JPG

DSC_0234.JPG

DSC_0250.JPG

DSC_0240.JPG

DSC_0260.JPG

DSC_0242.JPG

https://www.virakesari.lk/article/197862

  • கருத்துக்கள உறவுகள்
Posted

DSC_0233.jpg?resize=750,375&ssl=1

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்

இதன் போது தேசிய மக்கள் சக்தி யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டுள்ளதுடன் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்களாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பிரதமரின் வருகையை ஒட்டி மன்னார் நகர பகுதியில் பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1407091

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, சுவைப்பிரியன் said:

கிளிநொச்சிக்கும் வந்தவ.

நீங்களும் போனீங்களா. ???  🤣. இப்ப நீங்கள் சுமத்திரன்.  கட்சி இல்லையா??    😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

கிளிநொச்சிக்கும் வந்தவ.

முல்லைத்தீவுக்கும் போனவ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

முல்லைத்தீவுக்கும் போனவ.

என்னவோதெரியலை எனக்கு இந்த அம்மணி மேல் ஒரு பிடிப்பும் மரியாதையும் இருக்கிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Sasi_varnam said:

என்னவோதெரியலை எனக்கு இந்த அம்மணி மேல் ஒரு பிடிப்பும் மரியாதையும் இருக்கிறது. 

உண்மைதான். பிரதம மந்திரிக்கு உரிய ஆடம்பரம் இல்லாமல், அன்றாடம் வீதியில் காணும் சாதாரண பெண் போல் Denim கால்சட்டையுடன் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டது ஆச்சரியமாகவும் மனதிற்கு பிடித்தும் இருந்தது.

மற்றைய ஆசிய நாட்டு பெண் பிரதமர்களை விட… இவர் வித்தியாசமாக பொது வெளியில் வந்தது சிறப்பு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Sasi_varnam said:

என்னவோதெரியலை எனக்கு இந்த அம்மணி மேல் ஒரு பிடிப்பும் மரியாதையும் இருக்கிறது. 

இந்த அம்மணி தமிழர்களின் பல கோரிக்கைகள் மீது தனிப்பட்ட ரீதியில் நல்ல மதிப்புகளை வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.கட்சி என்று வரும்போது தனிஒருவரின் கருத்து ஏற்கப்பட மாட்டாது.

வெளிநாடுகளில் படித்த குடும்பம்.சேவை மனப்பாங்குடன் உள்ளூரில் வேலை செய்கின்றா.

எனக்கும் தனிப்பட இவவின் நடவடிக்கைகள் பிடித்திருக்கிறது.

பிரதமர் பதவி கூட ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக சொன்னார்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.