Jump to content

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

James Waterhouse

bbc

தமிழில் ரஜீபன்

தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும்.

கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர்.

ரஸ்யாவின் குண்டு கடையின் ஜன்னல்களை சிதறடித்துள்ளது. ஜபோரிஜியாவில் இது வழமையான நிகழ்வு. வீதியில் பத்துமீற்றர் குழி காணப்படுகின்றது.

தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்புகின்றோம்" என அவர்  குறிப்பிடுகின்றார்.

போரில் வெற்றிபெறுவதற்கான மிகச்சிறிய வாய்ப்பையே கொண்டுள்ள உக்ரைனிற்கு  அந்த வெற்றி அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது.

இந்த பகுதியிலேயே 2023ம் ஆண்டு உக்ரைன் பதில்தாக்குதலை முன்னெடுத்தது, ரஸ்ய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என எண்ணியது.

எனினும் அதில் வெற்றிபெறமுடியாத நிலையில் தற்போது உக்ரைனின் நிலை தப்பிழைத்தலில் கவனம் செலுத்துதல் என்பதற்கு மாறியுள்ளது.

ukraine_damage_house.png

நாளாந்தம் குண்டுகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை தாக்குகின்றன. உக்ரைன் படையினர் ரஸ்ய படையினரின் தாக்குதல்களை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர்.

ஜனநாய கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால் உக்ரைனிற்கான இராணுவ உதவி தொடரும் என தெரிவித்துள்ள அதேவேளை குடியரசுக்கட்சியின் கரங்களில் உள்ள அமெரிக்க காங்கிரசினால் அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படலாம்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் உக்ரைனிற்கான தற்போதைய 50 பில்லியன் டொலர் இராணுவ உதவி தொடர்வது கடினம் .

எவர் அமெரிக்க ஜனாதிபதியானாலும் அவர் உக்ரைன் எல்லைமீது கடும் தாக்கத்தை செலுத்துவார்.

உக்ரைனை நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு முன்வரிசைகளை முடக்கிவைக்குமாறு அமெரிக்க கேட்டுக்கொண்டால் ஜபோரிஜியா போன்ற பகுதிகள் வடகொரியா தென்கொரியா போன்று பிளவுபடலாம்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக தான் முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைன் சிறிதளவு நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்கின்றார்.

இரண்டாவதாக அமெரிக்கா தனது ஆதரவை முற்றாக விலக்கிக்கொண்டால், ரஸ்யா  உக்ரைனை மாத்திரமல்ல அதற்கு அப்பால் உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றக்கூடும்.

மூன்றாவது சாத்தியப்பாடு உக்ரைன் தனது பகுதிகளை ரஸ்யாவிடமிருந்து முற்று முழுதாக விடுவிப்பது - இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.

ukraine_forces_june_.jpg

அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்பட்டால் அந்த சுமையை உக்ரைனின் காலாட்படையினரே சுமக்கவேண்டியிருக்கும் என்கின்றார் உக்ரைனின் படைவீரர் ஆண்ட்ரி - இவர் போர் முன்னரங்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தயாரிப்பான  கவசவாகன பிரிவின் தளபதி.

நாங்கள் எங்களிடம் உள்ளவற்றை வைத்துக்கொண்டு போரிடுவோம், ஆனால் உக்ரைனால் தனியாக போரிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றார் அவர்.

அவர்கள் நவம்பர் ஐந்தாம் திகதிக்காக பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிச்சயமற்ற தன்மை போர்க்கள எதிர்பார்ப்புகளிற்கும் அபிலாசைகளிற்கும் தடையாக காணப்படுகின்றது. மேலதிக உதவியை பெறுவதற்கான அரசியல் முயற்சிகளிற்கும் பாதிப்பை  ஏற்படுத்துகின்றது.

உக்ரைனின் யுத்த முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கும் போது அதன் மேற்குலக சகாக்கள் அமெரிக்காவையே முன்னுதாரணமாக பார்க்கின்றனர்.

எங்களிற்கு உதவும் விருப்பம் இல்லாத வேட்பாளர் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளார் என்பதை நாங்கள் கேள்விப்படும்போது அது ஏமாற்றமளிக்கின்றது, விரக்தியளிக்கின்றது என்கின்றார் ஆண்ட்ரி. 

உக்ரைன் இராணுவம் அதன் சமூகத்தை போல உறுதியாக காணப்படுகின்ற நிலையில் ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மையை நேரடியாக எதிர்கொண்ட ஒருவரை நாங்கள் எதிர்கொள்வது அவசியமாக காணப்பட்டது.

ukraine_war_octo_23.jpg

ரஸ்யா முழு அளவிலான இராணுவநடவடிக்கையை ஆரம்பித்தவேளை லியுபோவின் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுவிட்டனர்.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாங்கள் அவரை அவரது கிராமமான கொமிசுவாகாவில் சந்தித்தோம். அவ்வேளை ரஸ்ய படையினரால் அவரது வீடு அழிக்கப்பட்டிருந்தது.

போர் இடம்பெறும் பகுதிக்கு மிக அருகில் வசித்து வருகின்ற போதிலும் இம்முறை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். அவரது புதிய தொடர்மாடியில் அவரை சந்தித்தவேளை உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டுமா என நாங்கள் அவரை கேட்டோம்.

அப்படியென்றால் தங்கள் உயிரை கொடுத்தவர்களின் கனவுகளிற்கு என்னாவது என அவர் எங்களிடம் கேட்டார். 1991 இல் எங்கள் எல்லைகளாக காணப்பட்ட பகுதிகளை நாங்கள் அடையும் வேளையே யுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன் , அவ்வேளை கிரிமியா லுகான்ஸ்க் டொனெட்ஸ்க் ஆகியன எங்களுடையவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்தார்.

கமலா ஹரிசே உக்ரைனின் விருப்பத்திற்குரிய வேட்பாளராக காணப்படுகின்றார். அவருக்கு எதிராக ரஸ்யா முன்னெடுக்கும் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு உக்ரைன் ஊடகவியலாளர்கள் முயல்கின்றனர்.

இதேவேளை உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கில் யுத்தம் விரைவில்முடிவிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவமே அதற்கான சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர்.

ரஸ்ய படையினர் நெருங்கிக்கொண்டிருக்கும் போக்ரொவ்ஸ்க்கில் பலரை நாங்கள் சந்தித்து பேசினோம்.

ரஸ்யா தனது பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற உணர்வு இங்கு காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/197866

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளையில் இருந்து… ட்ரம்பு தான், அமெரிக்க ஜனாதிபதி என்று உக்ரைன் காரருக்கு சொல்லி விடுங்கோ. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாளையில் இருந்து… ட்ரம்பு தான், அமெரிக்க ஜனாதிபதி என்று உக்ரைன் காரருக்கு சொல்லி விடுங்கோ. 😂

கனபேருக்கு வயித்த கலக்கிறத கண்ணால பார்க்கக்கூடியதாய் இருக்குது. நாளைக்கு ரம்ப் பார்ட்டி வைக்கிறன். வாற எண்டால் வாங்கோ...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

கனபேருக்கு வயித்த கலக்கிறத கண்ணால பார்க்கக்கூடியதாய் இருக்குது. நாளைக்கு ரம்ப் பார்ட்டி வைக்கிறன். வாற எண்டால் வாங்கோ...🤣

கட்டாயம் நீங்கள் வைக்கும் "ரம்ப் பார்ட்டியில்" கலந்து கொள்கின்றேன்.
குடிக்க, கடிக்க பலகாரம் எல்லாம் இருக்குதானே. 😂

நான்,  "வெடி பக்கற்"  வாங்கிக் கொண்டு வாறன்.
விடிய,விடிய... வெடி கொழுத்த வேணும். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கட்டாயம் நீங்கள் வைக்கும் "ரம்ப் பார்ட்டியில்" கலந்து கொள்கின்றேன்.
குடிக்க, கடிக்க பலகாரம் எல்லாம் இருக்குதானே. 😂

நான்,  "வெடி பக்கற்"  வாங்கிக் கொண்டு வாறன்.
விடிய,விடிய... வெடி கொழுத்த வேணும். 🤣

நான் ரம்ப் வெற்றிய இப்பவே கொண்டாட தொடங்கீட்டன். அடுத்த பஸ்ச பிடிச்சு பக்கெண்டு வாங்கோ....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

கனபேருக்கு வயித்த கலக்கிறத கண்ணால பார்க்கக்கூடியதாய் இருக்குது. நாளைக்கு ரம்ப் பார்ட்டி வைக்கிறன். வாற எண்டால் வாங்கோ...🤣

 

7 hours ago, தமிழ் சிறி said:

கட்டாயம் நீங்கள் வைக்கும் "ரம்ப் பார்ட்டியில்" கலந்து கொள்கின்றேன்.
குடிக்க, கடிக்க பலகாரம் எல்லாம் இருக்குதானே. 😂

நான்,  "வெடி பக்கற்"  வாங்கிக் கொண்டு வாறன்.
விடிய,விடிய... வெடி கொழுத்த வேணும். 🤣

உங்க‌ட‌ பார்ட்டில‌ நானும் வாறேன் ஒட்டு மொத்த‌ யாழ்க‌ள‌மே எங்க‌ட‌ பார்ட்டிய‌ பார்த்து அதிர்ந்து போகும் அள‌வுக்கு இருக்கனும்

மைக்ஜ‌க்ச‌ன் இல்லாத‌து குறை தான்...... அவ‌ருக்கு ப‌தில் 50ரிசென்ட‌ பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து.....................................

தென் ஆபிரிக்காவில் இருந்து மொட‌ல் அழ‌கிய‌லை வ‌ர‌ வைப்போம் அவேன்ட‌ ஆட்ட‌த்தை பார்த்து பாட்டிக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் அச‌ந்து போக‌னும் ஓக்கே தாத்தா

செய்யிறோம் அச‌த்துகிறோம்😁👍...........................

Edited by வீரப் பையன்26
  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

 

கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர்.

 

சர்வதேசத்தை நம்பி ஏமாறுவதற்கென்றே பல தேசங்களும் வரிசையில் நிற்கின்றன போல. நாங்கள் எங்களை சர்வதேசம் காப்பற்றும் என்றிருக்க, அது கைவிட, பலமாகவே ஏமாந்தோம். ஆனாலும் அதன் பின்னரும் இப்பவும் சர்வதேசத்திற்கு குரல்  கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

உக்ரேன், பாலஸ்தீனம்,........... என்று இந்த வரிசையில் எப்பவும் நாடுகள் நின்றபடியே இருக்கின்றன.

அமெரிக்கா என்பது இந்த இரு வேட்பாளர்களை விட அல்ல, எந்த வேட்பாளர்களை விடவும் மிகவும் பெரியது.

எவராலும், கமலா ஹாரிஸ் என்றால் என்ன, ட்ரம்ப் என்றால் என்ன, அமெரிக்காவின் நலனுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் இன்னொரு இடத்திற்கு மாற்றமுடியாது.

  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

மைக்ஜ‌க்ச‌ன் இல்லாத‌து குறை தான்...... அவ‌ருக்கு ப‌தில் 50ரிசென்ட‌ பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து...........................

அப்பன் 50சென்ற் வேண்டாம் ஆள உள்ளுக்கு தூக்கி போடப்போறாங்கள் போல கிடக்கு...🤣
ஏனெண்டால் அவற்ற கூட்டு பயங்ங்ங்கரமான ஆளாம்.. 🙃

50 Cent explains why he never went to Diddy's parties

ஆள் உள்ளுக்கை எண்டு தெரியும் தானே🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அப்பன் 50சென்ற் வேண்டாம் ஆள உள்ளுக்கு தூக்கி போடப்போறாங்கள் போல கிடக்கு...🤣
ஏனெண்டால் அவற்ற கூட்டு பயங்ங்ங்கரமான ஆளாம்.. 🙃

50 Cent explains why he never went to Diddy's parties

ஆள் உள்ளுக்கை எண்டு தெரியும் தானே🤣

அப்ப‌டியா

2002 ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ல்லா தானே இருந்தார் பாட‌லில் க‌ல‌க்கிறார் நிறைய‌ ப‌ண‌ ம‌ழையில் ந‌னைந்தார் இப்போது சிறையா இவ‌ர்  2pacக்க‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ர் 2Pacக்கின் இழ‌ப்பு த‌ன‌க்கு வேத‌னை அளிப்ப‌தாக‌ 2002க‌ளில் சொல்லி இருந்தார்............................

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

எவராலும், கமலா ஹாரிஸ் என்றால் என்ன, ட்ரம்ப் என்றால் என்ன, அமெரிக்காவின் நலனுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் இன்னொரு இடத்திற்கு மாற்றமுடியாது.

அங்கே அதாவது அமெரிக்காவில் ஒரு இருண்ட உலகம் இருக்கின்றது என சொல்கின்றீகள்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அங்கே அதாவது அமெரிக்காவில் ஒரு இருண்ட உலகம் இருக்கின்றது என சொல்கின்றீகள்.😎

வரலாற்றில் இருந்த எல்லா வல்லாதிக்கங்களும் போலவே இந்த நாடும், அண்ணை............... காலமாற்றத்தில் இன்றைய உலகில் சில விடயங்களை வெளிப்படையாக செய்ய முடியாது என்பதே உண்மை............... 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

வரலாற்றில் இருந்த எல்லா வல்லாதிக்கங்களும் போலவே இந்த நாடும், அண்ணை............... காலமாற்றத்தில் இன்றைய உலகில் சில விடயங்களை வெளிப்படையாக செய்ய முடியாது என்பதே உண்மை............... 

குருநாதா

உங்க‌ட‌ நாட்டில் பிரிவினைவாத‌ம் இருக்கா

30வ‌ருட‌த்துக்கு முத‌ல் Oklahoma மானில‌ம் நாங்க‌ள் அமெரிக்கா கூட‌ இருக்க‌ விரும்ப‌ல‌ எங்க‌ளை  த‌னி நாடாக‌ இருக்க‌ போகிறோம் என்று சொன்னார்க‌ளா.....................அல்ல‌து வேறு மானில‌ம் ஏதும் த‌னி நாடு கோரிக்கைய‌ முன் வைத்த‌வையா...........................இந்தியாவை விட‌ அமெரிக்கா மானில‌ங்க‌ளுக்கு அவை சுய‌மாய் முடிவெடுக்கும் அதிகார‌ங்க‌ள் அதிக‌ம் இருக்க‌ த‌க்க‌ ஏன் த‌னி நாட்டு கோரிக்கைய‌ முன் வைத்த‌வை அந்த‌க் கால‌த்தில்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நான் ரம்ப் வெற்றிய இப்பவே கொண்டாட தொடங்கீட்டன். அடுத்த பஸ்ச பிடிச்சு பக்கெண்டு வாங்கோ....😂

அவர் பஸ்சில் வரமாட்டார் ....... நண்பர் பாஞ்ச்சுடன் காரில் வருவார் . ......கொண்டுவருவது தூள் தூளா பறக்கும் வெடிப் பக்கட்டுடன் ........கொண்டு போவது பலகாரப் பெட்டியுடன் . ........!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியாவை விட‌ அமெரிக்கா மானில‌ங்க‌ளுக்கு அவை சுய‌மாய் முடிவெடுக்கும் அதிகார‌ங்க‌ள் அதிக‌ம் இருக்க‌ த‌க்க‌ ஏன் த‌னி நாட்டு கோரிக்கைய‌ முன் வைத்த‌வை அந்த‌க் கால‌த்தில்.........................

பையன் சார், இங்கு சில மாநிலங்களில் மிகச் சிறிய பிரிவு மக்களிடையே தனிநாட்டு கோரிக்கை இருக்கின்றது. கலிஃபோர்னியாவில் இருக்கின்றது, டெக்சாஸில் இருக்கின்றது..............

தங்களை மேட்டுக்குடிகள் என்று நினைப்போர் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் தானே. இலங்கையில் கூட, தமிழர்கள் மத்தியில் கூட, பிரதேசம் - ஊர் - பரம்பரை இப்படி ஏதாவது ஒரு வகையில் தங்களை சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று எண்ணுவோர் இருக்கின்றார்கள். அது போலவே இங்கும். அவர்கள் பிரிந்து போக விரும்புகின்றனர். வேறு சிலருக்கு குடியேறிகள் என்றாலே ஒரு விதத்தில் தீண்டத்தகாதவர்கள் போல, அவர்களும் தனியே போக விரும்புகின்றனர். இப்படி பிரிந்து போக வேண்டும் என்று விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆனாலும் இவை மொத்தமும் சேர்ந்தாலும், ஒரு நகத்தில் விழுந்த ஒரு சிறு கீறல் அளவில் கூட வருமா என்று தெரியவில்லை. 

இங்கு மாநிலங்களுக்கு உச்சபட்சமான அதிகாரங்களும், சுதந்திரமும் இருக்கின்றன. அவை எந்த முயற்சிகளும் இன்றி தாராளமாகக் கிடைப்பதால், அவற்றை எவருமே பெரிதாக எடுப்பதில்லை, உணர்வதில்லை. உப்பு இல்லாவிட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று சொல்வார்களே.........

 

 

Edited by ரசோதரன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்

அப்பிடி ஒண்டும் நடக்காது.  ட்ரம்ப் சொல்லுறதை செத்தகிளி கேட்காவிட்டால் செத்தகிளிக்கு இருக்கு ஆப்பு. அதோட இஸ்ரேலோட செத்தகிளி முண்டினால் தெரியும் நம்மாள் யாரெண்டு!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பையன் சார், இங்கு சில மாநிலங்களில் மிகச் சிறிய பிரிவு மக்களிடையே தனிநாட்டு கோரிக்கை இருக்கின்றது. கலிஃபோர்னியாவில் இருக்கின்றது, டெக்சாஸில் இருக்கின்றது..............

தங்களை மேட்டுக்குடிகள் என்று நினைப்போர் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் தானே. இலங்கையில் கூட, தமிழர்கள் மத்தியில் கூட, பிரதேசம் - ஊர் - பரம்பரை இப்படி ஏதாவது ஒரு வகையில் தங்களை சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று எண்ணுவோர் இருக்கின்றார்கள். அது போலவே இங்கும். அவர்கள் பிரிந்து போக விரும்புகின்றனர். வேறு சிலருக்கு குடியேறிகள் என்றாலே ஒரு விதத்தில் தீண்டத்தகாதவர்கள் போல, அவர்களும் தனியே போக விரும்புகின்றனர். இப்படி பிரிந்து போக வேண்டும் என்று விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆனாலும் இவை மொத்தமும் சேர்ந்தாலும், ஒரு நகத்தில் விழுந்த ஒரு சிறு கீறல் அளவில் கூட வருமா என்று தெரியவில்லை. 

இங்கு மாநிலங்களுக்கு உச்சபட்சமான அதிகாரங்களும், சுதந்திரமும் இருக்கின்றன. அவை எந்த முயற்சிகளும் இன்றி தாராளமாகக் கிடைப்பதால், அவற்றை எவருமே பெரிதாக எடுப்பதில்லை, உணர்வதில்லை. உப்பு இல்லாவிட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று சொல்வார்களே.........

 

 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி குநாதா👍..........................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதால் அங்கும் கட்சிக்குள் குழப்பம் உண்டு.
    • இதைத் தான் நானும் யோசித்தேன். அவர்கள் பார்வையில் எல்லோரும் இந்தியர்களே. இந்தியருக்கு தானே அடி விழுகுது என்று அசட்டையாக இருக்காதீங்க.
    • ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது…. ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….🤣 ————————— கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்   2. சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3. வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4. டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம்  5. ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்  6. செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை  7. சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்  8. அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை  9. முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10. ஐங்கரநேசன்( சுயேட்சை குழு இல்லை   11. நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12. சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13. சரவணபவன் ( சுயேட்சை குழு இல்லை   14. அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15. தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்   16. எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17. சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை   18. சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு இல்லை  19. ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20. மனோ கணேசன் (கொழும்பு மாவட்டம்)ஆம் 21. ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம்   22. விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை   23. சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24. சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25. செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்   26. குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்.    வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)   27. யாழ் மாவட்டம் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1 28. வன்னி - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1   29. மட்டக்களப்பு -தமிழரசு கட்சி2  30. திருமலை - ஐக்கிய மக்கள் சக்தி 1   31. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 3  32. நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 3 33. அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 5 34. கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12   35. திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 2   36. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0   37. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன்   வினா 38 - 48 வரை  பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்).    38. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   39. உடுப்பிட்டி தமிழரசு கட்சி   40. ஊர்காவற்றுறை ஈழமக்கள் ஜனநாயக கட்சி   41. கிளிநொச்சி தமிழரசு கட்சி 42. மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   43. முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44. வவுனியா தமிழரசு கட்சி   45. மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46. பட்டிருப்பு தமிழரசு கட்சி 47. திருகோணமலை தமிழரசு கட்சி 48. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி   51  - 52 வரை  வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52. தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை  பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்?    53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள்  1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும்.    53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54. தமிழரசு கட்சி 6 55. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56. தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1   58. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 61   59. தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 131   60. புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 13    பலர் தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் இடையான வேறுபாட்டை உணரவில்லை என நினைக்கிறேன். பியதாசவுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் எமது வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்ற சுமந்திரனின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நானும் அமைதி காக்கிறேன்🤣. 
    • உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣
    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.