Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளில்  தான் மாத்திரம் கொலை முயற்சியை எதிர்கொண்டவர் என்ற போதிலும் ஏன் ஏனைய ஜனாதிபதிகளிற்கு 100 முதல் 240 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்கியுள்ளீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளால் தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை தான் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/197944

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது பாதுகாப்பை குறைக்காதீர்கள்; கணவருக்கு நேர்ந்தது போல் என்னையும் கொலை செய்ய சதித்திட்டம் என்கிறார் சந்திரிக்கா

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வழங்கிய குறித்த கடிதத்தில், தனது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆக குறைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முறையே 243 மற்றும் 200 மற்றும் 109 நபர்களை கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின்படி தனக்கு மட்டும் 30 மெய்ப்பாதுகாவலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு புதிராகவே இருப்பதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/311588

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு முப்பது மெய்ப்பாதுகாவலர்கள் போதாதா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

எனது பாதுகாப்பை குறைக்காதீர்கள்; கணவருக்கு நேர்ந்தது போல் என்னையும் கொலை செய்ய சதித்திட்டம் என்கிறார் சந்திரிக்கா

செத்த பாம்பை யார் அடிப்பார்? 😁 

  • கருத்துக்கள உறவுகள்

Rajarajan Govindaraju on LinkedIn: Time is always strange Once the  President of Sri Lanka At that time,if… | 16 comments

லண்டனில் கல்யாணவீட்டில் செருப்பை திருடுறவங்கள்போல திரிஞ்சதுக்கு இப்போ இலங்கையில் இருக்குற பாதுகாப்புக்கு என்ன குறைச்சல?

நாங்கள் உங்களை தேடி தேடி கொல்ல, மொக்குத்தனமான மதவாத போராட்டம் நடத்துகிறவர்கள் போல் இனம் அல்ல, ஆயுதபோராட்டம் என்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தது முயன்று பார்த்தோம் முடியவில்லை, அவரவர் வேலையை பார்க்க அடுத்த கட்டத்துக்கு போய்விட்டோம்.

ஆனால் ஆயுதபோராட்ட காலத்தில் நீங்கள் செய்த மகா பாதகங்கள் உங்கள் மனசை உறுத்துது அதனால் இன்றும் பயத்தில் மேலதிக பாதுகாப்பு கேக்குது.

ஆயுத போராட்ட காலத்தின்ன் பின்னர் தமிழர்களின் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரே ஜனாதிபதி அம்மையார் அவர்கள்,

வந்தவுடன் தமிழர்களுக்கு செலுத்திய  புகழ்மிக்க நன்றிக்கடன்கள்:

நவாலி தேவாலயம் படுகொலை

நாகர்கோயில் பள்ளி மாணவர்கள் படுகொலை

செம்மணி புதைகுழி படுகொலைகள்

ஜெயசிக்குறு நடவடிக்கை படுகொலைகள் 

குமார் பொன்னம்பலம் படுகொலை

மிருசுவில் படுகொலைகள்

கிழக்கில் விஷேட அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையின் தமிழர்மீதான படுகொலைகள்

அப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இப்படி ஆயிரக்கணக்கானவர்களை சிரித்துக்கொண்டே கொன்றவர்களுக்கு தமது ஒத்தை உயிரென்றால் எவ்வளவு உயிர்பயம் வருது.

நம்மில் சிலரிடையே இன்றும் தேர்தலை புலிகள் புறக்கணித்ததால்தான் மஹிந்த ஆட்சிக்கு வந்து எல்லாமே அழிந்து போனது என்று, சரி தேர்தலை புறக்கணிக்காமல் சந்திரிக்காவை தமிழர்கள் ஆதரித்ததால் மட்டும் என்ன நடந்தது?

அக்காலகட்டத்தில் தங்கு தடையின்றி  இழுவை மல்டி பரல்கள் , மோட்டர் குண்டுகள்,ஆயுதங்கள் முல்லைவரை எமது அமைப்பினால் கொண்டுவந்து இறக்கப்பட்டதால்தான் ஜெயசிக்குறு நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இல்லையென்றால் அன்றைக்கே ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற  ஒரு முடிவு சந்திரிக்காவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:
ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை தான் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

 

சந்திரிக்காவின்... நானும், ரவுடி தான் மூமென்ட். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தகவலை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அப்படி எந்த நீக்கமும் செய்யப்படவில்லை. 30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு. அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/311801

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.