Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மண்டியிடும் மன்னர்கள்
-------------------------------------
இரண்டு சிறு குழந்தைகளுடன்
இருவர் நாங்கள்
இந்த வீட்டிற்கு
அநேக வருடங்களின் 
முன்னொரு நாள் குடி வந்தோம்
 
பன்னிரண்டு வீடுகள்
உள்ள தெருவில்
பதினொரு மன்னர்கள் 
குடி இருந்தனர்
 
சில மன்னர்கள் பேசினர்
சிலர் வெறும் புன்னகை மட்டும்
சிலர் எங்களைக் காணவேயில்லை
 
அடைமழை நாளென்றில்
கடும் காற்றில்
என் முன் நின்ற பெரும் மரம்
காற்றின் முன் மண்டியிட மறுத்து
முறிந்து விழுந்தது
 
மன்னர்கள் ஓடி வந்தனர்
 
அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை
என் வீட்டிற்கும் சேதமில்லை
எல்லோரும் மீண்டும் போய் விட்டனர்
வந்த வழியே
 
ஓங்கி வளர்ந்து
உள்ளே ஆழ வேர் விட்டு
நித்தியம் என்று நின்ற மரங்களே 
பொத்தென்று விழ
இங்கே மன்னர்கள் மட்டும்
நிலைக்கவா போகின்றார்கள்
 
மூப்பும்
நோயும்
பிணியும்
பிரிவும்
காலத்தில் வர
 
அவர்கள் எவ்வளவு மண்டியிட்டும்
காலம் விடவில்லை
பதினொரு மன்னர்களையும்
 
மாமன்னன் அலெக்சாண்டரே
கடைசியில் மண்டியிட்டாராம்
 
இந்த தெருவில்
இப்போது நான் ஒரு மன்னன்.
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் ஆடியடங்கும் வாழ்க்கையடா

பாட்டை பதிந்துவிட்டு வர 

உங்கள் கவிதை அதை ஞாகபமூட்டுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் ஆடியடங்கும் வாழ்க்கையடா

பாட்டை பதிந்துவிட்டு வர 

உங்கள் கவிதை அதை ஞாகபமூட்டுகிறது.

நான் இதை எழுதிப் போட்டு விட்டு, என்ன பதிவுகள் புதிதாக வந்திருக்கின்றது என்று பார்க்க உங்களின் 'ஆடியடங்கும் வாழ்க்கையடா............' இருந்தது...............🤣.  

  • கருத்துக்கள உறவுகள்

நடுத்தர வயதுப் புலத்து வலசை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறிங்கள். நல்ல கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லொதொரு கவிதை. 
இப்பொழுது எல்லாம் எனக்கும் இந்த முதுமையை எப்படி கழிக்கபோகின்றோம் என்பது பற்றி ஒரே யோசனையாகவுள்ளது. நேற்று முன்தினம், அருமையான ஒரு ஞாயிறுக்கிழமை மாலை வேளையில் கொழும்பின் புறநகரிர் பகுதியில் எனது வீட்டிலிருந்து நடந்து ஒவ்வொரு வாரமும் அந்த கிறிஸ்தவ ஆரதனைக்கு செல்வேன். மாலை 5 ௬,  மணியளவில் இப்பொழுதது நவம்பர் மாதம் என்பதால் மாலை நேரம் மிகவும் ரம்மியமான  இருக்கும். சந்தடியற்ற தெரு, பற‌வைகள், அணில்கள் சத்தம், சூரிய அஸ்தமனம் என்பன மனதுக்கு இதமானவைகள்.

அந்த ஆங்கில ஆரதனையின் முடிவில் ஒரு வ்யது 84 வ்யதுடைய ஒருவர் காலம் சென்ற தனது மனைவியை பற்றி ஆங்கிலத்தில் ஒரு கவிதை அருமையாக வடித்திருந்தார். முடிந்த‌வுடன் அவரை பாராட்டிவிட்டு அவருடைய அழைப்பின் பேரில், ஆலயத்திற்கு அடுத்து இருந்த அவரது வீட்டிட்கு சென்றேன். 

தனிமையாக வாழ்கின்றார். வீடு நிறய ப‌ழைய படங்கள், மனைவி, பிள்ளைகளுடன் எடுத‌த படங்கள். காலையிலேயே எழுந்து தோட்டவேலைகள் செய்கின்றார்.  வீடு நிறைய செடிகள் காய் கறிகளுடன் கய்த்து தொங்குகின்றது. மனம் முழுவதும் கடந்தகால நினைவுகளை அசை போட்டபடி வாழ்கின்றார். அருமையான அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் 20 களில் என்னவிட்டா யாரு, எண்டும் இருபதிலதான் நான் இருப்பன் எண்ட நினைப்பில நானும் வாழ்ந்திருக்கிறன்.. 30 களின் இறுதியில் யதார்த்தம் மூஞ்சையில் அடிக்க ஆரம்பிக்கிறது.. இதுதான் வாழ்க்கை..

நல்ல ஒரு கவிதை.. எவ்வளா பெரிய ஒரு வாழ்க்கை தத்துவத்தை வாழ்வின், நிலையாமையை, அதுவும் முப்பது நாப்பது வருசத்து அனுபவத்துக்கு பிறகு வரக்கூடிய ஒரு பெரிய காலப்பகுதியை ஒரு நாலுவரிக் கவிதையில் மின்னல்போல ஒளியின் வேகத்தில் கடந்துபோக வைத்திருக்கிறீர்கள்..

நீண்ட நாளைக்கு பிறகு எதேச்சையா இந்தப்பக்கம்(கவிதைப்பக்கம்) வந்தப்போ ஒரு நல்ல அனுபவம்..ஒரு  நல்ல கவிதை..

ஒரு மழை நாளின் மாலைப்பொழுதில் எனக்கு பிடித்த முற்றத்து மாமரத்துக்கு கீழ் இளையராஜா பாடலுடன் மிக்சரையும் தேநீரையும் சுவைத்தபடி கயித்துக்கட்டிலில் கடந்து வந்த காலங்களை அசைபோட்டது போல ஒரு அனுபவக்கிளர்ச்சி.. கறுப்பு வெள்ளையாக, கலர் கலராக ஆயிரம் ஞாபகம்கள் எழுந்து விழுந்து எழுந்து அலைகின்றன கடல் அலைகளைப்போல மனக்குளத்தில்..

என்னைப்போல இந்தக்கவிதையை படித்த எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும்.. அதுதான் ஒரு நல்ல கவிதை செய்யக்கூடியது..

ஒரே ஒரு அம்மாவின் பழைய சேலை வாசம் கிளர்த்தும் ஓராயிரம் நினைவுகளை போல பல படிமங்களை பலகாட்சிகளை ஒரு கவிதையில் கொண்டுவந்து கொட்ட ஒரு சிலரால் மட்டுமே முடியும்.. ❤️❤️👏👏 🫡 ரசோதரன்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

நல்லொதொரு கவிதை. 
இப்பொழுது எல்லாம் எனக்கும் இந்த முதுமையை எப்படி கழிக்கபோகின்றோம் என்பது பற்றி ஒரே யோசனையாகவுள்ளது.

மிக்க நன்றி கொழும்பான்.

நீங்கள் சொல்லியிருப்பவர் போன்ற சில மனிதர்களை இங்கு கண்டிருக்கின்றேன். அவர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைகள் எல்லாம் என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது போல ஒரு உணர்வு.

சரத்சந்திர சட்டோபாத்யாய என்று நினைக்கின்றேன். மேற்கு வங்காள எழுத்தாளர். மிகப் பிரபலமான 'தேவதாஸ் - பார்வதி' கதையை எழுதியவர். ஒரு காலத்தில் இவர் ஒரு பெரிய நட்சத்திரம் என்று சொல்கின்றனர். இவர் இவரின் கடைசி நாட்களில் ஒரு மாணாக்கருக்கு எழுதிய கடிதம் ஒன்றை பல வருடங்களின் முன், என் இளமைக் காலத்தில், வாசித்திருக்கின்றேன். 

உங்களுக்கு இருக்கும் யோசனையே அவருக்கும் இருந்தது............. இது எங்கள் எல்லோருக்கும் என்றோ வரும் போல.................   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரே ஒரு அம்மாவின் பழைய சேலை வாசம் கிளர்த்தும் ஓராயிரம் நினைவுகளை போல பல படிமங்களை பலகாட்சிகளை ஒரு கவிதையில் கொண்டுவந்து கொட்ட ஒரு சிலரால் மட்டுமே முடியும்..

மிக்க நன்றி, ஓணாண்டியார்.

நீங்கள் நல்ல ஒரு ரசிகரும் கூட, உங்களின் எழுத்தைப் போலவே..........👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.