Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரூபன் சிவராஜா

பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ்
சொல்லி னாகும் என்மனார் புலவர்
’ (தொல். 158)

‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது.

அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை,
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157)
என்கிறது தொல்காப்பியம்.

சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக்கப்படுகின்றது. சொற்கள் பொருள் உணர்த்துகின்ற தன்மையை விளக்குகின்ற இயல், சொற்பொருளியல் அல்லது பொருண்மையியல் (Semantics) என்று வழங்கப்படுகின்றது. அதாவது மொழியின் உள்ளடக்கத்தில் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் அவற்றின் பொருள் அல்லது பொருள் பற்றிய ஆய்வு பொருண்மையியல் ஆகும்.

இந்தக் குறிப்பின் தலைப்பிற்கு இந்த விளக்கம் ஏன் அவசியப்படுகிறது என்று சிலர் நினைக்கலாம். ஒரு சொல்லின் உள்ளார்ந்த அர்த்தம், அதன் பயன்பாடு, நடைமுறை, விளைவு குறித்த புரிதலுக்கு இந்த விளக்கம் உதவக்கூடியது.

நடைமுறையிற் பல தமிழ்ச் சொற்கள் அதன் உண்மையான பொருளிலிருந்து நழுவி முற்றிலும் வேறான அர்த்தத்தை அழுத்தமாக மனங்களிற் பதியச் செய்துள்ளன. உதாரணமாகக் ‘கற்பு’ என்ற சொல்லைக் குறிப்பிடலாம். கற்பு என்பதற்கு ‘நிறுமனமயப்பட்ட’ ஒழுங்கிற்கு இணங்கி நடத்தல் என்ற பொருளைத் தொல்காப்பியம் தருகின்றது. அடிப்படையில் கடப்பாடு, உறுதிப்பாடு போன்ற சொற்களே அதற்கு நெருங்கி நிற்கக்கூடியவை.

‘கற்பு’ என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் ‘சொல் வழுவமை’, கொடுத்த வாக்கிற்கு ஒழுக நடத்தல் (commitment ) என்பதாகும். அதாவது கடப்பாட்டுடன் உறுதிப்பாட்டுடன் ஒரு நிறுவன ஏற்பாட்டுக்குள் ஒழுகுவதைக் குறிப்பது. அச்சொல் நடைமுறை அர்த்தத்தில், சமூக யதார்த்தத்தில் பெண்களின் ‘உடல்’, ‘ஒழுக்கம்’ சார்ந்ததாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. புனிதம் என்ற போர்வையிற் பெண்ணை ஒடுக்குவதற்கான ஆணாதிக்க விளைவாக அதன் பயன்பாடு ஆக்கப்பட்டிருக்கின்றது. கற்பைப் பெண்ணின் பிறப்புறுப்பிற் கொண்டுபோய் வைத்த பெருமை ‘தமிழ்ப்பெருங்குடி’யின் ‘வழித்தோன்றல்’களைச் சாரும்.

இது இப்படியிருக்க தமிழ்ச் சூழலில் உள்ளடக்கப் பெறுமதி இழக்கச் செய்யப்பட்ட ஒரு அரசியற் சொல்லாகத் ‘தேசியம்’ ஆக்கப்பட்டிருக்கின்றது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் வலியுத்தல் – விடுதலை வேணவா – சமூகத்திரள் மற்றும் மொழி, கலை, பண்பாட்டு வாழ்வியலின் முற்போக்கான அம்சங்களைக் கருத்து ரீதியாகவும் செயல்பூர்வமாகவும் தொலைநோக்கு ரீதியாகவும் சுட்டிநிற்க வேண்டிய சொல் அது. ஆனால் அது எங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது என்பது இலகுவாகக் கடந்து செல்லக்கூடியதல்ல.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் பின்-கொலனித்துவ இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அமைதிவழி எதிர்ப்புகள் – ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் – பின்-முள்ளிவாய்க்கால் எனவான காலப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. இக்காலங்கள் அனைத்திலும் தேசம், தேசியம் என்பன பிரயோக முக்கியத்துவம் கொண்ட சொற்களாகவும் இருந்திருக்கின்றன, இருந்தும் வருகின்றன.

இலங்கையின் வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்பது உரிய கோட்பாட்டுருவாக்கதுடன் முன்னெடுக்கப்பட்டதா என்பது ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உரியது. பின்-முள்ளிவாய்க்கால்’ ஒன்றரைத் தசாப்பங்களைக் கடந்துவிட்டது. சமகாலத்தில் ஈழம், புலம்பெயர் சூழலில் அதிகம் மலினப்படுத்தப்பட்ட சொல்லாடலாக தேசியம் என்பது ஆக்கப்பட்டிருக்கின்றது. அச்சொல்லைத் தமிழர்களைப் போன்று அர்த்தமற்றதாக ஆக்கிய மக்கள் உலகில் வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை.

இன்று தமிழ்ச் சூழலில் தேசியம் என்பது
முதன்மையான வெற்றுக் கோஷமாக,
– வெறும் கோறையாக,
– பிற்போக்குத் தனமாக,
– அதிகாரத் துஸ்பிரயோகக் கருவியாக,
– சுயவிமர்சனங்களை மறுப்பதற்கான முலாமாக,
– தவறுகளை மூடிமறைக்கும் ஆயுதமாக ,
– தேர்தல் முதலீடாக,
– அரசியல்வாதிகள், கட்சிகளின் இருப்பினை தற்காத்துக் கொள்கின்ற துருப்புச் சீட்டாக,
– உணர்ச்சிக் கொந்தளிப்பு

என்பவையாகவே அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தருணங்களில் தமிழ் இனவாதம் என்று சொல்லக்கூடிய வடிவத்திற்கூட அது வெளிப்படுகின்றது.

தேசம், தேசியம் என்பவற்றை உரிய உள்ளடக்கக் கனதி- செயல்வலு- உரிய-உகந்த திட்டங்களுடனும் தொலைநோக்குடனும் முன்னிறுத்தவும் முன்னெடுக்கவும் அரசியல்வாதிகளும், கட்சிகளும், சிவில் சமூகம் உட்பட்ட சமூக – கலை-பண்பாட்டு நிறுவனங்களும் அங்கு இல்லை என்பதே அடிப்படையான சிக்கல். நிலவும் போதாமைகளின் பட்டியலில் ‘கல்வியாளர்களையும்’/Think tanks, ஊடகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அரசியல் உரையாடல், கோரல், நிர்ப்பந்தித்தல், ஜனநாயக வழிமுறைகளில் இயங்குதல் முதலான தொலைநோக்குப் பார்வையுடனான அரசியற் செயற்திட்டம் தமிழர் தரப்பிடம் போதாமையாகவுள்ளது. நிலவும் அரசியல் வெளி, வாய்ப்புகளை எவ்வாறு மாற்றத்தை நோக்கிய சாத்தியம்மிக்க கருவிகளாகக் கையாள்வது – அறிவார்ந்த தளத்தில் இயங்குவது – வசப்படுத்துவது – செயற்திட்டங்களை வகுப்பது – நிறைவேற்றுவது – இலக்கை நோக்கி நகர்வது போன்ற சிந்தனைகளின்றி முட்டுச்சந்தியில் நிற்கின்றது. உள்ளடக்கமற்ற, செயலற்ற, தொலைநோக்கற்ற தமிழ்த் தேசிய வெற்றுக் கோஷங்களை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

உள்ளடக்கம், நடைமுறை சார்ந்து அதிகம் மாற்றம் கோரிநிற்கின்ற சொல் அதுவாகத்தான் இருக்கும். இன்றுள்ள தேர்தல் அரசியல், கட்சி அரசியல் வெளிகளுக்கூடாக அத்தகைய மாற்றம் சாத்தியமில்லை. மக்கள்சார் சமூக, கலை, பண்பாட்டு இயக்கம், அறிவு,கல்விசார் இயங்குதல்களுக்கு ஊடாகவே அது சாத்தியமாகும்.

https://thinakkural.lk/article/311995

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ஏராளன் said:

மக்கள்சார் சமூக, கலை, பண்பாட்டு இயக்கம், அறிவு,கல்விசார் இயங்குதல்களுக்கு ஊடாகவே அது சாத்தியமாகும்.

இன்னும் 10 வருடங்களின் பின்பு தமிழ் தேசியம் பேசுவதற்கு தடை வந்தாலும் வரும் அதிகாரவர்க்கத்தினரால்..



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 27 ஐ விடுவார்கள். அது ஒரு வரலாறு என்ற அளவில். அமைப்பை, கொள்கைகளை விதந்துரைக்க விடமாட்டார்கள். விகாரைகள் தொடரும். இதி என் கணிப்பு மட்டுமே.
    • மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!  நடைபெற்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,   தேசிய மக்கள் சக்தி (NPP) - 24,954 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,692 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,823 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB) - 641 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 548 வாக்குகள்     மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 
    • AMBALANGODA Logo Candidate Vote Pre % Jathika Jana Balawegaya 36,196 70.08% Samagi Jana Balawegaya 7,536 14.59% Sri Lanka Podujana Peramuna 3,075 5.95% New Democratic Front 2,047 3.9
    • இங்கு ஓடித்திரிகிற வசந்தியை நீங்க தான் இறக்கிவிட்டீர்கள். தலைப்பைத்  திறந்து வதந்தியை பரப்ப வேண்டாமென்று கடைசியில் வசந்தியை இறக்கிவிட்டிருக்கு.
    • 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,196 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,536 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,075 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,047 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 1,123 வாக்குகள் காலி மாவட்டம் - அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகள்! 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.