Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு மர்ம நபர்கள் இன்று (16) அதிகாலை 3 போத்தல்களில் அடைத்து கொண்டுவந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. தியேட்டருக்கு எந்த சேதமும் இல்லை. மேலப்பாளையம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. 

இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." 

தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி  எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், "நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைக்கும் ஒரு கதைக்களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளது.

தேசிய சுதந்திரத்துக்காக முழங்கப்பட்ட விடுதலை முழக்கமான ஆசாதி கோஷம் என்ற முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்கல் போன்ற அமைப்புகள் பயன்படுத்தக்கூடிய 'ஜெய் பஜ்ரங்பலி' என்ற கோஷம் இராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய கோஷமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்டிபிஐ  கட்சியினர் குற்றஞ்சாட்டி போராட்டங்களை முன்னெடுத்தன. 

இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்க சுவருக்குள்  மர்ம நபர்கள் பெட்ரோல்  குண்டு வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/198935

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய இராணுவம் பற்றிய படம் என்றால்—படம்முழுக்க பாலியல் வன்கொடுமையாக அல்லவா இருக்க வேண்டும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/11/2024 at 17:36, goshan_che said:

இந்திய இராணுவம் பற்றிய படம் என்றால்—படம்முழுக்க பாலியல் வன்கொடுமையாக அல்லவா இருக்க வேண்டும்.

நான் உந்த‌ சினிமா 2005க‌ளில் இருந்து பார்க்கிறேல‌

நீங்க‌ள் ப‌ட‌ங்க‌ள் பாப்பிங்க‌ளோ பிரோ....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, வீரப் பையன்26 said:

நான் உந்த‌ சினிமா 2005க‌ளில் இருந்து பார்க்கிறேல‌

நீங்க‌ள் ப‌ட‌ங்க‌ள் பாப்பிங்க‌ளோ பிரோ....................................

மூன்று நாலு வருடத்துக்கு ஒரு படம் தியேட்டரில் பார்ப்பேன்.

டிவியில் படம் பாத்து 15 வருடம் இருக்கும்.

ஆனால் விகடன், தட்ஸ்தமிழ், டிவிட்டரில் சினிமா தகவல்களை தவறாது வாசிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பார்ப்பது தமிழ் கண் அதில்தான் அதுவும் அரை மணி நேரத்துக்குள் ஒரு படத்தையே முடித்து விடுவேன் அநேக பகுதிகள் ஏற்கனவே வந்த படத்தின் மறு பகுதிகள் மற்றபடி கதைகள் அற்று ஜிவன்அற்று ஒருபடத்தை எடுத்து ஓடு ஓடு என்றால் எப்படி ஓடும் ?

3 minutes ago, goshan_che said:

ஆனால் விகடன், தட்ஸ்தமிழ், டிவிட்டரில் சினிமா தகவல்களை தவறாது வாசிப்பேன்.

இன்னமும் விகடன் உயிருடன் இருக்குதா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

மூன்று நாலு வருடத்துக்கு ஒரு படம் தியேட்டரில் பார்ப்பேன்.

டிவியில் படம் பாத்து 15 வருடம் இருக்கும்.

ஆனால் விகடன், தட்ஸ்தமிழ், டிவிட்டரில் சினிமா தகவல்களை தவறாது வாசிப்பேன்.

நான் உந்த‌ சினிமா செய்திக‌ள் வாசிப்ப‌தை கூட‌ நிறுத்தி விட்டேன் 2009ஓட‌

ச‌த்திய‌மாய் இப்ப‌ ந‌டிக்கும் ப‌ல‌ ந‌டிக‌ர்க‌ளின் பெய‌ர் கூட‌ என‌க்கு தெரியாது

பாட‌ல்க‌ள் எல்லாம் கேட்ப்பேன்

ஆனால் இடைக்கால‌ பாட்டுக‌ள் மிக‌ அருமை..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

நான் உந்த‌ சினிமா செய்திக‌ள் வாசிப்ப‌தை கூட‌ நிறுத்தி விட்டேன் 2009ஓட‌

ச‌த்திய‌மாய் இப்ப‌ ந‌டிக்கும் ப‌ல‌ ந‌டிக‌ர்க‌ளின் பெய‌ர் கூட‌ என‌க்கு தெரியாது

பாட‌ல்க‌ள் எல்லாம் கேட்ப்பேன்

ஆனால் இடைக்கால‌ பாட்டுக‌ள் மிக‌ அருமை..............................

பாட்டு என்றால் நான் பாகவதர், TR மஹாலிங்கம் முதல் அனிருத், சிட் ஶ்ரீராம் வரை கேட்பேன்.

இப்போ யாரு என்ற ஒரு புலம்பெயர் ரப்பர்தான் காரில் ஓடுது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

பாட்டு என்றால் நான் பாகவதர், TR மஹாலிங்கம் முதல் அனிருத், சிட் ஶ்ரீராம் வரை கேட்பேன்.

இப்போ யாரு என்ற ஒரு புலம்பெயர் ரப்பர்தான் காரில் ஓடுது.

Song Was good bro 🙏🥰................

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.