Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்காவின்(United States) - கலிபோர்னியா கடற்கரையில் அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படும் அழிவு நாள் மீன் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒர்ஃபிஷ்(Oarfish) என அழைக்கப்படும் இந்த மீனினம் சுனாமி அல்லது பூகம்பம் போன்ற பேரழிவுக்கு அறிகுறியாக அமைந்துள்ளமையாகும்.

புராண நம்பிக்கை

ஜப்பானிய புராணக்கதையின் படி,  இந்த மீன் வரவிருக்கும் பேரழிவை குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது. 

கடந்த 2011ஆம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த மீன் கடற்கரையில் 20க்கும் மேல் தோன்றிய பிறகு, ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்துள்ளது. 

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு | Doomsday Fish Found On California Beach

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் அழிவு நாள் மீன் (Oarfish) கரை ஒதுங்கியுள்ளது. 

குளிர்ச்சியான உயிரினம்

சுமார் 9 முதல் 10 அடி நீளம் கொண்ட இந்த குளிர்ச்சியான உயிரினம், ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக கரை ஒதுங்கியுள்ளது. 

வெள்ளி நிற மற்றும் அகலமான கண்கள் கொண்ட இந்த உயிரினம், மிகவும் குறைவான வெளிச்சம் உள்ள மெசோபெலாஜிக் மண்டலத்தில் ஆழமாக வாழுகின்றனவையாகும். 

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு | Doomsday Fish Found On California Beach

அழிவு நாள் மீன்கள்

சில புராணக்கதைகள் இந்த மீன் இயற்கை பேரழிவுகள் அல்லது எதிர்கால பூகம்பங்களை முன்னறிவிக்கும் என்று நம்புகின்றன.

ஸ்கிரிப்ஸ் நிறுவனத்தின்(The Scripps Institution) கூற்றுப்படி, 1901 முதல் கலிபோர்னியா கட்டுரையில் 21 அழிவு நாள் மீன்கள் தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆராய்ச்சியாளர் பென் ஃப்ரேபிள்(Ben Frable), இந்த மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் சரியாக தெரியவில்லை.

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு | Doomsday Fish Found On California Beach

எனினும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்ய இது ஒரு நம்ப முடியாத வாய்ப்பு.

கடலின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு காரணமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த முறை சான் டியாகோ (San Diego) நகரின் லா ஜொல்லா கோவ்வில் 12 அடி நீளம் கொண்ட அழிவு நாள் மீன்(Oarfish)தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/doomsday-fish-found-on-california-beach-1731836529#google_vignette



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆனால் அதை செய்ததில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு  இணையாக நம்மவர்களும் செய்தார்கள் என்பதே உண்மை.   உங்களை போல் நியாயமாக ஆதங்கப்படுவோர் ஒரு சிலரே. தமது தேசிய வியாபாரம் படுத்துவிடும் என்றே பல தேசிய வீரர்கள் பதட்டப்படுவதை ஆத்திரப்படுவதையும் முக நூல்களிலும் யூருயூப் காணொளிகளிலும்  சமீப காலமாக காண முடிகிறது.  இந்த ஆத்திரத்தை தீர்கக கிடைத்த வடிகால் தான் சுமந்திரன். சுமந்திரன் என்பவர் தமிழ் தேசிய போராட்ட நீண்ட வரலாற்றில் அனைத்தும் கிட்டைத்தட்ட (😂)  இல்லை  இல்லை கிட்டத்தட்ட  பாழாகிய பின்னர்  வந்த ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே. 
    • அவர் பெயரவில்தான் தமிழர். மற்றும்படி அவர் ஒரு முழு நேர இடது சாரி. அவருக்கு விழுந்த வாக்குகள் இதற்காக விழுந்தவையே தவிர வேறெதூக்கும் அல்ல. தமது தமிழ் அடையாளத்தை விடுத்து இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்கும் எந்த தமிழரையும் சிங்களவர் எப்போதும் தம்மில் ஒருவராக ஏற்று கொண்டே வந்துள்ளனர். கதிர்காமர் மாத்தறையில் கேட்டிருந்தால் முதலாவதாக வந்திருப்பார்.🤣 தமிழகத்தில் அண்ணன் காட்டிய வழியில், இலங்கையில் அப்புகாத்துகள்🤣. #மூன்றாம் பெரிய கட்சி #யாழ்பாணத்தில் ஒத்தை ரோசா 🤣
    • தாங்கள் முதியோர் பாடசாலைக்குப் போவது நன்று மீரா. உங்கள் சாதி சமய வெறி இங்கே யாழ் களம் முழுமையாக அறிந்த ஒன்று. இதனை தாங்கள் மறுக்க முயன்றால் தாங்கள் கட்டியிருக்கும் வேட்டியைக் உருவி தங்கள் முகத்தை மூடுவதாக அர்த்தப்படும்.  🤣
    • இவ‌ர் அமெரிக்காவில் ப‌ல‌ சுத்து மாத்து விளையாட்டுக்க‌ளில் கூட‌ க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்................ இவ‌ரின் வாழ்க்கை நாச‌மாய் போக‌ முத‌ல் கார‌ன‌ம் 1 காம‌ம் 2 போதைக்கு அடிமை 3 சிறைக்கு போய் விளையாட்டில்  வீழ்ச்சி க‌ண்டார் 4 எத‌ற்க்கு எடுத்தாலும் உட‌ன் கோவ‌ப் ப‌டுவ‌து 5 தான் தோக்கும் நிலை வ‌ந்தால் ச‌க‌ வீர‌ரின் காதை க‌டிப்ப‌து 2002க‌ளோட‌ இவ‌ரின் குத்து ச‌ண்டை முடிவுக்கு வ‌ந்து விட்ட‌து 2002 க‌ளில் ல‌ண்ட‌ன் நாட்டை சேர்ந்த‌ எவ‌ன் லுயூஸ் கூட‌விளையாடி ரைச‌னின் முக‌த்தில் ர‌த்த‌ம் கொட்ட‌ தொட‌ங்கிட்டு க‌ட‌சியில் லுவிஸ்சுன் குத்தால் கீழ‌ விழுந்து தோல்வி அடைந்தார்...................... அந்த‌ விளையாட்டு 2002க‌ளில் நீங்க‌ளும் பார்த்து இருக்க‌ கூடும் தாத்தா..........................
    • இனி புலம்பெயர் பட்டாசு கோஸ்டி பாடும் கொஞ்சம் கஸ்டம்தான்!😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.