Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும்

November 17, 2024
Eelanadu-Edito-Logo-1-696x221.jpg

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே.

தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளை இவ்வாறாக தோற்கடித்ததில்லை.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆறு பாராளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியவாத கட்சிகளினால் ஒவ்வோர் ஆசனத்துக்கு மேல் பெறமுடியாமல் போகிற அளவுக்கு அவற்றை பின் தள்ளியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய நான்கு மாவட்டங்களிலும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய முன்னிலைக் கட்சியாக தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்திருக்கிறது. இந்த அரசியல் கோல மாற்றத்துக்கு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ்க்கட்சிகளின் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியும் வெறுப்பும் காரணமா அல்லது ஜனாதிபதி திஸநாயக்கவினதும் அவரது கட்சியினதும் கொள்கைகள் மீதான ஈர்ப்பு காரணமா? தமிழ் மக்கள் வாக்களித்த முறையை தமிழ்க் கட்சிகளும் தேசிய மக்கள் சக்தியும் எவ்வாறு வியாக்கியானப்படுத்துகின்றன என்பது அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விடயமாகும்.

இரு மாகாணங்களிலும் தங்களுக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்ததை ஒரு வெற்றியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில தலைவர்கள் பெருமைப்படுகிறார்கள். முன்னைய பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருந்த ஆறு ஆசனங்களையும் விட இரு ஆசனங்களை கூடுலாக தந்து தமிழ் மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் இயக்கமாக மீண்டும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாகவும் அந்த தலைவர்கள் தர்க்கநியாயம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் அரசுக் கட்சி பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை குறித்து பெருமைப்படுவதையும் விட தேசிய மக்கள் சக்தியினால் இரு மாகாணங்களிலும் தமிழ்க் கட்சிகளை பின்தள்ளி எவ்வாறு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது என்பதை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டியதே முக்கியமானதாகும்.

கடந்த காலம் குறித்து சுயபரிசோதனை செய்வதில் ஒரு போதும் அக்கறை காட்டாத தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலைவரம் குறித்தாவது ஆழ்ந்து சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியாக – எட்டு ஆசனங்களுடன் என்றாலும் – விளங்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் அதன் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசுக் கட்சி அதன் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு உட்பூசல்களினால் சீர்குலைந்து கிடக்கிறது. பாரம்பரியமாக அதன் கோட்டையாக விளக்கிய யாழ்ப்பாண மாவட்டமே கைவிட்டுப் போயிருக்கிறது.

இவ்வருட முற்பகுதியில் திருகோணமலையில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பிறகு கட்சி உள்ளுக்குள் எத்தனை முகாம்களாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் வெளிப் படையாக இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. கடந்த பதினைந்து வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வந்த மதியாபரணம் சுமந்திரனும் சிவஞானம் சிறீதரனுமே அந்த எதிரெதிர் முகாம்களின் ‘தளபதிகள்’. சுமந்திரனால் இந்த தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியவில்லை. அதேவேளை அவர் தெரிவாகாமல் போனதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக கூடுதல் விருப்பு வாக்குகளுடன் தான் தெரிவானதும் இன்றைய தமிழர் அரசியலின் கோலங்களுக்கு மத்தியில் சிறீதரன் பெரிதாகப் பெருமைப்படக்கூடிய அம்சங்கள் அல்ல.

தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர இணக்கப்போக்கை கடைப்பிடிப்பதிலும் தலைமைத்துவத் தகராறை முடிவுக்கு கொண்டுவருவதிலும் சிறீதரன் அக்கறை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விலக்கிக்கொள்ளச் செய்து கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கான வழிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவேண்டும். தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்களில் அனுபவம் கூடியவர் என்ற முறையில் அதன் பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவியேற்று தனது தலைமைத்துவ ஆளுமையை சீறீதரன் நிரூபிக்க வேண்டும்.

சிந்தித்துச் செயல்படாவிட்டால் எதிர்காலத் தேர்தல்களில் பாதிப்பு மேலும் மோசமாகலாம். சுமந்திரனும் இது விடயத்தில் தனது பக்குவத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்.
 

https://eelanadu.lk/தமிழரசின்-எதிர்காலமும்-ச/

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது பார் சிறீதரனுக்கு ஆதரவாக வரையப்பட்டுள்ள கட்டுரை. தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றக் குழுத்தலைவராகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரா சாணக்கியனுக்கு வழங்கி பார் சிறீதரன் வழிவிடுவதே தார்மீகமாக இருக்கும்!

Edited by வாலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வாலி said:

இது பார் சிறீதரனுக்கு ஆதரவாக வரையப்பட்டுள்ள கட்டுரை. தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றக் குழுத்தலைவராகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரா சாணக்கியனுக்கு வழங்கி பார் சிறீதரன் வழிவிடுவதே தார்மீகமாக இருக்கும்!

தமிழ் தேசிய முன்னணி கிழக்கிற்கு தேசியப்பட்டியலை கொடுக்கவில்லை என்ற முதலைக் கண்ணீர் முடிந்து இன்று சிறியர் & சாணக்கியனில் வந்து நிக்கிறியள்

மட்டு மக்களின் வாக்குகளால் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியலும் கிழக்கிற்கு வழங்கமாட்டார்கள் ஆனால் சாணக்கியனுக்கு  கொடுக்கணுமாம், போங்கையா நீங்களும் உங்கட இத்துப்போன கருத்துகளும்.

உங்க பார் சிறிதரனுக்கு யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகள்….

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படி  அரசியலில் பொறுப்பாக நடப்பது என்று இன்று தினசரி எழுதும் பத்தி எழுத்தாளர்கள் இவ்வாறான அறிவுரைகளை 2009  முதல் செய்திருக்கலாம்.  தொடர்சசியாக பல பொறுப்பற்ற அரசியலை செய்தவர்களுக்கு இன்றைய இவர்களது அறிவுரைகளை  வழங்கியிருந்தால் மக்கள் என்றோ  நிம்மதியாக வாழ்திருப்பார்கள்.  இன்று சுமந்திரனோ, ஶ்ரீதரனோ யாரென்றும் எவருக்கும் தெரிந்திருக்காது.  இன்று புலம்பும் நிலையும் வந்திருக்காது. 😂

அன்று உயிர்ப்பயத்தில் கம்மென்று இருந்துவிட்டு இன்று  காலம் கடந்த பின் அழுவதில் பயனில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

அனுபவம் கூடியவர் என்ற முறையில் அதன் பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவியேற்று தனது தலைமைத்துவ ஆளுமையை சீறீதரன் நிரூபிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது...அடுத்த பொது தேர்தலில் நீங்கள் போட்டியிடாமல் உங்க்ள் கட்சிக்கு இளைஞர்களை  அடுத்த தேர்தலில் நிற்க வைக்க வேண்டும்..அவர்கள் தலமைத்துவத்தை எடுத்து செல்ல வழிவகுக்க வேண்டும்..
தமிழரசுகட்சி புது யாப்பை உருவாக்க வேண்டும் 60 வயதுக்கு பிறகு எம்.பி யாக வருவதற்கு தடை போட் வேணும் ..ஒரு எம்பி மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை அனுமதிக்க கூடாது....இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார்

இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார்

 

அர்ஜுனா ராமநாதன்(சுயேட்சை) தனது பதவிக்காலத்தில் அரைவாசியை தனது கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளருக்கு கொடுப்பதாக் கூறியிருந்தார் ...அந்ததெளிவு கூட உங்கன்ட கட்சிகாரர்களுக்கு இல்லை

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, MEERA said:

தமிழ் தேசிய முன்னணி கிழக்கிற்கு தேசியப்பட்டியலை கொடுக்கவில்லை என்ற முதலைக் கண்ணீர் முடிந்து இன்று சிறியர் & சாணக்கியனில் வந்து நிக்கிறியள்

இப்படி நான் எழுதியதை உங்களால் காட்டமுடியுமா?  பொய்யான தகவல்களை சொல்லிச் சொறிந்துகொண்டு திரியாதீர்கள்!



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிழலி சில கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கவில்லை. அதனால் அவருக்கு அக்கேள்விகளுக்கு விடை என்ன என்றும் , சில தேர்தல் மாவட்டங்களில் 2 கட்சிகள் முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் முதலில் எழுதியதினால் ஒரு கட்சியின் பெயரை மட்டும் எழுதும் படி கேட்டிருந்தேன்.  அவர் இக்கேள்விகளுக்கு பதில் எழுதும் போது தேசிய மக்கள் கட்சி 154 இடங்களை பிடிக்கும் என்றும் பதில் அளித்திருந்தார். 1-5 வித்தியாசத்தினால் பதில் அளித்தினால் அவருக்கு 1 புள்ளிகள் கிடைக்கவேண்டும். கவனிக்காமல் விட்டதினால் மனம் வருந்துகிறேன்.  1)பிரபா - 43 புள்ளிகள் 2)வாதவூரான் - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள்  5) Alvayan - 38 புள்ளிகள் 6) நிழலி - 38 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 8)கிருபன் - 37 புள்ளிகள்  9)goshan_che - 37 புள்ளிகள் 10)நூணாவிலான் - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள்  14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள்                   15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 18)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள்  24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)
    • அது எனது தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இது எனது கருத்து சுதந்திரம்.  அவரது வெற்றியை என்னால் மாற்ற முடியாது எனவே ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் என்னை திட்டுவதால் பயனில்லை, அவரது வெற்றியை மாற்றிக்காட்டுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.         
    • கஸ்தூரி சொல்லி  இருப்பது தெலுங்கு ஆண்களை தானே குறிக்கிறது (அந்தப்புர மகளிருக்கு சேவை) அந்தப்புர மகளிர் அரசிக்கு சேவை. அதில் பொதுவாக, ஆண்களே அந்தப்புர மகளிருக்கு பல கடின வேலைகளை செய்வது.  
    • இல்லை ஆனால் நீங்கள் ஆடுவது போல் அனுர காவடி யாழில் வேறு எவரும் ஆடுவதில்லை. ஆகவேதான் விளாசல். அது சரி @satan @கிருபன்@ஏராளன் யாழ் என் பி பி எம்பிகள் போய் புத்த பிக்கு காலில் விழுந்து புரளும் வீடியோ ஒன்றை வாட்சப்பில் பார்த்தேன். இதன் இணைப்பு இருந்தால் இணைக்க முடியுமா? சும் + ஜயம்பதி வரைந்த்தார்கள். ஆனால் மைத்திரியை பதவிக்கு கொண்டு வந்த ரணில், அனுர, மைத்திரி, ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.