Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி.மீ.இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது

சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று 50 தொடக்கம் 70 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. எனவே கடுமையான காற்று வேகத்தினால் பாதிக்கப்படக் கூடிய மரங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
இதன் காரணமாக எதிர்வரும் 24.11.2024 முதல் 28.11.2024 வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை தொடர்ந்து கிடைக்கும்.
அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே….
இத்தாழமுக்கம் புயலாக மாறாது விட்டாலும் மேலுள்ள அதி தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் கடற் கொந்தளிப்பான நிலைமைகள் நிகழும்.
எனவே முன்கூட்டிய பாதுகாப்பு தயார்ப்படுத்தல் முறைமைகளைப் பின்பற்றுவது எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இந்த தாழமுக்கம்/புயல் தொடர்பாக அவதானம் செலுத்துவது சிறந்தது.

இரா சுரேன்
முன்னாள் தவிசாளர்
நகராட்சி மன்றம் வல்வெட்டித்துறை

May be an image of map and text

https://www.facebook.com/story.php?story_fbid=122118624032561987&id=61566859632700&rdid=ji5djbeZajyRmKg7#

முகப்புத்தக இணைப்பை பிரதான செய்தியாக நான் இணைப்பதில்லை, ஆனாலும் தகவலின் உள்ளடக்கம் சம்பந்தமாக இணைய வானிலைத் தரவுகளைப் பார்வையிட்டபோது தீடீர் வெள்ள(flash flood) எச்சரிக்கை காணப்பட்டது.

weather-jaffna.jpg

Edited by ஏராளன்
font size increased

  • கருத்துக்கள உறவுகள்

26, 27

இயற்கையும் எமக்கு எதிராக. ..😭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

26, 27

இயற்கையும் எமக்கு எதிராக. ..😭

இதிலெல்லாம் அறவே நம்பிக்கை இல்லை….

ஆனால் …. அவர்களும் இப்போ இயற்க்கையோடுதான் கலந்து விட்டார்கள்….

எதுவும் செய்தி சொல்கிறார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரிடம் இருந்து எச்சரிக்கைகள் வருகின்றன.

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராவோம்.

1) உலர் உணவு

2) தற்காலிக ஒளியமைப்பு(விளக்கு, மெழுகுதிரி)

3) நுளம்புவிரட்டி

4) போர்வை, பாய், மாற்று உடைகள்

5) உயர்ந்த முறிந்து வீடுகள் மேல் விழ வாய்ப்புள்ள மரக்கிளைகளை வெட்டிவிடுதல்

மேலும் இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள உங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை பினபற்றவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளனர்.

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(22.11.2024) இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இடர் நிலைமை

அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.

பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் - செப்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும். 

வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Ready To Face The Dangers In The North

சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் காவல்துறையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். 

அதேநேரம்,  பல இடங்களில் வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரப் பணிப்பாளரின் கோரிக்கை 

அத்துடன், இடர் நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழுக்கள் படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக் கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Ready To Face The Dangers In The North

மேலும், எதிர்வரும் இடர் நிலைமைகளின் போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/ready-to-face-the-dangers-in-the-north-1732345613

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகள் அறிவிப்பு

வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகள் அறிவிப்பு

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கீழே பெயரிடப்பட்டுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகைகள்

1. மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை
2. கலா ஓயா ஆற்றுப்படுகை
3. கனகராயன் ஆற்றுப்படுகை
4. பரங்கி ஆறு ஆற்றுப்படுகை
5. மா ஓயா ஆற்றுப்படுகை
6. யான் ஓயா ஆற்றுப்படுகை
7. மகாவலி ஆற்றுப்படுகை
8. மதுரு ஓயா ஆற்றுப்படுகை
9. முந்தெனியாறு ஆற்றுப்படுகை
10. கலோயா ஆற்றுப்படுகை
11, ஹடோயா ஆற்றுப்படுகை
12. வில ஓயா ஆற்றுப்படுகை

https://tamil.adaderana.lk/news.php?nid=196343

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லையில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம்

முல்லைத்தீவு – பரந்தன் A-35 வீதியின் வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால், நந்திக்கடல் நீர் மட்டம் நிரம்பியுள்ளது. இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தினை மூடியதுடன், நீர் பாய்ந்தோடாமல் தேங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகள் சரியாக தெரியாமலிருக்கின்ற அதேவேளை,பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இதனால் வீதி எது கடல் எது என தெரியாத நிலையிலையே பயணிகள் பயணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடும் மழையினால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

25 NOV, 2024 | 11:53 AM

image
 

நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல தாழ்வான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடும் மழை காரணமாக பொலன்னறுவையில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் தற்போது 92,000 ஏக்கர் அடியை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர் அஞ்சன குமார தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199616

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம் : கடற்படையினர், பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்!

25 NOV, 2024 | 02:17 PM
image
 

முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

மழை, வெள்ளம் காரணமாக இப்பாலத்தினூடாக பயணம் செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

பாலம் வெளியே தெரியாதபடி, வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கு விபத்து ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. இதனால் நந்திக்கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் வட்டுவாகல் பாலத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

இதேவேளை, பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் வழிந்தோட இடமின்றி  தேங்கி காணப்படுகிறது.

அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகளும் வெள்ளம் காரணமாக வெளித்தெரியாதபடி உள்ளது.

பாலத்தின் பல பகுதிகள் உடைந்து, சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதனால் இந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டு பயணிகள் அப்பாலத்தினூடாக செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

இதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பாலத்தின் இரு கரைகளையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக கூறப்படும் வட்டுவாகல் பாலம் கிட்டதட்ட 440 மீற்றர் நீளம் கொண்டது.

வட்டுவாகல் பாலம் 2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம், 2009ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம் என்பவற்றினால் கடுமையாக  சேதமடைந்துள்ளது. இருப்பினும், சிறு சிறு திருத்தங்கள் இடம்பெற்று இன்று வரை வட்டுவாகல் பாலம் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

IMG-20241125-WA0140.jpgIMG-20241125-WA0149.jpgIMG-20241125-WA0128.jpg

https://www.virakesari.lk/article/199628

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலை - வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின : வடக்கில் மாத்திரம் 15,284 பேர் பாதிப்பு! 

25 NOV, 2024 | 05:40 PM
image

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வட மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடளாவிய ரீதியில் மழை, வெள்ளம் காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (25) காலை மத்திய - தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு இன்று (25) காலை 8.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இது மேலும் வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படலாம்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 208 குடும்பங்களைச் சேர்ந்த 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா

சீரற்ற வானிலையால் வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம்  உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுகிறது.

100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலப்பரப்பு வெள்ள நீரில் அழிவடைவதைத் தடுக்க விவசாயிகள் மண்மூடைகளை அடுக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள், வீடுகள் நீரில் மூழ்கி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் இறந்த நிலையில் முதலைகள், கரையொதுங்குகின்றமை மக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம்

கன மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். 

மன்னார்

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 43 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 12 ஆயிரத்து 463 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் 3 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மன்னார் மாவட்டத்தில் 14 தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமெனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/199664

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டிக்குளத்தில் வேருடன் சாய்ந்த மரம் : வாகனம் சேதம்

25 NOV, 2024 | 05:40 PM
image

தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.

பரந்தன் முல்லைத்தீவு  ஏ 35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது   மரம் வேருடன் சாய்ந்ததில்  வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது. போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து  குறித்த மரத்தை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர். 

WhatsApp_Image_2024-11-25_at_13.59.31_3a

WhatsApp_Image_2024-11-25_at_13.59.32_ae

WhatsApp_Image_2024-11-25_at_13.59.32_02

https://www.virakesari.lk/article/199648

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

26 NOV, 2024 | 10:32 AM
image

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை (25) மாலை வரை குறித்த எண்ணிக்கையுடைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்  உயர் தர பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள்,பொது மண்டபங்கள் தற்காலிக பாதுகாப்பு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த 1426 நபர்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.மழை வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் தலைமையில்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்,கிராம அலுவலர்கள் தமது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை திறட்டி வருவதோடு,அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

அனர்த்தங்கள் ஏற்பட்டால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இடப்பெயர்வு அதிகரிக்கும் என தெரிய வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு,மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-11-25_at_4.08.00_PM.

WhatsApp_Image_2024-11-25_at_4.08.02_PM.

WhatsApp_Image_2024-11-25_at_6.31.55_PM_

WhatsApp_Image_2024-11-25_at_7.10.14_PM.

WhatsApp_Image_2024-11-25_at_7.10.35_PM.

https://www.virakesari.lk/article/199687

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுவாகல் பாலத்தினூடாக மீண்டும் நீர் குறுக்கறுத்து பாய்கிறது - பயணிகள் அவதானம்!

27 NOV, 2024 | 12:06 PM
image

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்துச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.  

முல்லைத்தீவு - பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி பாலம் வெளியே தெரியாதபடி காணப்படுவதனால் வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் வெள்ள நீர் வடிந்திருந்தது.  

இந்நிலையில், மீண்டும் தாெடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் இருக்கிறது.   

இதனால் இப்பாலத்தின் ஊடாக பொதுமக்கள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

IMG-20241127-WA0087.jpg

IMG-20241127-WA0091.jpg

IMG-20241127-WA0089.jpg

https://thinakkural.lk/article/312749

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர்

27 NOV, 2024 | 06:55 PM
image

வசந்தபுரம் தாழ்வு நில பகுதியில் வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்த நிலையில் விரைந்து சென்று மீட்பு பணியில் இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையில் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை பெய்துவருகின்றது. 

இதனால் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததனால் பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பெய்த கனமழையால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தின் தாழ்வு நில பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

அதனையடுத்து கேப்பாப்பிலவு இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஜெனரல் கெட்டியாராய்ச்சி தலைமையிலான இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மக்கள் தற்போது கரிவேலன்கண்டல் பாடசாலை இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20241127_15375481.jpeg

IMG-20241127-WA0265.jpg

IMG-20241127-WA0256.jpg

https://www.virakesari.lk/article/199876

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/312837

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.