Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

(நெவில் அன்தனி)

17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

உப தலைவர் பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஆரம்பமாகிறது. கடைசிப் போட்டி டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறும்.

17 வயதின்கீழ் இலங்கை குழாம்

கித்ம வித்தானபத்திரன (தலைவர்), செனுஜ வெகுங்கொட (உப தலைவர்), ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செத்மிக செனவிரத்ன, சலன தினேத், ராஜித்த நவோத்ய, விக்னேஸ்வரன் ஆகாஷ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகறி ரசித் நிம்சார, ஓஷந்த பமுதித்த

https://www.virakesari.lk/article/199461

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளபங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 37.5 ஒவர்களில் 141 ஒட்டங்களை பெற்று சகல விக்கட்களையும் இழந்தது.
இப் போட்டியில் யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியின் வீரா் விக்கினேஸ்வரன் ஆகாஷ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷை பிரமிக்க வைத்த யாழ். வீரர் ஆகாஷ்; கன்னி முயற்சியில் 5 விக்கெட்  குவியல், நால்வர் நேரடியாக போல்ட்

24 NOV, 2024 | 10:03 PM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான கனிஷ்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து வரலாறு படைத்தார்.

எனினும் மழை காரணமாக அப் போட்டி இடையில் கைவிடப்பட்டதால் முடிவு கிட்டவில்லை.

கனிஷ்ட சர்வதேச போட்டியில் விளையாடிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே மிகத் திறமையாக பந்துவீசிய ஆகாஷ், எதிரணியின் நான்கு வீரர்களை நேரடியாக போல்ட் செய்ததுடன் மற்றையவரை தனது பந்துவீச்சிலேயே பிடி எடுத்து ஆட்டம் இழக்கச் செய்தார்.

அவர் 7.5 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி 19ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.

ஆரம்ப வீரர்களான மொஹமத் ரிதோய் ஹொசெய்ன் 40 ஓட்டங்களுடனும் அப்துல்லா அல் முஹி 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அப்போது தனது 3ஆவது ஓவரை வீசிக்கொண்டிருந்த விக்னேஸ்வரன் ஆகாஷ், ஆரம்ப வீரர்கள் இருவரினதும் விக்கெட்களை நேரடியாக பதம்பார்த்து ஆட்டம் இழக்கச் செய்து இலங்கை அணிக்கு உற்சாசத்தைக் கொடுத்தார்.

தொடர்ந்து தனது 5ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணித் தலைவர் பர்ஹான் சாதிக்கை தனது பந்துவீச்சிலேயே பிடி எடுத்து ஆகாஷ் ஆட்டம் இழக்கச் செய்தார்.

அவரது 6ஆவது ஓவரில் எதிரணி வீரர் ஒருவர் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.

ஆகாஷ் தனது 8ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கடைநிலை வீரர்கள் இருவரை நேரடியாக போல்ட் ஆக்கி ஆட்டம் இழக்கச்செய்தார்.

ஆகாஷைவிட ரசித் நிம்சார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

ரெஹான் பீரிஸ் 11 ஓட்டங்களுடனும் ஜனிது ரணசிங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். துல்சித் தர்ஷன 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந் தார்.  

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது 50 ஓவர் போட்டி செவ்வாய்க்கிழமையும் 3ஆவது 50 ஓவர் போட்டி வியாழக்கிழமையும் இதே விளையாட்டரங்கில் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/199589

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ஏராளன் said:

விக்னேஸ்வரன் ஆகாஷ்

வாழ்த்துகள் ஆகாஷ். மிகச் சிறப்பு!👏

Posted

மேலும் இருவர் வடக்கில் இருந்து 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகாஷுக்கு : வட மாகாண ஆளுநர் வாழ்த்து!

adminNovember 26, 2024
spacer.png

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆகாஷை தொலைபேசியூடாக நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.11.24) தொடர்புகொண்ட ஆளுநர், அவரை வாழ்த்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவேண்டும் எனவும், தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய ஆகாஷ், 5 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/208659/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ சிறுவ‌ன் போன்ர‌ திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இங்லாந்தில் இருந்து இருக்க‌னும் இங்லாந் தேசிய‌ அணியில் சீக்கிர‌மே இட‌ம் பிடித்து விடுவார்

 

இல‌ங்கை கிரிக்கேட் வாரிய‌ம் இந்த‌ சிறுவ‌னுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கின‌மா இல்லையா என‌ இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் தெரியும்..........................

Posted
19 hours ago, nunavilan said:

மேலும் இருவர் வடக்கில் இருந்து 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

467155475_943314084330228_66251959987323

Posted

 

HARTLEY COLLEGE 

 
 
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளபங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 37.5 ஒவர்களில் 141 ஒட்டங்களை பெற்று சகல விக்கட்களையும் இழந்தது.
இப் போட்டியில் யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியின் வீரா் விக்கினேஸ்வரன் ஆகாஷ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
வாழ்த்துகள்டா தம்பி ❤️
May be an image of 1 person and text
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டில் இன்னும் ப‌ல‌ சாத‌னை ப‌டைக்க‌ வாழ்த்துக்க‌ள்.......................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.