Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!

santhirasekaram.jpeg

கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் சென்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர், அங்கிருந்த படி களஞ்சியசாலையின் காப்பாளருக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

தன்னைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் ஒரிங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்திய பின் அடாவடியில் அவர் ஈடுபட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் தான் எடுத்துக்கொண்டு வந்த பூட்டைக் களஞ்சியசாலையில் பூட்டிய பின்னர் அதன் திறப்புகளை எடுத்துச் சென்றுள்ளார்.

இதன்படி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரால் ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி முறைப்பாடு கிடைத்து ஒரு மணி நேரத்தினுள் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேறு நபர்கள் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டு, சட்டவிரோதமாகப் பூட்டப்பட்ட பூட்டு மீளப்பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

 

https://akkinikkunchu.com/?p=301385

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னமும் ஹனிமூன் காலமே முடியவில்லையே! அதுக்கிடையிலா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, RishiK said:

இன்னமும் ஹனிமூன் காலமே முடியவில்லையே! அதுக்கிடையிலா!!

 

இப்ப மாரிகாலம் ...எல்லாம் முளைத்து முகிழ்விட்டு நிற்குது...கிளைபரப்ப் சுயரூபம் தெரியும்தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

(கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர்,)

இவருக்கு தான் நடித்துகொண்டிருக்கும் நாடகத்தில் தன் பாத்திரம் மறந்து விட்டது. அல்லது இயக்குநர் சொல்லிக்கொடுத்தது காதில் விழுத்தவில்லைப்போலும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசாமி டக்ளசின் ஆளாக இருப்பாரோ. இலங்கையில் ஆட்சி மாறி கடல்தொழில் அமைச்சு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டதை அறியாமல் எஜமானின் சொத்தை பாதுகாக்க  பூட்டும் கையுமாக வந்திருப்பார்.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே எழுதப்படும் பிரதேசவாத பின்னூட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டியன.

டக்லஸ் இருந்த போது போடாத பூட்டா?

இப்போ சந்திரசேகரன் பூட்டு போட்டதும் கோவம் வருகிறதா?

இது வெறும் சந்திரசேகரோபோபியா🤣

இவ்வண்,

-முந்தநாள் அனுரவுக்கு மாறியோர் சங்கம்-

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இங்கே எழுதப்படும் பிரதேசவாத பின்னூட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டியன.

டக்லஸ் இருந்த போது போடாத பூட்டா?

இப்போ சந்திரசேகரன் பூட்டு போட்டதும் கோவம் வருகிறதா?

இது வெறும் சந்திரசேகரோபோபியா🤣

இவ்வண்,

-முந்தநாள் அனுரவுக்கு மாறியோர் சங்கம்-

என்ன ஐயா இப்படி சொல்லாமல்கொள்ளாமல் கச்சையை மாற்றிவிட்டீர்கள் ...சொல்லிய்ருந்தால் நானும மாற்றியிருப்பேன்னல்ல‌😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, putthan said:

என்ன ஐயா இப்படி சொல்லாமல்கொள்ளாமல் கச்சையை மாற்றிவிட்டீர்கள் ...சொல்லிய்ருந்தால் நானும மாற்றியிருப்பேன்னல்ல‌😅

மாற்றியது கட்சியையா, கச்சையையா🤣

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.