Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு

எலிக்காய்ச்சலா என சந்தேகம்

 
jaffna-hospital.jpg

திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதேபோன்று காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இவர்கள் மூவரின் காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் மூவரும் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது,

இரு நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

ஆனால் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்தபின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும்.

ஆயினும், பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது. அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2024/209108/

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் திடீர் காய்ச்சல் - நால்வர் உயிரிழப்பு

571707021.JPG

யாழ்ப்பாணத்தில்  திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இவர்கள், நோய் திடீரெனத் தீவிரத்தன்மை அடைந்து உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் சுவாசத் தொகுதி கடும் பாதிப்படைந்துள்ளமை மருத்துவ அறிக்கைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதேபோன்று வரணியைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காய்ச்சல்இ மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேவேளை காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

நாவற்குழியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சாதாரண காய்ச்சல் நிலைமையில் இருந்த இவர்களுக்கு திடீர் என நோய் தீவிரத்தன்மை அதிகரித்தை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு நோய்த் தன்மை சடுதியாக தீவிரமடைந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வந்த நால்வரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக் காய்ச்சலாக இருக்கலாம் என்றும் கருதப்படும் நிலையில்,உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக சோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://newuthayan.com/article/யாழில்_திடீர்_காய்ச்சல்_-_நால்வர்_உயிரிழப்பு

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமூர்த்தியை கேள்வி கேட்பவர் கவனம் காவல்துறையில் முறைப்பாடு குடுத்துவிடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவிப்பு

11 DEC, 2024 | 02:18 PM
image

யாழ். மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் கூறுகிறார்.

எலிக்காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அப்பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 9,000க்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

நெல் விவசாயம் தொடர்பான சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெல் வயல் மற்றும் நீர் தொடர்பான பிற கடமைகளில் அடிக்கடி ஈடுபடுபவர்கள், சுரங்கங்கள் மற்றும் நீர் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். 

வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவற்றுடன் கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.  

இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், ஆரம்பகால சிகிச்சையானது நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம். இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும் மரணம் கூட ஏற்படலாம்.

வயல் மற்றும் நீர் தொடர்பான வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு சுகாதார அமைச்சினால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதற்கமைய அவர்களின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் உரிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.  

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கடத்த சில நாட்களில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் திடீர் காய்ச்சல் காரணமாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

அவர்களின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/200989

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காலாகாலமாக இருக்கும் எலிக்காய்ச்சலை (Leptospirosis) இரத்த மாதிரியில் இருந்து கண்டறியும் பரிசோதனைகளும் பல ஆண்டுகளாக இருக்கின்றன. ஆள் உயிரோடிருக்கும் போதே ஒரு நாளில் கண்டறியக் கூடிய பரிசோதனை இது. ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்?

கண்டறிய முடியா விட்டாலும் கூட சிகிச்சை மிகவும் இலகுவானது. அனேகமான பென்சிலின், cephalosporin வகைகளே வேலை செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பரவுவது எலிக்காய்ச்சல்; பரிசோதனையில் உறுதி

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார்.

உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாள் காய்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/313608

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

வடக்கில் பரவுவது எலிக்காய்ச்சல்; பரிசோதனையில் உறுதி

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/313608

லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு.

1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள்.
2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள்.
3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள்.
4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம்.

சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: 

அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்

 

நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.

 

பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் , 

 

இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

 

சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.

 

அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.

 

உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.

 

தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை .

பிரதி - சி.சிவச்சந்திரன்

https://www.facebook.com/share/p/18UmzZibeV/

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது எலி காய்ச்சல் நோய் (leptospirosis ) யாழ் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை பொறுப்பற்ற பல ஊடகங்கள் ஊதி பெருப்பித்து யாழ்ப்பாணத்துக்கு சென்றால் ஆபத்தான நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்பது போன்ற ஒரு பிரமையையும் பயத்தையும்  தோற்றுவித்துள்ளனர். 

இதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு பயந்து பலர் என்னிடம் தொடர்பு கொண்டுள்ளனர். முக்கியமாக    இந்த நோய் காற்றின் மூலமாகவோ, தொடுகை மூலமாகவோ பரவாது என்பதனால் யாழ்ப்பாணத்துக்கு அல்லது வட மாகாணத்துக்கு செல்வதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 

எவ்வாறான பாதுகாப்பான வழிமுறைகளை கைக்கொள்ளவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய பிரசுரம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு பொறுப்பான ஊடகவியாளர்கள் என்னுடன் தொலைபேசி மூலம் 0779068868 தொடர்பு கொள்ள முடியும். 

Dr முரளி வல்லிபுரநாதன் 
சமுதாய மருத்துவ நிபுணர், சுகாதார அமைச்சு 
வருகைநிலை விரிவுரையாளர், கொழும்பு, பேராதனை மற்றும் யாழ் பல்கலைக்கழகங்கள் 
12.12.2024

பிரசுரம் முகப்புத்தகத்தில் உள்ளது..

https://www.facebook.com/share/p/17viZZvFsA/?mibextid=WC7FNe

  • கருத்துக்கள உறவுகள்

எலிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

எலிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்தில் உள்ள  விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு அந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக   யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது“  யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ் போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1412111

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.