Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்

மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி  ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மொத்தமாக 60 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1411834

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் 116 பேர் நீக்கம்!

December 11, 2024  06:43 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் 116 பேர் நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித வள முகாமைத்துவ பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுக்கு நேற்று (10) கடிதம் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் இருந்து 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவில் உயர்தர பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரன் என்ற சித்தாந்தம் கொண்டவர்கள் இதுவரை இல்லாதொழிக்கப்படாத நிலையில், அந்த பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வழிவகுத்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது மிகவும் பாரதூரமான நிலை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197149

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படத்துடன் விடைபெற்ற மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் !

 
1734143032-WhatsApp%20Image%202024-12-14%20at%207.52.26%20AM%20(1).jpeg

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தது.

இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

பல வருடங்களாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். உணவு பரிசோதகர்கள் கூட பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 116 பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலக்கப்பட்டமையின் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கின்றதா? என்பது சந்தேகம் எழுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.battinews.com/2024/12/116_14.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

 

 
1734143032-WhatsApp%20Image%202024-12-14%20at%207.52.26%20AM%20(1).jpeg

அடேங்கப்பா… படத்தை பார்க்க  பகீரென்று இருக்குது.
மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர். 

அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம்.
நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ…
இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அறுவர் தானா.?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம்.
நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ…
இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.

அரச செலவில்  இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும்  நீக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் பாதுகாப்புக்காக மாத்திரம் 326 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தகவல்!

14 DEC, 2024 | 05:37 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடமொன்றுக்கு 1,100 மில்லியன் ரூபாவும் அதில் 326 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மாத்திரம் செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 116 பேர் பொலிஸ் கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்துக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. 

இந்த குழுவினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்பட்டது. 

இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடமொன்றுக்கு 1100 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் அதில் வருடமொன்றுக்கு 326 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள  ஆயுதம் ஏந்திய படை தொடர்ந்தும் கடமையில் இருக்கும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் எனவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் சேவையில் 24 ஆயிரம் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவுகளில் கடமையாற்றிய 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிமித்தம் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீள பெறப்படவில்லை எனவும் அதனையும் பரிசீலனை செய்து குறைப்பதன் ஊடாக குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட இதர பொலிஸ் கடமைகளுக்காக அவர்களை  ஈடுபடுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/201275

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.