Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது.

அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்ப்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும்.இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும்

இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்றவகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளுடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடத்தியிருந்தோம்.

அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம். எனவே தமிழரசுக் கட்சிதான் தனித்துள்ளது. எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.அந்தவகையில் திருகோணமலையில் ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம்.

கடந்த முறை உள்ளூராட்சி தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம்.

ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும்.

இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

தமிழ்த் தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது.

அத்துடன் எமது கட்சி 75வருட வரலாற்றுபாரம்பரியம் கொண்ட தாய்கட்சி.

எனவே தமிழ் கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம் என்றார்.

https://thinakkural.lk/article/313624

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம்

https://thinakkural.lk/article/313624✂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னத்தை மனதில்..வைத்துக் கொண்டு சொல்லுறாரோ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, alvayan said:

என்னத்தை மனதில்..வைத்துக் கொண்டு சொல்லுறாரோ..

க.பொ.வின் முயற்சி கண்ணுக்கை குத்துதுபோலும். அதனால், பழயை நட்பைப் புதுப்பிக்கிறாராம். தாங்கள் முந்தியே கூட்டு. இதில இவரென்ன புதுசா என்பதுதான் அவரது வியாக்கியானமாக இருக்கலாம். நாங்கள் இழவுவீட்டிலும் பிணமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையோராக்கும்

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.