Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இதன் போது மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியாவுக்கு முதலாவது விஜயத்தினை மேற்கொள்வதற்கு நீங்கள் மேற்கொண்ட தீர்மானம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த விஜயமானது நமது உறவுகளில் புத்துணர்ச்சியுடனான ஆற்றல்களையும் சக்தியினையும் உட்புகுத்தியுள்ளது.

நமது பங்குடைமைக்கான எதிர்கால நோக்கினை நாம்  ஏற்றுக்கொண்டுள்ளோம். அத்துடன் நமது பொருளாதார பங்குடைமையில் முதலீட்டினை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

நேரடியான தொடர்புகள், டிஜிட்டல் மற்றும் ஆற்றல் அடிப்படையிலான இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார வலையமைப்பிற்கான இணைப்பு மற்றும் பல்பொருள் பெற்றோலிய உற்பத்திகளை விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்காகவும் நாம் பணியாற்றவுள்ளோம்.

சம்பூர் சூரியக் கல மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இவற்றுக்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு LNG வழங்கப்படும்.

இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ETCA உடன்படிக்கையினை நிறைவேற்றும் முயற்சிகள் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்படும்.

இன்றுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான நன்கொடை மற்றும் கடனுதவி இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவினை வழங்கி  வருகின்றொம். எமது பங்காளி நாடுகளின் அபிவிருத்தித் தெரிவுகளுக்கு அமைவாகவே எமது திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.

இந்த ஆதரவினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாகோ முதல் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை சமிக்கைகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக மீளமைப்புக்காக நன்கொடை அடிப்படையிலான ஆதரவினை வழங்க

தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் எமது கல்வி ரீதியான ஒத்துழைப்பின் அங்கமாக இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு நாம் மாதாந்த புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளோம்.

அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 1500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படும்.

வீடமைப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுடன் இலங்கையின் விவசாயம் பால்பொருள் உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும்.

இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் இந்தியா பங்காளராக இருக்கும். எமது பாதுகாப்பு ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்களும் நானும் முழுமையான இணக்கப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையினை துரிதமாக நிறைவேற்றவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன் நீரியல் சார்ந்த துறைகளிலும் ஒத்துழைப்புடன்

செயற்பட நாம் இணங்கியுள்ளோம்.

பிராந்தியத்தின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு கொழும்பு பாதுகாப்பு குழுமம் மிகவும் முக்கியமான தளம் என நாம் நம்புகின்றோம்.

இவ்வாறான குடையின் கீழ், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான போராட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகிய விடயங்களிலும் ஆதரவு வழங்கப்படும்.

இந்திய - இலங்கை மக்களிடையில் காணப்பட்டும் உறவுகள் நமது நாகரிகங்களில் வேரூன்றியவை ஆகும்.

பாளி மொழியினை செம்மொழியாக அறிவித்த தருணத்திலும் அதனுடன் இணைந்த கொண்டாட்டங்களிலும் இலங்கையும் எம்முடன் இணைந்திருந்தது.

கப்பல் சேவைகளும், சென்னை யாழ்ப்பாண விமான இணைப்புகளும் சுற்றுலாத்துறையினை மாத்திரம் மேம்படுத்தவில்லை, ஆனால் கலாசார உறவுகளையும் வலுவாக்கியுள்ளன.

நாகபட்டினம் மற்றும் காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் சேவைகள் வெற்றிகரமாக மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினையும் ஆரம்பிக்க நாங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளோம். 

பௌத்த மத வளாகம் மற்றும் இலங்கையின் இராமாயணச் சுவடுகள் மூலம் சுற்றுலாத்துறையில் காணப்படும் மகத்தான  ஆற்றலை உணர்ந்துகொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

நமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையினை கடைப்பிடிக்க வேண்டுமென நாம் இருவரும் இணங்கியுள்ளோம். 

அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைவரையும் உள்ளடக்கிய தனது நோக்கு குறித்து என்னிடம் கூறியுள்ளார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம்.

அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் அவரது முயற்சிகளில் இந்தியா உண்மையானதும் நம்பத்தகுந்ததுமான பங்காளியாக இருக்குமென நான் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களிடம் உறுதியளித்துள்ளேன்.

ஜனாதிபதி திசநாயக்க அவர்களையும் அவரது தூதுக்குழுவினரை மீண்டும் ஒரு முறை அன்புடன் இந்தியாவுக்கு வரவேற்கின்றேன்.

அத்துடன் புத்தகயாவிற்கு அவர் மேற்கொள்ளும் விஜயம் சிறப்பானதாக அமைய வாழ்த்துவதுடன் அவ்விஜயமானது ஆன்மீக சக்தி மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றால் நிறைந்திருக்குமென நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் - இந்தியப் பிரதமர் மோடி  | Virakesari.lk

Edited by பிழம்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே மாகாண சபைத் தேர்தலை நடாத்தும்படி கோரிக்கை வைத்த சுமந்திரன், இந்தியப் பிரதமர் மோடிக்கு இணையாக உயர்ந்துவிட்டார். 

🤣

ஐ ஆம் வெயிற்றிங்  😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பிழம்பு said:

அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 1500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இனி இலங்கையினை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு அளிக்கப்பட்ட பதவியை பார்த்து பயந்து விட்டீர்கள் போலிருக்கிறது! பரவாயில்லை, தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை இவ்வாறு பல முத்திரை குத்துவார்கள். அதற்காக நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லாமல் இருக்க முடியாது. நான் யாரென்று எனக்குத்தெரிந்தால் இதற்கெல்லாம் பயப்படவேண்டியதில்லை. 
    • என்னது...... சம்பளமில்லாத தொழலுக்கா இவ்வளவு அடிபாடு? இவர்கள்தான் பெருத்த ஊழல் பெருச்சாளிகளும் தெருச்சண்டியரும். பொறுங்கோ, அனுரவை குடைச்சல் இல்லாமல் இருக்க விட்டால், இவர்களெல்லோரும் தீயில நடக்கவேணும். வேண்டுதல் ஒன்றுமில்லை, மக்களுக்கு சேவை செய்து உறுதிப்படுத்தினாலே அவருக்குரிய வேதனத்தை பெற முடியும், அது போக சமூக சேவை செய்பவர் தனது காரை தானே ஓட்டிப்போக வேண்டும். மக்கள் அலுவல் சம்பந்தமான போக்கு வரத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படவேண்டும், இல்லையேல் ஒதுங்க வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் குறிப்பிட்ட வேலைகளை செய்து உறுதிப்படுத்தவேண்டும், இல்லையேல் தங்கள் சொந்த நேரத்தில் முடிக்க வேண்டும் சம்பளம் கிடையாது. திறமையற்றவர்கள் விலகி, படித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு இடம்விட வேண்டும்.    
    • இந்தியா அப்படி தான் அங்கே இருந்து இலங்கைக்கு தொற்றிய நோய் தானே கலாநிதி பட்டம் விடுவதும் நல்ல காலம் தமிழ்நாட்டு தளபதி முருகன்  என்று பட்டம் கொடுக்காமல் விட்டார்களே.ரணில் வெளிநாட்டுகாரர் இந்திய இறையாண்மையில் தலையிட முடியுமா
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இது ரெம்பிளெட் ..  அடுத்த கிருத யுகம் வரை நீடிக்கும்..! திராவிட மொடல் அரசு அனுமதிக்குமா..?  பிசெபி/கொங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருமா..?   ஈழ தமிழர் படுகொலையை மறைக்க கருநா போட்ட ஆட்டத்தில் செம்மொழிக்கு உண்டான மரியாதையே போய்விட்டது ..  செம்மொழி அட்டவணையில் கிட்டதட்ட எல்லா கிந்திய மொழிகளும் இணைந்து விட்டது . பணம் அதிகமா இருந்தா ஏழைகளுக்கு கொடுங்கப்பா .. மட்டக்களப்பில் பிடிபட்டாலும் கச்சதீவு அருகில் என்டு ஒப்பாரி வைப்பினம். இலங்கை சிறைக்கு வந்து போவதற்கு வசதியா பாஸ் நடைமுறையை அறிமுகபடுத்த போகினமா.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.