Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நெல்சன் அமென்யா, கென்யா, அதானி,

பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எஸ்தர் கஹூம்பி
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது.

கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

யார் அந்த மாணவர்?

தனியார் நிறுவனங்களுக்கும் அரசிற்கும் இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார் நெல்சன் அமென்யா.

கென்யாவின் சமீபத்திய வரலாறு. ஊழல் நடவடிக்கைகளால் உருவான பெரியபெரிய ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க சட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது.

பிரான்ஸில் தற்போது எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் 30 வயதான அமென்யா, இந்திய பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்திற்கும் கென்ய அரசுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் என்று சில ஆவணங்களை அவர் ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

 

இது அந்த நாட்டின் மிகப்பெரிய, அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் தொடர்புடையது. மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறது அந்த விமான நிலையம்.

"இதனை முதன்முறையாக பார்த்த போது, மற்றொரு அரசாங்க ஒப்பந்தம் என்று தான் நினைத்தேன். அந்த விவகாரத்தின் தீவிரம் எனக்கு தெரியவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் அமென்யா. ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவருடைய பிம்பம் உயர்ந்து வருகிறது.

அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஜோமோ விமான நிலையத்தை புதுப்பித்து, நிர்வாகம் செய்வதற்கான குத்தகை ஒப்பந்த முன்மொழிவு அது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை அதானி குழுமம் முன்மொழிந்திருந்தது.

தொடர்ந்து அந்த ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது கென்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் இந்திய பன்னாட்டு நிறுவனமே அனைத்துவிதமான லாபத்தையும் சம்பாதிக்கும் என்றும் அவர் உணர்ந்திருந்தார்.

இது ஒரு நியாயமான முன்மொழிவாக அவருக்கு தெரியவில்லை. அவர் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை படித்த போது, அதிகமாக முதலீடு செய்தாலும் கூட, கென்யாவால் அதில் நிதிசார் லாபம் ஈட்ட முடியாத வகையில் அது இருந்ததாக கூறுகிறார் அமென்யா.

அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து பேசிய போது, அது நிச்சயமாக உண்மையானது என்று கூற தனக்கு காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். "இந்த ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ துறைகளில் இருந்து எனக்கு கிடைத்தன," என்று அவர் தெரிவித்தார்.

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

நான் கொஞ்சம் பயந்தேன் - அமென்யா

அதானி குழுமம் இஸ்ரேல், அமீரகம், ஃபிரான்ஸ், தன்சானியா, ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் , உள் கட்டுமானம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் நிறுவனர் கௌதம் அதானி இந்தியாவின் முக்கிய தொழிலதிபராக திகழ்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராகவும் அவர் அறியப்படுகிறார்.

தன்னுடைய முதலீட்டை அதானி குழுமம் 30 ஆண்டுகளில் ஈட்ட முடியவில்லை என்றால், அந்த இழப்பை கென்யா ஈடுகட்ட வேண்டும் என்கிற வகையில் ஒப்பந்தம் இருப்பதை அமென்யா கண்டறிந்தார்.

"அதிபர், கென்ய விமானத்துறை, அமைச்சர் போன்றோர் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றிவிட்டனர்," என்று அவர் குற்றம்சாட்டினார்.

தனது கையில் உரிய ஆவணங்கள் இருந்த போதிலும் அடுத்து செய்வதறியாது தடுமாறினார் அமென்யா. அவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. கென்யாவில் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பலரும் கடந்த காலத்தில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர்.

"நான் கொஞ்சம் பயந்தேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய பணியை, வாழ்க்கையை நான் பணயம் வைக்கிறேன். நான் அப்படி செய்ய வேண்டும்?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல என்று உணர்ந்திருக்கிறார்.

"கோழைகள் தான் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமே" என்கிறார் அவர்.

அவருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை அவர் முழுமையாக ஆராய்ந்த பிறகு, அமென்யா அந்த ஆவணங்களை அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றினார். அது கென்யாவில் பெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்தது.

ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 30 ஆண்டுகள் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தி, நிர்வகிக்க அதானி குழுமம் திட்டமிட்டிருந்தது

மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை

"இதனை நான் என் நாட்டிற்கு செய்யும் கடமையாக நினைத்தேன். நான் என் நாட்டில் இருந்து தொலை தூரத்தில் இருந்தாலும் கூட, என் நாட்டிற்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. நான் கென்யா முன்னேறிய நாடாக, ஊழலற்ற நாடாக, தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதை நான் பார்க்க வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார் அமென்யா.

அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தானா இந்த விமான நிலைய ஒப்பந்தம் என்று தான் கவலைப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

அதானி குழுமத்தின் ஒப்பந்தமானது வழக்கத்திற்கு மாறான விதிமுறைகளைக் கொண்டிருந்தது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததால் தான் அது ஒரு எச்சரிக்கையாக மாறியது. அதில் கென்யாவின் சட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தது என்றும் குற்றம் சாட்டுகிறார் அமென்யா.

"இந்த அதிகாரிகள், அதானி குழுமம் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. கொள்முதல் செயல்முறைகளையும் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை."

வரி செலுத்துவோரின் பணம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வகை செய்யும். பொது கருத்துக் கேட்பு கூட்டம் உட்பட சட்ட தேவைகளை, இந்த விவகாரத்தில் தவிர்த்துவிடலாம் என்று சில அரசு அதிகாரிகள் நம்பியதாகவும் குற்றம்சாட்டுகிறார் அவர்.

கென்ய விமான நிலைய ஆணையம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக, பங்குதாரர்களுடன் ஆலோசிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.

"இது ஏப்ரல் மாதத்தில் நடந்தது. ஜூலை மாதத்தில் நான் இந்த ஆவணங்களை வெளியிட்டேன். அந்த திட்டம் தொடர்பாக எந்த பொது கருத்துக் கேட்புக் கூட்டமும் நடைபெறவில்லை. அப்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக ஒரே ஒரு மாதம் மட்டுமே இடைவெளி இருந்தது," என்கிறார் அமென்யா.

"நான் இந்த ஆவணங்களை வெளியிட்டவுடன், அவசர அவசரமாக போலியாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்த முயன்றனர். அவர்கள் கென்ய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர்," என்றார் அவர்.

அதானி குழுமம் கூறியது என்ன?

கென்யாவில் பல அரசு அதிகாரிகளும், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும், இந்த ஒப்பந்த செயல்முறைகளில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.

அதானி குழுமத்தினரும் அமென்யாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறுகிறது.

"கென்யாவில் அரசு மற்றும் தனியார் துறை இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றியே திட்டம் முன்மொழியப்பட்டது. உலக தரத்திலான விமான நிலையத்தை உருவாக்குவதும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி கென்ய பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதுமே அதானி குழுமத்தின் நோக்கம்" என்று பிபிசியிடம் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆலோசனைகள் ஒப்பந்தமாக இறுதி வடிவம் பெறவில்லை என்பதால் அங்கே ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடப்படவில்லை என்று அதானி குழுமம் கூறுகிறது.

எரிசக்தி தொடர்பான மற்றொரு முன்மொழிவும் ஆலோசனை கட்டத்தில் தான் இருக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.

"குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளில் கென்ய சட்டங்களை மீறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம்," என்று அதானி குழுமம் கூறியது.

இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் ஒவ்வொரு திட்டத்தையும், இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முழுமையாக பின்பற்றி அர்பணிப்புடன் நிர்வகிக்கின்றோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எந்த சட்ட நடைமுறைகளையும் மீறவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது அதானி குழுமம்

அமெரிக்காவின் பங்கு

ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டை கென்ய அரசு மாற்றிக் கொள்வதற்கு அமென்யா மட்டும் காரணமில்லை.

அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த பிறகே கென்யா நடவடிக்கையைத் துவங்கியது.

அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகள்முன் வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்தனர்.

கடந்த நவம்பர் மாதம், கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, அதானி குழுமத்துடனான இரண்டு திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "முறைகேடு தொடர்பான மறுக்கமுடியாத ஆதாரங்கள் அல்லது நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருக்கின்ற போது, நான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டேன்," என்று ரூட்டோ கூறினார்.

விசாரணை முகமைகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ரூட்டோ அறிவித்ததை கென்ய மக்கள் கொண்டாடினார்கள்.

"இந்த அறிவிப்பு வந்த போது நான் வகுப்பில் இருந்தேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை," என்று அமென்யா கூறினார்.

"எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்" என்று அவர் கூறினார்.

அவரை ஒரு ஹீரோவாக உணரவில்லை என்று கூறுகிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல குறுஞ்செய்திகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குவிந்தன.

நெல்சன் அமென்யா, ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம், அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது

அமென்யா என்ன செய்கிறார்?

வகுப்பு முடிந்து நாற்பது நிமிடங்கள் கழித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "அடியோஸ் அதானி" என்ற புகழ்பெற்ற பதிவை பதிந்தார் அமென்யா.

"அது ஒரு முக்கியமான தருணம்… நான் செய்த பணிகளுக்கு பலன் கிட்டியது"

பல தனிப்பட்ட ரீதியிலான அழுத்தங்களை பல மாதங்கள் எதிர்கொண்ட பிறகே இந்த வெற்றியை உணர்ந்தேன்.

அதானியின் விமான நிலைய ஒப்பந்த ஆவணங்களை வெளியிட்ட பிறகு அதானி குழுமமும் கென்ய அரசியல்வாதி ஒருவரும் அமென்யா மீது மானநஷ்ட வழக்கை தொடுத்தனர். தொடர்ந்து இந்த தளத்தில் இயங்குவதா என்ற கேள்வியை அவருக்குள் அது எழுப்பியது.

"அரசாங்கத்திடம் இருந்து ஒரு சிலர் என்னிடம் வந்தனர். அவர்கள் எனக்கு பணம் தரவும் முன்வந்தனர். ஆனால் அவர்கள் என்னிடம் வந்து, இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்," என்று நினைவு கூறினார் அமென்யா.

அதை நான் செய்திருந்தால் அது மிகப்பெரிய தவறாக இருந்திருக்கும். அது கென்ய மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.

"விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தியவர்களை அவர்கள் கொண்டாடுவதை நான் பார்த்தேன். அவர்கள் ஹீரோக்களா? உங்கள் நாட்டில் விமான நிலையம் வர இருப்பதை தடுப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?" என்று டிசம்பர் மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ கூறினார்.

"அது எப்படி கட்டப்படும் என்பது பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த விமான நிலையத்தில் கால் வைக்காதவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதையாவது எதிர்க்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

மற்றொரு புறம், அமென்யா இன்னும் மான நஷ்ட வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். சட்ட உதவிகளுக்காக அவர் நிதி திரட்டிவருகிறார். கென்யாவில் அவருக்கு எதிர்காலம் இருக்குமா என்பது நிச்சயமற்றது என்றும் அவர் கூறினார்.

"உளவுத்துறைகளிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் வந்தன. நான் செய்தது தொடர்பாக பலர் அங்கே கோபத்துடன் உள்ளனர் என்பதால் கென்ய மக்கள் நான் மீண்டும் அங்கே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்," என்று அமென்யா தெரிவிக்கிறார்.

நியாயமான செயலுக்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக கூறும் அமென்யா, "நம்மை காப்பாற்ற ஒருவர் வருவார் என்று நாம் காத்துக் கொண்டிருக்க தேவையில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

அமென்யா தற்கொலையில் முடிவு காட் போடப்படும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அமென்யா தற்கொலையில் முடிவு காட் போடப்படும் .

ஹொட்டேல் அறையிலிருந்து பல்கனி வழியாகக் குதித்து அல்லது அதிக போதைப்பொருள்/மது பானம் காரணமாக விழுந்து மரணம் எனச் செய்திகள் வெளி வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அதானி குழுமம் ஒரு இந்தியாவின் பினாமி போல திகழ்வதற்கு  உதாரணமாக இந்திய அண்டை அதானி குழுமம் நாடுகளில் ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்களை பின்னர் அந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஏற்படும் இராய தந்திர போர்களில் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றமை பொதுவான இயல்பாக காணப்படுகின்றது.

அதானி குழுமம் ஒரு Public listed ஆக இருந்தும் பங்குதாரர்களின் நலனை கருத்திற்கொள்ளாமல் இவ்வாறு இந்திய அரசுக்கு ஆதரவாக செயற்படுவதனை கேள்விக்குள்ளாக்கமல் இருக்கிறார்கள்.

இந்த அதானி குழுமத்துடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதனை அந்தந்த நாட்டு மக்கள் ஊழல் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டும்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.