Jump to content

Recommended Posts

பதியப்பட்டது
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?

 

 
breaking

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும்.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், நியூயார்க், நியூஜெர்சி, யுடா உள்பட பல்வேறு மாகாணங்களில் விமான நிலையங்கள், விமானப்படைத்தளங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

 

இந்த டிரோன் நிகழ்வில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.thaarakam.com/news/3f180f22-dbcc-490f-9a35-8eeb6a4ace9c

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடந்த சனிக்கிழமை நியூயோர்க் பகுதியில் அனாமதேயமான முறையில் ட்ரோண் பறந்தது என்று தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.இங்கு இதைப் பற்றி யாரும் பேசியதாக இல்லை அதனால் பேசாமல் போய்ட்டேன்.கனடாவில் சில பணி இடங்களில் அவசர தேவைகளுக்கு முடிந்தவரை கையில் பணம் வைத்திருக்குமாறும் சொல்லி இருக்கிறார்கள்.

Edited by யாயினி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, யாயினி said:

கனடாவில் சில பணி இடங்களில் அவசர தேவைகளுக்கு முடிந்தவரை கையில் பணம் வைத்திருக்குமாறும் சொல்லி இருக்கிறார்கள்.

2000 ம் ஆண்டு (மிலேனியம்)>.இந்தா உலகம் அழியப்போகுது என்ற செய்தியில் வாங்கின சாமானில் இப்பவும் அந்த மெழுதிரிகள்  கிடந்து சிரிக்குது😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, யாயினி said:

கடந்த சனிக்கிழமை நியூயோர்க் பகுதியில் அனாமதேயமான முறையில் ட்ரோண் பறந்தது என்று தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.இங்கு இதைப் பற்றி யாரும் பேசியதாக இல்லை அதனால் பேசாமல் போய்ட்டேன்.கனடாவில் சில பணி இடங்களில் அவசர தேவைகளுக்கு முடிந்தவரை கையில் பணம் வைத்திருக்குமாறும் சொல்லி இருக்கிறார்கள்.

ஏனெனில் இதைப் பற்றிப் பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

இந்த ட்ரோன் பறப்புகள் முதலில் பிரிட்டனில் ஒரு விமானப் படைத்தளத்தினை அண்டிய பகுதியில் இரவில் காணப்பட்டதாக மக்கள் ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது போன மாதம். அந்த படைத்தளம் கூட அதைப் பற்றி அறிக்கையெதுவும் விடவில்லை - எனவே அவர்களுடைய பறப்பாகக் கூட அவை இருக்கலாமென விடயம் அடங்கி விட்டது.

பின்னர் நியூஜேர்சி, ஒஹையோ செய்தியில் வந்தன. நியூ ஜேர்சி செய்திகளின் படி, சில ட்ரோன்கள் இரவில் பறந்ததை ஊடகங்கள் பகிரங்கப் படுத்தியதும், இவ்வளவு நாளும் இரவு வானத்தைப் பார்க்காத மக்கள் அண்ணாந்து பார்த்திருக்கிறார்கள். பறந்த சில பொலிஸ் ஹெலிக்ப்ரர்கள், சிறு விமானங்கள் கூட ட்ரோன்கள் என சிலர் அறிக்கை விட ஆரம்பித்து ஏதோ சதி நடப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். "அமெரிக்க எல்லையில் தரித்து நிற்கும் ஈரானிய தாய்க்கப்பல்" ட்ரோன்களை அனுப்புவதாக ஒரு அரசியல்வாதி கற்பனைக் கதை வேறு வெளியிட்டிருக்கிறார்😂

உண்மையில்,அமெரிக்காவில்  ட்ரோன்களை எந்த நேரத்திலும் FAA அனுமதி பெற்றுப் பறக்கலாம். பறக்கும் இடத்தின் முக்கியத்துவம் சார்ந்து அனுமதி இருக்கும். 2019 வரை, விமான நிலையங்களில் இருந்து 5 மைல் தொலைவில் அனுமதியின்றியே பறக்கலாம் என்பதை மாற்றி அதற்கும் முன் அனுமதி வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள்.

ஆனால், பிரதான விமான நிலையங்கள் தவிர்ந்த ஏனைய தளங்களைச் சுற்றி இத்தகைய அனுமதி கோரும் முறை இருக்கவில்லை. நியூஜேர்சி, ஒஹையோ செய்திகளை அடுத்து அந்த மாநிலங்களின் ஆளுனர்கள் இப்போது பெருமளவு பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை விதித்திருக்கிறார்கள் - அதுவும் 1 மாதம் மட்டும் செல்லுபடியாகும்.  



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.