Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கன்னியாகுமரி, கண்ணாடிப் பாலம், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை

பட மூலாதாரம்,TN DIPR

படக்குறிப்பு, தி.மு.கவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் தொடர்பான இரண்டு கட்டுமானங்களுக்கு முடிவுசெய்யப்பட்டது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு 77 மீட்டர் நீளத்தில் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது? அதன் முக்கியத்துவம் என்ன? எப்படிக் கட்டப்பட்டது?

கண்ணாடி இழைப்பாலம் திறப்பு

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தையும் இணைக்கும் வகையிலான கண்ணாடி இழைப் பாலம் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.

கடல் மீது இப்படி கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை விவேகானந்தர் நினைவிடத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் அழைத்துச் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் படகுப் போக்குவரத்து நடத்தப்படுகிறது.

விவேகானந்தர் நினைவிடம் அமைந்திருக்கும் பாறையோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை உயரம் குறைவானது. ஆகவே, கடல் கொந்தளிப்பாக இருக்கும்போதும் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போதும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடிவதில்லை.

 

இதனால் இந்த இரு நினைவுச் சின்னங்களையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது.

கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்திற்கான வளைவு 11 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த பத்து மீட்டர் அகலமுள்ள பாலத்தின் கவனம் ஈர்க்கும் அம்சமாக, அதன் நடுவில் 2.4 மீட்டர் அகலத்திற்கு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, பாலத்தின் மீது நடந்து செல்பவர்கள் அதன் வழியாக கீழே கடலைப் பார்க்க முடியும்.

கன்னியாகுமரி, கண்ணாடிப் பாலம், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை

பட மூலாதாரம்,TN DIPR

படக்குறிப்பு, பாலத்தின் பகுதிகள் தனித்தனியாக புதுச்சேரியில் செய்யப்பட்டு, கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டன.

கண்ணாடி இழைப் பாலத்தை கட்டியது எப்படி?

"இந்தப் பாலம் ஒரு தனித்துவம் மிக்க பாலம். கடலின் மீது கட்டப்பட்டதால் தூண்கள் ஏதும் அமைக்கப்படாமல் இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் ஒரு வளைவு (arch) அமைக்கப்பட்டு, அந்த வளைவிலிருந்து வரும் கம்பிகள் பாலத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் பாலம் முழுக்கவும் கான்கிரீட்டால் அமைக்கவே முடிவு செய்யப்பட்டிருந்த. பின்னரே, கண்ணாடியை பொருத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது" என்கிறார் இந்தப் பாலத்தை வடிவமைத்த எம்ஐஏ டிசைன்ஸின் ஆர்க்கிடெக்டான டேவிட் ஆர். ஞானசுவாமி.

இந்தப் பாலம் precast முறையில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார் அவர். "அதாவது பாலத்தின் பகுதிகள் தனித்தனியாக புதுச்சேரியில் செய்யப்பட்டு, கன்னியாகுமரிக்குக் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டன. இதில் உள்ள கண்ணாடி உறுதியாக்கப்பட்ட கண்ணாடி (toughened glass) வகையைச் சேர்ந்தது. இது 53 மி.மீட்டர் தடிமனானது. ஆகவே இது உடையாது" என்கிறார் டேவிட்.

முழுமையாக கண்ணாடியால் கட்டப்படாமல் நடுப் பகுதி மட்டும் கண்ணாடி பொருத்தப்பட்டதற்கு காரணங்கள் உள்ளன.

"எல்லோருமே உயரத்தில் உள்ள கண்ணாடி மீது நடக்க விரும்ப மாட்டார்கள். மேலும் மழை பெய்யும் காலங்களில் கண்ணாடி வழுக்கவும் கூடும். ஆகவேதான் இரு புறங்களிலும் கான்கிரீட்டும் நடுவில் கண்ணாடியும் பொருத்த முடிவுசெய்யப்பட்டது" என்கிறார் டேவிட்.

கண்ணாடி இழைப் பாலம் உள்ள எல்லா இடங்களிலும் இதுபோன்ற தடிமனில்தான் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றனவா?

"அந்த இடத்தில் எவ்வளவு பேர் கண்ணாடி மீது ஒரே நேரத்தில் நிற்பார்கள் என்பதை வைத்து இது முடிவு செய்யப்படும். இங்கே வரும் மக்கள் கூட்டத்திற்கு சுமார் ஐந்தரை சென்டிமீட்டர் கனமுள்ள கண்ணாடி தேவை என முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே கடல் மீது இப்படி ஒரு பாலம் கட்டப்படுவது இதுதான் முதல் முறை" என்கிறார் அவர்.

இந்தப் பாலம் திறக்கப்பட்டிருப்பதன் மூலம், திருவள்ளுவர் சிலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் பின்னணி

கன்னியாகுமரி, கண்ணாடிப் பாலம், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை

பட மூலாதாரம்,TN DIPR

படக்குறிப்பு, சுமார் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது.

தி.மு.கவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் தொடர்பான இரண்டு கட்டுமானங்களுக்கு முடிவுசெய்யப்பட்டது. ஒன்று, சென்னையில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம். இரண்டாவது, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு மிகப் பெரிய சிலை ஒன்றை அமைப்பது.

திருவள்ளுவர் சிலை தொடர்பாக தமிழக அமைச்சரவை 1975ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முடிவெடுத்தது. விவேகானந்தர் பாறையிலிருந்து சுமார் 590 அடி தூரத்தில் அமைந்திருக்கும் மற்றொரு பாறையில் சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில் 75 அடி உயரத்திற்கு திருவள்ளுவர் சிலையை உருவாக்குவது என அந்தத் தருணத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் சிலையின் பீடம் 42 அடி உயரத்திலும் சிலை 33 அடி உயரத்திலும் இருக்கும் என முடிவுசெய்யப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.

கன்னியாகுமரி, கண்ணாடிப் பாலம், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னையில் இருந்த வள்ளுவர் கோட்டம் ஆளுநர் கே.கே. ஷா தலைமையில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவால் 1976ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்டது என்றாலும் திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில், 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கலந்துகொண்ட நிகழ்வில் அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அதற்கு பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

"கல்லில் சிலை அமைக்கலாமா, சிலைக்கு பதில் நினைவுச் சின்னம் அமைக்கலாமா சிலை செப்புத் தகட்டினால் வடிவமைக்கப்படலாமா என்பன போன்ற கேள்விகளால் சிலை அமைப்பதற்கான எந்தப் பணியும் நடைபெறவில்லை" என வள்ளுவர் சிலை திறப்பை ஒட்டி வெளியிடப்பட்ட "கோட்டம் முதல் குமரி வரை" நூலில் தான் எழுதிய கட்டுரையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டிருந்தார் .

இதற்குப் பிறகு 1989-இல் மு. கருணாநிதி தலைமையில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போது கணபதி ஸ்தபதி தலைமையில் இந்தப் பணியை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. கருணாநிதி பேசிய போது சிலையின் உயரம் 133 அடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு மே மாதத்தில் செப்புச் சிலையாக அல்லாமல், கல்லினால் அந்தச் சிலையை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி, கண்ணாடிப் பாலம், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை

பட மூலாதாரம்,TN DIPR

பீடத்தின் உயரம் 38 அடியாக இருக்கும் என்றும் சிலையின் உயரம் 95 அடியாக இருக்கும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பணிகள் கன்னியாகுமரியில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டன. ஆனால், ஐந்து மாதங்களுக்குள் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இதற்குப் பிறகு திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி மீண்டும் முடங்கியது.

1996-இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, சிலையை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. திருத்திய மதிப்பீட்டில் 6 கோடியே 16 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. பிறகு வேகமாக பணிகள் நடந்து, 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சிலை முழுமையாக எழுப்பி முடிக்கப்பட்டது.

"இந்த சிலையின் எந்த இடத்திலும் இரும்போ கன்கிரீட்டோ பயன்படுத்தப்படவில்லை. கற்களை இணைக்க கல்லால் ஆன ஆணிகள் செய்யப்பட்டு, அதன் மூலம் சில இடங்களில் கற்கள் இணைக்கப்பட்டன. இந்தச் சிலை 3 டன் முதல் 8 வரை எடை கொண்ட 3,681 கற்களால் ஆனது" என 'கோட்டம் முதல் குமரி வரை' நூலில், இந்தச் சிலை உருவான தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தலைமை ஸ்தபதியான கணபதி ஸ்தபதி.

இந்தக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குவதன் மூலமே சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இரு கற்களுக்கு இடையிலான இடைவெளியை மூடவே சாந்து பூசப்பட்டிருப்பதாகவும் கற்களைப் பிடித்துக் கொள்வதற்காக அல்ல என்றும் கூறுகிறார் அவர்.

கடற்காற்று சிலையைச் சேதப்படுத்தாமல் இருக்க, சிலையின் மீது பாலிசிலிகான் (polysilicon) கலவை பூசப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் ஒரு வருடம் 9 நாட்கள் நடந்தது என்றும் கற்களை உடைப்பதிலிருந்து சிலையை பொருத்துவது வரை சுமார் 500 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கணபதி ஸ்தபதி குறிப்பிடுகிறார்.

இந்தச் சிலையின் திறப்பு விழா 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31 - 2000வது ஆண்டு ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் நடத்தப்பட்டது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

Chennai விமான நிலைய விழுந்து நொருங்கும்  கண்ணாடிகள் நினைவிற்கு வருகிறது. 😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2025 at 13:32, Kapithan said:

Chennai விமான நிலைய விழுந்து நொருங்கும்  கண்ணாடிகள் நினைவிற்கு வருகிறது. 😁

May be an image of one or more people, submarine and text

நேற்று திறப்புவிழா. இன்று பராமரிப்பு பணி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of one or more people, submarine and text

நேற்று திறப்புவிழா. இன்று பராமரிப்பு பணி. 

எப்பெப்ப யார்யார் தண்ணீரில் மூழ்கப் போறாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

எப்பெப்ப யார்யார் தண்ணீரில் மூழ்கப் போறாங்களோ?

எதுக்கும் கீழேயொரு safey net ஐக் கட்ட முன்மொழிகிறேன். 

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.