Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சமத்து.☝
காங்ரஸ் என்றால் ஓகேயா? 😎

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?

நாளைக்கே டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி என்றால் அண்ணன் அங்கும் நாக்கை தொங்க போட்டபடி போவார்.

#சின்ன கருணாநிதி

  • Replies 59
  • Views 2.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா?  அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது.   

  • goshan_che
    goshan_che

    நான் உங்களை பற்றி இப்படி எழுதினால் - நீங்களும் என்னை பற்றி இப்படி எழுதலாம். நான் எழுதுவது சீமான் என்ற செக்ஸ் சைக்கோ அரசியல்வாதி பற்றி. அதர்க்கான பதில் கோசான் பற்றி எழுதுவதல்லவே? எழுதினாலும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?

நாளைக்கே டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி என்றால் அண்ணன் அங்கும் நாக்கை தொங்க போட்டபடி போவார்.

#சின்ன கருணாநிதி

சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா?  அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா?  அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது. 

 

அடுத்த பாகத்தையும் வெளியிடுங்கள், அதில் அவர் தாத்தா அன்பரசனை எப்படி கேவலப்படுத்தியிருக்கிறார் என்று பார்க்கணும்😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா?  அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது. 

 

அந்த டைரக்டர் ஒரு தீர்கதரிசி, time traveler ஆகவும் இருக்கலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா?

உங்களுடைய சீமான் தனது யேர்மன் ஆதரவாளரை பற்றி கதை விடுகின்ற  காணொளியையே பார்த்து சிரித்து முடியவில்லை🤣  இப்போது பொருத்தமான வேடத்தில் சீமான் தோன்றுகின்ற இன்னொரு காணொளியா  🤣

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு இதுதான் காரணமா? கள நிலவரம் என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
படக்குறிப்பு, திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 பிப்ரவரி 2025, 13:44 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், வழக்கமான இடைத்தேர்தல் பரபரப்புகளையும், அரசியல் பிரமுகர்களின் பரப்புரைகளையும் பார்க்க முடியவில்லை.

முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையில், தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர்.

இந்த தேர்தலின் முடிவுகளை விட, இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியின் வாக்கு வங்கி கூடுகிறது, குறைகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் களத்தில் பிரசாரம் எவ்வாறு நடக்கிறது?

 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4 அன்று , அவர் மாரடைப்பால் இறந்தார்.

அதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அவரது தந்தை இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கிட்டதட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி மீண்டும் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்குள் இந்தத் தொகுதியில் மூன்றாம் முறையாக தேர்தல் நடக்கவுள்ளது.

2023 ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த இத்தொகுதியில் இப்போது சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இளங்கோவன்
படக்குறிப்பு, பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, இளங்கோவன் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்று காலமானார்.

ஒரு தொகுதி- 3 தேர்தல்

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அதிமுக அறிவித்தது. பாரதிய ஜனதா கட்சியும் புறக்கணித்துவிட்டது.

புதிதாகத் துவக்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடுமென்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அக்கட்சியும் தற்போது போட்டியிடவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த சட்டமன்றத் தொகுதியில், தற்போது திமுக போட்டியிடுகிறது.

முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்துவிட்டநிலையில், நாம் தமிழர் கட்சி மட்டுமே, இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

திமுக சார்பில் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் களம் காண்கின்றனர்.

சந்திரகுமார், கடந்த 2011–2016 காலகட்டத்தில், இதே தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2016-ஆம் ஆண்டில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, தோல்வியைச் சந்தித்தவர். இப்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

சந்திரகுமார், சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 பேர் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

இரண்டே இரண்டு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே மோதும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் கள நிலவரத்தை அறிய பிபிசி தமிழ் சென்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
படக்குறிப்பு, எவ்வித பரபரப்புமின்றி அமைதியாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த 2023 பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் நடந்த நிகழ்வுகளையும், பரப்புரை மற்றும் தேர்தல் பணிகளையும் ஒப்பிட்டால், இப்போது மிகப்பெரும் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

தேர்தலுக்கான சுவர் விளம்பரங்கள், தோரணங்கள், கொடிகள், சுவரொட்டிகளைப் பார்ப்பதே அரிதாகவுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எல்லை ஆரம்பம், எல்லை முடிவு என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்க்கும்போதுதான், தேர்தல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதிப் பகுதி இதுதான் என்பதையே அறிய முடிகிறது.

அந்த அளவுக்கு இந்த இடைத்தேர்தல் எவ்வித பரபரப்புமின்றி அமைதியாக நடக்கயிருக்கிறது.

அதேபோல, கடந்த இடைத் தேர்தலில் இருந்த அளவுக்கு பணப்புழக்கம் இப்போது இல்லை என பிபிசி தமிழிடம் பேசிய இத்தொகுதி வாக்காளர்கள் பலர் கூறினர்.

முக்கிய தலைவர்களின் பரப்புரை இல்லை

அத்துடன் மக்களிடம் இடைத்தேர்தல் குறித்த ஒரு சலிப்பும் தென்படுவதால் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறையுமென்ற பேச்சும் பரவலாக இருக்கிறது.

வாக்குப்பதிவு சதவீதம் குறையுமென்ற கருத்தை மறுத்த தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளருமான முத்துசாமி, ''மக்களிடம் இடைத்தேர்தல் குறித்து எவ்வித அலுப்பும் சலிப்பும் தெரியவில்லை. மாறாக, ஒரு மிகப்பெரிய தலைவர் இறந்து போனதால் இந்தத் தேர்தல் வந்துள்ளது என்று வருத்தத்தில்தான் உள்ளனர்.'' என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய டீக்கடை உரிமையாளர் கணேசன், ''ஆளும்கட்சி வேட்பாளர் நிற்பதால் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் கூடுவதற்கே வாய்ப்புள்ளது'' என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இளங்கோவன் போட்டியிட்ட காரணத்தால், கடந்த இடைத் தேர்தலில் இங்கு திமுக சார்பில் பல்வேறு அமைச்சர்களும் முகாமிட்டு, பகுதிவாரியாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இப்போது திமுகவே நேரடியாக களமிறங்கியுள்ள நிலையில், மாவட்ட அமைச்சரான முத்துசாமியைத் தவிர, வேறு எந்த அமைச்சரும் இங்கு காணப்படவில்லை.

அதே போல, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என முக்கிய தலைவர்களின் பரப்புரையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
படக்குறிப்பு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சரும், தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளருமான முத்துசாமி

இதுபற்றி திமுக வேட்பாளர் சந்திரகுமார் பிபிசி தமிழிடம், ''பெரிய தலைவர்கள், அமைச்சர்கள் யாரும் வராமலே வெற்றி பெற வேண்டுமென்பதுதான் தலைமையின் உத்தரவு. எங்களை வீடு வீடாக, வீதி வீதியாகப் போகச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனால்தான் மைக், வேன் போன்றவற்றைக் கொண்டு பரப்புரை நடத்தவில்லை.'' என்றார்.

அதேபோல, காங்கிரஸ் தொகுதியில் திமுக போட்டியிடுவதால் அக்கட்சியினரிடம் கடும் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படும் தகவலை முத்துசாமி மறுத்தார்.

''அப்படி எந்த அதிருப்தியும் காங்கிரசாரிடம் கிடையாது. ஏனெனில் தோழமைக்கட்சித் தலைமையிடம் பேசி, பரஸ்பர புரிதலுடன்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.'' என்றார் அமைச்சர் முத்துசாமி.

இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு வந்த ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனிடம் இதுபற்றி கேட்டபோது, ''வருத்தம் இருக்கிறது; அதிருப்தி இல்லை. நாங்களும் களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்கிறோம். ஆனால் 2026 பொதுத் தேர்தலில் இந்த தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமென்று மாவட்ட கமிட்டி சார்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.'' என்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
படக்குறிப்பு, ''எங்களை வீடு வீடாக போகச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்'' என்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்தார்.

தொகுதிக்குள் இருக்கும் பிரதான பிரச்னைகள்!

இது ஒருபுறமிருக்க,தொகுதிக்குள் பல பிரச்னைகள் இருப்பதாக வேட்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் செல்லக்குமாரசாமி , ''தொகுதியில் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இந்த இடைத் தேர்தலுக்கு சிறப்பு வாக்குறுதி எதுவுமில்லை என்று திமுக தரப்பில் சொன்னதால்தான் நான் இந்தத் தேர்தலிலேயே போட்டியிடுகிறேன். பல பிரச்னைகள் இருக்கின்றன. குறிப்பாக காற்று மாசு, நீர் மாசு அதிகரித்து, புற்றுநோய் நகரமாக ஈரோடு மாறி வருகிறது. இதைத் தடுக்காமல் இப்போது மீண்டும் வாக்குக் கேட்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.'' என்றார்.

பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த வாக்காளர் ப்ரீத்தா, தெருநாய் தொல்லையைக் கூடக்கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

அதனால் தன்னைப் போன்ற எளிய வாக்காளர்களுக்கு ஆளும்கட்சி உட்பட எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கையில்லை என்றும் கூறிய அவர், ஆனாலும் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிப்போம் என்று குறிப்பிட்டார்.

இதே போல பெரிய குறைகள் பட்டியலை அடுக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி, ''நகரில் ரோடுகள் சரியில்லை; குப்பைகள் குவிந்துள்ளன; கொசுக்கள் தொல்லை அதிகமாகி விட்டது. மாசு அதிகரித்து, மஞ்சள் நகரம் என்று அழைக்கப்பட்ட ஈரோடு இப்போது புற்றுநோய் நகரமாகி விட்டது. இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று ஆளும்கட்சியினரிடம் கேளுங்கள் என்பதைத்தான் நான் எனது பரப்புரையில் முக்கியமாக வலியுறுத்தி வருகிறேன்.'' என்றார்.

திமுக வேட்பாளர் சந்திரகுமார், ''தொகுதிக்குள் பெரிய பிரச்னை, எதிர்ப்பு ஏதுமில்லை. மக்கள் குறை சொல்லவில்லை. கோரிக்கை வைக்கின்றனர். அதையும் திமுகவால்தான் நிறைவேற்ற முடியுமென்று நம்புகின்றனர். நீர்நிலை புறம்போக்கில் இருப்பவர்களுக்கு பட்டா கொடுப்பதில் உச்சநீதிமன்ற உத்தரவால் சிக்கல் உள்ளது. மாற்று இடம் தரமுடியாது; 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்று வீடுகள் தயாராகவுள்ளன. அதற்கு ஒப்புக் கொண்டால் உடனே வீடுகளை ஒதுக்க அரசு தயாராகவுள்ளது.'' என்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
படக்குறிப்பு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோட்டிலேயே தங்கியிருந்து தினமும் பொதுக்கூட்டம் நடத்தி பரப்புரை செய்கிறார்.

தினமும் பரப்புரை செய்யும் சீமான்

களத்தில் திமுகவை எதிர்க்கும் ஒரே பிரதான கட்சி என்பதால், நாம் தமிழர் கட்சியினரிடம் கூடுதல் உற்சாகம் தெரிகிறது.

அதற்கேற்ப கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோட்டிலேயே தங்கியிருந்து தினமும் மாலையில் ஏதாவது ஓரிடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி பரப்புரை செய்கிறார்.

நகரின் முக்கிய வணிகப்பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரமாண்டமான தேர்தல் அலுவலகம் அமைத்து, அங்கு நுாற்றுக்கணக்கானவர்கள் தங்கியிருந்து தேர்தல் பணி செய்வதையும் பார்க்க முடிந்தது.

சமீபத்தில் பெரியாரைப் பற்றி சீமான் பேசிய கருத்துகள், தமிழகத்தில் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் அவர் தங்கி பரப்புரை செய்து வருகிறார். அவர் மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது, கலவையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதையும் களத்தில் உணர முடிகிறது.

சீமானின் இந்த பேச்சு, ஈரோடு மக்களிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய, பலரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இதனால் தங்களுக்குக் கூடுதல் வாக்குகளே கிடைக்குமென்று நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

''பெரியாரைப் பற்றி சீமான் பேசியதால் எந்த பாதிப்புமில்லை. எதிர்ப்புமில்லை. சில இடங்களில் அது சாதகமாகத்தான் உள்ளது. இப்போது பெரியார் பற்றி மக்களுக்கு யோசிக்க நேரமில்லை. அவர்களுக்கு அன்றாடப் பிரச்னைகள் தீர்ந்தால் போதும். அதைத்தான் நாங்கள் பரப்புரையில் பேசி வருகிறோம்.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி உடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

பெரியாரை எதிர்த்துப் பேசியதன் மூலம் திமுகவையும், பெரியாரையும் எதிர்க்கும் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா வாக்குகள், நாம் தமிழர் கட்சிக்குக் கிடைக்குமென்றும் அக்கட்சியினர் நம்பியுள்ளனர்.

வேட்பாளர் சீதாலட்சுமியும் இந்தக் கருத்தைக் கூறியதோடு, ''அதிருப்தி வாக்கு, நாம் தமிழர், அதிமுக, பாரதிய ஜனதா வாக்குகளால் வெற்றி பெறுவேன்'' என்றார்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இதே தொகுதியில் கடந்த 2023 இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான தென்னரசு, ''பாரதிய ஜனதாவின் வாக்குகள், அவருக்குக் கிடைக்கலாம். ஆனால் அதிமுக வாக்குகள் போவதற்கு அதிக வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். பெரியாரைப் பற்றி அவர் பேசியதில் எங்கள் கட்சியினருக்கும் கடும் அதிருப்தி உள்ளது.'' என்றார்.

இந்தத் தொகுதியைப் பற்றிப் பேசாமல், சீமான் சித்தாந்தரீதியாகப் பேசுவதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாரதிய ஜனதா இருப்பதாகக் குற்றம்சாட்டினார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்.

இந்த கருத்துகளை மறுத்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர், ''பெரியாரை எதிர்ப்பதால் மட்டும் சீமான் புனிதராகிவிடமாட்டார். அவருடைய சித்தாந்தம், எப்போதுமே தேச நலனுக்கு எதிரானதுதான். அவரை பாரதிய ஜனதா கட்சியினர் யாரும் நம்ப மாட்டார்கள். சீமான் கட்சிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

குறித்து வைத்து கொள்ளுங்கள்.

வரப்போகும் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் அதிமுக+பிஜேபி+ நாதக நேரடியாக கூட்டணி

அல்லது….

அதிமுக வை அதன் தொகுதியில் நாதக எதிர்க்காது, என்ற உடன்படிக்கை…

அல்லது வேறு ஏதோ ஒரு பொறிமுறை

மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக இந்த மூன்று கட்சி வாக்குகளையும் சேர்க்கும் திட்டத்தின் வெள்ளோட்டம்தான் இந்த தேர்தல்.

அமித் ஷா சொல்படி அதிமுக, பிஜேபி இந்த தேர்தலை புறக்கணிக்க, முழு சங்கியாக சீமான் மாறி பரப்புரை செய்வது…. கடுமையாக பெரியாரை எதிர்ப்பது

மக்கள் இந்த கூட்டை ஏற்பார்களா என நாடி பிடித்து பார்க்கவே.

சீமானுக்கு கிடைக்கும் வாக்கு வீதத்தை பொறுத்து, அதிக சேதாரம் இல்லாமல் மூன்று கட்சியும் இணையலாமா இல்லையா என முடிவெடுப்பார் அமித் ஷா.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் - நேரலை
5 பிப்ரவரி 2025, 03:31 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இடைத்தேர்தல் களத்தில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.

முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.

வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பெண் புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 எண் வாக்குச்சாவடியில் ஃபரிதா பேகம் என்பவர் கணவருடன் வாக்கு செலுத்த வந்தார்.

இந்நிலையில், அப்பெயரில் ஏற்கெனவே ஒருவர் வாக்கு செலுத்தியதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளார், இதையடுத்து, தன் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக, அப்பெண் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டார்.

தான் மீண்டும் வாக்களிக்க வழிசெய்யும் வகையில், சட்டப்பிரிவு 49பி-ஐ (49P) பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரினார் அப்பெண். இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு சம்பத் நகரில் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.

தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலின் முடிவுகளைவிட, இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியின் வாக்கு வங்கி கூடுகிறது, குறைகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வாக்குப்பதிவு காரணமாக அங்குள்ள வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்

4 ஆண்டுகளில் மூன்றாவது தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4 அன்று , அவர் மாரடைப்பால் இறந்தார்.

அதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்

கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி மீண்டும் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்குள் இந்தத் தொகுதியில் மூன்றாம் முறையாக தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
படக்குறிப்பு, இடைத்தேர்தலில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த இத்தொகுதியில் இப்போது சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 வாக்குச்சாவடி மையங்கள், பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்தலையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியது என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன், கொசுவண்ண வீதியிலுள்ள பிவிபி குழந்தைகள் பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளுடன், அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலைச் சந்தித்துள்ளேன். இந்த இடைத்தேர்தலைப் பொருத்தவரை திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்," என்று தெரிவித்தார்.

மேலும், "அந்த மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களாகவே இருக்கும்," என்றும் குறிப்பிட்டார்.

'வாக்குச் சாவடியில் பாரபட்சம்' - நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் - நேரலை

இந்தத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கோபிச்செட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இங்கு வாக்கு இல்லை. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை சீதாலட்சுமி ஆய்வு செய்தார்.

''முதல் 2 மணிநேரத்தில் வாக்குப்பதிவு வேகமாக நடந்துள்ளது. நான் 30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தேன். என்னைப் பார்த்த வாக்காளர்கள் பலர், யார் பணம் கொடுத்தாலும் இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். இனிமேல் இவர்களை நம்பி வாக்களித்துப் பயனில்லை என்றும் கூறினர்'' என்றார்.

சீதாலட்சுமி
படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆய்வு செய்தபோது

மேலும் அவர் கூறுகையில், ''நான் எனது கட்சித் துண்டைப் போட்டுக் கொண்டு வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்றபோது, அதை அகற்றுமாறு கூறினர். இந்தத் துண்டில் சின்னம் எதுவுமில்லை. இதைப் பார்த்து, மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் நான் பிரச்னை வேண்டாமென்று அதை அகற்றிவிட்டேன். ஆனால், திமுக வேட்பாளர் அவருடைய கட்சிக் கொடி நிறத்திலான துண்டை அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர். இப்படி அதிகாரிகள் அப்பட்டமாகப் பாரபட்சம் காட்டுகின்றனர்'' என்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறை அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய சீதாலட்சுமி, இங்குள்ள மக்கள் பலர், அருகிலுள்ள வேறு தொகுதிகளுக்கும் பணிக்குச் செல்கின்றனர். ஏராளமான கூலித்தொழிலாளர்கள், இன்று பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் காலி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? 5 கேள்விகளும் பதில்களும்

ஈரோடு

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 பிப்ரவரி 2025, 01:29 GMT

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அக்கட்சிக்கு கிட்டதட்ட 24 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது?

 

நாம் தமிழர் கட்சி மட்டுமே நேரடி போட்டியில் இருந்ததால், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் யாரும் கிழக்குத் தொகுதியில் பெரிதாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) நடந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தி.மு.க வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியான இறுதி தரவுகளின்படி தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் கிடைத்துள்ளன.

சீமான்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

1.பெரியார் மீதான விமர்சனம்

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதைவிட கூடுதலான வாக்குகளை தற்போது அக்கட்சி பெற்றுள்ளது.

பிரதான கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால் நாம் தமிழர் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதே காலகட்டத்தில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்தார். பெண்ணிய உரிமை தொடர்பாக பெரியார் கூறியதாக சீமான் பேசிய பேச்சு, பெரியாரிய அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் பெரியார் மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.

கடந்த தேர்தலைவிட13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தாலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.

ஈரோடு

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

2. தேர்தல் உத்தி தவறா?

"வரும் காலங்களில் தனது தேர்தல் உத்திகளை நாம் தமிழர் கட்சி மாற்றிக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்கு பெரியாரும் பிரபாகரனும் பயன்படுவதில்லை. பழைய சித்தாந்தங்கள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவர் உயரத்தில் இருந்த காலத்தில்கூட வாக்கு அரசியலில் வெற்றி பெறும் நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியதில்லை" எனக் கூறுகிறார்.

மேலும், "பெரியார் எதிர்ப்பு என்ற நிலையை எடுத்தால் அது பா.ஜ.க ஆதரவு என்ற நிலையாக மக்கள் பார்ப்பார்கள். தேர்தல் முடிவுகளின்படி மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு இல்லை என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்" என்கிறார்.

"ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் பிரசாரம் அமையவில்லை" எனக் கூறும் ஷ்யாம், " கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை சீமான் பலப்படுத்த வேண்டும்" என்கிறார்.

இதனை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, "கடந்த காலத்தைவிட கட்டமைப்பில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 2026 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் முகவர்களை நியமிப்பது எங்களின் இலக்காக உள்ளது" எனக் கூறினார்.

பொதுக்கூட்டங்களில், தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே சீமான் அதிகம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சித்தாந்த ரீதியாக பேசும்போதும் திராவிடம் குறித்துப் பேசும்போதும் பெரியார் குறித்தும் பேசினோம். அதிலும் 10 சதவீதம்தான் பெரியார் பற்றிப் பேசினோம்" என்கிறார் இடும்பாவனம் கார்த்தி.

"திமுகவும் பெரியார் பெயரை சொல்லி வாக்குகளைக் கேட்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கியிலும் பெரியார் குறித்த விமர்சனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை" எனக் கூறுகிறார் அவர்.

ஈரோடு

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி

3. புறக்கணித்த எதிர்க்கட்சிகள்- யாருக்கு லாபம்?

பிரதான அரசியல் கட்சிகள் போட்டியிடாத சூழலில் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அதிமுக வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறவில்லை. அதற்கான வாய்ப்பு தொடக்கத்தில் இருந்தே இல்லை. ஆளும்கட்சி எதிர்ப்பு வாக்குகள் ஒன்று சேர்ந்திருந்தால் நாம் தமிழர் கட்சி, இன்னும் அதிக வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

"எதிர்கட்சிகள் போட்டியிட்டு தங்களின் வாக்குவங்கியைக் காட்டியிருக்க வேண்டும். அப்போது தான் திமுக எதிர்ப்பு வாக்குகளை அடையாளம் காண முடியும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது" என்கிறார்.

இதற்கு மாற்றான கருத்தை முன்வைக்கும் அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளருமான பாபு முருகவேல், "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டபோதே என்ன நடக்கும் என்பதை அறிந்து தான் போட்டியிட்டோம். தற்போது போட்டியிடுவது என்பது தேவையில்லாத ஒன்று" எனக் கூறுகிறார்

இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதை சுட்டிக் காட்டும் பாபு முருகவேல், "ஆளும்கட்சியின் மீதான அதிருப்திக்கு இதுவே காரணம். 80 சதவீதத்துக்கும் வாக்குகள் பதிவாகியிருந்தால் அதிமுக வாக்குகள் மடை மாறியிருக்கும் என நம்பலாம்" எனக் கூறுகிறார்.

"கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் 25 சதவீத வாக்குகளை அதிமுக வாங்கியது. அப்படிப் பார்க்கும் போது அ.தி.மு.க வாக்குகள் வேறு கட்சிகளுக்கு திசை மாறிச் செல்லவில்லை" என கூறுகிறார் பாபு முருகவேல்.

2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவர் 62,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜாவுக்கு கிட்டதட்ட 56 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தென்னரசுவுக்கு 43,922 வாக்குகள் கிடைத்தன.

அந்தவகையில், ''நாம் தமிழர் கட்சிக்கு எதிர்க்கட்சி வாக்குகள் பெரிதாக சென்று சேரவில்லை'' என ஷ்யாம் குறிப்பிட்டார்.

ஈரோடு

பட மூலாதாரம்,@BABUMURUGAVEL

படக்குறிப்பு, அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளருமான பாபு முருகவேல்

4. வழக்கமான இடைத்தேர்தலை போல இந்த முறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவா?

தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், "ஆளும்கட்சி போட்டியிடும்போது கடந்த காலங்களில் பிரதான கட்சிகள் போட்டியிடாமல் இருந்துள்ளன. அப்போது யாராவது ஒருவர் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்குவார்கள். அதை விபத்தாக பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.

இதை எப்படி விபத்தாக பார்க்க முடியும் என செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் கூறியதை தவறாக திரிக்க வேண்டாம்" எனக் கூறிய சந்திரகுமார், "யாரைப் பார்த்தும் திமுக பயந்தது இல்லை. பயப்படுவதாக கூறினால் அது அவர்களின் அறியாமை" என்றார்.

ஆட்சியை மக்கள் ஆதரிப்பதால், எதிர்க்கட்சிக்கு விழக் கூடிய வாக்குகளும் தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறிய சந்திரகுமார், "அதன் வெளிப்பாடு தான் இவ்வளவு பெரிய வெற்றி" எனக் கூறினார்.

"இந்த தேர்தலால், நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை" எனக் கூறுகிறார் அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த தேர்தலை விடவும் அதிக வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது" எனக் கூறினார்.

பெரியாரை விமர்சித்த காரணத்தால் வாக்குகள் குறையவில்லை எனக் கூறியுள்ள சீதாலட்சுமி, "நாம் தமிழர் கட்சி மீது புரிதல் உள்ளவர்கள், எங்களுக்கு வாக்களித்துள்ளனர். பணம், கள்ள ஓட்டு ஆகியவற்றைத் தாண்டி இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளோம்" எனக் கூறுகிறார்.

ஈரோடு

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, திமுக செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

5. தி.மு.க வெற்றி - எதைக் காட்டுகிறது?

"இந்த வெற்றியின் மூலம் திமுக மகிழ்ச்சியடைவதற்கு எதுவும் இல்லை" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "இந்த வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்க முடியாது" என்கிறார்.

அதேநேரம், தேர்தல் களம் என்பது சரிசமமாக இல்லை எனக் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியியின் இடும்பாவனம் கார்த்தி.

வீதிக் கூட்டம், தெருமுனைக் கூட்டம் என திமுக பிரசாரம் செய்யவில்லை எனக் கூறும் அவர், "பணத்தை நம்பி திமுக போட்டியிட்டது. கோடிக்கணக்கில் செலவு செய்து திமுக இந்த வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளது" என குற்றம்சாட்டினார்.

திமுகவின் வெற்றி குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "யாரும் களத்தில் இல்லை. இது போலி வெற்றி. எங்கள் நிர்வாகிகள் ஓட்டைக் கூட அவர்களே பதிவு செய்துவிட்டனர். கள்ள ஓட்டுகளின் மூலம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்" எனக் கூறினார்.

ஆனால், இதை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பு செயலர் கான்ஸ்டன்டைன், " இது பெரியார் மண் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு இது" எனக் கூறுகிறார்.

கள்ள ஓட்டு, பண விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த கான்ஸ்டன்டைன், "தோற்றவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறுவார்கள்" என்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆவடியில் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "பெரியார் மண்ணில் மகத்தான வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். நம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உழைப்பை திருடிய திருமுருகன் காந்தி. | இனப்பாசத்தில் நடத்திய துரோகம் | ஆவணங்களை திருடுவதில் ...

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.