Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர்

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம்  தன்னுடைய பதவி விலகியுள்ளார். 

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் ரீதியில் அழுத்தங்கள்..

யாழ் பல்கலையில் சம காலத்தில் தமிழ் இனத்துக்கும் எதிர்காலத்துக்கும் நம்பிக்கைத்தரகூடிய ஒரு ஆளுமை பல்கலையின் பேரவையின் முடிவினால் அதிருப்தியடைந்து பதவி விலகியுள்ளமை அதிர்ச்சி அளிப்பதாக பல்கலைக்கழக மட்டத்திலிருந்தும் வெவ்வேறு தரப்பிலிருந்தும் அதிர் வலைகளை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் மேம்பாடு தொடர்பில் சிந்திக்கும் போராசிரியர் ரகுராம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமூகத்தில் இடம்பெறுகின்ற விடயங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் இவருக்கு அரசியல் ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் பலரிடம் இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இதன் பின்ணியில் இருக்கலாமா என்ற சந்தேகம் பலரிடம் இருப்பதாக பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

https://tamilwin.com/article/jaffna-university-dean-raguram-decision-1737891856

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிசாரை நியமித்ததற்காக பொங்கி வழியும் முட்டாள் டமில் தேசிக்காய்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு பீடாதிபதி பதவி விலகியமை தொடர்பில் மூச். 

நன்னா இருக்கோ இல்லியோ உங்க நாடகம்,..? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இதன் பின்ணியில் இருக்கலாமா என்ற சந்தேகம் பலரிடம் இருப்பதாக பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன

தோழர்களின் கட்சிகள் உள் உழைந்து இப்படி தமிழ் தேசிய கட்சிகள் மீது பலியை போடுகிறார்களோ தெரியவில்லை...பல்கலைகழகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுபதற்கு இந்த குற்றசாட்டை வைக்கின்றனர் போலும்

 

அவர் சுமத்திரனாக இருக்கலாமோ....அவர் தான் இந்தியா சார்பாக வடமாகாணத்தில் நடை பெறும் சகல நடவடிக்கைகளும் முன்னுக்கு நிக்கின்றார் ...ஏனைய தமிழ் தேசிய பிரமுகர்கள் அழுத்தம் கொடுக்குமளவுக்கு இல்லை என நான் நினைக்கிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க முன் வாருங்கள் – பேராசிரியர் ரகுராம் அறைகூவல்!

adminJanuary 27, 2025
raguram.jpg

இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவணையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்த கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசியர் சி. ரகுராம் அறைகூவல் விடுத்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான போதைப்பாவனையை தடுத்து நிறுத்துக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவனாக, பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்பவனாக சமூகத்திடம் தாழ்மையான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.

போதைப்பாவனை எமது சமூகத்தை எல்லா விதத்திலும் பாதித்துள்ளது. பல்கலைக்கழகம் மாத்திரமல்ல, பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் என ஊடுருவியுள்ள போதைப்பாவனை எங்களுடைய சக்தி மிகு இளம் சமுதாயத்தை சீரழித்து வருகிறது

இந்த போதை பாவனை சுயமாக சிந்திக்க கூடிய எங்கள் இளம் சமூதாயத்தை மிக அசிங்கமான வழியில் சீரழித்துக்கொண்டு இருக்கிறது.

போதை பாவனையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக , அதனை எதிர்த்து நிற்கும் மிக பெரிய சமூக பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக கருதுகிறேன்.

சக்திமிக்க , உலகத்தையே மாற்றியமைக்க கூடிய மாணவ சமூதாயம் போதைப்பொருளை அடிமையாகி வருகின்றனர். பாடசாலைகள் இந்த போதைப்பாவனையை தடுத்து நிறுத்த முடியாமல் திகைத்து நிற்கின்றன.

இந்த மண் இளம் குருத்துக்களை போதைப்பாவனை அற்ற சமூகமாக உருவாக்கி நின்ற மண்.

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டம் , ஒரு சமூக போராட்டமாக உருவாக வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் , சமூகத்தை பற்றி சிந்திக்க கூடியவர்கள் இந்த தருணத்தை எங்களுக்காக ஒதுக்கி , இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவணையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும்.

தனி நபராக சமூகமாக இந்த கால பொறுப்பை பற்றி சிந்தியுங்கள். போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய கால கட்டமாகும்.

உங்களுடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுவித்து , எங்கள் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2025/210379/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை வகுப்புத் தடை நீக்கச் சர்ச்சை: பதவியை உதறினார் கலைப்பீடாதிபதி!

1831201320.jpeg

உண்மையை வெளிப்படுத்துக! உடனடி நடவடிக்கை எடுக்குக!

வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் சிலரின் வகுப்புத்தடையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூதவை நீக்கியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு அதிருப்தி தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீடப் பீடாதிபதி ரகுராம், பீடாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளித்துள்ளார்.

கலைப்பீட மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மாணவர்கள் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருந்தனர்.

அதையடுத்து நேற்று பல்கலைககழக மூதவை கூடி இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்தது. மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடையை நீக்குவதற்கு மூதவை தீர்மானித்தது.

இந்தநிலையில், வகுப்புத்தடை ஏன் அந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், வகுப்புத்தடை விடயத்தில் இருந்த உண்மையைத் திரிவுபடுத்தி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி ரகுராம், மூதவையின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து, பீடாதிபதிப் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் கையளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அவரது பதவி விலகலை துணைவேந்தர் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது.

 

https://newuthayan.com/article/யாழ்.பல்கலை_வகுப்புத்_தடை_நீக்கச்_சர்ச்சை:_பதவியை_உதறினார்_கலைப்பீடாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்

கலைப்பீட பீடாதிபதியாக ரகுராம் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும்; யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள் வேண்டுகோள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என  பல்கலை கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்படும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார்.

யாழ் பல்கலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பேரவை கூட்டம், கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் பதவி விலகல் என்பதை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பை நடத்துகிறோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை நுகர்ந்து பரமேஸ்வரன் ஆலயம் பொங்குதமிழ் தூபி முன்பாகவும் முச்சக்கர வண்டிகள் சகதிம் நின்று ஏனைய மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை கலைப்பீட பீடாதிபதி, சட்ட நிறைவேற்று அதிகாரி, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்பவர்களால் அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களிடம் குறித்த மாணவர் குழு தகாத வார்த்தைகளில் முரண்பட்டு பொதுமக்கள் மத்தியில் தகாத வார்த்தைகளை மேற்கொண்டார்கள் என்ற அடிப்படையில்,குறித்த மாணவர்கள் மீது முறைப்பாடு முன் வைக்கப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை, இரண்டாம் கட்ட விசாரணை, ஒழுக்காற்று சபை குழு, அதனைத் தொடர்ந்து பேரவை என்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஒழுக்காற்றுச் சபையானது குறித்த மாணவர்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான தண்டனையை வழங்கியிருந்ததாகவும் பேரவை அதனை கேள்விக்குட்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது.

போதைவஸ்து பாவனை, மதுபான பாவனை என்பன தினமும் இடம்பெற்று வந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பான பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பு காணப்படுகின்ற சில தடயங்கள் இங்கு போதைப் பொருள் பாவனைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.

மேற்படி விடயம் தொடர்பாக குறித்த மாணவர்கள் கல்லாசனம் அகற்றப்பட்டதையும் அதன் விளைவாக அதனை விமர்சித்ததன் காரணத்தாலே பழிவாங்கப்பட்டோம் என்ற விடயத்தையும் கூறி இருந்தனர்.

கல்லாசனம் அகற்றப்பட்டது என்ற விடயத்தை கேள்விக்குட்படுத்துகின்ற பெரிதுபடுத்துகின்றவர்கள் ஏன் அந்த கல்லாசனம் அகற்றப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியிருந்தால் இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன், கலைப்பீட பீடாதிபதி உரையாடி பத்து கல்லாசனங்கள் பொருத்தமான இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ  முகநூல் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரமேஸ்வரா ஆலயத்திற்கு முன்பாக கல்லாசனம் அகற்றப்பட்டது தொடர்பில் மாணவர்கள் பலரும் எம்மிடம் மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்துள்ளனர்.

நான் எட்டு பேருக்கு மட்டும் கலைப்பீட  மாணவ பிரதிநிதி அல்ல. 3500 மாணவர்களுக்கான தலைவராகவே நான் உள்ளேன். சகலரின் கருத்தையும் கேட்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறான சூழலில் பல்கலைகழக பேரவை குறித்த முறைப்பாடு தொடர்பாக ஒழுக்காற்று குழுவின் முறைமைகளை கடந்து உண்ணாவிரதம் இருந்துவிட்டார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் வகுப்புத் தடையை விடுவித்து இருப்பது எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது.

மாணவர்களின் பிரச்சனை தானே போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என பலர் கேட்கலாம். போராட்டம் இருக்கின்ற இடத்தில் இவ்வாறான விடயங்களை மேற்கொண்ட நபர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் சமூகப் பொறுப்புள்ள பெண்களை மதிக்கின்ற போதைப் பொருளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாங்கள் மதுபானத்துக்கு எதிராக செயல்படுகின்ற நாங்கள் எதனடிப்படையில் அந்த இடத்தில் சமூகமளிக்க முடியும் என்ற கேள்வியை நான் சமூகத்திடம் எழுப்புகின்றேன்.

அதனாலேயே பேரவை கூட்டம் வரும் வரை நாம் மௌனம் காத்துக் கொண்டிருந்தோம். இனியும் மௌனம் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த மாணவ ஒழுக்காற்று விசாரணை நடுநிலைப்படி ஒழுங்குமுறைப்படி நடத்தப்பட வேண்டும்

கலைப்பீட முதலாம் வருட மாணவர்களின் பாடப் பிரச்சனை தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான முழுமையான தெளிவான பதிலை நாங்கள் கூறுகின்றோம்

பல்கலைக்கழக மூதவையால் அங்கீகரிக்கப்பட்ட  சுற்றறிக்கையின்படி பாடத் தெரிவு அமைகின்றது. 2024 ஆம் ஆண்டு புதிய கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாகம் பதவியேற்ற நிலையில் குறித்த மாணவர்களுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட விரிவுரைகள் நிறைவடைந்திருந்தன.

நாங்கள் பதவியேற்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு முதலேயே பாடத் தெரிவு தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் கலைப்பீட  மாணவர் ஒன்றியம் பேசாமல் இருந்தது.  தற்போது புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியம் பதவியேற்று அடுத்த நாள் போராட்டம் செய்ய வேண்டும் என்று முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் கேட்டால் எந்த அடிப்படையில் நாங்கள் போராட்டம் செய்ய முடியும் என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன்.

கடந்த முறை இதே சம்பந்தமான பிரச்சனை நடந்து இதே மாதிரி போராட்டம் நடைபெற்ற போது கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், துறைத் தலைவர்கள், கலைப்பீட மாணவர்களாகிய  நாங்கள் இருந்தபோது பல்கலைக்கழக சட்டரீதியான முறைமையை கேள்விக்கு உட்படுத்த முடியாது. மாணவர்களுக்கு பிரச்சினை என்றால் இதற்கு பதிலீடான முறைமையை கொண்டு வாருங்கள். அதனை கலைப்பீட நிர்வாகம் செய்யும் என்று பீடாதிபதியால் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் 8 மாதங்களாக அமைதியாக இருந்து விட்டு இன்னும் ஒரு வருட மாணவர்கள் வந்துவிட்ட நிலையில் தாங்கள் செய்த பிழைகளை மறைப்பதற்காக செயற்படுவது எந்த வகையில் நியாயம்.

மாணவர்களுக்கு பாட சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாக கூட்ட அறிக்கையில் இந்த பிரச்சனை சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை எடுத்து பீடச் சபையில் அது சம்பந்தமாக காட்சிப்படுத்தி பீடச் சபையின் அனுமதியுடன் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக ஏனைய ஐந்து பல்கலைக்கழகங்களின் பாடத் தெரிவுகள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அதற்கான விடயங்களை செய்ய துறைத்தலைவர்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆகவே முறைப்படி பாடப் பிரச்சினை சம்பந்தமாக நாம் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

பாடப் பிரச்சினை சம்பந்தமாக போராடிய நபர்கள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன் எந்தவித உரையாடலையும் செய்திருக்கவில்லை.

முதலாம் வருட மாணவன் உள்ளிட்ட குறிப்பிட்ட இரண்டு கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று ஒரு உண்மையொன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

முதலாம் வருட மாணவன் திட்டமிட்டு குறித்த போராட்டத்தில் சிலரின் தூண்டுதலின் அடிப்படையில் எங்களுக்கு எதிராக செயல்பட்டு, கலைப்பீட நிர்வாகத்தை குழப்ப வேண்டும் என்ற அடிப்படையில் வழிநடத்தப்பட்டார். முறையான வழியில்லாமல் போராட்டத்தை கையாண்டதன் அடிப்படையில் முதலாம் வருட  மாணவன் வகுப்பு தடைக்குள்ளாக்கப்பட்டார்.

குறித்த விடயத்தை நேற்று நடைபெற்ற விசாரணையில் சட்ட நிறைவேற்று அதிகாரி,மாணவ ஒழுக்க அதிகாரி முன்னிலையில் அந்த மாணவன் ஒத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த விடயங்களை தேடி ஆராய்ந்து பார்த்தால் போராடியவர்களின் எண்ணத்திற்கும் இதற்குமான தொடர்புகளை அறிந்து கொள்ள முடியும். என்னிடம் ஆதாரங்கள் இருந்தாலும் அந்த ஆதாரங்களை நான் காட்சிப்படுத்த முடியாது. ஊடகங்கள் அந்த விடயங்களை வெளியில் எடுக்க வேண்டும்.

குறித்த இரண்டு விடயங்கள் அடிப்படையில் கலைப்பீட மாணவர்களின் பேரவை கூட்டம் நடைபெற்றது.

குறித்த போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விடயத்தை பேரவையில் விசாரிக்காமல், மூன்று விசாரணைகளில் உண்மை என்ற நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த விடயம் உண்மை என்றால் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் பதவி விலகியதற்கு பேரவை எடுத்த முடிவுதான் காரணம் என்றால் இது வெறுமனே பேராசிரியர் ரகுராமுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கலைப்பீட சமூகத்திற்கும் மேலே கொடுக்கப்பட்ட கறை. அவமானமாகவே நான் பார்க்கின்றேன்.

பல்கலைக்கழகத்துக்கு ஒவ்வொரு மாணவனையும் அனுப்புகின்ற அம்மா அப்பா சகோதரர்கள் மிகவும் அவமானப்படக்கூடிய விடயமாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

போதைப்பொருள் விடயத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்த நம்பிக்கையில் இங்கு பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்புவார்கள்.

தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை விலக்களிக்க முடியும் என்றால் இதுவரை பல்கலைக்கழகத்தினால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன பதிலை பேரவையும் பல்கலைக்கழகமும் சொல்லப்போகின்றது. எந்த தவறிழைத்தாலும் உண்ணாவிரதம் செய்தால் வகுப்பு தடையை விடுத்து உள்ளே வரலாம் என்ற முன்னுதாரணத்தை இந்த பேரவை மேற்கொண்டிருந்தால் என்ன செய்யும் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

பண்பாட்டு அடையாளம், தமிழ் தேசியத்தின் இருதயநாதம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான போதைப்பொருள் தொடர்பான செயல்களை அனுமதிக்கின்ற இந்த  நிர்வாகம் சமூகத்திற்கு சொல்ல வருகின்றது.

கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்பட வேண்டும். நியமிக்கப்பட்டால் மாத்திரமே இந்த விடயத்தை முன் கொண்டு செல்ல முடியும் என்ற அடிப்படையில் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மீளவும் பீடாதிபதியாக ரகுராம் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும். போராட்டம் தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/314921

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.