Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது!

நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது!

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் பெற்றது.

இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு இலக்கம் 13 ஆம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அதேநேரம், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தீர்க்கும் முகமாக ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட இணக்க சபையினர் தீர்ப்பு வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.

https://athavannews.com/2025/1418361

  • கருத்துக்கள உறவுகள்
image
 

(செ.சுபதர்ஷனி)

மாங்குளம் பகுதியில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25) நாயொன்று மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. 

நாய் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன் அதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் திங்கட்கிழமை (27) ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதானவர் 48 வயதுடைய ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த நாய், ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை வழங்கிய தீர்ப்புக்கமையவே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த பெண் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் இணக்க சபைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் வழக்கு விசாரணைக்காக கூடிய இணக்க சபையின் மூன்று நீதவான்கள் அடங்கிய குழாத்தினரே நாயை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்துள்ளனர். 

இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு), சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு), கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவருமே இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இணக்கசபையில் இருந்த நீதவான்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து, நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து, நீதவான்கள் நாயை  தூக்கில்  இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், தூக்கிலிடுவது தொடர்பான புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து பேசுபொருளாக மாறியுள்ளது. 

ஐந்தறிவு ஜீவனுக்கு தூக்கு தண்டனை எதற்கு என பலரும் விமர்சித்து வருகின்றனர். 

மேலும், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாங்குளத்தில் தூக்கிலிடப்பட்டு நாய் கொலை; பெண் கைது!   | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஆடடை வேலிபோட்டு கூட்டுக்குள் அடைத்துப் பாதுகாப்பக்க   வளர்ந்திருக்க வேண்டும். அந்த  நாய்  தூக்கிலடப்பட்ட்து பிழை. தீர்ப்பும் பிழை. கடித்த (இறந்த ) ஆட்டின் பெறுமதியை நாய் உரிமையாளர் கொடுக்க வழக்கு முடிந்திருக்கும். 

 இன்னொருதடவை வேறு ஒரு நாய் கடித்தால் என்ன செய்வர்கள். 
அதையும் ?.....அதற்காக நாய் இனத்தையே   அழிப்பார்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன?

இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொல்ல மத்தியஸ்த சபை உத்தரவிட்டதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்பு படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 44 நிமிடங்களுக்கு முன்னர்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை தூக்கிட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் இன்றைய தினம் (ஜனவரி 27) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

''மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு, கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மாங்குளம் போலீஸார், 48 வயதான பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

நடந்தது என்ன?

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த சாந்தரூபன் ஜீவநந்தினி, தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்ந்து வந்துள்ளார்.

சாந்தரூபன் ஜீவநந்தினியின் அண்டை வீட்டில் வசித்து வந்த விஜேந்திரன் சஜிதா என்ற பெண், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக மத்தியஸ்த சபை தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், விஜேந்திரன் சஜிதா வளர்ந்து வந்த ஆட்டை, சாந்தரூபன் ஜீவநந்தினி வளர்த்த நாய் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஆடு இறந்த நிலையில், இருவருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஒட்டுச்சுட்டான் மத்தியஸ்த சபைக்கு வந்துள்ளதாக மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த 25ம் தேதி இடம்பெற்றுள்ளது.

புத்திக்க மனதுங்க

பட மூலாதாரம்,POLICE MEDIA

படக்குறிப்பு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர் என புத்திக்க மனதுங்க தெரிவித்தார்

மத்தியஸ்த சபை கூறியது என்ன?

நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக நாயின் உரிமையாளர் மத்தியஸ்த சபையின் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.

''நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என உரிமையாளர் கூறினார். இரண்டு தரப்பும் தங்களுக்குள் கதைத்துள்ளனர். நாயை வழங்க அதன் உரிமையாளர் இணங்கியுள்ளனர். அப்போது நாயை தான் வாங்கிக் கொள்வதாக ஆட்டின் உரிமையாளர் குறிப்பிட்டார். நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வருகின்றோம் என்ற பின்னரே நாங்கள் அதற்கான சான்றிதழை வழங்கினோம்.''

''நாங்கள் நாயை கொலை செய்து படத்தை அனுப்புமாறோ அல்லது தூக்கில் போடுமாறோ நாங்கள் எந்தவொரு ஆலோசனையும் நாங்கள் வழங்கவில்லை. ஆனால் நாயை கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நான் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்."

"போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரணை நடத்தியது. தான் கொண்டு செல்லும் போது கழுத்து நெரிப்பட்டு நாய் இறந்ததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளேன்'' என மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

மத்தியஸ்த சபை அவமதிப்பு தொடர்பிலும் போலீஸ் நிலையத்தில், குறித்த பெண்ணிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

முறைப்பாட்டாரான விஜேந்திரன் சஜிதாவிடம் ஏன் நாயை கையளிக்கும் தீர்மானம் எட்டப்பட்டது என்பது குறித்து கேட்டபோது, ''நான் பராமரித்துக்கொள்கிறோன் என அவர் கூறியதன் அடிப்படையிலேயே நாயை அவரிடம் கொடுத்தோம். ஆனால், தீர்வு ஆவணத்தில் பராமரிப்பு என்ற வசனத்தை எழுதாது விட்டு விட்டோம். நாங்கள் பராமரித்துக்கொள்கின்றோம். இனி பிரச்னை இல்லை என அவர் கூறினார்.'' என அவர் குறிப்பிட்டார்.

விஜேந்திரன் சஜிதா வளர்ந்து வந்த ஆட்டை, சாந்தரூபன் ஜீவநந்தினி வளர்த்த நாய் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விஜேந்திரன் சஜிதா வளர்ந்து வந்த ஆட்டை, சாந்தரூபன் ஜீவநந்தினி வளர்த்த நாய் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (சித்தரிப்பு படம்)

'புகைப்படத்தை வெளியிட்ட பெண்'

மத்தியஸ்த சபையின் இணக்கப்பாட்டிற்கு அமைய, நாயின் உரிமையாளரான சாந்தரூபன் ஜீவநந்தினி, ஆட்டின் உரிமையாளரான விஜேந்திரன் சஜிதாவிடம் நாயை கையளித்துள்ளார்.

இந்த நிலையில், நாயின் கழுத்து கயிற்றினால் நெரிக்கப்பட்டு தொங்கும் வகையிலான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

நாயை கொன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் மூன்றாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தீர்க்கும் முகமாக ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட இணக்க சபையினர் தீர்ப்பு வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.

யாரப்பா அந்த இணக்க சபை நீதிபதி? தீர்ப்பு கொடுத்த இணக்க சபை உறுப்பினர்களை முதலில் கைது செய்ய வேணும்  

1 hour ago, ஏராளன் said:

''நாங்கள் நாயை கொலை செய்து படத்தை அனுப்புமாறோ அல்லது தூக்கில் போடுமாறோ நாங்கள் எந்தவொரு ஆலோசனையும் நாங்கள் வழங்கவில்லை. ஆனால் நாயை கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நான் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்."

மத்திய சபை ஒழுங்கா வேலை செய்திருக்கினம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.