Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish)

மாற்றங்கள்தான் ஒரு மனிதனை, சமுதாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. மாற்றங்கள் இல்லையெனில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருப்போம்.

பல நேரங்களில், மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இது காலத்தின் கட்டாயம். நாம்தான் சுதேசி இயக்கம் என்று கூறி வெளிநாட்டுத் துணிகளை ஒதுக்கினோம். ஆனால் இன்று எத்தனை பேர் கதராடை அணிகிறார்கள்? இன்று உள்நாட்டில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை ஆடகளைத்தான் அணிகிறோம். நாம் இப்போது சுதேசி ஆடையை அணிகிறோமா? இல்லை வெளிநாட்டு ஆடையை அணிகிறோமா? விடை சொல்வது கடினம். மாட்டு வண்டிகளில் இருந்து டொயோட்டோவுக்கும், ஷெவெர்லேக்கும், போர்சேவுக்கும், பிம்டபில்யுவுக்கும் மாறினோம்/ மாறிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றங்கள் தேவையானது மட்டுமில்லாமல், நல்லதும் கூட . இவ்வாறாகத்தான் மாற்றங்கள் நம்மீது திணிக்கப் படுகின்றன.

இந்தியாவின் இன்றைய நிலைக்கு வித்திட்டவர்களில், ராஜிவ் காந்திக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இன்னும் பல பேர்கள் இருப்பார்கள், ஆனாலும் என்னளவில் அவர் மிக முக்கியமானவர். சாம் பிட்ரோடா போன்ற வல்லுனர்களை பக்கத்தில் வைத்துககொண்டு அவர் தொலைத் தொடர்பில் தினித்த மாற்றங்களின் பயனைத்தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா ஒரு இளமையான நாடு. இங்குள்ள மக்கள் தொகையின் சராசரி வயது 35-40க்குள்தான். அதனால்தான் இங்கு வளர்ச்சியின் அதிர்வுகளைக் காண முடிகிறது. இந்த இளமைத் துடிப்பான நாடை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல, துடிப்பான திட்டங்கள் தேவை, அவ்வாறான திட்டங்கள் வரும் போது, அதற்கான ஆதரவுகள் பெருக வேண்டும். இன்னும் பத்தாம் பசலித்தனமான கருத்தக்களையும், எண்ணங்களையும் கூறிக்கொண்டு அவற்றிற்கு முட்டுக் கட்டை போடுவது சரியல்ல. அத்திட்டங்களில் சற்று பாதகங்களிருப்பின் அதற்கு மாற்று, அத்திட்டங்களை கிடப்பில் போடுவது அல்ல, மாற்றுக்களை ஆராய்வதுதான்.

உதாரணமாக, நாம் இரு விடையங்களை ஆராய்வோம். முதலில் அணுசக்தி ஒப்பந்தம். நமக்கு மிக அத்தியாவசியத் தேவை எரிபொருள். அது நம் நாட்டில் அரிதானதொன்று. வெளியிலிருந்து கொண்டு வரப்படும் எரிபொருட்களின் விலையோ ( நேற்று கச்சா எண்ணையின் விலை $ 90 ஒரு பேரலுக்கு) உச்சாணிக் கொம்பிலிருக்கிறது. இந்த நிலையில், அணு சக்தியை எரி பொருள் தேவைக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு? இன்னும் எதற்காக பொதுவுடைமை வாதிகள் அமெரிக்கா, அமெரிக்கா என்று கூக்குரலிடவேண்டும். தொழில் நுட்பம், மூலதனம், கச்சாப் பொருட்கள் எங்கு கிடைக்கின்றனவோ அங்கேதானே போய் வாங்க வேண்டும். அரிதான பொருட்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா? சற்று கடினமான விலையை கொடுக்கத்தான் வேண்டியி்ருக்கும். சரி, கூக்குரலெழுப்பும் இவர்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் ஆதரவை ஆளும் கட்சிக்கு கொடுத்து விடுகிறார்களா? தங்கள் ஆதரவு மிக முக்கியம் என்பதினாலேயே, எவ்வளவு அலைக்கழிக்கிறார்கள். அதுவே ஆளும் கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் மக்கள் மன்ற பிரதிநிதிகள் இருந்திருந்தால், இந்த உடன்பாடு இத்தனை நேரம் கையெழுத்தாகியிராதா? இந்த கூச்சல், முடக்கல் எல்லாம் எதற்காக? நான் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்ளவா, இல்லை என்னால் உன்னை முடக்க முடியும் என்று முட்டி முயர்த்தவா?

அடுத்து சில்லறை வியாபாரத்தில் பெரு குழுமங்கள் நுழைவதை எதிர்ப்பது. நாட்டில் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் தனி மனிதனின் தேவைக்காகத்தான். அப்படியென்றால் அவை அனைத்தும் சில்லரை வணிகம்தான். 90 விழுக்காடு பொருட்களை குழுமங்கள்தான் தயாரித்து வருகின்றன. அவை அனைத்தையும் இனி தனி நபர்கள்தான் தயாரிக்க வேண்டும், சிறு வியாபாரிகள் தான் தயாரிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தலாமா?. இனிமேல் சிமெண்ட் தயாரிப்பை குடிசைத் தொழிலாக மாற்ற வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தலாமா?

சரி, முன்னர் தனி நபர்கள் சிறு சிறு கடைகள் நடத்தி கறிகாய் வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது பழமுதிர்சோலை (சென்னை போன்ற இடங்களில்) என்று கடை ஆரம்பித்து பலதரப்பட்ட காய்கறி, கனிகளை ஒரே இடத்தில், குறைவான விலைக்கு விற்பதை இவர்கள் ஏன் குறை கூறுவதில்லை? பார்க்கப்போனால், பழமுதிர்சோலைகளின் கடைப் பரப்பளவை விட, ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் கறிகாய், கனிகள் விற்பதற்காக ஒதுக்கியிருக்கும் இடத்தின் பரப்பளவு கம்மிதான். மொத்தக் கொள்முதல் செய்து, இடைத்தரகர்களை ஒழித்து, குறைவான விலையில் கொடுப்பதை எதிர்த்தும் ஒரு போராட்டம். இவ்வாறுதான் கணிணி உபயோகத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தார்கள், பல பேருக்கு வேலை போய் விடுமென்று. ஆனால் நடந்தது என்ன, பல நூறு மடங்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததுதான் கண்கூடாகக் கண்ட உண்மை.

நாம் இப்போது செய்து கொண்டிருப்பதென்ன? மாற்றங்கள் தேவையில்லை என்று கூறி நம்மை முந்திய நிலைக்கு இட்டுச்செல்லும் போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நமக்குத் தேவை இளமையான, அடுத்த 20, 40 ஆண்டுகளில் என்ன தேவை என்பதை எதிர்நோக்கித் திட்டமிடும் தலைவர்கள்தான். சிமெண்ட்டை ரேஷன் கடைகளில் கொடு என்று கோஷம் போடுகிற தலைவர்கள் அல்ல. ஞானி விகடனில் எழுதிய முறை வேண்டுமானால் சிலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் கருத்தில் குறையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது அப்படியே வாஜ்பேயிற்கும், அத்வானிக்கும், தேவ கவுடா, அர்ஜுன் சிங் போன்ற பலருக்கும் (அரசுக்கட்டிலில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தி்ண்ணைக் கட்டிலில் இருப்பவர்களுக்கும) பொருந்தும்.

நாம்விற்ற பஞ்சும்... நாம் விற்ற றப்பரும்... கனியவளங்களும்... இலகுமென்பொருள்களும்தான் (soft ware) நம்மையே மாறச்சொல்லுது.... இதுதான் எமது வளர்ச்சி... :huh::blink:

Edited by Netfriend

சரிஇ முன்னர் தனி நபர்கள் சிறு சிறு கடைகள் நடத்தி கறிகாய் வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது பழமுதிர்சோலை (சென்னை போன்ற இடங்களில்) என்று கடை ஆரம்பித்து பலதரப்பட்ட காய்கறிஇ கனிகளை ஒரே இடத்தில்இ குறைவான விலைக்கு விற்பதை இவர்கள் ஏன் குறை கூறுவதில்லை? பார்க்கப்போனால்இ பழமுதிர்சோலைகளின் கடைப் பரப்பளவை விடஇ ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் கறிகாய்இ கனிகள் விற்பதற்காக ஒதுக்கியிருக்கும் இடத்தின் பரப்பளவு கம்மிதான். மொத்தக் கொள்முதல் செய்துஇ இடைத்தரகர்களை ஒழித்துஇ குறைவான விலையில் கொடுப்பதை எதிர்த்தும் ஒரு போராட்டம். இவ்வாறுதான் கணிணி உபயோகத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தார்கள்இ பல பேருக்கு வேலை போய் விடுமென்று. ஆனால் நடந்தது என்னஇ பல நூறு மடங்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததுதான் கண்கூடாகக் கண்ட உண்மை.

மாற்றங்கள் அவசியம் தான் அதை இல்லை என்று சொல்வதற்கில்லை. காய்கறிவிற்பவனையும் கணனி உபயோகத்தையும ஒப்பிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து 500 நபர்கள் பொருட்களை வாங்கி விற்றுக்கொண்டிருக்கின்றார்

நண்பர்களே!!

எல்லோரையும் போல், ஒரு நாட்டின் "வளர்ச்சி" என்பதனை கணிப்பதில் மயங்கி விடாதீர்கள். மேற்குலகம் தன் சுய பொருளாதார, அரசியல் மேலாண்மைகளை நிலை நிறுத்த தாமே ஏற்படுத்தி வைத்திருக்கும் "வளர்ச்சி வீத அளவீட்டு காரணிகள்" உங்கள் கண்களை மயக்கும். கவனமாயிருங்கள். !!

இவற்றை எழுத நான் ஒரு பொருளாதார வல்லுனர் அல்ல. இருந்த போதிலும் இதை அறிந்து கொள்ள பொருளாதார வல்லமை தேவையற்றது.

ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சுகபோக வாழ்க்கையில் மாறிமாறி தாவுவது வளர்ச்சி அல்ல. இந்தியா வளரவில்லை!! வீங்குகிறது எனவே நினைக்கிறேன். இந்திய மக்களின் பொருளாதாரம் முனைவாக்கம் அடைவதை பாருங்கள். மக்களுக்கான சேவைகளும், தேவைகளும் சரிவர கிடைக்கின்றதா என்றால் இல்லை என்பதே பதில். இன்றும் சிறு வியாபார குழுமங்கள் இல்லாதொழிக்கப் படும் நிலை மிக வேகமாக அதிகரிக்கிறது. ஏன்?

இந்திய மக்களில் எத்தனை பேருக்கு மருத்துவம், கல்வி போன்றன கிடைக்கின்றன? அதை விடுங்கள். குடி நீராவது கிடைக்கின்றதா? இல்லை. எத்தனை விவசாயிகள் தம் விவசாய முனைப்புக்களில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்? அண்மையில் பேராசிரியர் வந்தன சிவா அவர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்திய பொருளாதாரத்தின் மிகப் பெருமளவில் சிதைவை ஏற்படுத்துவது "பெரிய கம்பனிகள்" என குறிப்பிட்டிருந்தார்.

மேற்குலகம் வளர்முக நாடுகளின் வளங்களை மிகத் தந்தரமாக சுரண்டும் வகையில் நுணுக்கமாக கட்டியமைக்கப் பட்ட "உலக மயமாக்கல்" எனும் பேரழிவுக் கொள்கை "போரிலும் கொடியது". அவர்கள் தாமே உருவாக்கி வைத்திருக்கும் "வளர்ச்சி வீத சுட்டெண்கள்" உங்களை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் பாதைகள். அண்மையில் pbs நடத்திய ஒரு நேர்காணலில், இவை கேள்விக்கு உள்ளாக்கப் பட்டன. இவர்களின் இந்த தந்தரம் சீனாவிடம் பலிக்கவில்லை என்பதில் கவலை கொண்டனர்.

இன்றுவரை, அமெரிக்கா தன் வெளியுறவு மற்றும் பொருளாதார இராணுவ மேலாண்மைவாத கொள்கைகளில் சிறு மாற்றத்தைக் கூட செய்யவில்லை. மாறாக தனக்கு வேண்டிய விதத்தில் தன் clients நாடுகளின் கொள்கைகளிலும், மக்கள் மனங்களிலும் இயலுமான மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. இன்று மாற்றம் வேண்டும் என கூறும் நபர்கள், தம் மக்கள் இந்த மேற்குலகின் நன்மைக்காக ஓடியோடி உழைக்கின்றனர் என்பதை மறத்தல் ஆகாது.

இன்று அமெரிக்க போன்ற நாடுகளின் மீடியாக்கள் அங்கு பட்டிணியால் வாடுபவர்கள் பற்றி பேசுவதில்லை. பொருளாதாரத்தில் நொடிந்துபோனவர்கள் பற்றி பேசுவதில்லை. இனப் பாகுபாடு பற்றி பேசுவதில்லை. அங்குள்ள கந்தலாகிப் போன மருத்துவ வசதிகள், சேவைகள் பற்றி பேசுவதில்லை. அமெரிக்க மருத்துவ திட்ட முறைகளை ஐரோப்பிய நாடுகள்ளே சிரிப்பாய் சிரிக்கின்றன. மிக செலவுமிக்க அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கர் பலரும் வெளிநாடுகளுக்கு செல்வதை பார்க்கிறோம். ஆனாலும் மிகக் கெட்டித்தனமாக புள்ளி விவரங்கள் மூலம் விடயங்கள் பூசி மெழுகப் படுகின்றன.

உண்மையில் மாற்றம் வேண்டும். எங்கு? எப்படி? எப்போது என்பதே கேள்வி. மேற்குலகின் நவீன பொருளாதார மேலாண்மையில் இருந்து விடுபட மாற்றம் வேண்டும். நாடுகள் தன் தன் மக்களின் தேவை, வளம் என்பவற்றை மிக ஆக்கபூர்வமாக, தமக்காக தக்கவகையில் முதலிடும் மாற்றம் வேண்டும். அது இன்றே வேண்டும்.

நண்பர்களே!!

எல்லோரையும் போல், ஒரு நாட்டின் "வளர்ச்சி" என்பதனை கணிப்பதில் மயங்கி விடாதீர்கள். மேற்குலகம் தன் சுய பொருளாதார, அரசியல் மேலாண்மைகளை நிலை நிறுத்த தாமே ஏற்படுத்தி வைத்திருக்கும் "வளர்ச்சி வீத அளவீட்டு காரணிகள்" உங்கள் கண்களை மயக்கும். கவனமாயிருங்கள். !!

மேற்குலகம் வளர்முக நாடுகளின் வளங்களை மிகத் தந்தரமாக சுரண்டும் வகையில் நுணுக்கமாக கட்டியமைக்கப் பட்ட "உலக மயமாக்கல்" எனும் பேரழிவுக் கொள்கை "போரிலும் கொடியது". அவர்கள் தாமே உருவாக்கி வைத்திருக்கும் "வளர்ச்சி வீத சுட்டெண்கள்" உங்களை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் பாதைகள். அண்மையில் pbs நடத்திய ஒரு நேர்காணலில், இவை கேள்விக்கு உள்ளாக்கப் பட்டன. இவர்களின் இந்த தந்தரம் சீனாவிடம் பலிக்கவில்லை என்பதில் கவலை கொண்டனர்.

இன்றுவரை, அமெரிக்கா தன் வெளியுறவு மற்றும் பொருளாதார இராணுவ மேலாண்மைவாத கொள்கைகளில் சிறு மாற்றத்தைக் கூட செய்யவில்லை. மாறாக தனக்கு வேண்டிய விதத்தில் தன் clients நாடுகளின் கொள்கைகளிலும், மக்கள் மனங்களிலும் இயலுமான மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. இன்று மாற்றம் வேண்டும் என கூறும் நபர்கள், தம் மக்கள் இந்த மேற்குலகின் நன்மைக்காக ஓடியோடி உழைக்கின்றனர் என்பதை மறத்தல் ஆகாது.

இன்று அமெரிக்க போன்ற நாடுகளின் மீடியாக்கள் அங்கு பட்டிணியால் வாடுபவர்கள் பற்றி பேசுவதில்லை. பொருளாதாரத்தில் நொடிந்துபோனவர்கள் பற்றி பேசுவதில்லை. இனப் பாகுபாடு பற்றி பேசுவதில்லை. அங்குள்ள கந்தலாகிப் போன மருத்துவ வசதிகள், சேவைகள் பற்றி பேசுவதில்லை. அமெரிக்க மருத்துவ திட்ட முறைகளை ஐரோப்பிய நாடுகள்ளே சிரிப்பாய் சிரிக்கின்றன. மிக செலவுமிக்க அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கர் பலரும் வெளிநாடுகளுக்கு செல்வதை பார்க்கிறோம். ஆனாலும் மிகக் கெட்டித்தனமாக புள்ளி விவரங்கள் மூலம் விடயங்கள் பூசி மெழுகப் படுகின்றன.

உண்மையில் மாற்றம் வேண்டும். எங்கு? எப்படி? எப்போது என்பதே கேள்வி. மேற்குலகின் நவீன பொருளாதார மேலாண்மையில் இருந்து விடுபட மாற்றம் வேண்டும். நாடுகள் தன் தன் மக்களின் தேவை, வளம் என்பவற்றை மிக ஆக்கபூர்வமாக, தமக்காக தக்கவகையில் முதலிடும் மாற்றம் வேண்டும். அது இன்றே வேண்டும்.

நல்ல கருத்துக்கள் ஈழத்திருமகன்! பலவேளைகளில் பொருளாதாரம் சம்பந்தமான புள்ளி விபரங்கள் என்பது சாமான்யரை ஏமாற்றும் புரட்டுக்களாகவே இருக்கிறது. இவர்கள் காட்டும் பொருளாதார வளர்ச்சி வீதங்கள் சாதாரண மக்களின் வாழ்வியலில் அனேகமாக எந்த மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை.

கற்றதனாலாய பயனென்கொல் - புரட்டுக்கள் தனை

பொருள்வளர்ச்சி என புள்ளிகளில் காட்டாவிடில்

என்று ஆகிவிட்டது இன்று பல பொருளாதார நிபுணர்களின் செயற்பாடு

பாராட்டுக்கள் ஈழத்திருமகன்.

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.