Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !

24-66a1df1a20276.webp

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான போதுமான தகவல்கள் உள்ள நிலையில் அவற்றை விசாரணை செய்து வெளிப்படுத்தாது விட்டால் உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் -முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்' ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் உறுப்பினர்களாக நானும், ரவூப் ஹக்கீமும் இருந்தோம். எங்களுடைய குழுவின் விசாரணை அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னதாக பேராசிரியர் ரஞ்சன் கூலின் நூல் வெளியிடப்பட்டது.

பாராளுமன்றக்குழுவின் விசாரணை அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கத்தில் நாட்டில் ஒருவருட இடைவெளியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வலிமையான ஆட்சியாளர் ஒருவர் உருவாக்கப்படுவதற்கான சூழலை தோற்றுவிப்பதை நோக்காக கொண்டா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளோம்.

அதற்கு சில வருடங்கள் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத்மௌலானா அது தான் நடைபெற்றது என்று தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார். இந்த விடயங்களையே பேராசிரியர் ரஞ்சன் கூலும் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இனக்குழுமமொன்றின் தலைவராக இருந்துகொண்டு, ரவூப் ஹக்கீம் தன்னுடைய நூல் பக்கச்சார்பற்ற வகையில் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விடயங்களை, வெளிப்படுத்தியிருக்கின்றார். நூல் முழுவதும் பக்கச்சார்பின்றி விடயங்களை தொகுத்துச் சென்றிருக்கின்றார். இதுமிகவும் கடினமானதொரு விடயமாக உள்ளது.

இவ்வாறான நிலையில், சில வருடங்களுக்கு முன்னதாக பயங்கவரவாத எதிர்ப்புச்சட்ட வரைவு கொண்டுவரப்பட்டபோது நானும் தற்போதைய நீதி அமைச்சருமான ஹர்ஷண நாணயக்காரவும் இதே அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றியிருந்தோம்.

அப்போது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குப் பதிலாக எந்தவொரு சட்டமும் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. அந்தச் சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு அதேநிலைப்பாட்டையே கூறியிருந்தார்.

அதற்குப்பின்னர் தீவிரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது தேசிய மக்கள் சக்தி அதனை முற்றாக நிராகரித்திருந்தது. அந்த நிலைப்பாட்டை அத்தரப்பினர் பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்கள். குறித்த சட்டமூலம் சம்பந்தமான பாராளுமன்றக் குழுக் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கு கூட தேசிய மக்கள் சக்தியினர் வருகை தந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அனைத்தும் தலைகீழாகியுள்ளது.

எனது சந்தேகம் என்னவென்றால், 'அந்தரங்கமான ஆட்சிக்குழு'வொன்று உள்ளது. குறிப்பாக பாதுகாப்புத்துறையில் இந்தக்குழு இருந்துகொண்டு அரசாங்கம் உறுதியளித்த விடயத்தினையே நடைமுறைப்படுத்த விடாது தடுக்கின்றது என்பதாகும்.

அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உறுதிமொழி அளித்தவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்க வேண்டும். அதற்கான பிரதியீடுகள் அவசியமில்லை. அவ்வாறு செய்யத்தவறுவார்களாக இருந்தால் 'அந்தரங்கமான ஆட்சிக்குழு'வின் முன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நகைச்சுவையாளர்களாக மாறுவீர்கள்.

அதேநேரம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் விடயத்தில் தாக்குதல்களை தடுப்பதற்கு தவறியவர்கள் உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். வேறு விசாரணைகளின்போதும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் அடையாளம் காண்பிக்கப்படவில்லை. அவ்வாறான நிலைமைகள் தொடர்வது எவ்வாறு என்ற கேள்விகள் உள்ளன.

தாக்குதல்கள் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே பாதுகாப்புத்தரப்புக்களின் முன்னெச்சரிக்கைகள் காணப்படுகின்றன. விசேடமாக இந்திய புலனாய்வுத்தரப்பின் எச்சரிக்கைகள் பெயர்ப் பட்டியலுடன் காணப்படுகின்றது. அதில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சிலர் புலனாய்வுத்துறையுடனேயே தொடர்புடையவர்களாக உள்ளனர்.

அதுமட்டுமன்றி, தாக்குதல் தினமன்று கூட காலை அறுமணிக்கே முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அயல்நாட்டிலிருந்து அந்த தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதற்கான மூலங்கள் இன்னமும் இருக்கின்றன. அவை தாக்குதல்களில் உயிரிழக்கவில்லை. அவ்வாறான நிலையில் ஏன் இன்னமும் தாக்குதலை ஒழுங்கமைத்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை.

சனல்-4 காணொளியில் பல விடயங்கள் உள்ளன. அதனைவிடவும் தேவையாள அளவில் தகவல்கள் உள்ளன. ஆகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் பற்றிய விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்காத பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் என்றார்.

https://www.battinews.com/2025/01/blog-post_409.html

  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பறையில் கெட்டித்தனமான மாணவர்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பர். அதே நேரம் கெட்டித்தனத்தை வெளிப்படுத்த முடியாத மாணவர், குசும்புகள், கோள் சொல்லுதல் மூலம் எல்லோரின் கவனத்தை தம் பக்கம் ஈர்ப்பர். சம்பந்தப்பட்ட  கடந்த அரசாங்கங்களோடு கூடிக்குலாவும்போது சவால் விட மறந்து விட்டார். இப்போ, அனுராவின் கவனத்தை தன் பக்கம் திருப்ப சவால் மேல் சவால் விட்டு தன்னை வெளிப்படுத்துகிறார். இது கொஞ்ச நாளைக்கு ஓடும் இன்னொரு செய்தி அகப்படும்வரை.    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

மைத்திரி, ரணில் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருக்கும் போது...
பின்கதவால் சென்று அவர்களை சந்திக்கும் அளவிற்கு நட்பாக  இருந்த,
சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... அப்போது இவற்றை கேட்டு சவால் விட,

சுமந்திரனின், முதுகெலும்புதான்.... கூனிக் குறுகி  வளைந்து இருந்தது. animiertes-gefuehl-smilies-bild-0384  😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ... மாவையரின் செத்த வீட்டுப் பக்கம், 
சுமந்திரனை,  தலை  வைத்தும் படுக்கக்  கூடாது என்று, 
மாவையர் வீட்டில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது. 

அதனை திசை திருப்பி... தன்பக்கம் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்க,
ஊசிப் போன அறிக்கைகளை வெளியிட்டு, தனது இருப்பை காட்டிக் கொள்கிறார்.
இவரின் சுத்துமாத்துக்கள் எல்லாம் பல் இளித்து கனகாலம் ஆகிவிட்டது.

அது புரியாமல், தானும் ஒரு ஆள் எண்டு... முதுகெலும்பு, மீன் முள்ளு  என்று அறிக்கை விடுகிறாராம். 
animiertes-gefuehl-smilies-bild-0090

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மைத்திரி, ரணில் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருக்கும் போது...
பின்கதவால் சென்று அவர்களை சந்திக்கும் அளவிற்கு நட்பாக  இருந்த,
சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... அப்போது இவற்றை கேட்டு சவால் விட,
சுமந்திரனின், முதுகெலும்புதான்.... கூனிக் குறுகி  வளைந்து இருந்தது. animiertes-gefuehl-smilies-bild-0384  😂

அவர்களுக்காக நீதிமன்றம் வரை சென்றவர், எதிர்க்கட்சி கதிரையை பறி கொடுத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அவர்களுக்காக நீதிமன்றம் வரை சென்றவர், எதிர்க்கட்சி கதிரையை பறி கொடுத்தவர்.

மரணதிற்கு முன் எமதர்மன் அனுப்பும் நான்கு கடிதங்கள் என்னென்ன தெரியுமா? | The  story about Yamaraj's 4 letter to his friend Amrita - Tamil BoldSky

சம்பந்தன்.... சுமந்திரனை கட்சியில் சேர்த்த நன்றிக் கடனையும் மறந்து,
சம்பந்தனின்   பதவிக்கு, ஆப்பு அடித்தவர்தான் சுமந்திரன்.
அது மட்டும் அல்லாது... சம்பந்தனின் அந்திமக் காலத்தில், 
அவருக்கு இல்லாத தொல்லைகளை... மறை முகமாக தனது ஆட்கள் மூலம் செய்து 
சம்பந்தனின் உயிர் போக, ஒரு வகையில் காரணமாக இருந்ததும் சுமந்திரன்தான்.

சென்ற வருடம் சம்பந்தர், இந்த வருடம் மாவை, வாற  வருஷம்  சி***ம் என்று 
ஊரில் சொல்கிறார்கள். சுமந்திரன்...இந்தக் கட்சியில் இருந்து 
எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டு இருக்கும் 
எருமை வாகனத்தின் சொந்தக்காரன். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

நேற்று, மாவையரின் வீட்டில் கல்லுளி மங்கன் போல் அமர்ந்திருந்த அவரைப் பார்த்து நானும் அதைத்தான் நினைத்தேன். மாவையரின் இரத்த அழுத்தம் அதிகரித்ததற்கு இந்த பதவியாசை பிடித்த தலையாட்டிகளே காரணம். மாவையர் ஒன்றும் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேனென அடம் பிடிக்கவில்லையே. தர்மப்படி, கொள்கைப்படி, சட்டப்படி தலைவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரை பதவியை பொறுப்பெடுக்கும்படியே கேட்டுக்கொண்டார். அதை மறுத்து காரணமில்லாமல் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று முடக்கி வைத்திருப்பது யார்? அந்த தீர்ப்பு வரும்வரை மாவையர்தான் தலைமைபொறுப்புக்கு உரியவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்தால்;  கட்சியின் முடிவை ஏற்காமல், எதை எதிர்பார்த்து  நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தீர்கள், என்று நீதிபதி  கேட்டால்; சட்டமேதை என்று சொல்லிக்கொள்பவர் என்ன பதில் சொல்வார்? நான் தலைவனாகும்படி தீர்ப்பு சொல்லுங்கள் என்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

மரணதிற்கு முன் எமதர்மன் அனுப்பும் நான்கு கடிதங்கள் என்னென்ன தெரியுமா? | The  story about Yamaraj's 4 letter to his friend Amrita - Tamil BoldSky

சம்பந்தன்.... சுமந்திரனை கட்சியில் சேர்த்த நன்றிக் கடனையும் மறந்து,
சம்பந்தனின்   பதவிக்கு, ஆப்பு அடித்தவர்தான் சுமந்திரன்.
அது மட்டும் அல்லாது... சம்பந்தனின் அந்திமக் காலத்தில், 
அவருக்கு இல்லாத தொல்லைகளை... மறை முகமாக தனது ஆட்கள் மூலம் செய்து 
சம்பந்தனின் உயிர் போக, ஒரு வகையில் காரணமாக இருந்ததும் சுமந்திரன்தான்.

சென்ற வருடம் சம்பந்தர், இந்த வருடம் மாவை, வாற  வருஷம்  சி***ம் என்று 
ஊரில் சொல்கிறார்கள். சுமந்திரன்...இந்தக் கட்சியில் இருந்து 
எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டு இருக்கும் 
எருமை வாகனத்தின் சொந்தக்காரன். 

May be an image of 12 people and text that says 'M.A. A. Sumanthiran M. 55m இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய பூதவுடலுக்கு அவரது மாவிட்டபுர இல்லத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 48 Like 3 shares Send Share'

Edited by alvayan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.